Sidebar

27
Sat, Jul
5 New Articles

நூஹ் நபிக்கு ஆதரவாக நாம் சாட்சி சொல்வோம் என்ற புகாரி 3339 ஹதீஸ் சரியானதா?

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நடுநிலை சமுதாயம் பற்றிய புஹாரி 3339 ஹதீஸ் சரியானதா?

உரை: பீ.ஜைனுல் ஆபிதீன்

சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்வி பதில்கள் 10/10/21

3339. இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:


மறுமையில் நூஹ் அவர்களும் அவர்களின் சமுதாயத்தினரும் வருவார்கள். அப்போது அல்லாஹ் (நூஹ் - அலை - அவர்களை நோக்கி), '(என்னுடைய செய்தியை நீங்கள் உங்கள் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்து விட்டீர்களா?' என்று கேட்பான்

. அதற்கு நூஹ் அவர்கள், 'ஆம், என் இறைவா! (எடுத்துரைத்து விட்டேன்)' என்று பதிலளிப்பார்கள். பிறகு, அல்லாஹ் நூஹ் அவர்களின் சமுதாயத்தினரிடம், 'இவர் உங்களுக்கு (என் செய்தியை) எடுத்துரைத்துவிட்டாரா?' என்று கேட்பான். அதற்கு அவர்கள், 'இல்லை. எங்களிடம் எந்த இறைத்தூதரும் வரவில்லை' என்று பதில் கூறுவார்கள்

. உடனே, அல்லாஹ் நூஹ் அவர்களிடம் 'உங்களுக்காக சாட்சியம் சொல்பவர் யார்?' என்று கேட்பான். நூஹ் அவர்கள், 'முஹம்மத்(ஸல்) அவர்களும், அவர்களின் சமுதாயத்தினரும் (எனக்காக சாட்சியம் சொல்வார்கள்)' என்று பதிலளிப்பார்கள்.

அவ்வாறே நாம் நூஹ் அவர்கள் (இறைச் செய்தியைத் தம் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்து விட்டார்கள் என்று சாட்சியம் சொல்வோம். 'அவ்வாறே உங்களை மக்களுக்கு சாட்சியம் சொல்வதற்காக நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம்' என்னும் புகழுயர்ந்த இறைவனின் (திருக்குர்ஆன் 02:143) வசனம் இதைத் தான் குறிக்கிறது.


'நடுநிலையான' என்னும் சொல்லின் கருத்து 'நீதியான' என்பதாகும்.
என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். (புஹாரி 3339)

மறுமை விசாரணை குறித்து குர்ஆன் சொல்வதற்கு மாற்றமாக இரு செய்திகள் இதில் உள்ளன

(ஏகஇறைவனை) மறுத்து, இத்தூதருக்கு மாறுசெய்தோர் "தம்மைப் பூமி விழுங்கி விடாதா?'' என்று அந்நாளில்1 விரும்புவார்கள். அல்லாஹ்விடம் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது. (4:42)

"(ஏகஇறைவனை) மறுத்தோர் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்ததும் அதன் வாசல்கள் திறக்கப்படும். "உங்கள் இறைவனின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்தே உங்களுக்கு வரவில்லையா? இந்த நாளை1 நீங்கள் சந்திக்க வேண்டியது வரும் என்பதை உங்களுக்கு அவர்கள் எச்சரிக்கவில்லையா?'' என்று அதன் காவலர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் 'ஆம்' என்பார்கள். எனினும் (ஏகஇறைவனை) மறுப்போருக்கு வேதனை என்ற கட்டளை உறுதியாகி விட்டது.

"நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள்!'' என்று கூறப்படும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். பெருமையடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது..(39:71,72)

ஜின், மனித சமுதாயமே! "உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை1 நீங்கள் சந்திக்கவிருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா?'' (என்று இறைவன் கேட்பான்). "எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது. "(ஏகஇறைவனை) மறுத்தோராக இருந்தோம்'' எனத் தங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சியமளிப்பார்கள்.(6:130)

8. கோபத்தால் அது வெடித்திட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் "எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?'' என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள்.

