Sidebar

27
Sat, Jul
4 New Articles

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா?

நபிமார்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா?

அப்துல்லாஹ்

பதில் :

ஈஸா (அலை) அவர்கள் ஹஜ் செய்தார்களா? இல்லையா? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இது பற்றி நாம் கருத்து கூற முடியாது.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஈஸா நபி ஹஜ் செய்வது போல் கனவில் எடுத்துக் காட்டப்பட்டதாகப் பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

صحيح البخاري

3440 – وَأَرَانِي اللَّيْلَةَ عِنْدَ الكَعْبَةِ فِي المَنَامِ، فَإِذَا رَجُلٌ آدَمُ، كَأَحْسَنِ مَا يُرَى مِنْ أُدْمِ الرِّجَالِ تَضْرِبُ لِمَّتُهُ بَيْنَ مَنْكِبَيْهِ، رَجِلُ الشَّعَرِ، يَقْطُرُ رَأْسُهُ مَاءً، وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَيْ رَجُلَيْنِ وَهُوَ يَطُوفُ بِالْبَيْتِ، فَقُلْتُ: مَنْ هَذَا؟ فَقَالُوا: هَذَا المَسِيحُ ابْنُ مَرْيَمَ، ثُمَّ رَأَيْتُ رَجُلًا وَرَاءَهُ جَعْدًا قَطِطًا أَعْوَرَ العَيْنِ اليُمْنَى، كَأَشْبَهِ مَنْ رَأَيْتُ بِابْنِ قَطَنٍ، وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَيْ رَجُلٍ يَطُوفُ بِالْبَيْتِ، فَقُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: المَسِيحُ الدَّجَّالُ "

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இன்றிரவு கஅபாவின் அருகே நான் கனவில் (ஒரு நிகழ்ச்சியைக்) கண்டேன். மிக அழகான மாநிறம் கொண்ட மனிதர் ஒருவர் அங்கிருந்தார். அவரது தலைமுடி அவரது தோள்களுக்கிடையே தொங்கிக் கொண்டிருந்தது; படிய வாரப்பட்ட தொங்கலான முடியுடையவராக அவர் இருந்தார். அவருடைய தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. இரு மனிதர்களின் தோள்கள் மீது தமது இரு கைகளையும் அவர் வைத்துக் கொண்டு கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்தார். இவர் யார்? என்று நான் கேட்டேன். மர்யமின் மகன் ஈஸா என்று பதிலளித்தார்கள். பிறகு, அவருக்குப் பின்னால் நிறைய சுருள் முடி கொண்ட, வலக் கண் குருடான ஒரு மனிதனைக் கண்டேன். அவன் நான் பார்த்தவர்களிலேயே இப்னு கத்தனுக்கு அதிக ஒப்பானவனாயிருந்தான். அவன் இறையில்லம் கஅபாவை வலம் வந்து கொண்டிருந்த ஒரு மனிதரின் தோள்களின் மீது தன் இரு கைகளையும் வைத்திருந்தான். யார் இது? என்று கேட்டேன். இவன் தஜ்ஜால் என்னும் மஸீஹ் என்று பதிலளித்தார்கள்.
நூல் : புகாரி 3440

கியாமத் நாள் ஏற்படுவதற்கு முன்பு ஈஸா (அலை) அவர்கள் இந்த உலகத்திற்கு மீண்டும் இறைவனால் அனுப்பி வைக்கப்படுவார்கள். அப்போது ஹஜ் அல்லது உம்ரா அல்லது அவ்விரண்டையும் செய்வார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

2196 و حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ وَعَمْرٌو النَّاقِدُ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ جَمِيعًا عَنْ ابْنِ عُيَيْنَةَ قَالَ سَعِيدٌ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ حَدَّثَنِي الزُّهْرِيُّ عَنْ حَنْظَلَةَ الْأَسْلَمِيِّ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُهِلَّنَّ ابْنُ مَرْيَمَ بِفَجِّ الرَّوْحَاءِ حَاجًّا أَوْ مُعْتَمِرًا أَوْ لَيَثْنِيَنَّهُمَا و حَدَّثَنَاه قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ ابْنِ شِهَابٍ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ قَالَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ و حَدَّثَنِيهِ حَرْمَلَةُ بْنُ يَحْيَى أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حَنْظَلَةَ بْنِ عَلِيٍّ الْأَسْلَمِيِّ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ بِمِثْلِ حَدِيثِهِمَا رواه مسلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக! (இறுதி நாட்களில்) மர்யமின் புதல்வர் (ஈஸா) அவர்கள் (மக்கா – மதீனா இடையே உள்ள) "ஃபஜ்ஜுர் ரவ்ஹா' எனுமிடத்தில் ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவிற்காக அல்லது அவ்விரண்டுக்குமாகத் தல்பியாச் சொல்வார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 2403

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account