Sidebar

24
Sun, Oct
0 New Articles

ஷீஆக்களின் மறுபிரவேசம்

இயக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஷீஆக்களின் மறுபிரவேசம்

அறிஞர் பீஜே அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஜன்னத்தில் நீங்கள் எழுதிய ஷீஆக்களின் மறுபிரவேசம் என்ற ஆய்வுக் கட்டுரை அதன் முக்கியத்துவம் கருதி அண்மையில் ஏகத்துவத்திலும் மீள் பிரசுரிக்கப்பட்டது.

சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஷீஆக் கும்பல் தலை காட்டிய போது, இலங்கையில் உள்ள ஜம்இய்யத்து அன்ஸாருஸ் சுன்னா அல்முஹம்மதிய்யா என்ற நிறுவனம் ஷீஆக்களின் மறுபிரவேசம் என்ற உங்கள் ஆய்வுக் கட்டுரையை நுாலாக வெளியிட்டு, இலவசமாக வினியோகித்தது. அதன் ஒரு பிரதி எனக்கு சவுதி அரேபியாவில் கிடைத்தது. அதன் முக்கியப் பகுதியை அனுப்பியுள்ளேன். இதனை இணையத்தில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். வஸ்ஸலாம்.

இவ்வண்ணம்

மவ்லவி கைஸான் அப்துல் ஜப்பார்.

அழைப்பாளர், நஸீம் ஜாலியாத். ரியாத்.

ஷீஆக்களின் மறுபிரவேசம்

தொழுகை தொடர்பாக வரும் அல்குர்ஆனிய வசனங்களுக்கு விளக்கம் கூறப் புகுந்த ஷீஆக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ், ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகிறார்கள்.

فلقد أورد العياشي والحويزي في تفسيريهما رواية تدل على علو مكانة علي فوق النبي - صلى الله عليه وسلم -، فيكتبان تحت قول الله عز وجل: حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين: أن المراد من الصلوات: "رسول الله أمير المؤمنين وفاطمة والحسن والحسين، والوسطى أمير المؤمنين"

'(ஐந்து) தொழுகைகள் என்பது ரஸுல் (ஸல்), அலி (ரழி), பாதிமா (ரழி), ஹஸன் (ரழி), ஹுஸைன் (ரழி) ஆகிய ஐவராவர். நடுத்தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது, அலி (ரழி) ஆவார்.

(அய்யாஷி தப்ஸீர் பாகம்- 1 பக்கம்:128 நூருஸ்ஸகலைன் பாகம் - 1 பக்கம்: 238)

இதில், நபியை விட அலியை உயர்த்துகின்றனர்.

ஷீஆக்களின் மற்றொரு தப்ஸீரில்

ينقل البحراني عن السيد رضي من كتابه "المناقب الفاخرة في العترة الطاهرة" عن ابن مسعود أنه قال: خرجت إلى رسول الله - صلى الله عليه وسلم -، فوجدته راكعاً وساجداً وهو يقول: اللهم بحرمة عبدك علي اغفر للعاصين من أمتي

'நபி (ஸல்) அவர்கள்,  ருகூவு, ஸஜ்தாச் செய்ய நான் பார்த்திருக்கின்றேன். அப்போது, அவர்கள் 'இறைவா! உன் அடியார் அலியின் பொருட்டால், அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக' என்று துஆச் செய்தார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரழி) கூறினார்கள் என்று இட்டுக்கட்டியுள்ளனர்.

(அல்புர்ஹான் பீ தப்ஸீரில் குர்ஆன் பக்கம் - 1பக்கம் : 226)

அலியின் பொருட்டால், நபி (ஸல்) அவர்களேதுஆச் செய்தார்கள் என்று இட்டுக்கட்டி வம்பளக்கும் இவர்களின் புரட்சி இஸ்லாமியப் புரட்சியா? இன்னுமுள்ளது இது போன்ற குப்பைகள்.

