Sidebar

16
Thu, May
1 New Articles

கஅபா ஆலயத்தில் சில்மிஷமா?

மருத்துவம் சுகாதாரம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

கஅபா ஆலயத்தில் சில்மிஷமா?

ஹஜ், உம்ரா வணக்கம் செய்ய மக்கா செல்பவர்கள் கஅபா எனும் செவ்வகமான ஆலயத்தை ஏழு தடவை சுற்ற வேண்டியது அவசியமாகும். இதில் பெண்களுக்கு விதிவிலக்கு இல்லை. அவர்களும் கஅபா ஆலயத்தை ஏழு தடவை சுற்ற வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு ஆண்களும் பென்களும் சுற்றும் போது பெண்களிடம் சில ஆண்கள் பாலியல் சேட்டைகள் செய்ததாக ஒரு பெண் முகநூலில் பதிவு செய்தார். இதைப் பின் தொடர்ந்து மெய்யாகச் சிலரும் பொய்யாகப் பலரும் பதிவுகள் போட இஸ்லாத்தைக் குறைவுபடுத்தக் காத்திருந்தவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக ஆகிவிட்டது. இதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தின் புனிதத்தைக் கேள்விக்குறியாக்கி விட்டோம் என்று திருப்திப்பட்டு உலகின் அனைத்து ஊடகங்களும் இதை முக்கியத்துவத்துடன் பதிந்து வருகின்றனர்.

இது குறித்து முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் அறிந்து கொள்வதற்காக இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.

இது குறித்து bbc செய்தியின்  ஒரு பகுதியில் உள்ள செய்தியை முதலில் பார்ப்போம்.

முஸ்லிம் பெண்கள் (பள்ளியில் நானும்) என்ற ஹாஷ்  டெக் யைப்  பயன்படுத்தி தங்களுக்கு ஹஜ்ஜின் போது  நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி கருத்து பறிமாறி  கொண்டு வருகின்றனர்.

எகிப்திய – அமெரிக்க பெண்ணியவாதி மற்றும் பத்திரிகையாளர் மோனா எல் தஹ்வி என்பவர் தான் முதலாவதாக தனக்கு 2013 ஹஜ்ஜின் போது ஏற்பட்ட பாலியல் தாக்குதல் பற்றி  பகிர்ந்துள்ளார்.

அவர் தான் #MosqueMeToo (பள்ளியில் நானும்) என்ற வலையுலகப் பிரச்சாரத்தின் பின்னனியில்  உள்ளார்.

பெண்கள் ஹஜ்ஜின் போது நடைபெறும் பாலியல் துன்புறுத்தப்படுவதைப் பற்றி பேசுவதைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் புனித ஹஜ் யாத்திரையின் போது பாலியல் தாக்குதல் பற்றி என் சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து இருந்தேன்.  1982 ல் நான் பங்கு கொண்ட  ஹஜ்ஜின் பொது எனக்கு 15 வயது இருக்கும். அப்போது நடைபெற்ற சம்பவங்களை  பல வருடங்களாக, என் பெற்றோரிடம் என்னால் என்ன நடந்தது அல்லது  பாலியல் ரீதியாக தாக்கப்படுவதைப் பற்றி பேச முடியவில்லை. ஹஜ்ஜின் பொது நடைபெற்ற  பாலியல் தாக்குதல் அனுபவத்தை முதல் முறையாக நான் பகிர்ந்து கொண்டேன், எகிப்திய முஸ்லிம் பெண் என்னை இப்படிப் பகிர வேண்டாம் என அறிவுறுத்தினார். அதை  நிறுத்த வேண்டும் என்று எச்சரித்தார். இதைப் பகிர்வதால்  "நான் முஸ்லிம்களுக்கு மோசமான தோற்றத்தை ஏற்படுத்துவேன்" என்று கூறினாள் . எனக்கு என்ன நடந்தது என்பதைப் பகிர்ந்து கொள்வேன், மேலும் பல முஸ்லிம் பெண்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்  என மோனா எல் தஹ்வி  கூறியுள்ளார்.

