ரிசானாவிற்கு மரணதண்டணை சரியா

கட்டுரைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ரிசானாவிற்கு மரணதண்டணை சரியா

கேள்வி

இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்ற பெண்ணுக்கு சவூதி நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்துள்ளது குறித்து அறிவுஜீவிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். சவூதி அரசின் இந்தச் செயல் சரியானதா?

பதில்

நமது நாட்டில் உள்ள அதிகமான அறிவுஜீவிகளுக்குப் பைத்தியம் பிடித்துள்ளது என்று நாம் திட்டவட்டமாக முடிவுக்கு வரும் வகையில் இவர்களின் விமர்சனங்கள் அமைந்துள்ளன. தனக்குத் தானே முரண்படுவது தான் பைத்தியக்காரத் தனத்திற்கான ஆரம்ப அறிகுறி. இது நமது நாட்டுஅறிவு  ஜீவிகளிடம் அதிகம் காணப்படுகிறது.

டெல்லி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று இவர்கள் புலம்பினார்கள். சட்டமும், நீதிமன்றமும் முடிவெடுக்க வேண்டிய விஷயத்தில் மக்களைத் தூண்டிவிட்டு அரசாங்கம் தூக்குத் தண்டைனை விதிக்க வேண்டும் என்று பேச வைத்தார்கள்.

போகக்கூடாத நேரத்தில் ஆண் நண்பருடன் நள்ளிரவில் உல்லாசமாக சுற்றிய பெண்ணாக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட அநீதிக்காக இவர்கள் குரல் கொடுத்தார்கள்.

பருவ வயது அடைந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்காக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்பது இவர்களது கொள்கையாக இருந்தால், இவர்களுக்கு சிந்திக்கும் திறனும், மூளையும் மனசாட்சியும் இருந்தால் இலங்கைப் பெண் விஷயமாக எந்த நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்?

ஒரு குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக ரிஸானாவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாணவி கொல்லப்பட்டதற்கு மரண தண்டனை நியாயம் என்றால், அதை விட ஆயிரம் மடங்கு நியாயம் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் உள்ளது.

குழந்தையின் உயிர், உயிர் இல்லையா?

சிறுமிக்குத் தண்டனையா என்று இவர்கள் இப்போது கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால் டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் மைனர் பையனுக்கும், தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்றும், மைனர் வயதை 16ஆகக் குறைக்க வேண்டும் என்றும் இவர்கள் தான் கூப்பாடு போட்டார்கள். அதிகமான மாநில அரசுகளும் இதைக் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளன. இவர்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் மைனர் என்பதன் அளவுகோலைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆனால் பருவ வயதை அடைவது தான் மேஜர் வயது என்று இஸ்லாம் அன்றே கூறிவிட்டது.

சவூதியில் இது தான் சட்டமாக உள்ளது. குற்றம் நடக்கும் போது ரிசானா 17 வயதுப் பெண் என்பதால் அந்தச் சட்டப்படி அவர் மேஜர் இல்லை.

டெல்லி மாணவி பிரச்சனையில் மைனரை மேஜர் ஆக்கப் பார்த்தார்கள். சவூதி விஷயத்தில் மேஜரை மைனர் ஆக்க முயல்கிறார்கள். இவர்களது சிந்திக்கும் திறனில் கோளாறு இருக்கிறது என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.

இந்தியக் குழந்தையாக அது இல்லாததால், அதன் விபரீதம் இவர்களுக்கு விளங்கவில்லையா?

சில எழுத்தாளர்கள், கோமாளிகள் தங்களின் குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தால், இதே நியாயத்தைப் பேசுவார்களா? பறி கொடுத்தவர்களின் நிலையில் இருந்தும், பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்தும் பார்த்துத் தான் நீதி வழங்க வேண்டும்.

அனைவருக்கும் சமநீதி என்பது தான் நீதி செலுத்துதலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாகும். டெல்லி மாணவிக்கு ஒரு நீதியும், சவூதி குழந்தைக்கு வேறு நீதியும் கேட்பது அனைவருக்கும் சமநீதி என்ற அடிப்படைக்கு எதிரானதாகும்.

அடுத்ததாக இதைத் தர்க்க ரீதியாக நியாயப்படுத்த அந்தப் பெண்ணானவர் குழந்தையைக் கொல்லவில்லை என்று வேறு கதை அளந்து கொண்டுள்ளனர்.

ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பதை பேனா பிடித்த மூடர்கள் முடிவு செய்ய இயலாது. எந்த நாட்டில் குற்றம் நடக்கிறதோ அந்த நாட்டின் சட்டமும் நீதிமன்றமும் தான் அதை முடிவு செய்ய இயலும்.

குழந்தை கொல்லப்பட்ட போது சாட்சிகளாகவோ அல்லது உடலைப் பரிசோதித்த மருத்துவர்களாகவோ இவர்கள் இருக்கவில்லை. விசாரணை அதிகாரிகளாகவும் இருக்கவில்லை. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதிகளாகவோ அல்லது நீதிமன்ற சாட்சிகளாகவோ இருக்கவில்லை. இது குறித்து முடிவு செய்ய வேண்டிய ஆவணமும், ஆதாரமும், அறிவும் இவர்களிடம் இல்லாத போது அந்தப் பெண் அப்பாவி என்று தீர்ப்பு எழுதுவது தான் அறிவுடையவர்களின் செயலா?

லஞ்சம் ஊழலுக்கு இடமில்லாமல், நியாயமாக விசாரிக்கும் ஒரு நாட்டில் அந்த நாட்டுச் சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், அது தான் குற்றவாளி என்பதற்கான ஆதாரம்.

அஜ்மல் கசாப் அப்பாவி, அவனைத் தூக்கில் போட்டது அநியாயம் என்று சவூதி அறிவு ஜீவிகள் எழுதினால், இவர்கள் அந்த அதிகாரத்தை சவூதி அறிவு ஜீவிகளுக்கு வழங்குவார்களா?

கோவை குண்டு வெடிப்பு அரசாங்கமே நடத்தியது, அதில் கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பாவிகள் என்று இவர்களைப் போல் கற்பனை செய்து எழுதினால், அதை இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

இவர்களுக்கு கொஞ்சமும் மூளை இல்லை; மனசாட்சியும் இல்லை; உலக அறிவும் இல்லை; சட்ட அறிவும் இல்லை என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

பெண் என்பதால் மரண தண்டனை கூடாது என்று இவர்கள் நினைத்தால் இப்போதும் இவர்கள் பைத்தியக்காரர்கள் என்று தான் நிரூபித்துள்ளார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று எழுதிவிட்டு குற்றம் செய்வதில் மட்டும் சமம் இல்லை என்று இவர்களது மூளை தீர்ப்பளிக்கிறது என்றால் இது மனநோயில்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?

சவூதியில் வசிக்கும் ஒரு இந்தியக் குழந்தையை, இந்தியப் பெண் கொலை செய்தாலும், சவூதியில் இப்படித் தான் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும்.

அப்போது இவர்கள் குழந்தையின் பக்கம் பேசியிருப்பார்களா? அல்லது கொலை செய்தவர் பக்கம் பேசி இருப்பார்களா? நாட்டு மக்கள் அனைவரும் குழந்தையின் பக்கம் தான் நின்றிருப்பார்கள். அதை எதிர்த்து இவர்கள் வாய் திறந்தால் அடித்து உதைக்கப்பட்டு இருப்பார்கள்.

கோவையில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் இவர்கள் பேசிய நியாயம் இப்போது காணாமல் போனது ஏன்?

மரண தண்டனை பெற்ற பெண் இந்து மதத்தவராக இருந்திருந்தால், இந்து என்பதற்காக மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று கதையை மாற்றி எழுதியிருப்பார்கள். நல்ல வேலை கொலை செய்த பெண்ணும் முஸ்லிமாக இருந்ததால் இந்தக் கதையை இவர்கள் எழுத முடியவில்லை.

கொலை செய்த பெண் இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், இந்தியர்கள் என்ன கிள்ளுக் கீரையா என்று இந்த அறிவு ஜீவிகள் புலம்பித் தள்ளியிருப்பார்கள். நல்ல வேளை அப்பெண் இலங்கை வாசியாக அமைந்துவிட்டார்.

மன்னரின் குடும்பப் பெண் விபச்சாரம் செய்த போது மரண தண்டனை அளித்த சவூதியில் அந்நிய நாட்டவர்கள் என்பதற்காக குற்றங்களில் சலுகை காட்டப்படுவது இல்லை. மற்ற விஷயங்களில் சொந்த நாட்டவர்களுக்கு சலுகை அளித்தாலும், கொலைக் குற்றத்தில் எல்லாம் சலுகை காட்ட மாட்டார்கள்.

இந்தியக் குழந்தையை சவூதிக்காரன் கொன்று, அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதே தீர்ப்புத் தான் வழங்கப்பட்டிருக்கும்.

