Sidebar

27
Sat, Jul
5 New Articles

மின்னல் வேக இரவுத் தொழுகை

பித்அத்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

தொழுகை திருடர்கள் ஜாக்கிரதை! கின்னஸில் இடம்பிடிக்க அல்ல தொழுகை; சொர்க்கத்தில் இடம் பிடிக்கவே தொழுகை!

ரமலான் மாதத்தில் அல்லாஹ்வின் அருளை அதிகமதிகம் பெறுவதற்குண்டான அமல்களை நாம் செய்ய வேண்டும். ஆனால் தற்போது முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் நிலைமையே வேறு. நன்மையான காரியங்களைச் செய்வதாக நினைத்துக் கொண்டு மார்க்கத்திற்கு முரணான மற்றும் மார்க்கம் தடுத்த காரியங்களை வணக்க வழிபாடுகள் என்ற பெயரில் செய்து வழி தவறிப்போகும் நிலையை கண்கூடாகக் காண்கின்றோம்.

குறிப்பாக இந்த ரமலான் மாதத்தில் இரவு நேரங்களில் தொழப்படும் இரவுத் தொழுகையை எடுத்துக் கொள்வோம். 23 ரக்அத்கள் தொழுகின்றனர். இதற்கு மார்க்கத்தில் எவ்வித ஆதாரமுமில்லை என்பது ஒருபக்கம் இருக்க, அந்த தொழுகையை இவர்கள் தொழும் வேகம் இருக்கின்றதே! சுப்ஹானல்லாஹ்....

அல்லாஹ்வின் வேத வசனங்களை கேலிக்குரியதாக ஆக்கி, அல்லாஹ்வின் தூதருடைய கட்டளைகளை துச்சமாக ஆக்கி எக்ஸ்பிரஸ் வேகத்தில் இந்த தொழுகையை நிறைவேற்றுகின்றனர்.

7 நிமிடத்தில் 23 ரக் அத்கள் தொழுது ஒரு நாட்டிலுள்ள பள்ளிவாசலில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்களாம். அந்த வீடியோக்களெல்லாம் வாட்ஸ் அப்பில் பரவுவதை நாம் காண்கின்றோம். இது குறித்து மார்க்கம் என்ன சொல்கின்றது என்ற அடிப்படை தெரியாமல் இவர்கள் இருப்பது தான் இத்தகைய தவறான செயல்பாடுகளுக்கு காரணம்.

22642 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النُّوشَجَانِ - وَهُوَ أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ - حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ، عَنِ الْأَوْزَاعِيِّ ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَسْوَأُ النَّاسِ سَرِقَةً الَّذِي يَسْرِقُ مِنْ صَلَاتِهِ ". قَالُوا : يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ يَسْرِقُ مِنْ صَلَاتِهِ ؟ قَالَ : " لَا يُتِمُّ رُكُوعَهَا وَلَا سُجُودَهَا ". أَوْ قَالَ : " لَا يُقِيمُ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ ".

திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய போது, அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என நபித்தோழர்கள் கேட்டனர். தனது ருகூவையும், சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: அஹ்மத் 11106

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்தது ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யாத நபர்களைத்தான். ஆனால் இவர்களோ தொழுகையின் எந்தச் செயலையும் பூரணமாக செய்வதில்லை. அப்படியானால் இவர்கள் எவ்வளவு பெரிய திருடர்கள்?

இவ்வாறு தொழுகை நடத்தும் போது ஓதப்படும் இறைமறை வசனங்களை இவர்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓதும் ஓதுதல் நபிகளாரின் வழிகாட்டுதலுக்கு எதிரானது.

தொழுகைக்கு வரும் போது வேகமாக ஓடி வரக்கூடாது என்று நபிகளார் கட்டளையிட்டார்கள். அதில் நிதானம் தேவை என்றார்கள்.