لو كنت بين موسى والخضر عليها السلام لأخبرتهما أني أعلم منهما، ولأنبئتهما بما ليس في أيديهما لأن موسى والخضر عليهما السلام أعطيا علم ما كان، ولم يعطيا علم ما يكون وما هو كائن حتى تقوم الساعة

நான் மூஸா (அலை),  ஹிழ்று (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால், அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன்' என்று அலி (ரலி) கூறினார்களாம்.

ஷீயாக்களில், புகாரி இமாமைப் போல் மதிக்கப்படும் குலைனீ என்பவர் தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார்.

அல்உஸுல் காபீ கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம் 1, பக்கம் 261

عن سلمان أنه قال لعلي رضي الله عنه: بأبي أنت وأمي يا قتيل كوفان! أنت حجة الله الذي به تاب على آدم، وبك أنجى يوسف من الجب، وأنت قصة أيوب وسبب تغيير نعمة الله عليه" (البرهان مقدمة ص27).

'உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யூசுப் நபியைப் பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யூப் நபியைச் சோதித்தான்' என்று அலி (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸி (ரலி) கூறினார்களாம்.

அல்புர்ஹான் முன்னுரை, பக்கம் 27

وروى أيضاً عن الصدوق في أماليه أن رسول الله قال: ((لما عرج بي إلى السماء دنوت من ربي، حتى كان بيني وبينه قاب قوسين أو أدنى، قال: يا محمد! من تحبه من الخلق؟ قلت: يا رب! علياً، قال: التفت يا محمد! فالتفت عن يساري، فإذا علي بن أبي طالب عليه السلام" (تفسير البرهان 2/ 404).

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று இறைவனை நெருங்கிய போது 'முஹம்மதே படைப்பினங்களில் நீர் யாரை விரும்புகின்றீர்? ' என்று இறைவன் கேட்டானாம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அலி' என்றார்களாம். முஹம்மதே திரும்பிப் பாரும்'  என்றானாம் இறைவன். திரும்பிப் பார்த்தால் அங்கே அலி (ரலி) நிற்கிறார்களாம்.

தஃப்ஸீருல் புர்ஹான், பாகம் 2, பக்கம் 404

إن الأئمة يعلمون متى يموتون وأنهم لا يموتون إلا باختيار منهم

ஷீயாக்களின் பன்னிரண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள்.

அல் உஸுலுமினல் காபி, பக்கம் 258

 

இந்தப் பன்னிரண்டு இமாம்களிடமும் மலக்குகள் வந்து எல்லா விபரங்களையும் கூறிச் செல்வார்களாம்.

அல் உஸுலுமினல் காபி, பக்கம் 393

இந்தப் பன்னிரண்டு இமாம்களிடமும் விஷேசமான ஞானம் உள்ளதாம். அதை மலக்குகளும் நபியும் கூட அறிய முடியாதாம்.

மேற்படி நூல் பக்கம் 402

எந்த மனிதனின் பேச்சாயினும், பறவைகள் மிருகங்கள் மற்றும் உயிரினங்களின் பேச்சாயினும் அனைத்தையும் பன்னிரண்டு இமாம்களும் அறிவர்.

குர்புல் இஸ்னாத், பக்கம் 146

எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப்படாத சிறப்புக்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்குத் தெரியாமல் நடந்திராது. நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலி (ரழி) கூறினார்களாம்.

அல் உஸுலுமினல் காபி, பாகம் 19, பக்கம் 197

பன்னிரு இமாம்களில் ஒருவராகிய ஜஃபர் சாதிக் அவர்கள் (பூரியான் பாத்தியா நாயகர்) 'வானம் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன். நடந்ததையும், நடக்கவிருப்பதையும் நான் அறிவேன்'  என்றார்களாம்.

அல் உஸுலுமினல் காபி, பாகம் 1, பக்கம் 261

இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும், பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா?  என்று அபூ ஜஃபர் அவர்களிடம் கேட்ட போது 'முடியுமே'  என்றார்களாம்.

கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி, பாகம் 1, பக்கம் 470

அல்லாஹ் அலி (ரழி) அவர்களைப் பற்றிப் பின்வருமாறு கூறினானாம்:

'யார் அலியை அறிந்து கொள்கிறாரோ அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே. எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலியை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன்.'