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் விமர்சிப்பது தான் இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. மக்களைத் தூண்டிவிடக்கூடிய பிரச்சனை வராதவரை நடுநிலை வேஷம் போடுவார்கள். எதில் மக்களைத் தூண்டி விட முடியுமோ அது போன்ற பிரச்சினைகள் கிடைத்தால், இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள். அறிவு ஜீவிகளின் இந்த இரட்டை முகம் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அவசரமாக ஏன் தூக்கில் போட வேண்டும் எனவும் கேள்வி எழுப்புகின்றனர். இந்த வழக்கில் ரிசானா குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார் என்று 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தவாத்மி கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அன்று முதல் அவர் மகளிர் சிறையில் இருந்து வந்தார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. அதன் பின்னர் உடனே தூக்கில் போடவில்லை. இறுதியாக சவூதியின் சுப்ரீம் ஜுடீசியல் கமிட்டி மூலமும் இந்தக் குற்றம் விசாரணை செய்யப்பட்டு கொலைக் குற்றம் உறுதி செய்யப்பட்டது.

அதன் பிறகு அத்தோடு சவூதி அரசாங்கம் இதை விட்டுவிடவில்லை. சுப்ரீம் ஜுடீசியல் கமிட்டியே இதை உறுதி செய்த பின்னரும் கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றோர் மன்னித்தால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும் என்பதால் சவூதி அரசும் இலங்கை அரசும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டன.

ரியாதின் கவர்னருக்குக் கீழ் செயல்படக்கூடிய மறு சமரசக் குழு மூலமாக குழந்தையின் பெற்றோர்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி இந்தக் குற்றத்தை மன்னிக்கச் சொல்லி பேசிப் பார்த்தனர். ஆனால் அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் மன்னிக்க மறுத்து விட்டனர். குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கழிந்த பிறகு தான் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது எப்படி அவசர முடிவாக இருக்க முடியும்?

குழந்தையைக் கொல்ல அந்தப் பெண்ணுக்கு எந்தக் காரணமும் இல்லையாம். இப்படியும் அறிவு ஜீவிகள் கூப்பாடு போடுகின்றனர்.

இந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்பதற்கு சவூதிக்கு எந்தக் காரணம் இருந்தது? சவூதி மன்னருக்கும், இவருக்கும் முன்பகையா? அல்லது சவூதி நீதிமன்றங்களுக்கும் இவருக்கும் முன்பகை இருந்ததா? இவருக்கு மரண தண்டனை அளிப்பதால் சவூதி அரசுக்கு என்ன ஆதாயம்? இது போல் சிந்திக்க மட்டும் இவர்களின் மூளை காய்ந்து விடுமா?

எஜமானர்கள் கொடுமைப்படுத்தியதால் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளை வேலைக்காரிகள் கொன்ற சம்பவம் நமது தமிழகத்தில் ஏராளம் நடந்து பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதியது இவர்களுக்குத் தெரியவில்லையா? சிறுவனைக் கொலை செய்து சூட்கேசில் அடைத்த பெண்ணைப் பற்றி இவர்கள் பக்கம் பக்கமாக எழுதினார்களே அது போன்ற காரணம் இருக்கக் கூடாதா?

(மேலும் விபரத்துக்கு இது குறித்த தனிக்கட்டுரைகளைக் காண்க)

20.01.2013. 6:48 AM

மனுஷ்ய புத்திரனின் மடமை

நக்கீரன் இதழில், ரிசானா - சிறுமிக்கு மரண தண்டனை - பதற வைக்கும் கொடுமை! என்ற தலைப்பில் மனுஷ்ய புத்திரன்  முஸ்லிம்கள் மீது தனது விஷத்தைக் கக்கியுள்ளார்.

மனுஷ்ய புத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதும் இவர் இந்தப் பெயரை வைப்பதற்கு கொஞ்சம் கூட தகுதியற்றவர். காரணம் என்னவென்றால் கொடூரமான முறையில் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட 4 மாத குழந்தைக்கு இரக்கம் காட்ட முன்வராத இந்த மனிதர், கொடூரமான முறையில் கொலை செய்த கொலைகாரப் பெண்மணிக்கு இரக்கம் காட்ட முன்வருவதிலிருந்தே இவர் மனித ஜாதி அல்ல என்பது வெட்ட வெளிச்சமாகின்றது.

இவரது பெண்டாட்டியையோ, மகனையோ, மகளையோ, அண்ணனையோ, தம்பியையோ அநியாயமாக எவனாவது கொலை செய்தால் அப்போது கொலை செய்த கொலைகாரனுக்கு ஆதாரவாக மனித நேயம் பேசுவாரா? அல்லது கொலை செய்யப்பட்டவனைக் கொல்ல வேண்டும் என்று சொல்வாரா என்பது இவரது வீட்டில் ஏதாவது கொலை நடந்தால் தெரிந்துவிடும்.

மேஜரை மைனராக்கிய மனுஷ்ய புத்திரன்:

முதலில் இவர் நக்கீரன் இதழில் இஸ்லாத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த ரிசானா விவகாரத்தில் எழுதியுள்ள கட்டுரையின் தலைப்பை எடுத்துக் கொள்வோம். அந்தக் கட்டுரையே இவர் எத்தகையவர் என்பதை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டுகின்றது.

தனது கருத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக இவர் எத்தகைய பொய்யையும் துணிந்து சொல்வார்; கொஞ்சம் கூட வெட்கப்பட மாட்டார் என்பதையும், இவர் கடைந்தெடுத்த அயோக்கியர் தான் என்பதையும் அந்தக் கட்டுரையின் தலைப்பே நமக்கு பறைசாற்றுகின்றது; படம் பிடித்துக் காட்டுகின்றது.

சிறுமிக்கு மரண தண்டனையாம்:

ரிசானா : சிறுமிக்கு மரண தண்டனை - பதற வைக்கும் கொடுமை என்று இவர் தனது கட்டுரைக்கு தலைப்பிட்டுள்ளார்.

இவருக்கு ரிசானா என்ற பெண்மணி சிறுமி அல்ல என்பது தெரியாதா? அந்தப் பெண்மணி கொடுத்த பாஸ்போர்ட் ஆவணத்தின் பிரகாரம் அவளது பிறந்த தேதி 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி. அவளுக்கு தற்போது 30 வயது பூர்த்தியாகி விட்டது. அவரது பாஸ்போர்ட்டில் 5 வயது கூடுதலாக போட்டு விட்டார்கள் என்ற ஒரு காரணத்தைச் சொல்லி வருகின்றனர் அறிவு ஜீவிகள். அப்படி கணக்கெடுத்துப் பார்த்தாலும், தற்போது அந்தப் பெண்மணிக்கு 25 வயது பூர்த்தியாகி விட்டது.

25வயது பூர்த்தியான ஒரு பெண்மணியின் தலை வெட்டப்பட்டதைத் தான் சிறுமிக்கு மரண தண்டனை விதித்துவிட்டதாக திட்டமிட்டு பொய்யாகப் புனைந்து கூறுகின்றார் இவர்.

மூளைக்கும், இவருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை என்பது இதன் மூலம் உறுதியாகின்றது. 25 வயது நிரம்பிய பெண்மணியை சிறுமி என்று அப்பட்டமாக புளுகும் இவரிடம் நேர்மையிருக்குமா?

இவர் எவ்வளவு பெரிய அயோக்கியராக இருந்தால் ஊரறிந்த, உலகமறிந்த ஒரு விஷயத்தை மறைத்து ஒன்றும் தெரியாதவரைப் போல 30 வயது பெண்மணியை சிறுமி என்று எழுதியிருப்பார்.

இவ்வாறு அனைவரும் அறிந்த ஒரு விஷயத்தில் இவ்வளவு துணிச்சலாகப் பொய்யுரைக்கின்றார் என்றால் அதற்கென்று அசாத்திய தைரியம் வேண்டும்.

எடுத்து வைக்கும் பலமான(?) ஆதாரங்கள்:

ரிசானா என்ற அந்த இலங்கைப் பெண்மணி 4 மாத குழந்தையைக் கொலை செய்யவில்லையாம். குழந்தை தானாக மூச்சுமுட்டி இறந்துவிட்டதாம். இது தான் அவர் வைக்கக்கூடிய அற்புதமான(?) வாதம்.

அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், ரிசானா கொலை செய்யவில்லை என்பதற்கு ரிசானா தான் ஆதாரம் என்று சொல்கின்றார் இந்த அதிமேதாவி. அந்த ரிசானா என்ற பெண்மணி எழுதியுள்ள கடிதம் தான் அவர் நிரபராதி என்பதற்கு ஆதாரமாம். இவர் சொல்லியுள்ள ஆதாரத்தை எந்தவொரு மூளையுள்ள மனிதனாவது ஏற்றுக் கொள்வானா?

குற்றவாளி கொலை செய்யவில்லை என்பதற்கு அந்தக் குற்றவாளியின் வாக்கு மூலத்தையே ஆதாரமாகக் காட்டும் அளவுக்கு வெந்து போன மூளை கொண்டவர்கள் தான் அறிவிஜீவிகளாம்; அதிமேதாவிகளாம்.

