Sidebar

01
Sun, Dec
10 New Articles

நபிகள் நாயகம் தற்கொலை செய்ய முயன்றார்களா?

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நபிகள் நாயகம் தற்கொலை செய்ய முயன்றார்களா?

பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டி கிறித்தவ போதகர்கள் சிலர் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். அதாவது நபிகள் நாயகம் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட போது தற்கொலை செய்ய முயன்றுள்ளார்கள். அவருக்கு வந்த இறைச் செய்தியில் அவருக்கே நம்பிக்கை இல்லை என்பதை இது காட்டுகிறது என வாதிடுகிறார்கள்.

இதற்கு ஆதாரமாக புகாரியில் இடம்பெறும் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகிறார்கள்.

6982 حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ ، حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ح وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، حَدَّثَنَا مَعْمَرٌ ، قَالَ الزُّهْرِيُّ : فَأَخْبَرَنِي عُرْوَةُ ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ : أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْوَحْيِ، الرُّؤْيَا الصَّادِقَةُ فِي النَّوْمِ، فَكَانَ لَا يَرَى رُؤْيَا إِلَّا جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ ، فَكَانَ يَأْتِي حِرَاءً، فَيَتَحَنَّثُ فِيهِ - وَهُوَ التَّعَبُّدُ - اللَّيَالِيَ ذَوَاتِ الْعَدَدِ، وَيَتَزَوَّدُ لِذَلِكَ، ثُمَّ يَرْجِعُ إِلَى خَدِيجَةَ، فَتُزَوِّدُهُ لِمِثْلِهَا، حَتَّى فَجِئَهُ الْحَقُّ وَهُوَ فِي غَارِ حِرَاءٍ، فَجَاءَهُ الْمَلَكُ فِيهِ، فَقَالَ : اقْرَأْ. فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " فَقُلْتُ : مَا أَنَا بِقَارِئٍ ". فَأَخَذَنِي فَغَطَّنِي ، حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدُ، ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ : اقْرَأْ. فَقُلْتُ : " مَا أَنَا بِقَارِئٍ ". فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّانِيَةَ، حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدُ، ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ : اقْرَأْ. فَقُلْتُ : " مَا أَنَا بِقَارِئٍ ". فَغَطَّنِي الثَّالِثَةَ، حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدُ، ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ : { اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ } حَتَّى بَلَغَ : { مَا لَمْ يَعْلَمْ }. فَرَجَعَ بِهَا تَرْجُفُ بَوَادِرُهُ ، حَتَّى دَخَلَ عَلَى خَدِيجَةَ فَقَالَ : " زَمِّلُونِي زَمِّلُونِي ". فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ ، فَقَالَ : " يَا خَدِيجَةُ، مَا لِي ". وَأَخْبَرَهَا الْخَبَرَ، وَقَالَ : " قَدْ خَشِيتُ عَلَى نَفْسِي ". فَقَالَتْ لَهُ : كَلَّا، أَبْشِرْ فَوَاللَّهِ لَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا، إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَصْدُقُ الْحَدِيثَ، وَتَحْمِلُ الْكَلَّ ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ. ثُمَّ انْطَلَقَتْ بِهِ خَدِيجَةُ حَتَّى أَتَتْ بِهِ وَرَقَةَ بْنَ نَوْفَلِ بْنِ أَسَدِ بْنِ عَبْدِ الْعُزَّى بْنِ قُصَيٍّ، وَهُوَ ابْنُ عَمِّ خَدِيجَةَ أَخُو أَبِيهَا، وَكَانَ امْرَأً تَنَصَّرَ فِي الْجَاهِلِيَّةِ، وَكَانَ يَكْتُبُ الْكِتَابَ الْعَرَبِيَّ، فَيَكْتُبُ بِالْعَرَبِيَّةِ مِنَ الْإِنْجِيلِ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكْتُبَ، وَكَانَ شَيْخًا كَبِيرًا قَدْ عَمِيَ، فَقَالَتْ لَهُ خَدِيجَةُ : أَيِ ابْنَ عَمِّ، اسْمَعْ مِنِ ابْنِ أَخِيكَ. فَقَالَ وَرَقَةُ : ابْنَ أَخِي، مَاذَا تَرَى ؟ فَأَخْبَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا رَأَى، فَقَالَ وَرَقَةُ : هَذَا النَّامُوسُ الَّذِي أُنْزِلَ عَلَى مُوسَى، يَا لَيْتَنِي فِيهَا جَذَعًا أَكُونُ حَيًّا حِينَ يُخْرِجُكَ قَوْمُكَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَوَمُخْرِجِيَّ هُمْ ؟ ". فَقَالَ وَرَقَةُ : نَعَمْ، لَمْ يَأْتِ رَجُلٌ قَطُّ بِمَا جِئْتَ بِهِ إِلَّا عُودِيَ، وَإِنْ يُدْرِكْنِي يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا . ثُمَّ لَمْ يَنْشَبْ وَرَقَةُ أَنْ تُوُفِّيَ، وَفَتَرَ الْوَحْيُ فَتْرَةً، حَتَّى حَزِنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

