Sidebar

19
Fri, Apr
4 New Articles

உங்களை யூதக்கைக்கூலி என்று சொல்வது ஏன்?

விமர்சனம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

உங்களை யூதக்கைக்கூலி என்று உங்கள் எதிரிகள் சொல்கிறார்களே அது ஏன்?

அப்துல்லாஹ், வத்தலக்குண்டு

பதில் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் முதல் இன்றைய தேதி வரை யூதர்கள் முஸ்லிம்களை எதிரிகளாகக் கருதி செயல்பட்டு வருகின்றனர். தாங்கள் உயர்ந்த இனம் என்று யூதர்கள் கொண்டிருந்த இறுமாப்பை இஸ்லாம் ஒழித்துக் கட்டியது போல் வேறு எந்த இஸங்களும் ஒழித்துக் கட்டியதில்லை.

பிறப்பால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று யூதர்கள் கட்டிவைத்த கோட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தகர்த்து எறியப்பட்டதால் இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்ற வெறி அவர்கள் இரத்தத்தில் ஊறிப் போனது.

வலிமையால் இஸ்லாத்தை வெல்ல முடியாததால் நரித்தனம் செய்து இஸ்லாத்தை வீழ்த்த நினைத்தனர். கேடுகெட்ட கொள்கைகளை இஸ்லாமியக் கொள்கை என்ற சாயம் பூசி முஸ்லிம்களிடம் தினித்தனர். இதனால் இஸ்லாமும் மற்ற மதங்களைப் போல் மூட நம்பிக்கை நிறைந்த மார்க்கம் என்ற கருத்தை விதைக்க நினைத்தனர். ஆனால் அதிலும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.

இந்த வரலாறை அனைத்து முஸ்லிம்களும் அறிந்து வைத்திருப்பதால் சீர்திருத்தம் செய்பவர்களுக்கு யூதக்கைக்கூலி என்ற முத்திரை குத்தினால் அதன் மூலம் சத்தியப் பிரச்சாரத்தை முடக்கிவிடலாம் என்று கருதி இவ்வாறு விமர்சிக்கின்றனர். நாம் எடுத்துக் காட்டும் எந்த ஆதாரத்துக்கும் பதில் இல்லாததால் யூதக் கைக்கூலி என்ற ஒரு பதிலில் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.

இந்தச் சமுதாயத்தில் அவ்வப்போது யூதக் கைக்கூலிகள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் யூதக்கைக்கூலி என்று ஒருவரை அல்லது ஒரு இயக்கத்தைச் சொல்வதாக இருந்தால் அதற்கான காரண காரியத்தை விளக்க வேண்டும்.

யூதர்களின் கொள்கைக்கு நாம் வக்காலத்து வாங்குகிறோம் என்பதற்காக இப்படி சொல்கிறார்களா? அல்லது யூதர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு நாம் பிரச்சரம் செய்கிறோம் என்பதற்காக இப்படி சொல்கிறார்களா என்பதை அவர்கள் தெளிவுபடுத்துவதில்லை.

ஆனால் நம்மை இப்படி விமர்சிப்பவர்கள் தான் யூதக் கைக்கூலிகள் என்று நாம் ஆதாரத்துடன் சொல்ல முடியும்.

யூதர்கள் உசைரைக் கடவுளின் மகன் என்று சொன்னார்கள். அதாவது உசைர் என்பார் கர்த்தரின் மகன் என்ற தரத்தில் உள்ளவர் என்பது அவர்களின் கொள்கை.

அப்துல் காதிர் ஜீலானி என்பவர் அல்லாஹ்வின் அர்ஷுக்கு அருகில் தொட்டிலில் துங்கிக் கொண்டு இருப்பதாகக் கதை எழுதி வைத்துக் கொண்டு சுன்னத் ஜமாஅத்தினர் பலர் அதை நம்புகின்றனர்.

இது தான் யூதக் கொள்கை. இவர்கள் தான் யூதக்கைக்கூலி என்று சொல்ல முடியும்.

யூதர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை தர்காவாக ஆக்கிக் கொண்டார்கள் என்பதற்காக அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மரணத்தறுவாயில் கண்டித்தார்கள்.

செத்துப் போனவர்களுக்கு ஊர்கள் தோறும் தர்கா கட்டி அந்த யூதர்கள் வழியில் யூதக் கொளகைக்கு உயிர் கொடுக்கும் சுன்னத் ஜமாஅத்தினர் தான் யூதக் கைக்கூலிகள். தர்காவைத் தகர்க்க வெண்டும் எனக் கூறி நாம் யூதக் கொள்கைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறோம்.

பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை. மொழியால் உயர்வு தாழ்வு இல்லை என்பது நபி வழி.

ஆனால் யூதர்கள் தங்களை உயர்ந்த இனம் என்று நினைத்துக் கொண்டார்கள். சுன்னத் ஜமாஅத்தினர் அரபி பேசுபவன் சிறந்தவன் என்றும் குறிப்பிட்ட வமசத்தில் பிறந்தவன் சிறந்தவன் என்றும் மத்ஹபு நூல்களில் எழுதி வைத்து யூதக் கொளகையை இஸ்லாத்தில் தினித்தார்கள். இவர்கள் தான் யூதக் கைக்கூலிகள்.

எழுத்துக்களுக்கு நம்பர் கொடுத்து மந்திர வேலை பார்ப்பது யூதர்களின் வழிமுறை. அதை அப்படியே பின்பற்றி அப்ஜத் கணக்கு என்று போட்டு அதே போல் மக்களை ஏமாற்றிவரும் கூட்டம் தான் யூதக் கைக்கூலிகள்.

இன்று நாம் எதிர்த்து பிரச்சாரம் செய்யும் கொள்கைகளில் அதிகமானவை யூதர்களைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்டவையாகும். யூதக் கொள்கையை முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து ஒழித்துக்கட்டுபவர்கள் ஒருக்காலும் யூதக்கைக்கூலியாக இருக்க முடியாது.

மேலும் யூதர்களின் இஸ்ரேல் அரசுக்கு நரசிம்மராவ் அரசு அங்கீகாரம் அளித்த போதும் இன்னபிற சந்தர்ப்பங்களிலும் நாம் அதை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.

ஆனால் நம்மை யூதக் கைக்கூலி எனச் சொல்லும் கூட்டத்தினராகிய மத்ஹப்வாதிகள் எகிப்தில் என்ன செய்தார்கள்? இஸ்ரேலுடன் காதல் கொண்டு உறவை வளர்த்தனர். சரணாகதி அடைந்தனர்.

இஸ்ரேலுக்கும், நமக்கும் நிலப் பிரச்சனை தான் உள்ளது; கொள்கைப் பிரச்சனை இல்லை என்று சொன்ன கிறுக்கனை எல்லாம் இன்றும் மார்க்க் அறிஞராக ஒரு கூட்டம் போற்றிக் கொண்டு அவனது நூல்களை மொழி பெயர்த்து வெளியிட்டுக் கொண்டுள்ளது. இவர்கள் தான் யூதக் கைக்கூலிகள்

நாம் யூதக் கொள்கையை ஒழித்துக் கட்ட சபதம் ஏற்ற கூட்டத்தினராவோம். நாம் யூதக்கைக்கூலி என்று சொல்லக் கூடியவர்கள் அதற்கான காரணத்தைச் சொல்லட்டும்.

உணர்வு 16:31

28.03.2012. 12:06 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account