இவர் சொல்லக்கூடிய அளவுகோலின்படி தீர்ப்பளித்தால் உலகத்தில் எவனையுமே குற்றவாளி என்று சொல்லி தண்டிக்க முடியாது. ஏனெனில் எவனும் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டான்.

ரிசானா என்ற அந்தப் பெண் குழந்தைக்குப் புட்டிப்பால் புகட்டும்போது, இவர் அருகில் அமர்ந்து அந்த பால் டப்பாவை பிடித்துக் கொண்டிருந்தவர் போல எழுதியுள்ளார். கட்டுரையின் தலைப்பிலேயே புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டுள்ள இந்த புத்திரன் சொல்லும் ஆதாரமற்ற செய்திகள் எப்படி உண்மையாக இருக்கும். மூளையுள்ளவர்கள் சிந்திக்கட்டும்.

சவூதி தீர்ப்பை விமர்சிக்க இவர் யார்?:

அடுத்ததாக, சவூதி அரேபிய நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியல்ல என்று விமர்சனம் செய்கின்றார்.

இவருக்கும் அந்தத் தீர்ப்புக்கும் ஏதாவது சம்பந்தமுள்ளதா?

அந்தத் தீர்ப்பில் ரிசானாவிற்கு மரணதண்டனை வழங்கப்பட்டதற்கு காட்டப்பட்ட ஆதாரங்கள் பற்றி இவருக்கு ஏதாவது அறிவுள்ளதா?

இவரைத் தான் இலங்கை அரசாங்கம் ரிசானாவுக்கு ஆதரவாக வாதாடக்கூடிய வழக்கறிஞராக நியமித்ததா?.

அந்த வழக்கில் என்ன நடந்தது என்று கொஞ்சமாவது தெரியுமா?

மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் துளியும் தெரியாது என்பது தான் இவரது பதிலாக இருக்கும்.

மனுஷ்ய புத்திரனிடத்தில் சில கேள்விகள்:

தனக்கு எதுவுமே தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைத்து அடாவடித்தனம் செய்து தீர்ப்பு சொல்லும் அதிமேதாவியிடத்தில் சில கேள்விகளைக் கேட்க விரும்புகின்றோம்.

பாகிஸ்தானிய ராணுவத்தால் தலை சீவப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திய இராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லவில்லை என்று பாகிஸ்தான் சொல்கின்றதே! அதை இவர் ஏற்றுக் கொண்டு, அப்பாவி பாகிஸ்தான் மீது பழிபோடுவதா? என்று அதிமேதாவித்தனமாக கேள்வி கேட்பாரா?

இவருடைய பாணியில் கேட்பதாக இருந்தால், எங்களது இராணுவ வீரர்கள் ஒரு குற்றமும் அறியாதவர்கள் என்று சொல்லும் பாகிஸ்தானின் நியாயக் குரல் இந்தியாவின் காதுகளில் விழவில்லையா?

4 மாதக் குழந்தை தானாக மூச்சு முட்டி இறந்துவிட்டது என்று சொல்லும் மனுஷ்ய புத்திரனே! அந்தக் குழந்தை தானாக செத்தது போல, இந்திய ராணுவ வீரர்களும் தங்களது தலையை தாமாக அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொல்ல வருகின்றாயா?

யூனியன் கார்பைடு நிறுவனத்தில் வெளியான விஷவாயு காரணமாக போபாலில் ஆயிரக்கணக்கானோர் பலியானார்களே! அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளி ஆண்டர்சன் என்ற அமெரிக்க அயோக்கியன் இந்தியாவிலிருந்து தப்பியோடி தற்போது அமெரிக்காவில் உல்லாசமாக இருந்து வருகின்றானே! அவனைக் குற்றமற்றவன் என்று அயோக்கிய அமெரிக்கா சொல்கிறது. அதை ஏற்றுக் கொள்வாயா?

போபாலில் கொல்லப்பட்ட இந்திய மக்களுக்கும், ஆண்டர்சனுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஆண்டர்சன் குற்றவாளியில்லை என்று ஆண்டர்சனே கடிதம் எழுதியுள்ளான். அவனே தன்னை குற்றவாளி இல்லை; நான் அப்பாவி என்று சொல்லிவிட்டதால் அவனை விடுவித்து விட வேண்டும் என்று நீ சொல்வாயா?

மேலும் இவர் ஆரம்பம் முதலே மரண தண்டனையை எதிர்ப்பதாக ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது.

டெல்லி மாணவி கற்பழிப்புக்குப் பின் உலகமே உண்மையைப் புரிந்து கொண்டு மரண தண்டனையின் அவசியத்தை உணர்ந்து கொண்ட பிறகும் இவருக்கு இந்த உண்மை புலப்படவில்லையானால் இவரது அறிவு இன்னும் கேடு கெட்டதாக உள்ளது. இவர் ஆரம்பம் முதல் இப்படி உளறி வருவதால் இப்போது உளறுவது நியாயமாகி விடுமா?

மரண தண்டனை வேண்டாம் என்று கருத்துக் கூற இவருக்கு எப்போது உரிமை இருக்கும்? கொல்லப்பட்டவர் இவரது அப்பனாக இருந்தால் அல்லது இவரது பெண்டாட்டியாக இருந்தால் இவரது பிள்ளைகளாக இருந்தால் அப்போது இவர் மரண தண்டனை வேண்டாம் என்று சொல்லலாம். இந்த உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.

ஆனால் என் தந்தையைக் கொலை செய்தவனை அது போல் தண்டிக்கக் கூடாது என்று கூற இவருக்கு என்ன உரிமை உள்ளது?

இவர் உண்மையில் அறிவும், மானமும் உள்ள மனிதன் என்றால் மரண தண்டனை சரியா? குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை சரியா? சவூதியில் வழங்கப்பட்ட இந்தத் தண்டனை சரியா என்பது குறித்து பகிரங்க விவாதத்துக்கு வர வேண்டும். அந்த விவாதத்தில் இவர் பொய்யர் என்பதையும் மூடர் என்பதையும் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் நாம் நிரூபித்துக் காட்டுகிறோம்.

மவ்லவி.ஏ.ஜே.எம்.மக்தூம் என்பவரின் கடிதம் ஆதாரமா?:

அடுத்ததாக இவர் இந்த மரண தண்டனை சரியான முறையில் வழங்கப்படவில்லை என்பதற்குச் சொல்லும் அடுத்த ஆதாரம் ரிசானாவை கடைசி நேரத்தில் சந்தித்ததாகச் சொல்லும் இலங்கை மவ்லவி.ஏ.ஜே.எம்.மக்தூம் என்பவரின் கடிதம்.

இந்தக் கடிதத்தில் மவ்லவி.ஏ.ஜே.எம். மக்தூம் என்பவர் எழுதியுள்ளது போல மரணதண்டனை வழங்கப்படுவதற்கு சற்று முன்பாக அவர் ரிசானாவை நேரடியாகச் சந்தித்தாரா? இல்லையா? என்பதை சவூதி அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை. இருந்த போதிலும் அந்தக் கடிதத்தில் மவ்லவி.ஏ.ஜே.எம். மக்தூம் என்பவர் குறிப்பிட்ட அனைத்து செய்திகளும் உண்மையென்று வைத்துக் கொள்வோம். மனுஷ்ய புத்திரன் அந்தக் கடிதத்திலுள்ள அனைத்து செய்திகளையும் தனது கட்டுரையில் எழுதினாரா என்றால் அதுவும் இல்லை.

அந்த மவ்லவி கடைசி நேரத்தில் ரிசானாவிடத்தில் பேசிய போது, அவருக்கு மொழி புரியவில்லை; ரிசானா தனது இறுதி ஆசை என்னவென்று அந்த மவ்லவியிடத்தில் சொன்னார் என்பதையெல்லாம் பட்டியல் போட்ட இவர், இந்தக் கொலையை நான் தான் செய்தேன் என்று ரிசானா தனது மொழிபெயர்ப்பாளராக இருந்த கர்நாடக மாநிலத்தவரிடத்தில் ஒப்புக்கொண்டதாக சொல்லியுள்ளார் என்ற செய்தியை மட்டும் திட்டமிட்டு மறைக்கக் காரணம் என்ன?

இதோ மக்தூம் அவர்கள் எழுதிய கடிதத்தில் இவர் திட்டமிட்டு எடிட் செய்த பகுதி :

நான் ஏற்கனவே ரிசானாவின் வழக்கை மொழி பெயர்த்த இருவரையும் சந்தித்து இது பற்றி வினவினேன். முதலாம் மொழிபெயர்ப்பாளர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரிடம் கேட்டபோது ரிசானா தன் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்தை ஏற்றுக் கொண்டார் என்று கூறினார். இரண்டாவது மொழிபெயர்ப்பாளர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். அவரிடம் கேட்ட போது அவர் அக்கொலைக் குற்றத்தை மறுத்தார் என்று கூறினார்.