- فِيمَا بَلَغَنَا - حُزْنًا غَدَا مِنْهُ مِرَارًا كَيْ يَتَرَدَّى مِنْ رُءُوسِ شَوَاهِقِ الْجِبَالِ، فَكُلَّمَا أَوْفَى بِذِرْوَةِ جَبَلٍ لِكَيْ يُلْقِيَ مِنْهُ نَفْسَهُ، تَبَدَّى لَهُ جِبْرِيلُ، فَقَالَ : يَا مُحَمَّدُ، إِنَّكَ رَسُولُ اللَّهِ حَقًّا. فَيَسْكُنُ لِذَلِكَ جَأْشُهُ ، وَتَقِرُّ نَفْسُهُ فَيَرْجِعُ، فَإِذَا طَالَتْ عَلَيْهِ فَتْرَةُ الْوَحْيِ غَدَا لِمِثْلِ ذَلِكَ، فَإِذَا أَوْفَى بِذِرْوَةِ جَبَلٍ تَبَدَّى لَهُ جِبْرِيلُ، فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ. قَالَ ابْنُ عَبَّاسٍ : { فَالِقُ الْإِصْبَاحِ } ضَوْءُ الشَّمْسِ بِالنَّهَارِ، وَضَوْءُ الْقَمَرِ بِاللَّيْلِ

6982 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா குகைக்குச் சென்று அங்கே பல நாட்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாட்களுக்கான உணவைத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள். பிறகு கதீஜாவிடம் திரும்பி வருவார்கள். அதைப் போன்றே பல நாட்களுக்குரிய உணவை கதீஜா அவர்கள் தயார் செய்து கொடுப்பார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்குச் சத்தியம் திடீரென்று வரும் வரை நீடித்தது. (அன்று) வானவர் (ஜிப்ரீல்) அவர்கள் அந்தக் குகைக்கு வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ஓதுவீராக' என்று சொன்னார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்று அவருக்குப் பதிலளித்தார்கள்.

அப்போது நடந்த சம்பவத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்:

அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு ஓதுவீராக என்று சொன்னார். அப்போதும் நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னை விட்டுவிட்டு, ஓதுவீராக என்றார். அப்போதும், நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றேன். அவர் என்னை மூன்றாவது முறையும் என்னால் தாங்க இயலாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னை விட்டுவிட்டு படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதுவீராக... என்று தொடங்கும் (96ஆவது அத்தியாயத்தின்) வசனங்களை மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான் என்பது வரை (96:1-5) ஓதினார்.

தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

பிறகு கழுத்தின் சதைகள் படபடக்க அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பி வந்து, எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள் என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அவர்களும் போர்த்திவிட அச்சம் அவர்களை விட்டகன்றது. அப்போது, கதீஜா! எனக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டுவிட்டு நடந்தவற்றை கதீஜா அவர்களிடம் தெரிவித்தபடி தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்று தாம் அஞ்சுவதாகவும் கூறினார்கள்.

