Sidebar

27
Sat, Jul
5 New Articles

மார்க்க முரணான சபைகளில் பங்கேற்கலாமா?

நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

மார்க்க முரணான சபைகளில் பங்கேற்கலாமா?

பிறமதத்தினரின் திருமணங்களிலும், இதர விசேஷங்களிலும், விருந்துகளிலும் கலந்து கொள்வது மார்க்கத்திற்கு முரணான காரியமா? அவர்கள் வரதட்சணை வாங்கித் திருமணம் முடித்தாலும் கலந்து கொள்ளலாமா?

பதில்:

பொதுவாக பிற மதத்தவர்களின் வீட்டில் நடக்கும் விசேஷங்கள் மற்றும் விருந்துகளில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறாவிட்டால் அதில் கலந்து கொள்வதில் தவறில்லை.

மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கும் இடத்துக்குச் சென்றால் அதைத் தடுக்கும் கடமை நமக்கு உள்ளது. அவ்வாறு தடுக்க முடியாத பட்சத்தில் அங்கு செல்லாமல் இருப்பது அவசியம்.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

திருக்குர்ஆன் 4:140

தீமைகள் நடக்கும் ஒரு சபையில் நாம் பங்கேற்றால் அத்தீமையை நாம் செய்யாவிட்டாலும் அல்லாஹ்வின் பார்வையில் நாமும் அதில் பங்காளிகளாகக் கருதப்படுவோம். எனவே தீமை நடக்கும் எந்தச் சபைக்கும் நாம் செல்லக் கூடாது.

صحيح مسلم

 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ كِلاَهُمَا عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ – وَهَذَا حَدِيثُ أَبِى بَكْرٍ – قَالَ أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلاَةُ قَبْلَ الْخُطْبَةِ. فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ. فَقَالَ أَبُو سَعِيدٍ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ.

'உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்). அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்). இது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் : முஸ்லிம்

வரதட்சணை ஒரு சமூகக் கொடுமை என்பதை யாரும் மறுக்க முடியாது. இது போன்ற தீமைகளை வெறுத்து ஒதுங்குவது தான் ஈமானில் மிகப் பலவீனமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இதைக் கூட செய்யாமல் இந்தத் திருமணங்களில் கலந்து கொண்டு விருந்து சாப்பிடுவது ஈமானுக்குப் பங்கம் விளைவிக்கின்ற விஷயமாகும்.

மனிதாபிமானமற்ற முறையில் பெண் வீட்டில் வரதட்சணை வாங்குவோரிடம் அதைத் தீமை என்று உணர்த்துவது எப்படி? அவர்கள் தருகின்ற விருந்தைச் சாப்பிட்டு விட்டு உணர்த்த முடியுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

முஸ்லிம் அல்லாதவர்களின் திருமணமாக இருந்தாலும் இதே சட்டம் தான். அவர்களுக்கும் இது ஒரு சமூகக் கொடுமை என்பதை உணர வைப்பதற்காக இந்தத் திருமணங்களைப் புறக்கணித்தே ஆக வேண்டும்.

முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாம் பற்றி அறியாத காரணத்தால் நமது நிலைபாட்டைத் தக்க முறையில் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்றால், பிற மதத்தினரின் நிகழ்ச்சி என்பதற்காக நாம் புறக்கணைப்பதாகக் கருதுவார்கள் என்றால் அதைக் குறித்து அவர்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்.

வரதட்சணை, ஆடம்பரம் போன்ற காரியங்களை முஸ்லிம்கள் செய்தாலும், எங்கள் உறவினர்களே செய்தாலும் நாங்கள் அதைப் புறக்கணிப்போம். செய்கின்ற காரியத்தின் அடிப்படையில் தான் நாங்கள் இந்த நிலைபாட்டை எடுத்துள்ளோம். செய்பவர் முஸ்லிமா முஸ்லிமல்லாதவரா என்ற அடிப்படையில் அல்ல என்று விளக்கினால் இதைத் தக்க முறையில் புரிந்து கொள்வார்கள். இஸ்லாத்தின் மேன்மையையும் அறிந்து கொள்வார்கள்.

அல்லது தீமையில் பங்கெடுப்பதைத் தவிர்ப்பதற்காக இப்ராஹீம் நபியவர்கள் தாம் நோயுற்றிருப்பதாக பொய் கூறினார்கள்.

பார்க்க : திருக்குர்ஆன் 37:89

முஸ்லிமல்லாத மக்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்றால் தீமையில் பங்கு பெறுவதைத் தவிர்ப்பதற்காக பொய்யான காரணத்தைக் கூற அனுமதி உண்டு. முஸ்லிம் சமுதாயத்தின் ஒரே இமாமான அல்லாஹ்வின் நண்பர் இப்ராஹீம் நபியின் வழிமுறையே இதற்குப் போதுமான ஆதாரமாகும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account