நான் இது பற்றி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி மொழி பெயர்ப்பில் உள்ள சிக்கல்கள் பற்றி அவர்களிடம் விவரித்தேன். அதற்கு அவர்கள் அப்படி அவர் அநீதி இழைக்கப்பட வாய்ப்பில்லை, ஏனெனில் மருத்துவ அறிக்கை அவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளது என்று பதில் கூறினார்கள்.

தான் செய்த கொலையை ரிசானா ஆரம்பத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். தனக்காக நியமிக்கப்பட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளரிடத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பின்னர் மரண தண்டனைக்குப் பயந்து தமிழகத்தைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளரிடத்தில் மறுத்துள்ளார். நான் தான் கொலை செய்தேன் என்று ரிசானா எழுதிய கடிதம் அவளை மிரட்டி எழுதி வாங்கியது என்று சப்பைக் கட்டு கட்டுபவர்கள் இதற்கென்ன பதில் சொல்லப் போகின்றார்கள்.

மொழிபெயர்ப்பாளர் முன்னிலையில் நான் தான் கொலை செய்தேன் என்று சொல்லச் சொல்லி ரிசானாவை யாரும் மிரட்டினார்களா? இல்லையே?.

அப்படியிருக்க அந்த வரிகளை மக்தூம் அவர்கள் எழுதிய கடிதத்திலிருந்து திட்டமிட்டு எடிட் செய்துள்ளார் என்பது தெரிகின்றதா? இல்லையா?

அதுமட்டுமல்லாமல், அவர் அநீதி இழைக்கப்பட வாய்ப்பில்லை, ஏனெனில் மருத்துவ அறிக்கை அவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளது என்று அந்த கடிதத்தில் அவர்கள் சொல்லியுள்ள செய்தியையும் திட்டமிட்டு இவர் மறைக்கின்றார் என்றால் இவரது உண்மை முகம் மக்களுக்கு தெரிந்துவிட்டதா? இல்லையா?

அப்படியானால், இவர் காட்டும் கடிதமே இவருக்கு எதிரானதாக இருந்தும் அந்தக் கடிதத்தையே எடிட் செய்து துணிந்து பொய் சொல்லி தனது கருத்தை இவர் நிலைநாட்டுகின்றார் என்றால் இவர் சல்மான் ருஷ்டியைத் தூக்கி சாப்பிடக்கூடிய அளவிற்கு மகா பெரிய விஷக்கிருமி என்பதும் தெளிவாகியுள்ளது.

மனுஷ்ய புத்திரன் எடிட் செய்ய மறந்த பகுதி :

முஸ்லிம்களைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்க வேண்டும் என்பதற்காக உண்மையை மறைக்க மக்தூம் அவர்களின் கடிதத்தில் எடிட் செய்யப் புகுந்த இவர், ரிசானா தான் கொலை குற்றவாளி; அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டார் என்பதற்கான முக்கியமான ஆதாரத்தை எடிட் செய்யாமல் தனது கட்டுரையில் அந்த கடித வாசகங்களையும் போட்டுவிட்டார். இதோ அந்த வாசகம்:

ரிசானா சொன்னார்:

என்னை மன்னித்து விட்டுட சொல்லுங்க நானா (அண்ணா) என்று கெஞ்சிய குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கி விட்டது.

மக்தூம் அவர்களிடத்தில் ரிசானா சொன்னதாக உள்ள கடிதத்தில் மேற்சொன்ன வரிகளின் பொருள் என்ன?. தன்னை மன்னித்து விட்டுவிடச் சொல்லும்படி இறுதியாக ரிசானா மவ்லவி மக்தூம் இடத்தில் கெஞ்சியுள்ளார்.

தான் குற்றமே செய்யவில்லை என்றால் ரிசானா செய்யாத குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்டிருப்பாரா? என்ற ஒரு சின்னஞ்சிறிய விஷயம் கூட தெரியாத இவர்கள் தான் அறிவுஜீவிகளாம்.

இஸ்லாம் இரக்கம் காட்டச் சொல்கின்றது என்று டயலாக் விட்டுள்ளார். இஸ்லாமியச் சட்டங்கள் பிற்போக்கானவை; பின்பற்றத் தகுதியற்றவை என்று உளறிக் கொட்டியுள்ளார். இவர் விவாதத்திற்கு வருவாரேயானால் அங்கு வைத்து இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது தோலுரித்துக் காட்டப்படும்.

சிறுவிஷயம் கூட தெரியாத அரைவேக்காட்டு அறிவுஜீவி:

குருதிப்பணம் கொடுத்து தண்டனையிலிருந்து தப்பிக்கும் வழக்கமும் இருக்கின்றது. இந்த வகையில் பெரும் தொகை வசூலிக்கப்படுகின்றது. பணம் கொடுக்க முடியாதவர்கள் தண்டனைக்கு ஆளாகின்றார்கள் என்றும் உளறிக் கொட்டியுள்ளார்.

கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் விரும்பினால் கொலைக்குப் பகரமாக நஷ்ட ஈட்டுத்தொகை வாங்கிக்கொண்டு கொலையாளியை மன்னித்து விட்டுவிடலாம் என்பது இஸ்லாம் கூறும் சட்டம். அந்த அடிப்படையில் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் மன்னித்தால், அவர்களுக்குக் கொலை செய்தவரிடத்திலிருந்து ஈட்டுத்தொகை வாங்கித் தரப்படும். இதற்குப் பெயர் குருதிப் பணம் என்று சொல்கின்றார்கள். இந்தச் சட்டம் கூட இந்த அரைவேக்காட்டு அறிவு ஜீவிக்குத் தெரியவில்லை.

குருதிப் பணம் என்று கூறி பெரும் தொகை வசூலிக்கப்படுவதாகவும், பணம் தர இயலாதவர்களை கொலை செய்கின்றார்கள் என்றும் ஏதோ வசூல் செய்த பணத்தையெல்லாம் சவூதி அரசே வாரிச் சுருட்டி வைத்துக் கொள்வது போல புளுகியுள்ளார்.

குருதிப்பணம் என்பது கொலை செய்யப்பட்டவர்களுடைய வாரிசுகளுக்கும், உறவினர்களுக்குமே சென்று சேரும் என்பதும், அவ்வாறு பணம் கொடுக்க இயலாதவர்களுக்கு அரசாங்கமே பணம் கொடுக்க முன்வரும் என்ற செய்திகள் கூட தெரியாத இவரெல்லாம் தன்னை பத்திரிக்கையாளர் என்றும் இலக்கியவாதி என்றும், பீற்றிக் கொள்வது கேவலத்திலும் கேவலம்.

எது அவமானம்?:

இறுதியாக, இந்தக் கொடிய தண்டனை முறைகள் இஸ்லாமிய சமூகத்திற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்குமே பெரும் அவமானம் என்று எழுதியுள்ளார்.

இஸ்லாமியச் சட்டங்களை நாட்டில் நடைமுறைப்படுத்தினால் தான் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்; உலகம் சுபிட்சம் பெற இஸ்லாமிய சட்டங்களே தீர்வு என்று உலகமே சொல்லிக் கொண்டுள்ள நிலையில், இந்த அறிவுஜீவிக்கு மட்டும் அது அவமானமாகத் தெரிகின்றது.

ஆம்! அனைவரும் ஆடையுடன் நடமாடக்கூடிய ஊரில் அம்மணமாகத் திரிந்தே பழக்கப்பட்ட மானம் கெட்டவர்களுக்கு ஆடை அணிவது அவமானமாகவும், அம்மணமாகத் திரிவது வெகுமானமாகவும் தான் தெரியும். இப்படி அம்மணத்தை விரும்பக் கூடிய மிருக ஜாதிகளுக்கு இஸ்லாம் அவமானமாகத் தெரியும் என்பது என்னவோ உண்மைதான்.

ஆகமொத்தத்தில் மனுஷ்ய புத்திரன் தனது கையாலேயே நக்கீரனுக்கு கொள்ளி வைத்ததுடன், தனது தலையிலும் தானே கொள்ளி வைத்துக் கொண்டுள்ளது என்பதுதான் உண்மை.

20.01.2013. 6:46 AM

ஜோஸபின் பாபாவின் குருட்டுப் பார்வை

விஷம் காக்கும் கிறித்தவ பேராசிரியையின் பொய்களும், உளறல்களும்:

இஸ்லாத்தைக் கருவறுக்க வேண்டும் என்ற கேடுகெட்ட எண்ணத்தில் நக்கீரனால் களமிறக்கி விடப்பட்டவர் தான் பாளையங்கோட்டையில் எக்ஸேவியர் கல்லூரியில் துணை பேராசிரியையாக பணிபுரியக் கூடிய கிறித்தவப் பெண் ஜே.பி.ஜோஸபின் பாபா.