அப்போது கதீஜா (ரலி) அவர்கள், அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதல் அடையுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுகிறீர்கள் என்று சொன்னார்கள். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான நவ்ஃபல் என்பாரின் புதல்வர் வரக்கா'விடம் கதீஜா சென்றார்கள். நவ்ஃபல், அசத் என்பவரின் புதல்வரும் அசத், அப்துல் உஸ்ஸாவின் புதல்வரும் அப்துல் உஸ்ஸா, குஸை என்பவரின் புதல்வரும் ஆவர்.

வரக்கா' அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் அரபி மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை அரபி மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுபவராகவும் கண்பார்வை இழந்த முதியவராகவும் இருந்தார்.

அவரிடம் கதீஜா அவர்கள், என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மத்) கூறுவதைக் கேளுங்கள் என்று சொன்னார்கள். அப்போது வரக்கா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் என் சகோதரர் புதல்வரே! நீர் என்ன கண்டீர்? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றை அவரிடம் தெரிவித்தார்கள். (அதைக் கேட்ட) வரக்கா, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (நீர் கண்ட) இவர் தாம் (இறைத்தூதர்) மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப் பெற்ற வானவர் (ஜிப்ரீல்) ஆவார் என்று கூறிவிட்டு உம்முடைய சமூகத்தார் உம்மை உமது நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்தால் நன்றாயிருக்குமே! என்று கூறினார்.

இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கள் என்னையா வெளியேற்றுவார்கள்? என்று (வியப்புடன்) கேட்டார்கள். அதற்கு வரக்கா அவர்கள் ஆம். நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற எவரும் மக்களால் பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உமது (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன் என்று பதிலளித்தார்.

அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேதஅறிவிப்போடு) சிறிது காலம் இறைச்செய்தி தடைபட்டது. அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள்.

நமக்குக் கிடைத்த தகவலின்படி எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பலமுறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே விழுந்துவிடலாமென்று ஏதாவது மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி, முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே, அல்லாஹ்வின் தூதர்தாம் என்று கூறுவார்கள். இதைக் கேட்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனப் பதற்றம் அடங்கிவிடும். அவர்களது உள்ளம் அமைதியாகிவிடும். உடனே (மலை உச்சியிலிருந்து) திரும்பிவந்து விடுவார்கள். இறைச்செய்தி தடைபடுவது தொடர்ந்து நீண்டுசெல்லும் போது மறுபடியும் அவ்வாறே சிகரங்களை நோக்கிச் செல்வார்கள். அப்போதும் அவர்கள் முன்னிலையில் (வானவர்) ஜிப்ரீல் தோன்றி முன்போலவே கூறுவார்கள்.

புகாரி 6982

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தற்கொலைக்கு முயன்றார்கள் என்று கூறும் கிறித்தவர்கள் இட்டுக்கட்டி கூறவில்லை. நாமே ஏற்றுக்கொண்ட புகாரி ஹதீஸை ஆதாரமாகக் காட்டித்தான் இக்கேள்வியை எழுப்புகிறார்கள்.

ஹதீஸ்களைப் பற்றிய விதிகள் முஸ்லிம்களில் பலருக்குத் தெரியாத நிலையில் கிறித்தவர்கள் இந்த விதியை அறிந்திருக்க முடியாது. எனவே தான் உங்கள் புகாரியில் இப்படித்தானே உள்ளது என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

எனவே இது குறித்து சரியான விபரத்தை நாமும் அறிந்து மற்றவர்களுக்கும் தெளிவுபடுத்தும் கடமை உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான எந்தச் செய்தியாக இருந்தாலும் அதை நபிகள் சொன்னதாக ஏற்பதற்கு சில விதிகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக அல்லது செய்ததாக ஒரு செய்தியை ஒரு நூலாசிரியர் பதிவு செய்வதாக இருந்தால் அந்தச் செய்தியை மட்டும் அவர் பதிவு செய்ய முடியாது.

அந்தச் செய்தியை அவருக்கு யார் சொன்னார் என்பதையும் குறிப்பிட வேண்டும். அது மட்டும் போதாது. அந்த நபருக்கு யார் சொன்னார் என்றும் கூற வேண்டும். இப்படியே நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த நபித்தோழரில் அந்தச் செய்தி முடிய வேண்டும்.