இதே கருத்துப்பட இன்னும் ஏராளாமான ட்விட்களை மோனா எல் தஹ்வி பதிந்துள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த சபிகா கான்  முகநூலில் கூறுகையில்  ;

இது மத உணர்வுகளைக் காயப்படுத்தும் என்பதால் இதைப் பகிர்ந்து கொள்ளப் பயந்தேன். இஷாவுக்குப் பின் காபாவை தவாஃப் செய்யும் போது, மோசமான நிகழ்வு  நடந்தது. அது என்னுடைய 3 வது தவாஃப், நான் அதை அலட்சியபடுத்தினேன். மீண்டும் நடந்தது. எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. நான் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தேன். எனது 6 வது  தவாஃபின் பொது என் பிற்பகுதியை வேகமாகக் கிள்ளுவதை உணர்ந்தேன். நான் உறைந்து போனேன். அது வேண்டுமென்றே செய்யப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. நான் அலட்சியபடுத்திவிட்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்,  பின்னால்  திரும்பிப் பார்த்தால் யாருமில்லை. நான் யெமனி மூலையில் செல்லும் போது, என்னை யாரோ இழுத்து என் பிற்பகுதியைக் கிள்ளினர். நான் அங்கு நிறுத்திவிடச் செய்தேன். அவன் கையைப் பிடித்து உதறிவிட்டு அவனை விட்டு விலக நினைத்தேன். ஒன்றும் அறியாமல் உறைந்து போனேன். அவனிடமிருந்து தப்பிக்கவும் இயலவில்லை. திரும்பிப் பார்த்தேன். யார் என அறிய முடியவில்லை. மிகவும் வருத்தத்திற்கு உள்ளானேன். மவுனமாக இருந்தேன். என் பேச்சை யாரும் நம்ப மாட்டார்கள்; பொருட்படுத்தவும் மாட்டார்கள் என் தாயை தவிர. என் தாயிடம்  ஹோட்டல் அறைக்கு வந்த அனைத்தையும் பகிர்ந்தேன். அவர் பெரும் குழப்பத்துடன் இடிந்து போனார், இந்தச் சம்பவத்திற்குப் பின் என்னை அவர் தனியாக அங்கு செல்ல அனுமதிக்கவில்லை. சொல்லவே கஷ்டமாக உள்ளது.  புனித்த் தளங்களில் கூட பாதுகாப்பு இல்லாமல் இருப்பது. எனக்கு ஒரு முறையல்ல; இரண்டு முறையல்ல; மூன்று முறை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன். புனித நகரத்தில் என் முழு அனுபவமும் இந்தப் பயங்கரமான சம்பவத்தால் மறைந்துவிட்டது.

இது போன்ற துன்புறுத்துதலைப் பற்றித் சொல்வது முற்றிலும் சரி; முக்கியமானது என நான் நம்புகிறேன். இதே போல் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என எனக்குத் தெரியவில்லை என்பதால் மிகவும் மோசமாக உணர்கிறேன்.

இந்தப் பதிவை  காரணம் கூறாமல் பேஸ்புக் நீக்கிவிட்டது.

பிப்ரவரி 8ஆம் தேதி மட்டும் 24 மனி நேரத்தில் 2000 க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் இதே  ஹாஷ் டெக் கைப் பயன்படுத்தி தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.

பெண்கள் பலரும் தங்கள் அனுபவங்களைக் கூறும் பொது ஆண்கள் கூட்டத்தில்  தடவி, தகாத இடங்களில் தொடுவதாகக் கூறுகின்றனர்.