பஹ்ரானியின் 'புர்ஹான்' எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23

அல்லாஹ்வின் பெயராலேயே இப்படிப் பொய் கூறுபவர்களே ஷீயாக்கள்.

'ஷீயாக்களாகிய உங்களில் இருவர் கூட ஏன் ஒருவர் கூட நரகிற்குச் செல்ல மாட்டார்கள்' என்று ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.

அர்ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 78

'ஷீயாவைச் சேர்ந்தவர் எந்த அமலும் செய்யாமல் தன் நன்மையை நிரப்பிக் கொள்வார்.' என்றும் ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.

அர்ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 315

ஷீயாக்களின் எந்தப் பாவமும் பதியப்படுவதில்லை. மழை துளியளவுக்கும், கற்கள், மணல்கள், மரங்கள், முட்கள் எண்ணிக்கை அளவுக்கு பாவம் செய்தாலும் அவை பதியப்படுவதில்லை என்று ஷீயாக்களின் எட்டாவது இமாம் அபுல் ஹஸன் குறிப்பிட்டாராம்.

உயூனு அக்பாரிர் ரிளா, பாகம் 2, பக்கம் 236

'எல்லா நபிமார்களும் முஹம்மத் (ஸல்) அவர்களின் நுபுவத்தை ஏற்றது போல், எல்லா மலக்குகளும், ஜிப்ரீலும் ஏற்றது போல், என்னையும் அவர்கள் ஏற்றுள்ளனர்' என்று அலி (ரழி) கூறினார்களாம்.

அல்உஸுலுல் காபி, பாகம் 1, பக்கம் 197, 198.

ஷீயாக்களின் அடிப்படை எத்தகையது என்பதற்கு இவை தெளிவான சான்றுகள். புரட்சித் தலைவர் குமைனியின் கொள்கை இதுவே! இதோ குமைனியே வாக்குமூலம் தருகிறார்:

பன்னிரண்டு இமாம்களுக்கும் இருக்கக் கூடிய ஆத்மீகமான அந்தஸ்தை மலக்குகளும், நபிமார்களும் கூட அடைய முடியாது என்பது நமது கொள்கையாகும். ஏனெனில், பன்னிரண்டு இமாம்களும் இவ்வுலகம் படைக்கப்படுவதற்கு முன்பே ஒளியாக அர்ஷுக்கு அடியில் இருந்தார்கள். மேலும், பன்னிரண்டு இமாம்களும், மலக்குகளும், நபிமார்களும் அடைய முடியாத விஷேச நிலை அல்லாஹ்வுடன் தங்களுக்கு இருப்பதாகக் கூறியுள்ளனர். இது நமது அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.

விலாயதே பகீஹ்  தர் குஸுஸே ஹுகூமதே. இஸ்லாமி, தஹ்ரான் வெளியீடு பக்கம் 58

குமைனியே தனது கொள்கையை இவ்வளவு தெளிவாக அறிவித்த பிறகு அடிப்படையிலேயே இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பிறகு அவர் செய்த புரட்சி எப்படி இஸ்லாமிய புரட்சியாகும்?

அலி (ரழி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று பாகிர் இமாம் கூறினார்களாம்.

காஷானியின் கிதாபுஸ்ஸாபி, பாகம் 1, பக்கம் 347

நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித் தோழர்களும் மதம் மாறிவிட்டனர்.

ஷீயாக்களின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஸலீம் இப்னு கைஸ் அல் ஆமிரீயின் நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.

மிக்தாத் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித் தோழர்களும் காபிர்களாகி விட்டனர்.

கிதாபுர்ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 245

அபூபக்கரும், உமரும், அலி (ரழி) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்புக் கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும், மலக்குகளின் சாபமும் எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும்.

கிதாபுர்ரவ்லா மினல் காபி, பாகம் 2, பக்கம் 246

(அபூபக்கருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸாரிகள் மட்டும் அபூபக்கருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றொரு அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர்.

கிதாபுர்ரவ்லா மினல் காபி, பக்கம் 296

எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலி என்ற ஒரு நபரைத் தவிர, அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார்.