635 حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ ، قَالَ : حَدَّثَنَا شَيْبَانُ ، عَنْ يَحْيَى ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ سَمِعَ جَلَبَةَ رِجَالٍ، فَلَمَّا صَلَّى قَالَ : " مَا شَأْنُكُمْ ؟ " قَالُوا : اسْتَعْجَلْنَا إِلَى الصَّلَاةِ، قَالَ : " فَلَا تَفْعَلُوا ؛ إِذَا أَتَيْتُمُ الصَّلَاةَ فَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا ".

அபூகத்தாதா அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் (தொழுகையில் வந்து சேர அவசரமாக வந்ததால் உண்டான) சந்தடிச் சப்தத்தைத் செவியுற்றார்கள். தொழுது முடிந்ததும், உங்களுக்கு என்ன ஆயிற்று (ஏன் சந்தடி எழுந்தது)? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் (அதனால் சலசலப்பு )ஏற்பட்டது) என்று பதிலளித்தனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும் போது நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். (இமாமுடன்) கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள் என்று கூறினார்கள்.

நூல் : புகாரீ 635

636ـ حدّثنا آدمُ قال: حدَّثَنا ابنُ أَبي ذِئبٍ قال: حدَّثَنا الزُّهريُّ عن سعيدِ بن المسيَّبِ عن أبي هريرةَ عنِ النبيِّ صلى الله عليه وسلّم. وعنِ الزُّهريِّ عن أبي سلمةَ عن أبي هريرةَ عن النبيِّ صلى الله عليه وسلّم قال: إذا سَمعتُمُ الإِقامةَ فامشوا إلى الصلاةِ وعليكم بالسَّكينةِ والوَقارِ، ولا تُسرِعوا، فما أدرَكتُم فصلُّلوا، وما فاتَكم فأتموا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்கு நடந்து செல்லுங்கள். அப்போது நிதானத்தையும், கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். அவசரப்பட்டு ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதை (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள்.

அறிவிப்பாவ்ர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரீ 636

தொழுகைக்கு வரும் போது கூட நிதானத்தை இழக்கக்கூடாது என்றால், தொழுகையில் நிற்கும் போது நிதானத்தை இழக்கலாமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

நபிகளார் திருக்குர்ஆன் ஓதிய முறை:

772 ( 203 ) وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ، وَأَبُو مُعَاوِيَةَ ح وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا، عَنْ جَرِيرٍ كُلُّهُمْ، عَنِالْأَعْمَشِ ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ ، وَاللَّفْظُ لَهُ، حَدَّثَنَا أَبِي ، حَدَّثَنَا الْأَعْمَشُ ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ ، عَنِ الْمُسْتَوْرِدِ بْنِ الْأَحْنَفِ ، عَنْصِلَةَ بْنِ زُفَرَ ، عَنْ حُذَيْفَةَ ، قَالَ : صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ،فَافْتَتَحَ الْبَقَرَةَ، فَقُلْتُ : يَرْكَعُ عِنْدَ الْمِائَةِ، ثُمَّ مَضَى، فَقُلْتُ : يُصَلِّي بِهَا فِي رَكْعَةٍ، فَمَضَى، فَقُلْتُ : يَرْكَعُ بِهَا، ثُمَّ افْتَتَحَ النِّسَاءَ فَقَرَأَهَا، ثُمَّ افْتَتَحَ آلَ عِمْرَانَ، فَقَرَأَهَا يَقْرَأُ مُتَرَسِّلًا ؛ إِذَا مَرَّ بِآيَةٍ فِيهَا تَسْبِيحٌ سَبَّحَ، وَإِذَا مَرَّ بِسُؤَالٍ سَأَلَ، وَإِذَا مَرَّ بِتَعَوُّذٍ تَعَوَّذَ، ثُمَّ رَكَعَ، فَجَعَلَ يَقُولُ : " سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ "، فَكَانَ رُكُوعُهُ نَحْوًا مِنْ قِيَامِهِ، ثُمَّ قَالَ : " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ "، ثُمَّ قَامَ طَوِيلًا قَرِيبًا مِمَّا رَكَعَ، ثُمَّ سَجَدَ، فَقَالَ : سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى، فَكَانَ سُجُودُهُ قَرِيبًا مِنْ قِيَامِهِ، قَالَ : وَفِي حَدِيثِ جَرِيرٍ مِنَ الزِّيَادَةِ، فَقَالَ : " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا لَكَ الْحَمْدُ ".