9. அதற்கவர்கள் "ஆம்! எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய்யெனக் கருதினோம். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளியதில்லை. நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று கூறினோம்'' எனக் கூறுவார்கள்.

10. நாங்கள் செவிமடுத்திருந்தாலோ, விளங்கியிருந்தாலோ நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள்.(67:8-10)

24. அந்நாளில்1 அவர்களின் நாவுகளும்,510 கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.

25. அன்று அவர்களது உண்மையான கூலியை அவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் உண்மையானவன்; தெளிவுபடுத்துபவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.(24:24,25)

இன்று அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம்.510 அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.(36:65)

19. அல்லாஹ்வின் பகைவர்கள் நரகை நோக்கித் திரட்டப்படும் நாளில்1 அவர்கள் வகைப்படுத்தப்படுவார்கள்.

20. முடிவில் அவர்கள் அங்கே வந்ததும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.(41:19,20)

13. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில்1 அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம். அதை விரிக்கப்பட்டதாக அவன் காண்பான்.

14. "உனது புத்தகத்தை நீ வாசி! உன்னைப் பற்றி கணக்கெடுக்க நீயே போதுமானவன்'' (என்று கூறப்படும்).(17:13,14)

அந்தப் புத்தகம் வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! "இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!'' எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்.(18:49 )

எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம்.68 நம்மிடம் உண்மையைப் பேசும் ஏடு157 உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.(23:62)

28. ஒவ்வொரு சமுதாயத்தையும் மண்டியிட்டவர்களாக நீர் காண்பீர்! ஒவ்வொரு சமுதாயமும் தனது (பதிவுப்) புத்தகத்தை நோக்கி அழைக்கப்படும். நீங்கள் செய்து கொண்டிருந்ததற்கு இன்று கூலி கொடுக்கப் படுவீர்கள்.

29. இதுவே நமது புத்தகம். உங்களுக்கு எதிராக இது உண்மையைப் பேசுகிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நாம் பதிவு செய்வோராக இருந்தோம் என்று கூறப்படும்.(45:28,29)

புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் "எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே'' எனக் கூறுவான்.(65:25-29)

10, 11. முதுகுக்குப் பின்புறமாக எவனுக்கு அவனது பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவன் அழிவை அழைப்பான்.26

12. நரகிலும் எரிவான்.(84:10-12)

இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடுநிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம்.39 அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை.498 அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.(2:143)

அல்லாஹ்வுக்காக அறப்போர் செய்ய வேண்டிய விதத்தில் அறப்போர் செய்யுங்கள்! இந்தத் தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும், நீங்கள் ஏனைய மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும் அவன் உங்களைத் தேர்ந்தெடுத்தான். உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை.68 இதற்கு முன்னரும், இதிலும் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள்295 எனப் பெயரிட்டான். எனவே தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஜகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வைப் பற்றிப் பிடியுங்கள்! அவனே உங்கள் பாதுகாவலன். அவன் சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன்.(22:78)

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர்27 நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.(3:110)

(அவன்) மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன்; பெரியவன்; உயர்ந்தவன்.

عَـٰلِمُ ٱلۡغَیۡبِ وَٱلشَّهَـٰدَةِۚ – 6;73, 9:94, 9:105, 13:9, 23;92, 32;6, 39:43, 59:22, 62:8, 64;18,

"இவள் தான் என்னை மயக்கலானாள்'' என்று அவர் கூறினார். "அவரது சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறுகிறாள்; அவர் பொய்யர். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய் கூறுகிறாள்; அவர் உண்மையாளர்'' என்று அவளது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சான்றுரைத்தார்(12:26,27)

"சபையோர்களே! என் விஷயமாக முடிவு கூறுங்கள்! நீங்கள் ஆலோசனை கூறாத வரையில் நான் எந்தக் காரியத்தையும் முடிவு செய்பவளாக இல்லை" என்று அவள் கூறினாள்.(27:32)

 (முஹம்மதே!) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு உம்மைச் சாட்சியாக நாம் கொண்டு வரும்போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?(4:41 )

 

இதை பதிவிறக்கம் செய்ய
onlinepj

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account