கிதாபுஷ்ஷியா வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு

இப்படி நபித்தோழர்களைக் கேவலப்படுத்தும் சங்கதிகள் ஏராளம்.

திருக்குர்ஆனில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்டிக்கப்படும் வசனங்கள் யாவும் நபித்தோழர்கள் குறித்தே இறங்கியதாக இவர்களின் தப்ஸீர்கள் கூறுகின்றன. விரிவஞ்சி தவிர்க்கின்றோம்.

இஸ்லாத்துடன் சிறிதும் சம்பந்தமில்லாத இந்த வழிகேடுகளின் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி எனச் சாதிப்போர் சிந்திக்க வேண்டும்.

ஷீயாக்களிடம் 'முத்ஆ' என்றொரு கொள்கை உண்டு. அதாவது, சட்டபூர்வ விபச்சாரம். இதன் மூலம் ஒழுக்க வாழ்க்கையைச் சீரழித்தவர்கள், சீரழித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த ஷீயாக்கள்.

ஒரு பெண்ணை சில நாட்களுக்கு மட்டும் வாடகைக்குப் பேசிக் கொண்டு அவளுடன் கூடுவதற்குத் தான் 'முத்ஆ' என்பர். இது பற்றி ஷீயாக்கள் தரும் விளக்கத்தைக் காண்போம்.

ஒரு தடவை மட்டும் உறவு கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு 'முத்ஆ' செய்யலாமா? என்று ஷீயாக்களின் பத்தாவது இமாமிடம் கேட்கப்பட்ட போது 'செய்யலாம்' என்றாராம்.

அல்புரூவு மினல் காபி, பாகம் 5, பக்கம் 460

இந்த முத்ஆவுக்கு நான்கு என்ற வரம்பு உண்டா? என்று அலி (ரழி) அவர்களிடம் கேட்ட போது 'ஆயிரம் பெண்களை வேண்டுமானாலும் இவ்வாறு செய்து கொள்! ஏனெனில், இவர்கள் கூலிக்காரர்கள்' என்றார்களாம்.

தஹ்தீபுல் அஹ்காம், பாகம் 7, பக்கம் 259

'ஒரு பெண்ணுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன். பிறகு அவளுக்குக் கணவன் இருப்பதாக எனக்கு எண்ணம் தோன்றியது. விசாரித்துப் பார்த்த போது அவளுக்கு கணவன் இருப்பது தெரிய வந்தது' என்று நான் ஜஃபர் சாதிக் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'நீ ஏன் இது பற்றி அலட்டிக் கொள்கிறாய் அவள் கூறுவதை நீ நம்ப வேண்டியது தான்' என்று பதிலளித்தார்களாம்.

அல்புரூவு மினல் காபி, பாகம் 5, பக்கம் 462

'மஜுஸி எனும் மதத்தவளுடன் இவ்வாறு முத்ஆ செய்யலாம்' என்று ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.

தஹ்தீபுல் அஹ்காம், பாகம் 7, பக்கம் 256

'யூத,  கிறிஸ்தவப் பெண்களுடன் இப்படி முத்ஆ செய்யலாம்' என்று அபுல் ஹஸன்

(8வது இமாம் கூறினாராம்! அதே நூல் அதே பக்கம்)

விபச்சாரத்தையே தொழிலாகக் கொண்டவளுடனும் இவ்வாறு வாடகை மனைவியை அமைத்துக் கொள்ளலாம். ஏனெனில், அவளை விபச்சாரத்திலிருந்து தடுக்குமாம்.

(அதே நூல் அதே பக்கம்)

இந்த மூடர்கள் விபச்சாரத்திற்கு என்ன தான் அளவுகோள் வைத்துள்ளார்களோ? இதெல்லாம் குமைனியின் இஸ்லாமிய அரசில் உண்டா? என்று கேட்கக் கூடும். நிச்சியம் உண்டு. அங்கே விபச்சாரத்திற்கு சட்டபூர்வ அனுமதி உண்டு. ஆனால், 'முத்ஆ' என்பதாகப் பெயரை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும். சாட்சாத் புரட்சித் தலைவர் குமைனி கூறுவதைக் கேளுங்கள்!