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் நான் (தஹஜ்ஜுத்) தொழுதேன். அதில் அவர்கள் அல்பகரா எனும் (இரண்டாவது) அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். அவர்கள் நூறு வசனம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள் என்று நான்  எண்ணினேன். ஆனால்,அவர்கள் தொடர்ந்து ஓதினார்கள். அ(ந்த அத்தியாயத்)தை (இரண்டாகப் பிரித்து ஓதி இரண்டாவது) ரக்அத்தில் முடித்து விடுவார்கள்  என்று நான் எண்ணினேன். ஆனால் தொடர்ந்து ஓதினார்கள். அவர்கள் அந்த அத்தியாயம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள் என்று நான் எண்ணினேன். அவர்கள் (அந்த அத்தியாயம் முடிந்ததும்) அந்நிஸா எனும் (4ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து ஓதினார்கள்; பிறகு ஆலு இம்ரான் எனும் (3ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து நிறுத்தி நிதானமாக ஓதினார்கள். அவற்றில் இறைவனைத் துதிப்பது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச்செல்லும்போது (சுப்ஹானல்லாஹ்  என இறைவனைத் துதித்தார்கள்; (இறையருளை) வேண்டுவது பற்றிக்கூறும் வசனத்தைக் கடந்து செல்லும்போது வேண்டினார்கள். பாதுகாப்புக் கோருவது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச் செல்லும்போது பாதுகாப்புக் கோரினார்கள்;.

அறிவிப்பவர் : ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி),

நூல்: முஸ்லிம்

திருக்குர்ஆனை ஓதும் போது நிறுத்தி நிதானமாக ஓதுவது தான் நபி வழியாகும்.

772 ( 203 ) وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ، وَأَبُو مُعَاوِيَةَ ح وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا، عَنْ جَرِيرٍ كُلُّهُمْ، عَنِالْأَعْمَشِ ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ ، وَاللَّفْظُ لَهُ، حَدَّثَنَا أَبِي ، حَدَّثَنَا الْأَعْمَشُ ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ ، عَنِ الْمُسْتَوْرِدِ بْنِ الْأَحْنَفِ ، عَنْصِلَةَ بْنِ زُفَرَ ، عَنْ حُذَيْفَةَ ، قَالَ : صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ،فَافْتَتَحَ الْبَقَرَةَ، فَقُلْتُ : يَرْكَعُ عِنْدَ الْمِائَةِ، ثُمَّ مَضَى، فَقُلْتُ : يُصَلِّي بِهَا فِي رَكْعَةٍ، فَمَضَى، فَقُلْتُ : يَرْكَعُ بِهَا، ثُمَّ افْتَتَحَ النِّسَاءَ فَقَرَأَهَا، ثُمَّ افْتَتَحَ آلَ عِمْرَانَ، فَقَرَأَهَا يَقْرَأُ مُتَرَسِّلًا ؛ إِذَا مَرَّ بِآيَةٍ فِيهَا تَسْبِيحٌ سَبَّحَ، وَإِذَا مَرَّ بِسُؤَالٍ سَأَلَ، وَإِذَا مَرَّ بِتَعَوُّذٍ تَعَوَّذَ، ثُمَّ رَكَعَ، فَجَعَلَ يَقُولُ : " سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ "، فَكَانَ رُكُوعُهُ نَحْوًا مِنْ قِيَامِهِ، ثُمَّ قَالَ : " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ "، ثُمَّ قَامَ طَوِيلًا قَرِيبًا مِمَّا رَكَعَ، ثُمَّ سَجَدَ، فَقَالَ : سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى، فَكَانَ سُجُودُهُ قَرِيبًا مِنْ قِيَامِهِ، قَالَ : وَفِي حَدِيثِ جَرِيرٍ مِنَ الزِّيَادَةِ، فَقَالَ : " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا لَكَ الْحَمْدُ ".