மரிஹா  சையத் என்ற பெண் கூறும் பொது " உம்ரா பற்றி யோசிக்கவே பயமாக உள்ளது,  எனது வாழ்நாளில் சிறந்த நினைவுகளாக இருக்க வேண்டிய  என்னை என் கடவுளுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டிய  தருனங்கள்  என்னை அழித்து விட்டது"

நான் #MosqueMeToo பற்றிப் படித்தேன்.  2010 ஆம் ஆண்டு ஹஜ்ஜின் போது எனக்கு  நடந்த மோசமான சம்பவங்கள் நினைவுக்கு வந்தது. மக்கள் மெக்காவை முஸ்லிம்களின் மிகவும் புனிதமான இடமாகக் கருதுகின்றனர், எனவே யாரும் மோசமான ஒன்றைச் செய்ய மாட்டார்கள் எனவும் நம்புகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு.  – ஆங்கி லகோரியொ எடின்பர்க், ஸ்காட்லாந்து

#MosqueMeToo ஆதரவாளர்கள் கூறும் பொது  புனிதமாகக் கருதும்   இடங்களில் தங்களை முழுமையாக மறைத்து இருந்தாலும், பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தாலும்  கூட  பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம் என கூறுகின்றனர்.

ஹஜ்ஜுக்கு அழைத்து செல்லும் பயண ஏற்பாட்டாளர்கள் தவாஃப்பின் போது நடக்கும் சேட்டைகள்  சம்பந்தமக   எச்சரிக்கின்றனர்.  ஆகையால் என் தந்தை தாய்க்குப் பின்னால் நடந்தார். ஆண்கள்  ஆச்சரியப்பட வேண்டாம்! என இன்னொருவர் ட்ட்விட் செய்துள்ளார்.

பல ஈரானிய மற்றும் பாரசிட் ட்விட்டர் பயனர்கள் தங்களது ஹஜ்ஜின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது மட்டுமல்லாமல், ஹிஜாப் அணிவதால் பாலியல் தாக்குதல்களிலிருந்தும், தொந்தரவுகளிலிருந்தும் பாதுகாக்கும் என நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறுகின்றனர். ஈரானில் ஹிஜாப் அனிவது கட்டாயம்.

நான் 10 வயதுடையவளாக இருந்தேன். ஜும்மா தொழுகைக்குப் பிறகு  என் அக்கா என் இடுப்பை இறுகப் பற்றிக் கொண்டதாக நினைத்தேன். ஆனால் என் சகோதரி எனக்கு அருகில் இருந்தார், என் சகோதரியின் கைகளே இல்லை. என் அக்கா அவனை என்னிடமிருந்து பாதுகாக்கும் வரை என்னை விட்டு நீங்கவே இல்லை.

மதீனா நகரம்  மிகவும்  பாதுகாப்பாக  கருதினேன். ஆனால் அது தவறு, நான் 15 வயது இருக்கும் போது தொந்தரவு செய்யப்பட்டேன், இதை நான் மறக்கவும் மாட்டேன்; மன்னிக்கவும் மாட்டேன்.

இதுதான் அந்தச் செய்தி.

இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் இவர்கள் பதிந்து பரப்பும் இந்தச் செய்தியானது இஸ்லாமியச் சட்டமே முற்றிலும் சரியானது என்பதற்குத்தான் ஆதாரமாக அமைந்துள்ளது.

தவாப் செய்வது, தொழுவது உள்ளிட்ட எந்த வணக்கமானாலும் ஆண்களும், பெண்களும் இரண்டறக் கலக்க இஸ்லாம் அனுமதிக்கவே இல்லை. ஆண்களின் பின்னால் தான் பெண்கள் நின்று வணங்க வேண்டும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வழிமுறையாகும்.

பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுகையில் கலந்து கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள். அப்போது ஆண்கள் பெண்கள் கலந்து விடாமல் ஆண்கள் முன்வரிசையிலும், பெண்கள் பின் வரிசையிலும் நிற்க வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

صحيح البخاري 870 – حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ هِنْدٍ بِنْتِ الحَارِثِ، عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ قَامَ النِّسَاءُ حِينَ يَقْضِي تَسْلِيمَهُ، وَيَمْكُثُ هُوَ فِي مَقَامِهِ يَسِيرًا قَبْلَ أَنْ يَقُومَ»، قَالَ: نَرَى – وَاللَّهُ أَعْلَمُ – أَنَّ ذَلِكَ كَانَ لِكَيْ يَنْصَرِفَ النِّسَاءُ، قَبْلَ أَنْ يُدْرِكَهُنَّ أَحَدٌ مِنَ الرِّجَالِ

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று)விடுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எழுவதற்கு முன் சற்று நேரம் (தாம் தொழுத) அதே இடத்திலேயே வீற்றிருப்பார்கள். அ(வ்வாறு அவர்கள் அமர்ந்திருந்த)து, ஆண்கள் பெண்களை நெருங்குவதற்கு முன் பெண்கள் திரும்பிச் சென்று விடட்டும் என்பதற்காகத்தான்' என்றே கருதப்படுகிறது.