விபச்சாரிகள் உட்பட எந்தப் பெண்ணையும் இவ்வாறு வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம்.

(குமைனியின் தஹ்ரீருல் வஸீலா பக்கம் 292)

விபச்சாரத்துக்கு சட்டபூர்வ அனுமதி அளிக்கும் ஓர் ஆட்சி தான் இஸ்லாமிய ஆட்சியா? இஸ்லாமிய ஆட்சிக்குப் பாடுபடும் இயக்கங்கள் இதைத் தான் செய்யப் போகின்றனவா? என்பதைச் சிந்திக்கட்டும்!

சமாதி வழிபாட்டுக்கு வழிகாட்டியவர்களும் இந்த ஷீயாக்களே!

'ஹுஸைன் (ரழி) அவர்களை ஸியாரத் செய்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட நூறு ஹஜ்ஜுகளுக்கும், ஏற்றுக் கொள்ளப்;பட்ட நூறு உம்றாவுக்கும் சமமானதாகும்.'

அல்இர்ஷாத் (முபீத் என்பவர் எழுதியது) பக்கம் 252

'யார் ஹுஸைன் மரணித்த பின் அவரது கப்ரை ஸியாரத் செய்கிறாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு' என்று நபி (ஸல்) கூறினார்களாம்.

அல் இர்ஷாத் பக்கம் 252

அல்லாஹ்வின் தூதர் பெயரால் இது போல் அவர்கள் அரங்கேற்றிய பொய்கள் ஏராளம். இவர்களது வெறி எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் 'வர வேண்டியவர்' என்றொரு கற்பனைப் பாத்திரத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். 'அல் - காயிம்'  என்று இவர்களால் குறிப்பிடப்படக் கூடிய ஒருவர் வருவாராம். அவர் செய்யும் காரியங்கள் என்ன தெரியுமா?

'காயிம்' வந்து ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார்.

தப்ஸீர் சாபி, பாகம் 1, பக்கம் 172

காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாத்திமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்.

தப்ஸீர் சாபி, பாகம் 2, பக்கம் 108

இத்தகைய கேடுகெட்ட கொள்கைக்காரர்களே ஷீயாக்கள். பொய்களையும், கற்பனைகளையுமே மார்க்கமாகக் கொண்டிருப்பவர்கள் செய்தது இஸ்லாமியப் புரட்சி என்றால் இதை விட வெட்கக் கேடு எதுவுமில்லை. இவர்களின் கற்பனைகள் சிலவற்றையும் காண்போம்.

விபச்சாரம் செய்த ஒரு மன்னன் யானையாக உருமாற்றப்பட்டான். கணவனுக்குத் துரோகம் செய்த பெண்ணொருத்தி முயலாக மாற்றப்பட்டாள். பேரீச்சம் பழங்களைத் திருடிக் கொண்டிருந்தவன் வாத்தாக மாற்றப்பட்டான். யெமன் நாட்டில் சுங்க அதிகாரியாகப் பணியாற்றியவன் நட்சத்திரமாக மாற்றப்பட்டு விட்டான். கோள் சொல்லித் திரிந்தவன் தேளாக மாற்றப்பட்டு விட்டான். இப்படியெல்லாம் ஏராளமான மௌடீகங்களை நபியின் பெயரால் இவர்கள் அரங்கேற்றினார்கள்.

ஷீயாக்களின் இலலுஷ்ஷராயிஃ எனும் நூலில் 485 ஆம் பக்கத்தில் இது இடம் பெற்றுள்ளது.

இது போன்ற மூடத்தனங்களுடன் ஆயத்துல்லாஹ் எனும் ஷீயாத் தலைவருக்கு இவர்கள் அளித்து வரும் மரியாதை இருக்கிறதே: சாய்பாபாவுக்கு அவரது பக்தர்கள் செய்யும் மரியாதையும் மிஞ்சி விடும். இவர்கள் தான் இஸ்லாமிய புரட்சியாளர்களா? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கட்டும்!

23.09.2011. 14:55 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account