உதாரணமாக இந்தச் செய்தியையே எடுத்துக் கொள்வோம்.

தமிழ் மொழிபெயர்ப்பில் இந்த விபரங்களை மொழிபெயர்ப்பதில்லை, ஆனால் அரபு மூலத்தில் ஒவ்வொரு ஹதீஸுக்கும் இந்த அறிவிப்பாளர் விபரம் இடம் பெற்றிருக்கும்.

மேற்கண்ட ஹதீஸில் அறிவிப்பாளர் விபரம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

6982 حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ ، حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ح وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، حَدَّثَنَا مَعْمَرٌ ، قَالَ الزُّهْرِيُّ : فَأَخْبَرَنِي عُرْوَةُ ، عَنْ عَائِشَةَ

அதாவது இதை நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) இதைக் கூறியதாக சொல்லப்பட்டுள்ளது.

ஆயிஷா (ரலி) கூறியதாக உர்வா என்பார் அறிவிக்கிறார். இவர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டு இதைக் கூறுகிறார்.

உர்வா யாரிடம் இதைக் கூறினார் என்றால் ஸுஹ்ரி என்பாரிடம் கூறியுள்ளார்.

ஸுஹ்ரி இதை யாரிடம் கூறினார் என்றால் மஅமர் என்பாரிடம் கூறியுள்ளார்.

மஅமர் என்பார் இச்செய்தியை அப்துர்ரஸ்ஸாக் என்பாரிடம் கூறினார்.

அப்துர்ரஸ்ஸாக் என்பார் இச்செய்தியை அப்துல்லாஹ் பின் முஹம்மதிடம் கூறியுள்ளார்.

அப்துல்லாஹ் பின் முஹம்மத் என்பாரிடம் இச்செய்தியைக் கேட்டு நூலாசிரியர் புகாரி அவர்கள் தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இந்த விபரங்களை இந்தச் செய்தியின் துவக்கத்தில் நூலாசிரியரான புகாரி தெரிவித்து விடுகிறார்.

இப்படி ஒவ்வொரு ஹதீஸையும் - செய்தியையும் - இப்படித்தான் அறிவிப்பாளர் பட்டியலுடன் புகாரி பதிவு செய்துள்ளார்.

இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு வரலாறு உண்டு. அவர்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டும் உள்ளது. இதனால் தான் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பானது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

இச்செய்தி எவ்வழியில் தனக்குக் கிடைத்தது என்ற முழு விபரம் இல்லாமல் ஒரு நூலாசிரியர் நபிகள் குறித்து சொல்வாரேயானால் அதை முஸ்லிம்கள் நம்பக் கூடாது.

மேலும் அச்செய்தியைச் சொன்னவர்கள் பொய்யர்களாகவோ, யார் என்று தெரியாதவர்களாகவோ, நினைவாற்றல் குறைவுடையவராகவோ இருந்தால் அந்தச் செய்தியையும் முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள்.

இந்த அடிப்படையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு நீண்ட செய்தியில் ஒரு பகுதி அறிவிப்பாளர் பட்டியலுடனும் மற்றொரு பகுதி அறிவிப்பாளர் பட்டியல் இல்லாமலும் பதிவு செய்யப்பட்டு இருந்தால் முதல் பகுதியை நாம் நம்ப வேண்டும். இரண்டாம் பகுதியை அதை ஏற்கக் கூடாது.

இந்த ஹதீஸில் மற்ற செய்திகள் அறிவிப்பாளர் தொடருடனும், தற்கொலை சம்மந்தப்பட்ட செய்தி மட்டும் அறிவிப்பாளர் தொடர் இல்லாமலும் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இதை ஏற்க முடியாது. எனெனில் இதற்கு அறிவிப்பாளர் வரிசையை புகாரி கூறவில்லை.

இது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தற்கொலைக்கு முயன்றார்கள் என்ற செய்தி இதில் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கவனியுங்கள்.