இவர் கிறித்தவ வெறியராக இருப்பதால் முஸ்லிம்கள் மீதும், இஸ்லாத்தின் மீதும் தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு விஷத்தைக் கக்கியுள்ளார்.

முஸ்லிம்களை விமர்சிப்பதில் கிறித்தவ ஃபார்முலா:

கிறித்தவ போதகர்களுக்கே உரிய பாணியில் தன்னால் இயன்ற அளவு பொய்களைப் புனைந்து தள்ளி ரிசானா விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மற்றுமொரு துப்பாக்கி தூக்கி தனது எழுத்தால் படம் காட்டியுள்ளார் இந்த கிறித்தவ பெண்மணி.

புனையப்பட்ட விஷம் கக்கும் கதைகள்:

ரிசானா 10 நபர்கள் கொண்ட சவுதி குடும்பத்தில் வீட்டு பணியாளராக அமர்த்தப்படுகின்றார். ஒரே மாதத்தில் அவ்வீட்டிலுள்ள 4 மாதக் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று விட்டார் என கைது செய்யப்படுகின்றார். இந்தக் குழந்தை எவ்வாறாக மரித்தது என்று போஸ்டுமார்ட்டம் கூட செய்யாது அடக்கம் செய்தது சவுதி காவல்துறை.

மேற்கண்டவாறு தனது கற்பனைக் குதிரையை அவிழ்த்துவிட்டுள்ளார் ஜேஸ்பன் பாபா.

இறந்த குழந்தையை போஸ்ட் மார்ட்டம் கூட செய்யாமல் அடக்கம் செய்து விட்டார்களாம். அதற்குக் கூட சவூதி அரசாங்கம் அனுமதியளிக்கவில்லையாம். எவ்வளவு பெரிய அண்டப்புளுகு?

ரிசானா அந்த குழந்தையைக் கொன்றார் என்பதற்கு முக்கிய ஆதாரமே அந்தக் குழந்தையின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் தான். அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் குழந்தை மூச்சுத் திணறல் மூலமாக இயற்கையாக இறக்கவில்லை. கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுத் தான் இறந்துள்ளது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மை இவ்வாறு இருக்க போஸ்ட் மார்ட்டம் கூட செய்ய சவூதி அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை என்று இந்த விஷக்கிருமி எழுதியிருப்பதிலிருந்து இவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக எத்தகைய விஷத்தையும் கக்கக் துணிந்தவர் என்பது தெளிவாகின்றது.

போஸ்ட் மார்டம் செய்யாமல் அந்தக் குழந்தையை புதைத்ததாக சொன்ன அறிவாளி யார்? என்பதை பாப்பா விளக்குமா?

அத்தனை நோய்க்கும் அடிப்படை காரணம்:

அடுத்ததாக இந்த ஜே.பி.பாபா வைக்கும் கூறுகெட்ட ஆதாரத்தைப் பாருங்கள்:

ரிசானாதான் கொலை செய்தாள் என 2007ல் மரண தண்டனை விதிக்கின்றது. இந்த வீட்டிலிருக்கும் வேறு நபர்கள் இந்தக் குழந்தையைக் கொன்றனரா அல்லது இந்த குழந்தைக்கு மரபனுவாகவே வேறு ஏதும் நோய் இருந்ததா என்று பரிசோதிக்க இயலாத சவுதி அரசு, மதச்சட்டத்தின் பெயரில் 7 வருடம் சிறையில் கழித்த இளம் பெண்னைப் படுகொலை செய்தது அதிர்ச்சியாக உள்ளது. தற்போது மரணப்பட்ட நாலுமாத குழந்தையின் சகோதர குழந்தை கூட தீர்க்க இயலாத நோயில் அகப்பட்டு மருத்துவம் பெற்று வருவதாகத்தான் செய்திகள் உள்ளன.

வீட்டில் உள்ள வேறு யாரும் இந்தக் குழந்தையைக் கொன்றார்களா? என்று இவர் அந்த வீட்டில் ரிசானாவோடு சேர்ந்து ஒன்றாக வேலை பார்த்த வேலையாள் போல எழுதி கேள்வி கேட்டுள்ளார். வேறு யாரோ குழந்தையைக் கொலை செய்துவிட்டார்கள் என்று கொலைக்குற்றத்திற்கு ஆளான ரிசானா கூட இது வரை கூறவில்லை. ஆதாரங்கள் இருக்கும் போது ஆதாரத்தின் அடிப்படையில் பேசுவதை விட்டுவிட்டு தமிழ் பேசும் பெண் என்பதற்காக இஸ்லாத்தை குறை கூறுவதுதான் இவர்களது அத்தனை நோய்க்கும் அடிப்படை காரணம்.

உறவினருக்கு நோய் என்றால் கொலை செய்யப்பட்டவரும் தாமாக இறந்திருப்பாரா?:

மேலும், இறந்த குழந்தையின் சகோதர குழந்தை கூட தீராத நோயால் அகப்பட்டு தற்போது மருத்துவம் பார்த்து வருவதால், அது தான் அந்த குழந்தை இறந்ததற்கு காரணம் என்று அற்புதமான(?) கண்டுபிடிப்பை இந்தப் ஜே.பி.பாபா செய்துள்ளார்.

இவரது மகனை ஒருவர் தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்துவிட்டதாக வைத்துக் கொள்வோம். இந்தப் பெண்மணிக்கு ஒரு நோய் இருந்து அந்த நோயால் தற்போது அவர் அவதிப்படுவதாகவும் வைத்துக் கொள்வோம். அப்போதும் இப்படித்தான் இவர் தீர்ப்பெழுதுவாரா?

எனக்கு நோய் உள்ளது; அந்த நோய் தான் என் மகன் இறப்புக்கும் காரணமாக இருந்திருக்கக் கூடும் என்று இவர் சொல்ல முன்வருவாரா?

மகாத்மா காந்தியின் தாத்தாவிடத்தில் இருந்த நோய் தான் அவரது மரணத்திற்கு காரணமேயன்றி, கோட்சே கொலை செய்ததால் காந்தி சாகவில்லை என்று இவர்கள் சொன்னால் என்ன பதிலோ அந்த பதில் தான் இவர்களுக்கும் பொருந்தும்.

கோட்சேவுக்கு இரக்கம் காட்டும் கொடியவர்கள்:

நல்ல வேளை கோட்சே தூக்கிலிடப்படும் போது இவர்கள் இருக்கவில்லை. அப்போது இருந்திருந்தால் காந்திக்கு மனிதநேயம் பார்த்து பச்சாதாபப்படுவதைக் காட்டிலும், கோட்சேவுக்கு மனிதநேயம் பார்த்து உச்சு கொட்டி இருப்பார்கள்.

கோட்சேவின் இரத்தத்தின் விலை என்ன? என்று நக்கீர கோபால்களும், ஜே.பி.பாபாக்களும், கோட்சே விஷயத்தில் துண்டிக்கப்பட்ட நீதி என்று விகடக் கோமாளிகளும், கோட்சே என்ற சிறுவனை தூக்கிலிட்ட காட்டுமிராண்டி இந்தியா என்ற தலைப்பில் மனுஷ்ய புத்திரன்களும் ஆனந்த விகடனிலும், நக்கீரனிலும் கட்டுரை எழுதி இந்தியாவை அப்போதே வல்லரசாக்கியிருப்பார்கள். தப்பித்தார் காந்தி.

அடுத்த அண்டப்புளுகு:

இந்த நிகழ்வைக் காணும்போது சவூதிக்காரர்கள் மனதில் இரக்கமே இல்லையா என ஆச்சரியம் கொள்ள வைக்கின்றது. ரிசானாவுடன் இன்னும் 45 க்கும் மேலுள்ள இளம் பணியாளர் பெண்கள் மரண தண்டனை காத்து சிறையில் வாடுகின்றனர் என்று அடுத்த அண்டப்புளுகளை அவிழ்த்துவிட்டுள்ளார்.

மரண தண்டனைக்காக காத்திருக்கும் 45 இளம் பெண்கள் யார்? யார்? அவர்கள் குறித்த சவூதி அரசாங்கம் வெளியிட்ட பட்டியல் எங்கே? அவர்களது பட்டியலை வெளியிடத் தயாரா? என்று இந்த கிறித்தவ வெறியருக்கு அறைகூவல் விடுக்கின்றோம்.

அடுத்ததாக சவூதியில் வேலை பார்க்கும் பெண்களைப் பாலியல் பலாத்காரத்திற்கு நிர்பந்தப்படுத்தும் சவூதி எஜமானர்களைக் கொன்றதால் மரண தண்டனைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் தான் அதிகமாக சிறையில் இருக்கிறார்கள் என்றும் எழுதி இந்த விஷயத்தில் தானே நேரடியாக பாதிக்கப்பட்ட பெண்ணைப் போன்று படம் காட்டியுள்ளார் ஒன்றும் அறியாத பாப்பா.

