அத்தியாயம் : 86 அத்தாரிக்
மொத்த வசனங்கள் : 17
அத்தாரிக் - விடிவெள்ளி
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தாரிக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. வானத்தின்507 மீதும், தாரிக்202 மீதும் சத்தியமாக!379
2. தாரிக் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
3. அது ஒளி வீசும் நட்சத்திரம்.
4. ஒவ்வொருவர் மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை.
5. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான்368 என்பதைச் சிந்திக்கட்டும்.
6. குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான்.506
7. அது முதுகுத் தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது.231
8. இவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன்.
9. அந்நாளில் இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்.
10. அவனுக்கு எந்த வலிமையும் இருக்காது. எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்கள்.
11. திருப்பித் தரும்149 வானத்தின்507 மீது சத்தியமாக!379
12. பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக!379
13. இது தெளிவான கூற்றாகும்.
14. இது கேலிக்குரியதல்ல.
15. அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர்.
16. நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன்.6
17. எனவே (என்னை) மறுப்போருக்கு அவகாசம் அளிப்பீராக! சொற்ப அவகாசம் அளிப்பீராக!
அத்தியாயம் 86 அத்தாரிக்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode