Sidebar

19
Fri, Apr
4 New Articles

நபிகள் காலத்தில் ஒரு பெண் குலா கேட்க காரணம் என்ன?

குலா எனும் மணமுறிவு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நபிகள் காலத்தில் ஒரு பெண் குலா கேட்க காரணம் என்ன?

ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் ஆண்மை குறைவுள்ளவர்; அதனால் தான் அவரது மனைவி விவாகரத்துச் செய்தார் என்று பி.ஜே. கூறி வருகிறீர்கள். ஆனால் தப்ஸீர் இப்னு கஸீரில் ஸாபித் பின் கைஸ் (ரலி) கறுப்பாகவும், குள்ளமாகவும், அருவருப்பான தோற்றம் உடையவராகவும் இருந்தார்; அதனால் தான் அவரது மனைவி அவரை விவாகரத்துச் செய்தார் என்று எழுதப்பட்டுள்ளது. இதில் எது சரி?

பதில்

அவரது கணவர் அருவருப்பான தோற்றத்தில் இருந்தார் என்ற கருத்தில் இப்னுமாஜா, அஹ்மது போன்ற நூற்களில் இடம் பெற்றுள்ள செய்தி பலவீனமானதாகும்.

مسند أحمد

16095 - حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ  بْنُ بَكْرِ بْنِ خُنَيْسٍ، قَالَ: أَخْبَرَنَا حَجَّاجٌ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عمْرٍو، وَالْحَجَّاجِ، عَنْ مُحَمَّدِ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ، عَنْ عَمِّهِ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، قَالَ: كَانَتْ حَبِيبَةُ ابْنَةُ سَهْلٍ تَحْتَ ثَابِتِ بْنِ قَيْسِ بْنِ شَمَّاسٍ الْأَنْصَارِيِّ فَكَرِهَتْهُ، وَكَانَ رَجُلًا دَمِيمًا، فَجَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنِّي لَا أَرَاهُ  فَلَوْلَا مَخَافَةُ اللهِ عَزَّ وَجَلَّ لَبَزَقْتُ فِي وَجْهِهِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ الَّتِي أَصْدَقَكِ؟ " قَالَتْ: نَعَمْ، فَأَرْسَلَ إِلَيْهِ فَرَدَّتْ عَلَيْهِ حَدِيقَتَهُ، وَفَرَّقَ بَيْنَهُمَا، قَالَ: فَكَانَ ذَلِكَ أَوَّلَ خُلْعٍ كَانَ فِي الْإِسْلَامِ

ஹபீபா பின் த் ஸஹ்ல் என்பார் ஸாபித் பின் கைஸ் என்பாரின் மனைவியாக இருந்தார். அவருக்கு கணவரைப் பிடிக்கவில்லை. அவர் அருவருப்பான தோற்றம் உடையவராக இருந்தார். அப்பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் அவரைப் பார்க்க மாட்டேன். அல்லாஹ்வின் அச்சம் இல்லாவிட்டால் அவரது முகத்தில் உமிழ்ந்து இருப்பேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உனக்கு அவர் மஹராக தந்த அவரது தோட்டத்தை அவரிடம் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா என்று கேட்டார்கள். அப்பெண் சரி என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவருக்கு ஆளனுப்பினார்கள். (செய்தியைச் சொன்னார்கள்.) அப்பெண் அவரது தோட்டத்தை திருப்பிக் கொடுத்தார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருவரையும் பிரித்து வைத்தார்கள். இதுதான் இஸ்லாத்த்ல் வழங்கப்பட்ட முதல் குலாவாகும். 

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் அபீ ஹைஸமா (ரலி) 

நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா

இந்த ஹதீஸில் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் இடம் பெற்றுள்ளார். இவர் தத்லீஸ் செய்பவர். எனவே இது பலவீனமான செய்தியாகும்.

தத்லீஸ் பற்றி அறிய

தத்லீஸ் என்றால் என்ன?

என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்.

இது குறித்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இதுதான்:

صحيح البخاري

5273 - حَدَّثَنَا  أَزْهَرُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ثَابِتُ بْنُ قَيْسٍ، مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الكُفْرَ فِي الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْبَلِ الحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி) யின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்' என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி 'சரி' என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் 'தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு' என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 5273

ஸாபித் பின் கைஸ் (ரலி) குறித்து அவரது மனைவி கூறியதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இது தான் இடம் பெற்றுள்ளது.

இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறைவனுக்கு மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்' என்று அந்தப் பெண்மணி கூறுவதாக வரும் செய்தியே சரியான செய்தியாகும். அவரது நற்குணங்களையும், மார்க்கப்பற்றையும் அப்பெண் சிலாகித்துச் சொல்லி விட்டு அவருடன் வாழ்ந்தால் நான் இறைவனுக்கு மாறு செய்யும் நிலை ஏற்படும் என்கிறார். அவரது தேவையைப் பூர்த்தி செய்யும் கணவராக இருக்கவில்லை என்பது மட்டும் தெரிகின்றது. இது தான் ஆதாரப்பூர்வமான ஹதீஸிலிருந்து கிடைக்கும் விளக்கமாகும்.

Published on: August 15, 2009, 9:31 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account