நூல் : புகாரி 870

صحيح البخاري 866 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَتْنِي هِنْدُ بِنْتُ الحَارِثِ، أَنَّ أُمَّ سَلَمَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخْبَرَتْهَا: «أَنَّ النِّسَاءَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنَّ إِذَا سَلَّمْنَ مِنَ المَكْتُوبَةِ، قُمْنَ وَثَبَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ صَلَّى مِنَ الرِّجَالِ مَا شَاءَ اللَّهُ، فَإِذَا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  قَامَ الرِّجَالُ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள், கடமையான தொழுகையில் ஸலாம் கொடுத்ததும் எழுந்து (சென்று)விடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (அவர்களுடன்) தொழுகையில் கலந்து கொண்ட ஆண்களும் அல்லாஹ் நாடிய அளவுக்கு அங்கேயே அமர்ந்திருப்பார்கள். (பெண்கள் சென்றபின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்ததும் ஆண்களும் எழுவார்கள்

நூல் : புகாரி 866

صحيح البخاري 380 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ لَهُ، فَأَكَلَ مِنْهُ، ثُمَّ قَالَ: «قُومُوا فَلِأُصَلِّ لَكُمْ» قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا، قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَفَفْتُ وَاليَتِيمَ وَرَاءَهُ، وَالعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் (தாய்வழிப்) பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதைச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர், எழுங்கள்! உங்களுக்காக நான் (உபரியானத் தொழுகையை) தொழுவிக்கிறேன் என்று கூறினார்கள். நான் (தொழுவதற்காக) எங்களுக்குரிய பாயை (எடுப்பதற்காக அதை) நோக்கி எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் விரித்ததனால் கருப்படித்து இருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயின் மீது தொழுகைக்காக) நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். என் பாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இமாமாக நின்று உபரியான) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு (தமது இல்லம் நோக்கித்) திரும்பிச் சென்றார்கள்.

நூல் : புகாரி 380

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வயதான மூதாட்டியுடன் தொழும் போது கூட அவரைப் பின் வரிசையில் தனியாகத் தான் நிற்க வைத்தார்கள்.

அது எப்படி பெண்களைத் தனியாகப் பிரிக்கலாம் என்று கேள்வி கேட்ட அறிவுஜீவிகளும், போலிப் பெண்ணியவாதிகளும் இப்போது பிளேட்டை அப்படியே திருப்பிப் போடுகிறார்கள். ஆண்களுடன் பெண்கள் ஒட்டி உரசுவதால் பாலியல் சீண்டல்கள் வருவது எப்படி என்று கேட்டு இவர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