அலாஉ பின் அப்திர் ரஹ்மான் அவர்கள் கூறியதாவது: நான் பஸ்ரா நகரில் தமது இல்லத்திலிலிருந்த அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் லுஹர் தொழுது விட்டுச் சென்றேன். - அன்னாரின் இல்லம் பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் இருந்தது - நாங்கள் அவர்களிடம் சென்றபோது நீங்கள் அஸர் தொழுது விட்டீர்களா?என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், (இல்லை) நாங்கள் இப்போதுதான் லுஹர் தொழுதுவிட்டு வருகிறோம் என்று அவர்களிடம் சொன்னோம். அனஸ் (ரலி) அவர்கள், அவ்வாறாயின் நீங்கள் அஸர் தொழுங்கள் என்றார்கள். உடனே நாங்கள் எழுந்து (அஸ்ர்) தொழுதோம். நாங்கள் தொழுது முடித்ததும் அனஸ் (ரலி) அவர்கள், இது தான் நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் சூரியனை எதிர்பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பான். சூரியன் (சரியாக) ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே வரும்போது அவன் (அவசர அவசரமாகக் கோழி கொத்துவதைப் போன்று) நான்கு கொத்து கொத்துவான். அவன் அதில் மிகக் குறைவாகவே இறைவனை நினைவு கூர்வான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன் என்றார்கள்.

நூல் : முஸ்லிம் 1097

கோழி கொத்துவது போல கொத்தி கொத்தி எழுந்திருப்பது நயவஞ்சகனின் தொழுகை என்று நபிகளார் எச்சரித்துள்ளார்கள்.

622 ( 195 ) وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ ،وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ ، وَقُتَيْبَةُ ، وَابْنُ حُجْرٍ ، قَالُوا : حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ ، عَنِالْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ : أَنَّهُ دَخَلَ عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فِي دَارِهِ بِالْبَصْرَةِ حِينَ انْصَرَفَ مِنَ الظُّهْرِ، وَدَارُهُ بِجَنْبِ الْمَسْجِدِ، فَلَمَّا دَخَلْنَا عَلَيْهِ، قَالَ : أَصَلَّيْتُمُ الْعَصْرَ، فَقُلْنَا لَهُ : إِنَّمَا انْصَرَفْنَا السَّاعَةَ مِنَ الظُّهْرِ. قَالَ : فَصَلُّوا الْعَصْرَ، فَقُمْنَا فَصَلَّيْنَا، فَلَمَّا انْصَرَفْنَا، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " تِلْكَ صَلَاةُ الْمُنَافِقِ، يَجْلِسُ يَرْقُبُ الشَّمْسَ حَتَّى إِذَا كَانَتْ بَيْنَ قَرْنَيِ الشَّيْطَانِقَامَ، فَنَقَرَهَا أَرْبَعًا، لَا يَذْكُرُ اللَّهَ فِيهَا إِلَّا قَلِيلًا ".

அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இணையாளர்களை விட்டும் இணைகற்பித்தலை விட்டும் நான் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி  நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் 5708

6499 حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا يَحْيَى ، عَنْسُفْيَانَ ، حَدَّثَنِي سَلَمَةُ بْنُ كُهَيْلٍ ح وَحَدَّثَنَاأَبُو نُعَيْمٍ ، حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ سَلَمَةَ ، قَالَ : سَمِعْتُ جُنْدَبًا يَقُولُ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَلَمْ أَسْمَعْ أَحَدًا يَقُولُ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرَهُ، فَدَنَوْتُ مِنْهُ فَسَمِعْتُهُ يَقُولُ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ، وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ ".

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிந்தாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிந்தாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 6499

கோழி கொத்துவது போல கொத்தி தொழுகையில் கின்னஸ் சாதனை என்று சொல்லி நமது அமல்களை பாழாக்கிவிட வேண்டாம்.

தொழுகையில் திருடும் இத்தகைய திருடர்களை விட்டும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வல்ல இறைவன் அருள்புரிவானாக!

30.06.2015. 16:20 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account