பைபிள் படித்ததால் வந்த கற்பனை:

இதுவும் கற்பனைக் கதைதான். பைபிளை அதிகமாகப் படித்ததால் ஜே.பி.ஜோஸிபின் என்ற பெண்மணிக்கு வந்த கற்பனையாக இது இருக்கலாம். தனக்கு கீழுள்ள போர்ச் சேவகரின் மனைவியை அபகரித்து கற்பமாக்கிய தாவீது ராஜாவைப் போல சவூதி எஜமானர்களும் இருப்பார்கள் என்ற கிறித்தவ பேராசிரியையின் நினைப்பு தவறு என்று அவருக்கு சொல்லிக் கொள்கின்றோம். அல்லது அவரது சொந்த அனுபவமாகவும் இது இருக்கலாம்.

அதிகமாக பைபிள் படித்தால் இதுபோலத் தான் தேவையில்லாத கற்பனைகள் வரும் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆண்களை விரட்டும் பெண்கள்(?):

அங்குள்ள எஜமானப் பெண்கள் கூட சில வீட்டு வேலையாட்களான ஆண்களைக் கெடுக்க நினைத்து நடக்காத சந்தர்ப்பங்களில் அவர்களைச் சட்டத்தால் பழி தீர்த்துக் கொள்ளும் சம்வங்களும் கேட்டுள்ளோம் என்றும் இவரது கற்பனைக் குதிரை இவரது கட்டுரையில் கொடிகட்டி பறக்கின்றது.

இதுவும் பைபிள் படித்ததனால் ஏற்பட்ட தாக்கம் தான். விரும்பாத ஆணை எவ்வளவுதான் வற்புறுத்தினாலும் அவனை உடலுறவுக்கு இசைய வைக்க முடியாது என்பது ஊரறிந்த உண்மை. அப்படியிருக்க லோத் என்ற தீர்க்கதரிசியை வலுக்கட்டாயமாக மதுவை ஊத்திக் கொடுத்து அவர்களது மகள்கள் இருவரும் அவரது விருப்பமின்றி அவரை வன்புணர்வு செய்ததாக பைபிள் கூறுகின்றதே அந்தக் கதையை சவூதி அரேபிய பெண்களுக்குப் பொருத்தி முஸ்லிம்கள் மீதான தனது கோபத்தைத் தணித்துக் கொண்டுள்ளார் பாப்பா.

இதில் ஏழை மக்கள் கலங்கித் தவிப்பதை படைத்தவர் தான் விரும்புவாரா? என்ற கேள்வி வேறு. கொலைகாரப் பாவிகளுக்கு இறைவன் நிச்சயமாக இரக்கம் காட்டமாட்டான். கொலை செய்யப்பட்டவர்களுக்கும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்தான் இறைவன் இரக்கம் காட்டுவான்.

பகிரங்க சவால்:

கடவுள் என்ற பெயரில் மனிதநேயமில்லா செயல்களை யார் செய்தாலும் எந்த மதம் செய்தாலும் தண்டிக்கும் துணிவு ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். இங்கு சுயநலமான மத சிந்தனையில் பொய் புரட்டு பேசுவது வருந்தத்தக்கது என்று சொல்லி நல்லபிள்ளை நாடகமாடுகின்றார் ஜே.பி.பாபா.

கொலைக்கு கொலை என்ற சட்டத்தை திருக்குர்ஆன் மட்டும் சொல்லவில்லை. இவர் வேதமாக ஏற்றுள்ள பைபிளும் தான் கூறுகின்றது. மோசேவுக்கு வழங்கப்பட்ட நியாயப் பிரமாணத்தில் இது தான் சட்டம். இந்தச் சட்டத்தை உண்மைப்படுத்தத் தான் தன்னைக் கர்த்தர் அனுப்பியதாகவும், தான் வருகை புரிந்துள்ளதாகவும் இயேசு புதிய ஏற்பாட்டில் சொல்லிக்காட்டியுள்ளார்.

அப்படியானால் குழந்தையைக் கொன்றதற்காக அந்தக் குழந்தையை கொலை செய்தவர் கொல்லப்பட வேண்டும் என்ற சட்டத்தை பைபிளும் சொல்கின்றது. எனவே நான் இத்தகைய காட்டுமிராண்டி சட்டத்தைச் சொன்ன கிறித்தவ மதத்தில் இருக்க மாட்டேன் என்று அறிவிப்புச் செய்து கிறித்தவ மதத்தை காட்டுமிராண்டி மதமாக அறிவிக்க ஜே.பி.ஜோஸிபின் பாப்பா தயாரா?

கொலைக்கு கொலை செய்வது மட்டுமல்ல; அப்பாவி குழந்தைகளைக் கூட அவர்களது தலையைப் பிடித்து பாறையில் முட்டி கொலை செய்பவன் பாக்கியவான் என்று இயேசு நாதர் மேற்கோள்காட்டிய சங்கீதத்தில் எழுதப்பட்டுள்ளதே! இந்த அக்கிரமத்திற்கு எதிராக இந்த பாப்பா என்றைக்காவது வாய் திறந்திருக்குமா?

அப்படியானால் முஸ்லிம்கள் சரியான செயலைச் செய்தால் கூட அது தவறு. கிறித்தவர்கள் எத்தகைய அயோக்கியத்தனத்தைச் செய்தாலும் அவை சரி என்று இவர் சொல்ல வருகின்றாரா?

இந்த தண்டனையால் மனிதம் மதத்தால் படுகொலை செய்யப்பட்டது என்பது மட்டுமே உண்மை. ஒரு தாயின் தீராத அழுகைக்கு காரணம் ஆகிவிட்ட சவுதியை இறைவனும் மன்னிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

இப்படி மனித நேயத்திற்கு எதிராக கருத்துக்கூறி இவர்கள் தான் மனிதாபிமானத்தையும், மனித நேயத்தையும் படுகொலை செய்ய முயல்கின்றார்கள். இவர்களை மனித நேயமுள்ள எவரும் மன்னிக்கமாட்டார்கள் என்பதுதான் உண்மை.

இவர்கள் நம்முடன் விவாதத்திற்கு வந்தால் மேற்கண்ட விஷயங்களில் இவர்களின் இரட்டை வேடத்தை இறைவனின் துணைகொண்டு அம்பலப்படுத்துவோம்.

20.01.2013. 6:43 AM

விகடக் கோமாளியின் தெருக்கூத்து

இலங்கைப் பெண் ரிசானாவிற்கு மரணதண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஆனந்த விகடன் என்ற கோமாளி பத்திரிக்கையில், பாரதி தம்பி என்ற அரைவேக்காடு, இல்லாத பொல்லாத விஷயங்களையெல்லாம் இஸ்லாத்தின் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் அள்ளி வீசியுள்ளது.

இது குறித்து, துண்டிக்கப்பட்ட நீதி என்ற கட்டுரையை வெளியிட்டு தங்களுக்கும் அறிவுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று சொல்லாமல் சொல்லியுள்ளனர் விகடக் கோமாளிகள். துண்டிக்கப்பட்ட நீதி என்று தலைப்பிட்ட கட்டுரையில் பொய்களையும், உளறல்களையும் அள்ளிக் கொட்டி, அறிவையும், உண்மையையும் தங்களிடத்திலிருந்து துண்டித்துள்ளது ஆனந்த விகடன்.

இது காட்டுமிராண்டிகளின் நரபலி அல்ல. நவீன உலகத்தில் சட்டப்படி வழங்கப்பட்டு இருக்கும் நீதி என்று ரிசானா விவகாரம் குறித்து ஆரம்பமாகின்றது இந்தக் கட்டுரை.

4 மாத குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனை அளிக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமாம். பாரதி தம்பியின் அண்ணனையோ அல்லது அவரது குழந்தையையோ எவனாவது கொலை செய்தால் இந்தத் தம்பியின் நிலை அப்போது தெரியும்.

பாரதி தம்பிக்கு உண்மையிலேயே துணிவு என்ற ஒன்று துளியாவது இருக்குமேயானால் நரபலி என்ற பெயரில் குழந்தைகளைக் கொல்லும் இந்து சாமியார்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி பேனா பிடிக்கட்டும்.

இந்த அரைவேக்காட்டு பாரதி தம்பியும் மனுஷ்ய புத்திரன் எழுதியது போலவே ரிசானா எழுதிய கடிதம் தான் அவர் குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரம் என்று எழுதி தனது புத்தியின்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனந்த விகடனின் திட்டமிட்ட சதி அம்பலம்:

அடுத்ததாக இவர்கள் புளுகியுள்ள விஷயம் தான் இந்த ஆண்டின் மகா புளுகாக கருதப்படும் என்கின்ற அளவிற்கு இஸ்லாத்தின் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் திட்டமிட்ட பொய்யை அவிழ்த்து விட்டுள்ளனர். முஸ்லிம்கள் என்றாலே அவர்கள் இப்படிப்பட்ட காட்டுமிராண்டிகள் தான் என்ற விஷக்கருத்தை விதைக்கும் விதமாக உண்மையை மறைத்து திரித்து எழுதியுள்ளனர்.