صحيح البخاري

1618 – وقَالَ لِي عَمْرُو بْنُ عَلِيٍّ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ ، قَالَ: ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنَا قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ: إِذْ مَنَعَ ابْنُ هِشَامٍ النِّسَاءَ الطَّوَافَ مَعَ الرِّجَالِ، قَالَ: كَيْفَ يَمْنَعُهُنَّ؟ وَقَدْ طَافَ نِسَاءُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ الرِّجَالِ؟ قُلْتُ: أَبَعْدَ الحِجَابِ أَوْ قَبْلُ؟ قَالَ: إِي لَعَمْرِي، لَقَدْ أَدْرَكْتُهُ بَعْدَ الحِجَابِ، قُلْتُ: كَيْفَ يُخَالِطْنَ الرِّجَالَ؟ قَالَ: لَمْ يَكُنَّ يُخَالِطْنَ، كَانَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا تَطُوفُ حَجْرَةً مِنَ الرِّجَالِ، لاَ تُخَالِطُهُمْ، فَقَالَتْ امْرَأَةٌ: انْطَلِقِي نَسْتَلِمْ يَا أُمَّ المُؤْمِنِينَ، قَالَتْ: «انْطَلِقِي عَنْكِ»، وَأَبَتْ، يَخْرُجْنَ مُتَنَكِّرَاتٍ بِاللَّيْلِ، فَيَطُفْنَ مَعَ الرِّجَالِ، وَلَكِنَّهُنَّ كُنَّ إِذَا دَخَلْنَ البَيْتَ، قُمْنَ حَتَّى يَدْخُلْنَ، وَأُخْرِجَ الرِّجَالُ، وَكُنْتُ آتِي عَائِشَةَ أَنَا وَعُبَيْدُ بْنُ عُمَيْرٍ، وَهِيَ مُجَاوِرَةٌ فِي جَوْفِ ثَبِيرٍ، قُلْتُ: وَمَا حِجَابُهَا؟ قَالَ: هِيَ فِي قُبَّةٍ تُرْكِيَّةٍ، لَهَا غِشَاءٌ، وَمَا بَيْنَنَا وَبَيْنَهَا غَيْرُ ذَلِكَ، وَرَأَيْتُ عَلَيْهَا دِرْعًا مُوَرَّدًا

1618 இப்னு ஜுரைஜ் அவர்கள் கூறியதாவது:

பெண்கள் ஆண்களோடு தவாஃப் செய்வதை இப்னு ஹிஷாம் தடுத்தது பற்றி நான் அதாஉ அவர்களிடம் கூறிய போது, அவர் எப்படித் தடுக்கலாம்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர்கள் ஆண்களோடு தவாஃப் செய்துள்ளனரே என அதாஉ கூறினார்கள். அதற்கு நான் இ(வ்வாறு செய்த)து ஹிஜாபின் சட்டம் அருளப்படுவதற்கு முன்னரா அல்லது பின்னரா? எனக் கேட்க, அவர்கள் ஹிஜாபுடைய சட்டம் அருளப்பட்டதற்குப் பின்னரே இந்நிகழ்ச்சியை நான் கண்டேன் என்றார். மீண்டும் நான் அது எப்படி? பெண்கள் ஆண்களோடு (ஒருவரோடொருவர்) கலந்து விடுவார்களோ? என்று கேட்டேன். அதற்கு, கலந்து  விட மாட்டார்கள் என்று கூறி விட்டு ஆயிஷா (ரலி) அவர்கள் ஆண்களோடு கலக்காமல் ஓரமாக தவாஃப்  செய்வார்கள் என்று குறிப்பிட்டார்.

அப்போது ஒரு பெண், நம்பிக்கையாளர்களின் தாயே! நடங்கள்! நாம் சென்று ஹஜருல் அஸ்வதை) முத்தமிடுவோம்!' என்றார்; அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நீ போ என்று மறுத்தார்கள். இரவிலும் பெண்கள் தம்மைத் மறைத்துக் கொண்டு சென்று ஆண்களோடு தவாஃப் செய்வார்கள். ஆனால், பெண்கள் கஅபாவினுள் நுழைய நாடினால், உள்ளே இருக்கும் ஆண்கள் வெளியேறும் வரை அதற்காகக் காத்திருப்பார்கள்

நூல் : புகாரி 1618

புனிதத்தலங்களில் மட்டும் ஆண்களும் பெண்களும் ஒட்டி உரசலாம் என்று குர்ஆனும் கூறவில்லை; நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை.

இஸ்லாம் கூறுகின்ற இந்த வழிமுறையை மீறிவிட்டு புனித்தலங்களிலும் பாதுகாப்பு இல்லை என்று கூறுவது அறிவீனம் அல்லவா?