நமக்குக் கிடைத்த தகவலின்படி எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பலமுறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே விழுந்துவிடலாமென்று ஏதாவது மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி, முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே, அல்லாஹ்வின் தூதர்தாம் என்று கூறுவார்கள். இதைக் கேட்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனப் பதற்றம் அடங்கிவிடும். அவர்களது உள்ளம் அமைதியாகிவிடும். உடனே (மலை உச்சியிலிருந்து) திரும்பிவந்து விடுவார்கள். இறைச்செய்தி தடைபடுவது தொடர்ந்து நீண்டுசெல்லும் போது மறுபடியும் அவ்வாறே சிகரங்களை நோக்கிச் செல்வார்கள். அப்போதும் அவர்கள் முன்னிலையில் (வானவர்) ஜிப்ரீல் தோன்றி முன்போலவே கூறுவார்கள்.

இப்படித்தான் இதில் கூறப்பட்டுள்ளது.

அறிவிப்பாளர் தொடருடன் செய்தியைக் கூறி வந்த புகாரி அவர்கள் தற்கொலை பற்றிய செய்தியைக் கூறும் போது நமக்குக் கிடைத்த தகவல் படி என்று கூறுகிறார்.

அதாவது இச்செய்திக்கு அறிவிப்பாளர் தொடர் இல்லை. ஒரு தகவலாகவே எனக்குக் கிடைத்துள்ளது என்கிறார்.

இத்தகவலை இவருக்குச் சொன்னவர் யார்? அவருக்குச் சொன்னவர் யார் என்ற விபரம் புகாரியிடம் இல்லை. எனவே இந்தப் பகுதி மட்டும் ஏற்கக் கூடாத தகவலாகும்.

ஹதீஸ்கலை குறித்த இந்த விதியை அறியாத காரணத்தால் கிறித்தவர்கள் இப்படி கூறலாம். இது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பும் போது நாம் விளக்கினால் ஏற்றுக் கொள்வார்கள். நாங்கள் ஆதாரமாக ஏற்காத ஒன்றை எங்களுக்கு எதிரான ஆதாரமாகக் காட்டாதீர்கள் என்று அவர்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டும்.

இதே செய்தி இப்னு ஹிப்பானிலும் உள்ளது.

صحيح ابن حبان - محققا (1/ 216)