இதோ பாரதி தம்பியின் அவதூறு வரிகள்:

சவுதி சிறைச்சாலைகளில் இன்னும் நான்கு இலங்கையர்கள் மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறார்கள். புத்தர் சிலையை வைத்துத் தொழுதார் , பைபிள் வைத்திருந்தார் , முஹம்மது நபிகள் குறித்த கேலிச் சித்திரத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார் , மந்திரம் ஓதி மணிக்கட்டில் கட்டும் கயிறு வாங்கினார் என்பது அந்த நான்கு பேர் மீதும் சொல்லப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகள். இவர்களைக் காப்பாற்றவும் இலங்கை அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கட்டுக்கதை எழுதியுள்ளார் பாலாய்ப்போன பாரதி தம்பி.

சவூதி அரேபியச் சிறைச்சாலையில் இன்னும் 4 நபர்கள் தலைவெட்டப்பட காத்திருக்கின்றார்களாம்.

புத்தர் சிலையை வைத்துத் தொழுதார் ,

பைபிள் வைத்திருந்தார் ,

முஹம்மது நபிகள் குறித்த கேலிச் சித்திரத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார் ,

மந்திரம் ஓதி மணிக்கட்டில் கட்டும் கயிறு வாங்கினார்

மேற்கண்ட நான்கு செய்திகள் தான் அவர்கள் தலை வெட்டப்படப் போவதற்கு காரணம் என்று சொல்லி இல்லாத புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டுள்ளார் பொய்யுக்கும், புரட்டுக்கும் அண்ணனாக விளங்கும் புளுகல் தம்பி.

மேற்கண்ட நான்கு காரணங்களுக்காக சவூதியில் தலை வெட்டப்படுமானால் அந்த 4 பேரோடு சேர்த்து இங்குள்ள பாரதி தம்பிகளும், மனுஷ்ய புத்திரர்களும், ஜோஸபைன் பாபாக்களும் தலைவெட்டப்பட வேண்டியவர்கள் தான்.

இந்த பாரதி தம்பி தமிழ்நாட்டில் ஆனந்த விகடன் அலுவலகத்தில் ஏ.சி. ரூமில் உட்கார்ந்து கொண்டு, சம்பந்தப்பட்ட நால்வருடன் ஐந்தாவது நபராக அமர்ந்திருந்தவர் போல கதை எழுதியுள்ளார்.

பாரதி தம்பி சொன்ன செய்திகள் இவரது சொந்தச் சரக்கோ, சவூதி அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்போ கிடையாது. இலங்கை எம்.பி.ரஞ்சன் ராமநாயக்கா என்பவர் ஆளும் கட்சியைத் திட்டுவதற்காக சொல்லியுள்ள செய்திகள்தான் அவை.

இலங்கையின் எம்.பி. ரஞ்சன் ராமநாயக்கா சொன்னது என்ன?:

சவூதி அரேபிய சிறையில் புத்தர் சிலையை வைத்துத் தொழுதார், பைபிள் வைத்திருந்தார், முஹம்மது நபிகள் குறித்த கேலிச் சித்திரத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார், மந்திரம் ஓதி மணிக்கட்டில் கட்டும் கயிறு வாங்கினார் என்பதற்காக 4 பேர் சவூதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளன. இவர்கள் மரணதண்டனை குற்றவாளிகள் அல்ல என்று இலங்கை எம்.பி. கூறியுள்ள செய்திகளைத் தான் திட்டமிட்டு, முஸ்லிம்களை கருவறுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், காழ்ப்புணர்வோடு திரித்து எழுதியுள்ளார் ஆனந்த விகடன் கட்டுரையாளர் புளுகள் தம்பி.

முதலில் 4 பேர் மேற்குறிப்பிட்ட விஷயங்களுக்காக சவூதி அரேபியாவில் தண்டனை பெற்றுள்ளார்கள் என்று இலங்கை எம்.பி. சொன்ன செய்தி ஆதாரப்பூர்வமான தகவலா இல்லையா என்பதே சந்தேகம். அப்படியிருக்கையில் அந்த எம்.பி. சொன்னதாக அவர் சொல்லாத கருத்தை இட்டுக்கட்டி சொல்வதோடு, அவர் சொன்ன கருத்திற்கு நேர் மாற்றமாக இவர் பொய் சொல்லி முஸ்லிம்களைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிப்பதிலிருந்து இவர்களின் திட்டமிட்ட சதி அம்பலமாகியுள்ளது.

பாரதி தம்பியையும் பிடித்தாட்டும் மேஜர் மைனர் கிறுக்கு:

பாரதி தம்பி என்பவரும் ரிசானா இந்தக் கொலை செய்யும்போது அவருக்கு 17 வயதாகத் தான் இருந்தது என்று கதையளந்துள்ளார். மேலும் சரியான மொழி பெயர்ப்பாளர்கள் ரிசானாவிற்கு நியமிக்கப்படவில்லை என்ற பொய் குற்றச்சாட்டுகளையும் அவிழ்த்துவிட்டுள்ளார்.

சரியான மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்படவில்லையா? :

சரியான மொழி பெயர்ப்பாளர்கள் அந்தப் பெண்மணிக்காக நியமிக்கப்படவில்லை என்றும் பொய்யான குற்றச்சாட்டை அவிழ்த்துவிட்டு வருகின்றனர். இஸ்லாமிய எதிரிகள் வைக்கக்கூடிய இந்த பொய்க் குற்றச்சாட்டையும் பாரதி தம்பி வாந்தியெடுத்து கக்கியுள்ளார். இதுவும் திட்டமிட்டு இவர்கள் பொய் சொல்கின்றார்கள் என்பதை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

மொழிபெயர்ப்பாளரை நியமித்தது சவூதியா? இலங்கையா?:

ரிசானா என்ற அந்தப் பெண்மணிக்காக வாதாடக்கூடிய மொழிபெயர்ப்பாளரை நியமித்தது சவூதி அதிகாரிகள் தான் என்று நினைத்துக் கொண்டு தான் இவர்கள் இத்தகைய குற்றச்சாட்டை வைக்கின்றார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? சவூதியிலுள்ள இலங்கை மிஷன் தான் ரிசானாவிற்கு உரிய மொழிபெயர்ப்பாளராகவும், அவருக்காக வாதாடக்கூடியவருமான வக்கீலையும் நியமித்துள்ளது. அப்படியானால் இந்தக் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க இலங்கையைத் தான் சாரும். இதற்கும் சவூதி அரசாங்கத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

சவூதிக்கு இலங்கை தூதரகம் பாராட்டு:

அது மட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் சமரச முயற்சி செய்வது உள்ளிட்ட சவூதி அரசாங்கத்தின் முயற்சிகளும், அனைத்து நடவடிக்கைகளும் திருப்தியளிப்பதாக சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ஸ்ரீலங்காவின் அட்டர்னி ஜெனரலும், மற்றுமொரு மூத்த அதிகாரியும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் நேரடியாக சவூதி சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் உரையாடி திருப்தியோடு திரும்பிய விஷயங்களையெல்லாம் இந்த மனுஷ்ய க புத்திரர்களும், பாரதி தம்பிகளும் மறைக்கக் காரணம் என்ன? முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்வு தவிர காரணம் வேறென்னவாக இருக்க முடியும்.

சவூதியுடன் சுமூகமான தூதரக உறவு தொடரும் இலங்கை அறிவிப்பு :

அத்துடன் 2012 டிசம்பர் 9ஆம் தேதியுடன் பணி நிறைவு பெற்ற சவூதியிலுள்ள இலங்கைக்கான தூதர் அஹமது ஏ.ஜவாத் அவர்களுக்கு பதிலாக வேறொரு தூதர் நியமிக்கப்படுவார் என்றும், சவூதி அரேபியாவுடனான சுமூகமான இலங்கையின் தூதரக உறவு தொடரும் என்றும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள அறிவிப்புகள் இந்த செவிடர்கள் காதில் விழவில்லையா? அல்லது விழுந்தும் விழாத செவிடர்கள் போல நடிக்கின்றார்களா?

சவூதிக்கான இலங்கைத் தூதர் தனது பணிக்காலம் முடிந்த காரணத்தால் இலங்கை திரும்பியுள்ளார். அவருக்குப் பதிலாக வேறொருவரை சவூதிக்கான இலங்கை தூதரக அதிகாரியாக நியமிக்கவுள்ளதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உண்மை நிலை இப்படி இருந்தும் நடந்த சம்பவத்தைக் கண்டித்து தனது தூதரை இலங்கை அரசு வாபஸ் பெற்றுள்ளது என்று சில அரைவேக்காடுகள் கதையளந்து வருவதும் இஸ்லாத்தின் மீது கொண்ட வெறுப்பினால்தான்.