இதை முதலில் பதிந்தவர் பெண்ணியவாதியான அமெரிக்காவைச் சேர்ந்த மோனா எல் தஹ்வி என்பவராவார். பெண்ணியவாதி என்றால் அதுவும் அமெரிக்கப் பெண்ணியவாதி என்றால் யார்? ஆண், பெண் பேதமில்லை; ஆண்களைப் போலவே பெண்கள் எல்லா விஷயத்திலும் நடந்து கொள்ளலாம்; ஆண்கள் சபை, பெண்கள் சபை என்று பிரிக்கக் கூடாது; ஆண்களும் பெண்களும் இரண்டறக் கலக்கலாம் என்பது தான் அமெரிக்கப் பெண்ணியம்.

அப்படியானால் இவர் விரும்புகிற பெண்ணியம் தோற்று விட்டது என்பதற்குத் தான் இது ஆதாரமாக உள்ளது. மேற்கத்திய உலகில் பேர் வாங்குவதற்காக இதைப் பதிந்து பரப்பிய இவர் ஆண்களுடன் ஒட்டி உறவாடினால் புனிதத் தலங்களாக இருந்தாலும் அது பெண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஒப்புக் கொள்கிறார். இஸ்லாம் அதைத் தான் கூறுகிறது. அதைத் தான் இவ்வளவு காலமும் பெண்ணடிமைத் தனம் என்று சொல்லி வந்தார்கள்.

ஆண்களுடன் பெண்கள் இரண்டறக் கலந்து தொழுகை நடத்த அனுமதிக்காமல் பெண்களைப் பின் வரிசையில் நிறுத்துவது பிற்போக்கு என்று புலம்புவதும் இவர்கள் தான்.

இவர்களாகப் போய் இரண்டறக் கலந்துவிட்டு உரசிவிட்டான் என்று புலம்புவதும் இவர்கள் தான்.

முரண்பாட்டின் முழு வடிவமாக இவர்கள் காட்சியளிக்கிறார்கள்.

புர்கா ஆடை பாதுகாப்பு என்றாலும் புர்கா அணிந்து கொண்டால் ஆண்களுடன் நெருக்கி இடித்துக் கொண்டு நிற்க இஸ்லாம் அனுமதித்துள்ளதா? இல்லை.

இஸ்லாம் சொல்லாத விஷயத்தை இவர்களாகச் செய்துவிட்டு இஸ்லாமிய வழிபாட்டைக் குறை கூறுவது அறிவீனம் என்று இவர்களுக்கு ஏன் தெரியாமல் போய்விட்டது?

எந்த ஒரு நேரத்திலும் பல்லாயிரம் பேர் தவாப் செய்வார்கள். ஒரு இடத்தில் நிலையாக நிற்பது என்றால் போதிய இடைவெளியில் நிற்க முடியும். தவாப் என்றால் சுற்றுதலாகும். நகர்ந்து கொண்டே செல்ல வேண்டிய வணக்கமாகும். கூட்ட நெரிசலில் உடல் நசுங்கிவிடும் அளவுக்கு நெருக்கமாக நகர வேண்டும்.

இப்படி நகரும் போது என்ன நடக்கும் என்பதைக் கூட அறியாமல் பெண்கள் ஏன் முட்டி மோத வேண்டும்?

முப்பது லட்சம் பேர் கூடும் மற்ற இடங்களாக இருந்தால் என்ன நடக்கும்?

ஆனால் முப்பது லட்சம் பேரில் ஆண்டுக்கு இரண்டு மூன்று பேர் இப்படி நடக்கின்றனர்.

பிக்பாக்கெட் அடிக்கும் நோக்கத்தில் கூட அண்டை நாடுகளில் இருந்து சிலர் வருகின்றனர்.

இப்படியெல்லாம் சிலர் வந்திருப்பார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு தான் இஸ்லாம் ஆண்களுடன் கலக்காமல் பின் வரிசையில் நிற்க பெண்களுக்கு வழிகாட்டியுள்ளது.

முப்பது லட்சம் பேரில் நூறு அயோக்கியன் இல்லாமல் இருக்க மாட்டான் என்ற அடிப்படை அறிவு வேண்டாமா?

மேலும் கஅபாவில் பல நூறு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டு சவூதி காவல் துறை கண்காணிக்கிறது.