33 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ حَدَّثَنَا بن أَبِي السَّرِيِّ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ قَالَتْ: أول ما بدئ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْوَحْيِ الرُّؤْيَا الصَّادِقَةُ يَرَاهَا فِي النَّوْمِ فَكَانَ لَا يَرَى رُؤْيَا إِلَّا جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ ثُمَّ حُبِّبَ لَهُ الْخَلَاءُ فَكَانَ يَأْتِي حراء فَيَتَحَنَّثُ 1 فِيهِ وَهُوَ التَّعَبُّدُ اللَّيَالِيَ ذَوَاتِ الْعِدَّةِ 2 ويتزود ثُمَّ يَرْجِعُ إِلَى خَدِيجَةَ فَتُزَوِّدُهُ لِمِثْلِهَا حَتَّى فَجِئَهُ الْحَقُّ 3 وَهُوَ فِي غَارِ حِرَاءَ فَجَاءَهُ الْمَلَكُ فِيهِ فَقَالَ: اقْرَأْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَقُلْتُ: "مَا أَنَا بقارئ"4 قَالَ: "فَأَخَذَنِي فَغَطَّنِي حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدَ 5 ثُمَّ أَرْسَلَنِي" فَقَالَ لِي: اقْرَأْ فَقُلْتُ: مَا أنا بقارئ فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّانِيَةَ حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدَ ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ: اقْرَأْ فَقُلْتُ: مَا أَنَا بقارئ فأخذني فغطني الثالثة حتى بلغ مني الْجَهْدَ ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ: {اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ} حتى بلغ {مَا لَمْ يَعْلَمْ} " قَالَ: فَرَجَعَ بِهَا تَرْجُفُ بَوَادِرُهُ 1 حَتَّى دَخَلَ عَلَى خَدِيجَةَ فَقَالَ: "زَمِّلُونِي زَمِّلُونِي" فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ ثُمَّ قَالَ: "يَا خَدِيجَةُ مَا لِي" وَأَخْبَرَهَا الْخَبَرَ وَقَالَ: "قَدْ خَشِيتُهُ عَلَيَّ" فَقَالَتْ: كَلَّا أَبْشِرْ فَوَاللَّهِ لَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ وَتَصْدُقُ الْحَدِيثَ وَتَحْمِلُ الْكَلَّ وَتَقْرِي الضَّيْفَ وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ ثُمَّ انْطَلَقَتْ بِهِ خَدِيجَةُ حَتَّى أَتَتْ بِهِ وَرَقَةَ بْنَ نَوْفَلٍ وَكَانَ أَخَا أَبِيهَا 2 وَكَانَ امْرَأً تَنَصَّرَ فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ يَكْتُبُ الْكِتَابَ الْعَرَبِيَّ فَيَكْتُبُ بِالْعَرَبِيَّةِ مِنَ الْإِنْجِيلِ مَا شَاءَ أَنْ يَكْتُبَ وَكَانَ شَيْخًا كَبِيرًا قَدْ عَمِيَ فَقَالَتْ لَهُ خَدِيجَةُ: أَيْ عَمِّ 3 اسْمَعْ مِنِ ابْنِ أَخِيكَ فَقَالَ وَرَقَةُ: ابْنَ أَخِي مَا تَرَى؟ فَأَخْبَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا رَأَى فَقَالَ وَرَقَةُ: هَذَا النَّامُوسُ الَّذِي أُنْزِلَ عَلَى مُوسَى يَا لَيْتَنِي أَكُونُ فِيهَا جَذَعًا أَكُونُ حَيًّا حِينَ يُخْرِجُكَ قَوْمُكَ, فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "أَمُخْرِجِيَّ 4 هُمْ" قَالَ: نَعَمْ لَمْ يَأْتِ أحد قَطُّ بِمَا جِئْتَ بِهِ إِلَّا عُودِيَ وَأُوذِيَ وَإِنْ يُدْرِكْنِي يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا ثُمَّ لَمْ يَنْشَبْ وَرَقَةُ أَنْ تُوُفِّيَ وَفَتَرَ الْوَحْيُ فَتْرَةً

حَتَّى حَزِنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [فِيمَا بَلَغَنَا] 1 حُزْنًا غَدَا مِنْهُ مرارا لكي يتردى من رؤوس شَوَاهِقِ الْجِبَالِ فَكُلَّمَا أَوْفَى بِذِرْوَةِ جَبَلٍ كَيْ يُلْقِيَ نَفْسَهُ مِنْهَا تَبَدَّى لَهُ جِبْرِيلُ فَقَالَ لَهُ: يَا مُحَمَّدُ إِنَّكَ رَسُولُ اللَّهِ حَقًّا فَيَسْكُنُ لِذَلِكَ جَأْشُهُ وَتَقَرُّ نَفْسُهُ فَيَرْجِعُ فَإِذَا طَالَ عَلَيْهِ فَتْرَةُ الْوَحْيِ غَدَا لِمِثْلِ ذَلِكَ فَإِذَا أَوْفَى بِذِرْوَةِ الْجَبَلِ تَبَدَّى لَهُ جِبْرِيلُ فيقول له مثل ذلك"2. [1:3]

இந்த ஹதீஸிலும் தற்கொலை பற்றிய செய்தியைக் கூறும் போது எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி என்று தான் இப்னு ஹிப்பான் கூறுகிறார்.

இன்னும் சில பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. அவற்றைக் கிறித்தவர்கள் ஆதாரமாகக் காட்டுவதில்லை என்றாலும் முஸ்லிம்கள் அறிந்து கொள்வதற்காக அவற்றைக் குறித்தும் விளக்குகிறோம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிப்பதாக இதே கருத்தில் அமைந்த வேறொரு செய்தி தபகாதுல் குப்ரா எனும் நூலில் உள்ளது.