நிலைமை இப்படி இருக்க சவூதி அரசாங்கத்தைக் குறை சொல்லும் சாக்கில் இந்த அரைவேக்காட்டுக் கூட்டம் இஸ்லாத்தின் மீது புழுதி வாரி வீசுகின்றது. இஸ்லாமியச் சட்டத்தை, இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கோடு இஸ்லாத்தின் மீது இப்படி புழுதி வாரி வீசுவார்களேயானால் இழிவும், கேவலமும் தான் இவர்களுக்கு மிஞ்சும் என்பதை தற்போதைக்கு சொல்லி வைக்கின்றோம்.

20.01.2013. 6:41 AM

ரிசானா – நிலை நாட்டப்பட்ட நீதி

ஒரு குழந்தையைக் கொலை செய்த குற்றத்திற்காக சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கும் இலங்கைப் பெண் ரிசானா....

பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; குற்றம் இழைத்தவர்களின் மனித உரிமையை மட்டுமே நாங்கள் பார்ப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு போராடும் மனித (?) உரிமைப் போராளிகளும், இஸ்லாமியச் சட்டங்கள் காட்டுமிராண்டித் தனமானவை என்று திட்டமிட்டு பரப்பி வரும் ஊடகங்களும் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, இஸ்லாமிய மார்க்கத்தைக் களங்கப்படுத்தப் போராடி வருவதால் அவர்களுக்குப் பதிலளிப்பதற்காக இந்தக் கட்டுரை.

குற்றவாளி இலங்கைப் பெண் என்பதால் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவே அமெரிக்கராகவோ, ஐரோப்பியராகவோ இருந்தால் ராயல் பர்டன் எனப்படும் ராஜ மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது. இந்தக் கருத்து முற்றிலும் தவறானது.

அரசு சார்ந்த குற்றங்களுக்குத் தான் ராஜமன்னிப்பு பொருந்தும். தனி நபர் தொடர்பான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் மன்னிக்காத வரை சவூதி மன்னரால் எதுவும் செய்ய முடியாது.

ஒரு மலையாளியைக் கொலை செய்த குற்றத்திற்காக 3 சவூதி இளைஞா்களுக்கு சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. காரணம், அந்த மலையாளியின் வாரிசுதாரர்கள் மன்னிக்கவில்லை என்பதால்..

15 ஜுலை 1977 ஆம் ஆண்டு இளவரசி மிஸ்ஸால் பிந்த் ஃபஹத் பின் முஹம்மத் பின் அப்துல் அஜீஸ் ஆலே சௌத், படிக்கச் சென்ற இடத்தில் லெபனானில் நடந்த விபச்சார குற்றத்திற்க்காக ஜித்தாவில் வைத்து அவருடைய 19 வது வயதில் தலை வெட்டப்பட்டார்.

அதே போன்று 25 மார்ச் 1975ல் மன்னர் ஃபைஸல் பின் அப்துல் அஜீஸ் ஆலே சௌத் அவர்களை சுட்டுக் கொன்ற மன்னருடைய தம்பி மகன் இளவரசர் ஃபைஸல் பின் முஸைத் ரியாத் சதுக்கத்தில் பொது மக்கள் முன்னால் 18 ஜூன் 1975 தலை வெட்டப்பட்டார்.

ஆக, சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமே. இங்கு நாடு, மொழி, மதம் எதுவும் பார்க்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை மட்டுமே பார்க்கப்படுகின்றது.

ஒரு முன்னாள் பிரதமரையும் காவல்துறை உயர் அதிகாரியையும் இன்னும் 15 பேரையும் கொன்றவர்களை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரின் மனநிலையிலிருந்து பாராமல் ஜனாதிபதி மன்னித்தால் விடுதலை என்று கூறும் இந்தியத் திருநாட்டின் சட்டம் சவூதியில் இல்லை தான்.

டெல்லி பெண்ணைக் கற்பழித்துக் குடலை உருவிக் கொன்ற கயவர்களை பிரணாப் முகர்ஜி நினைத்தால் மன்னித்து விடலாம் என்று கூறும் இந்தியச் சட்டம் சவூதியில் இல்லை தான்.

படித்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஏழை வாட்ச்மேனின் மகள் வினோதினியின் முகத்தை அமிலம் ஊற்றிச் சிதைத்து, கண்களைப் பறித்து, அவளை நிர்மூலமாக்கிய காமுகனையும் அரசாங்கம் நினைத்தால் மன்னித்து விடலாம் என்ற இந்தியச் சட்டம் சவூதியில் இல்லை தான்.

பாதிக்கப்பட்டவன் மன்னித்தால் தவிர வேறு யாரும் - அவர் மன்னராக இருந்தாலும் அதில் தலையிட முடியாது என்று சொல்லும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் தான் சவூதியில் இருக்கின்றது.

இதுபோன்ற சர்வதேச விமர்சனங்களுக்கு அஞ்சியே 30 லட்சம் ரியால்கள் (கிட்டத்தட்ட 5 கோடி இந்திய ரூபாய்) தருகிறேன், மன்னித்து விடுங்கள் என்று சவூதி அரசாங்கம் கெஞ்சியும் அந்தப் பெற்றோர் மன்னிக்கவில்லை என்றால் அவர்கள் அடைந்த பாதிப்பின் தன்மை நமக்குத் தெரியவில்லையா?

ராஜ மன்னிப்பு இந்த விஷயத்தில் உண்டு என்றால் இப்படி நஷ்ட ஈடு தருகிறோம் என்று கெஞ்சுவதற்குப் பதில் அதைச் செய்திருக்குமே! இதைச் சிந்திக்க வேண்டாமா?

கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றோர், குற்றவாளியை மன்னித்திருக்கலாம். ஆனால் அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் மன்னிக்காமல் விட்டதற்காக அவர்களைக் குற்றம் சொல்லக் கூடாது. சட்டம் அவர்களுக்கு வழங்கியிருக்கும் உரிமையைத் தான் இங்கு நாம் பார்க்க வேண்டும்.

சர்வதேச நிர்ப்பந்தத்திற்கோ, விமர்சனங்களுக்கோ பயந்து இந்தத் தண்டனையை நிறைவேற்றாமல் இருந்தால் தான் அது அநீதி. இந்த விஷயத்தில் சவூதி அரசாங்கம் நீதியை நிலைநாட்டியுள்ளது.

அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் தவறு செய்யவில்லை என்று ரிசானா எழுதியதாக ஒரு கடிதத்தைக் காட்டுகிறார்கள். ரிசானா நிரபராதி என்பதற்கு இந்த அறிவுஜீவிகள் சமர்ப்பிக்கும் மிகப் பெரிய ஆதாரம் இது தான்.

குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை மறுப்பது மட்டுமே அவர் நிரபராதி என்பதற்கு ஆதாரமாகி விடுமா? உலகின் எந்த நாட்டிலாவது குற்றவாளியின் மறுப்பு சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படுகிறதா? கோவையில் இரண்டு குழந்தைகளைக் கடத்திக் கொன்றவனை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றார்கள், இன்னொருவனுக்கு மரண தண்டனை விதித்தார்கள். அந்தக் குற்றவாளிகள், சாமி சத்தியமாக நாங்கள் கொல்லவில்லை என்று சொல்லி விட்டால் விடுதலை செய்து விட வேண்டும் என்று இந்த அறிவு சூனியங்கள் வாதிடுவார்களா?

இந்தச் சம்பவத்தில் காவல்துறையினர் சரியாக விசாரிக்காமல் இந்தக் குற்றவாளிகளைக் கொன்று விட்டார்கள், நிரபராதிக்குத் தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று பாகிஸ்தான்காரன் வந்து குற்றம் சாட்டினால் இவர்கள் சும்மா விடுவார்களா? அப்படியானால் சம்பந்தமில்லாமல் சவூதி அரேபிய காவல்துறையின் விசாரணையில் தலையிட இவர்கள் யார்?

ரிசானா எழுதியதாகக் கூறப்படும் அக்கடிதத்தில், விசாரணையின் போது நிர்ப்பந்தப்படுத்தி என்னிடம் கொலை செய்ததாகக் கையெழுத்து வாங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி நிர்ப்பந்தப்படுத்தி கையெழுத்து வாங்கி, அவளைக் கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் சவூதி அரசாங்கத்திற்கு என்ன வந்துவிட்டது? அப்படிச் செய்திருந்தால் 5 கோடி தருகிறேன், மன்னித்து விடுங்கள் என்று கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் என்ன?

எடுத்தேன் கவிழத்தேன் என்று இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு விடவில்லை. ஏழு வருட விசாரணைக்குப் பின் விதிக்கப்பட்டுள்ளது.

அத்தனை பெரிய மன்னராட்சியைக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கமே ஒரு குற்றவாளியை மன்னிக்கும் விஷயத்தில் தலையிட முடியவில்லை, பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் மட்டுமே விடுதலை என்று கூறி, அடித்தட்டு மக்களின் சட்டமாகத் திகழும் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. பழிக்காமல் இருங்கள்.

20.01.2013. 6:38 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account