ஆண்கள் வெள்ளை ஆடை அணிந்து தவாப் செய்வார்கள். வெள்ளை அல்லாத வேறு நிறத்தில் சுற்றுபவர்கள் பெண்கள் தான் என்பதால் அந்த இடங்களை கேமரா மூலம் கண்காணித்துக் கொண்டு இருப்பார்கள்

பெண்களைச் சீண்டினால் பெண்கள் திரும்பிப் பார்ப்பதை வைத்தும் அவர்கள் திடீரென சிலிர்த்துக் கொள்வதை வைத்தும் கண்டறிந்து அந்த இடத்துக்கு உடனே போலீஸ் வரும். சம்மந்தப்பட்டவரை பக்குவமாக நகர்த்திக் கொண்டு போய் தண்டிப்பார்கள்.

உலகில் எந்த நாட்டிலும் முப்பது லட்சம் மக்கள் கூடும் இடங்களில் இவ்வளவு சிறந்த பாதுகாப்பு அளிப்பதில்லை.

இதையும் மீறி இந்தப் பெண்கள் பதிந்துள்ளது போல் நடக்கலாம். (இவ்வாறு பதிவிட்டவர்களில் போலிகள் தான் அதிகமாக இருக்கும் என்று நாம் கருதுகிறோம்.)

இதை எந்த அரசாக இருந்தாலும் தடுக்க முடியாது.

இதைக் கேள்வி கேட்கும் அறிவு ஜீவிகளிடம் நாம் கேட்கிறோம். இதை எவ்வாறு கண்டுபிடித்து தடுக்க முடியும் என்பதற்கு உங்களிடம் மாற்று வழி உள்ளதா?

இதில் உங்களின் கோரிக்கை என்ன?

ஆண்களுடன் பெண்கள் ஒட்டி உரச வேண்டும்; ஆனால் ஒன்றும் நடக்கக் கூடாது என்பதுதான் உங்கள் கோரிக்கையா?

பெண்கள் ஆண்களுடன் கலக்காமல் பின் வரிசைகளில் நின்று தவாப் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் கூறும் வழியைத் தவிர இதற்கு எந்த வழியும் கிடையாது.

பெண்கள் நெருக்கமாக கஅபாவைக் காண வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக சட்டத்தை மீறி முண்டியடிக்காமல் இருந்தால் இப்படியான சம்பவங்கள் அறவே நடக்காமல் போய்விடும்.

இஸ்லாம் எப்போதும் சரியாகவே உள்ளது. அதன் சட்டத்தைக் குறை கூறப் புகுந்தவர்கள் தோல்வியைத்தான் தழுவியுள்ளார்கள். இப்போதும் அப்படியே.

பிற்சேர்க்கை

மேற்கண்டவாறு பதிவு செய்த அமெரிக்கப் பெண்ணியவாதி பற்றி கூடுதல் விபரம் கிடைத்துள்ளது.

இவளது படங்களைப் பாருங்கள்! இவள் ஹஜ் அல்லது உம்ரா செய்திருப்பாள் என்று அறிவுள்ள யாரேனும் கருத முடியுமா?

பல ஆண்களுடன் ஒட்டி உரசும் இழிபிறவியான இவள் பின்புறத்தில் கிள்ளியதற்காக கொந்தளிப்பவளாகத் தெரிகிறாளா?

மேற்குலக நாடுகளில் கட்டுக்கடங்காமல் இஸ்லாம் வளர்ச்சி அடைந்து வருவதால் அதிர்ச்சி அடைந்த இஸ்லாத்தின் எதிரிகள் இவளைத் தயார்படுத்தி இப்படி எழுத வைத்துள்ளனர் என்பது பளிச்சென்று தெரிகின்றது. ஒரே நேரத்தில் BBC உள்ளிட்ட உலக ஊடகங்கள் இதை முக்கியத்துவப்படுத்தி பரப்பி இருப்பதில் இருந்து இது மேற்குலகின் சதிவேலை என்பது தெளிவாக தெரிகின்றதல்லவா?

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account