 الطبقات الكبرى كاملا 230 (1/ 196) 469-

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ : حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مُوسَى عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ عَنْ أَبِي غَطَفَانَ بْنِ طَرِيفٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا نَزَلَ عَلَيْهِ الْوَحْيُ بِحِرَاءٍ مَكَثَ أَيَّامًا لاَ يَرَى جِبْرِيلَ فَحَزِنَ حُزْنًا شَدِيدًا حَتَّى كَانَ يَغْدُو إِلَى ثَبِيرٍ مَرَّةً ، وَإِلَى حِرَاءٍ مَرَّةً يُرِيدُ أَنْ يُلْقِيَ نَفْسَهُ مِنْهُ ، فَبَيْنَارَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَذَلِكَ عَامِدًا لِبَعْضِ تِلْكَ الْجِبَالِ إِلَى أَنْ سَمِعَ صَوْتًا مِنَ السَّمَاءِ ، فَوَقَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِقًا لِلصَّوْتِ ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ ،فَإِذَا جِبْرِيلُ عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ مُتَرَبِّعًا عَلَيْهِ يَقُولُ : يَا مُحَمَّدُ ، أَنْتَ رَسُولُ اللَّهِ حَقًّا ، وَأَنَا جِبْرِيلُ قَالَ : فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ أَقَرَّاللَّهُ عَيْنَهُ ، وَرَبَطَ جَأْشَهُ ثُمَّ تَتَابَعَ الْوَحْيُ بَعْدُ وَحَمِيَ.

நபிகளாருக்கு வஹீ வந்த போது சில நாட்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வரவில்லை. எனவே கடும் கவலை கொண்டு தற்கொலை செய்யும் நோக்கில் ஒரு முறை ஸபீர் என்ற மலைக்கும், மற்றொரு முறை ஹிராவுக்கும் சென்றார்கள். இம்மலைகளை நாடிச் சென்று வந்த நிலையில் வானத்திலிருந்து ஒரு சப்தத்தைக் கேட்டு திடுக்கம் அடைந்து நின்றுவிட்டார்கள். பிறகு தம் தலையை உயர்த்திப் பார்த்தால் அங்கே ஜிப்ரீல் அலை வானத்திற்கும் பூமிக்குமிடையிலுள்ள இருக்கையில் உள்ளடக்கி இருந்தவாறே, ‘முஹம்மதே உண்மையிலேயே நீர் அல்லாஹ்வின் தூதர் தாம், நான் தான் ஜிப்ரீல்’ என்று கூறினார்கள். அதன் பிறகு நபியின் கண்களை அல்லாஹ் குளிர்ச்சிப்படுத்தி உள்ளத்தை இணைத்த நிலையில் திரும்பிச் சென்றார்கள். அதன் பிறகு வஹீ தொடர்ந்து எழுச்சியுடன் வரலாயிற்று.

நூல் : தபகாதுல் குப்ரா

இதை அறிவிப்பவர்களின் தொடரில் முஹம்மத் பின் உமர் அல்வாகிதீ என்பார் இடம் பெறுகிறார்.

இவர் பொய்யர், தகுதியற்றவர் என்று புகாரி, அஹ்மத், நஸாயீ உள்ளிட்ட அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே இது இட்டுக்கப்பட்ட செய்தியாகும்.

தப்ரி அவர்களின் தாரீக் என்ற நூலிலும் இச்செய்தி இடம் பெற்றுள்ளது.

تاريخ الطبري = تاريخ الرسل والملوك، وصلة تاريخ الطبري (2/ 298)

فَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ عُثْمَانَ الْمَعْرُوفُ بِأَبِي الْجَوْزَاءِ، قَالَ: حدثنا وهب ابن جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ رَاشِدٍ، يُحَدِّثُ عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: كَانَ أَوَّلُ مَا ابتدئ به رسول الله ص مِنَ الْوَحْيِ الرُّؤْيَا الصَّادِقَةُ، كَانَتْ تَجِيءُ مِثْلَ فَلَقِ الصُّبْحِ، ثُمَّ حُبِّبَ إِلَيْهِ الْخَلاءُ، فَكَانَ بغار بحراء يَتَحَنَّثُ فِيهِ اللَّيَالِيَ ذَوَاتِ الْعَدَدِ قَبْلَ أَنْ يَرْجِعَ إِلَى أَهْلِهِ، ثُمَّ يَرْجِعُ إِلَى أَهْلِهِ، فَيَتَزَوَّدُ لِمِثْلِهَا، حَتَّى فَجَأَهُ الْحَقُّ، [فَأَتَاهُ، فَقَالَ: يَا مُحَمَّدُ، أَنْتَ رَسُولُ اللَّهِ! قَالَ رَسُولُ الله ص: فَجَثَوْتُ لِرُكْبَتَيَّ وَأَنَا قَائِمٌ، ثُمَّ زَحَفْتُ تَرْجُفُ بَوَادِرِي، ثُمَّ دَخَلْتُ عَلَى خَدِيجَةَ، فَقُلْتُ: زَمِّلُونِي، زَمِّلُونِي! حَتَّى ذَهَبَ عَنِّي الرَّوْعُ، ثُمَّ أَتَانِي فَقَالَ: يَا مُحَمَّدُ، أَنْتَ رَسُولُ اللَّهِ قَالَ: فَلَقَدْ هَمَمْتُ أَنْ أَطْرَحَ نَفْسِي مِنْ حَالِقٍ مِنْ جَبَلٍ، فَتَبَدَّى لِي حِينَ هَمَمْتُ بِذَلِكَ، فَقَالَ: يَا مُحَمَّدُ، أَنَا جِبْرِيلُ، وَأَنْتَ رَسُولُ اللَّهِ ثُمَّ قَالَ: اقْرَأْ، قُلْتُ: مَا أَقْرَأُ؟ قَالَ: فَأَخَذَنِي فَغَتَّنِي ثَلاثَ مَرَّاتٍ، حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدَ، ثُمَّ قَالَ: «اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ» ، فَقَرَأْتُ فَأَتَيْتُ خَدِيجَةَ فَقُلْتُ: لَقَدْ أَشْفَقْتُ عَلَى نفسي، فأخبرتها خبري، فقالت: ابشر، فو الله لا يخزيك الله ابدا، وو الله انك لتصل

இச்செய்தியை அறிவிப்பவர்களில் நுஃமான் பின் ராஷித் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என யஹ்யா அல்கத்தான், அஹ்மத்,  இப்னு மயீன், புகாரி, உள்ளிட்ட ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தற்கொலைக்கு முயன்றார்கள் என்ற செய்தி இடுக்கப்பட்ட செய்தி என்பது தான் முஸ்லிம் அறிஞர்களின் முடிவாகும்.

தாரீக் அத்தப்ரீ நூலில் மேலும் சில அறிவிப்புக்கள் உள்ளன.

تاريخ الطبري = تاريخ الرسل والملوك، وصلة تاريخ الطبري - العلمية (1/ 535)

حدثنا محمد بن عبدالأعلى قال حدثنا ابن ثور عن معمر عن الزهري قال فتر الوحي عن رسول الله صلى الله عليه و سلم فترة فحزن حزنا شديدا جعل يغدو إلى رؤوس شواهق الجبال ليتردى منها فكلما أوفى بذروة جبل تبدى له جبرئيل فيقول إنك نبي الله فيسكن لذلك جأشه وترجع إليه نفسه فكان النبي صلى الله عليه و سلم يحدث عن ذلك قال فبينما أنا أمشي يوما إذ رأيت الملك الذي كان يأتيني بحراء على كرسي بين السماء والأرض فجئثت منه رعبا فرجعت إلى خديجة فقلت زملوني فزملناه أي دثرناه فأنزل الله عز و جل يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر قال الزهري فكان أول شيء أنزل عليه اقرأ باسم ربك الذي خلق حتى بلغ ما لم يعلم ( 1 )

இந்த  அறிவிப்புக்களில் ஸுஹ்ரி அவர்களின் கூற்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர் அல்லர்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தற்கொலைக்கு முய்ன்றார்கள் என்பது ஆதாரமற்ற பொய்யான செய்தியாகும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account