இந்நூலைப் பயன்படுத்தும் முறை
இந்தத் தமிழாக்கத்தில் இடம் பெற்ற அரபுச் சொற்களுக்கான விளக்கத்தை 'அரபுக் கலைச் சொற்கள்' என்ற தலைப்பில் காணலாம்.
இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த தொழுகை, நோன்பு போன்ற தமிழ்ச் சொற்களின் விளக்கத்தை தமிழ்க் கலைச் சொற்கள் என்ற தலைப்பில் காணலாம்.
இந்தத் தமிழாக்கத்தில் சிறிய குறிப்பு எண்கள் தேவையான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிகப்படியாக அறிந்து கொள்ள வேண்டிய விளக்கம் உள்ளது என்பது இதன் பொருள். இது போன்ற குறிப்பு எண்களுக்கான விளக்கத்தை நூலின் இறுதியில் விளக்கங்கள் என்ற தலைப்பின் கீழ் காணலாம்.
குறிப்பிட்ட எந்தத் தலைப்பு பற்றியோ, அதன் உட்தலைப்புகள் பற்றியோ அறிந்து கொள்ள விரும்பினால் தலைப்பு வாரியாக தொகுக்கப்பட்ட 'பொருள் அட்டவணை' என்ற தலைப்பில் காணலாம்.
திருக்குர்ஆனை மேற்கோள் காட்டும் போது அதற்கான எண்ணுடன் குறிப்பிடுகிறோம். உதாரணமாக 24:12 என்று கூறப்பட்டால் 24 என்பது அத்தியாயத்தின் எண்ணைக் குறிக்கும். (பாகம் என்பதைக் குறிக்காது) 12 என்பது வசனத்தின் எண்ணைக் குறிக்கும். 24வது அத்தியாயத்தில் 12வது வசனம் என்று இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்நூலைப் பயன்படுத்தும் முறை
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode