Sidebar

19
Fri, Apr
4 New Articles

ஆயதுல் குர்ஸியை கற்றுக் கொடுத்தவன் மனிதனா ஷைத்தானா

ஜின், ஷைத்தான்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஷைத்தான்  நபித்தோழருக்கு  ஆயதுல்  குர்ஸியைக்  கற்றுக்  கொடுத்தானா?

பதில் அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு ஷைத்தான் ஆயத்துல் குர்ஸியைக் கற்றுக் கொடுத்தான் என்று கூறும் ஹதீஸ்கள் உள்ளன. இது குறித்து விபரமாகப் பேசும் ஹதீஸைக் காண்போம்.

صحيح البخاري

2311 - وَقَالَ عُثْمَانُ بْنُ الهَيْثَمِ أَبُو عَمْرٍو، حَدَّثَنَا عَوْفٌ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: وَكَّلَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحِفْظِ زَكَاةِ رَمَضَانَ، فَأَتَانِي آتٍ فَجَعَلَ يَحْثُو مِنَ الطَّعَامِ فَأَخَذْتُهُ، وَقُلْتُ: وَاللَّهِ لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنِّي مُحْتَاجٌ، وَعَلَيَّ عِيَالٌ وَلِي حَاجَةٌ شَدِيدَةٌ، قَالَ: فَخَلَّيْتُ عَنْهُ، فَأَصْبَحْتُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا هُرَيْرَةَ، مَا فَعَلَ أَسِيرُكَ البَارِحَةَ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، شَكَا حَاجَةً شَدِيدَةً، وَعِيَالًا، فَرَحِمْتُهُ، فَخَلَّيْتُ سَبِيلَهُ، قَالَ: «أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ، وَسَيَعُودُ»، فَعَرَفْتُ أَنَّهُ سَيَعُودُ، لِقَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهُ سَيَعُودُ، فَرَصَدْتُهُ، فَجَاءَ يَحْثُو مِنَ الطَّعَامِ، فَأَخَذْتُهُ، فَقُلْتُ: لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: دَعْنِي فَإِنِّي مُحْتَاجٌ وَعَلَيَّ عِيَالٌ، لاَ أَعُودُ، فَرَحِمْتُهُ، فَخَلَّيْتُ سَبِيلَهُ، فَأَصْبَحْتُ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا هُرَيْرَةَ، مَا فَعَلَ أَسِيرُكَ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ شَكَا حَاجَةً شَدِيدَةً، وَعِيَالًا، فَرَحِمْتُهُ، فَخَلَّيْتُ سَبِيلَهُ، قَالَ: «أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ»، فَرَصَدْتُهُ الثَّالِثَةَ، فَجَاءَ يَحْثُو مِنَ الطَّعَامِ، فَأَخَذْتُهُ، فَقُلْتُ: لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ، وَهَذَا آخِرُ ثَلاَثِ مَرَّاتٍ، أَنَّكَ تَزْعُمُ لاَ تَعُودُ، ثُمَّ تَعُودُ قَالَ: دَعْنِي أُعَلِّمْكَ كَلِمَاتٍ يَنْفَعُكَ اللَّهُ بِهَا، قُلْتُ: مَا هُوَ؟ قَالَ: إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ، فَاقْرَأْ آيَةَ الكُرْسِيِّ: {اللَّهُ لاَ إِلَهَ إِلَّا هُوَ الحَيُّ القَيُّومُ} [البقرة: 255]، حَتَّى تَخْتِمَ الآيَةَ، فَإِنَّكَ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللَّهِ حَافِظٌ، وَلاَ يَقْرَبَنَّكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ، فَخَلَّيْتُ سَبِيلَهُ، فَأَصْبَحْتُ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا فَعَلَ أَسِيرُكَ البَارِحَةَ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، زَعَمَ أَنَّهُ يُعَلِّمُنِي كَلِمَاتٍ يَنْفَعُنِي اللَّهُ بِهَا، فَخَلَّيْتُ سَبِيلَهُ، قَالَ: «مَا هِيَ»، قُلْتُ: قَالَ لِي: إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الكُرْسِيِّ مِنْ أَوَّلِهَا حَتَّى تَخْتِمَ الآيَةَ: {اللَّهُ لاَ إِلَهَ إِلَّا هُوَ الحَيُّ القَيُّومُ} [البقرة: 255]، وَقَالَ لِي: لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللَّهِ حَافِظٌ، وَلاَ يَقْرَبَكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ - وَكَانُوا أَحْرَصَ شَيْءٍ عَلَى الخَيْرِ - فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّهُ قَدْ صَدَقَكَ وَهُوَ كَذُوبٌ، تَعْلَمُ مَنْ تُخَاطِبُ مُنْذُ ثَلاَثِ لَيَالٍ يَا أَبَا هُرَيْرَةَ»، قَالَ: لاَ، قَالَ: «ذَاكَ شَيْطَانٌ»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஜகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவன் இரவில் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானான். அவனை நான் பிடித்து, உன்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன், நான் ஒரு ஏழை! எனக்குக் குடும்பம் இருக்கிறது; கடும் தேவையும் இருக்கிறது! என்று கூறினான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அபூஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தனக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவன் முறையிட்டான்; ஆகவே, இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்! என்றேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்! என்றனர். மீண்டும் வருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக (அவனைப் பிடிப்பதற்காகக்) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கிய போது அவனைப் பிடித்தேன். உன்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன், என்னை விட்டுவிடு! நான் ஒரு ஏழை! எனக்கு குடும்பமிருக்கிறது; இனி நான் வரமாட்டேன்! என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன். விடிந்ததும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; ஆகவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்! என்றேன். நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; திரும்பவும் உம்மிடம் வருவான்! என்றனர். மூன்றாம் தடவை அவனுக்காகக் காத்திருந்த போது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, உன்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்( (ஒவ்வொரு முறையும்) இனிமேல் வரமாட்டேன்! என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன்.

அதற்கவன், என்னை விட்டுவிடும்! அல்லாஹ் உமக்குப் பயளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்! என்றான். அதற்கு நான், அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட்டேன். நீர் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஓது! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்றான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனை விட்டுவிட்டேன்! என்றேன். அந்த வார்த்தைகள் என்ன? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீர் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற(வானவர்) ஒருவர் இருந்த கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான் எனத் தெரிவித்தேன். -நபித் தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல்படுத்துவ)தில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தனர்- அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் உம்மிடம் உண்மையைத் தான் அவன் சொல்லியிருக்கின்றான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். தெரியாது! என்றேன். அவன்தான் ஷைத்தான்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட ஷைத்தான் என்பவன், மனித சமுதாயத்தை வழிகெடுக்கும் உண்மையான ஷைத்தானா? அல்லது தீய மனிதனைக் குறிக்கிறதா என்பதை நாம் ஆராய வேண்டும்.

திருக்குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ ஷைத்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டால் அதை நேரடிப் பொருளில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

நேரடிப் பொருளில் புரிந்து கொள்வது திருக்குர்ஆனின் மற்ற வசனங்களுக்கோ, ஹதீஸ்களுக்கோ, இஸ்லாத்தின் அடிப்படைக்கோ முரணாக இருந்தால் அப்போது ஷைத்தான் என்ற சொல் கெட்ட மனிதன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

மேற்கண்ட ஹதீஸில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஷைத்தானைப் பார்த்துள்ளார்கள் என்றும், அவனுடன் உரையாடியுள்ளார்கள் என்றும், அவனைப் பிடித்துள்ளார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஷைத்தானைப் பார்க்க முடியுமா என்பது குறித்து குர்ஆன் பின்வருமாறு சொல்கிறது.

يَابَنِي آدَمَ لَا يَفْتِنَنَّكُمُ الشَّيْطَانُ كَمَا أَخْرَجَ أَبَوَيْكُمْ مِنَ الْجَنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْآتِهِمَا إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ إِنَّا جَعَلْنَا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ (27)7

ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.

திருக்குர்ஆன் 7:27

ஷைத்தான் நம்மைப் பார்க்க முடியும்; நம்மால் ஷைத்தானைப் பார்க்க முடியாது என்று இவ்வசனம் சொல்கிறது.

அப்படியானால் இரண்டையும் முரண்பாடில்லாமல் எப்படி புரிந்து கொள்வது?

இந்த ஹதீஸில் ஷைத்தான் என்று கூறப்படுவது திருடனாக உள்ள கெட்ட மனிதன் என்று புரிந்து கொண்டால் மேற்கண்ட வசனத்துக்கு இந்த ஹதீஸ் முரண்படாது.

இது மனித ஷைத்தானைத் தான் குறிப்பிடுகிறது என்று புரிந்து கொள்ள இந்த ஹதீஸ் இடம் தருகிறது.

வந்தவன் உணவுப் பொருளை திருட்டுத் தனமாக அள்ளி இருக்கிறான். மேலும் எனக்கும் எனது பிள்ளை குட்டிகளுக்கும் தேவை உள்ளது என்ற காரணத்துக்காக திருடியதாக அவன் கூறியுள்ளான்.

ஷைத்தான்களின் உணவு முறையும், மனிதர்களின் உணவு முறையும் முற்றிலும் வேறுபட்டதாகும். கால்நடைகளின் சாணங்களும், எலும்புகளும், கரிக்கட்டைகளும் தான் ஜின்களின் உணவு என்று ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்தவன் மனிதர்களின் உணவாக இருக்கக்கூடிய பொருட்களைத் திருடுவதற்காகவே வந்துள்ளான்.

மேலும் அப்படியே திருட வந்தாலும் அபூஹுரைராவின் பார்வையில் படாமல் ஷைத்தானால் வர முடியும். ஆனால் அபூ ஹுரைரா அவர்கள் பார்க்கும் வகையில் திருடியுள்ளதும், அவனை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் பிடித்துக் கொண்டார்கள் என்பதும், திருட வந்தவன் அபூஹுரைராவிடம் மாட்டிக் கொண்டு கெஞ்சியுள்ளான் என்பதும் இது மனிதனைத் தான் குறிக்கிறது என்ற கருத்து கொள்ள இடமளிக்கிறது.

கெட்ட செயலைச் செய்பவர்களையும், கெட்ட குணமுள்ளவர்களையும் ஷைத்தான்கள் என்று குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் குறிப்பிடப்பட்டு உள்ளன.

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 2:14

கெட்ட மனிதர்களை ஷைத்தான்கள் என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.

صحيح البخاري

3274   حدثنا  أبو معمر ، حدثنا  عبد الوارث ، حدثنا  يونس ، عن  حميد بن هلال ، عن  أبي صالح ، عن  أبي هريرة  قال : قال النبي صلى الله عليه وسلم :  " إذا مر بين يدي أحدكم شيء وهو يصلي فليمنعه، فإن أبى فليمنعه، فإن أبى فليقاتله ؛ فإنما هو شيطان ".

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 3275

தொழுது கொண்டிருக்கும் போது குறுக்கே செல்லும் மனிதர்களை ஷைத்தான்கள் என்று நபிகளார் குறிப்பிடுகிறார்கள்.

இது போல் மனித ஷைத்தான் தான் திருட வந்துள்ளான் என்று புரிந்து கொண்டால் ஷைத்தானை அபூ ஹுரைரா (ரலி) பார்த்தார்கள் என்று ஆகாது. மேற்கண்ட வசனத்துக்கு முரணாகவும் அமையாது.

கெட்ட மனிதன் அபூ ஹுரைராவுக்கு தெரியாத ஆயதுல் குர்ஸியின் சிறப்பை எப்படி அறிய முடியும்? எப்படி கற்றுக் கொடுக்க முடியும்? என்ற கேள்வி எழலாம்.

வந்தவன் முஸ்லிம் சமுதாயத்தில் ஒருவனாக காட்டிக் கொண்ட ஒருவன் என்றால் அவன் நபிகள் நயகம் (ஸல்) அவர்களின் சபைகளில் பங்கேற்று இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதைக் கேட்டு மனதில் பதிய வைத்து தேவைப்படும் போது அதைப் பயன்படுத்தியுள்ளான் என்று புரிந்து கொள்ள இடமுண்டு.

வந்தவன் உண்மையான ஷைத்தான் என்று கருதவும் இந்த ஹதீஸில் இடமுள்ளது.

அபூ ஹுரைரா அவர்கள் இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தாமாகக் கூறவில்லை. உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன ஆனான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாகவே விசாரிக்கிறார்கள். இது குறித்த விபரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீ மூலம் தெரிந்துள்ளது. மேலும் அவன் பொய்யன் என்றும் கூறுகிறார்கள். அவன் மனிதனாக இருந்தால் வறுமைக்காக திருடினேன் என்று அவன் முதல் நாள் சொன்னது பொய்யாக ஆகாது.

அவன் ஷைத்தானாக இருந்தால் தான் அவன் சொன்ன காரணம் பொய்யாக இருக்க முடியும். எனக்கு வறுமை உள்ளது என அவன் சொன்னது பொய் என்று சொல்ல முடியும்.

மீண்டும் நாளையும் அவன் வருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். அப்படியே நடக்கவும் செய்கிறது. அல்லாஹ் இது குறித்து அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்துக் கொடுத்துள்ளான். உண்மையான ஷைத்தான் மூலம் ஒரு உண்மையைக் கற்றுக் கொடுக்க அல்லாஹ் செய்த ஏற்பாடு என்பதால் தான் மறு நாள் வருவான் என்று கூறியுள்ளார்கள்.

மேலும் இந்த ஹதீஸின் இறுதி வாசகம் கூடுதல் கவனத்துக்கு உரியதாகும். அபூ ஹுரைரா அவன் மனிதன் என்ற கருத்தில் தான் இருந்துள்ளார். கெட்ட திருடன் என்று அவர் கருதியுள்ளார். இதை மாற்றும் வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்று அமைந்துள்ளது.

மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். தெரியாது என்றேன். அவன்தான் ஷைத்தான்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

வந்தவன் மனித ஷைத்தான் என்று அபூ ஹுரைராவுக்குத் தெரியும். திருட வருபவன் கெட்ட மனிதனாகத் தான் இருக்க முடியும். எனவே மனித ஷைத்தான் தான் வந்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அபூ ஹுரைரா அவர்கள் மனித ஷைத்தான் என்று கருதியது தவறு என்பதை உணர்த்தவே அவன் ஷைத்தான் என்று நபிகள் கூறியுள்ளார்கள்.

ஷைத்தானாகவே இருந்தாலும் அவனிடமிருந்து கிடைக்கும் நற்செய்திகளை உண்மைகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற பாடத்தை கற்றுத்தர அல்லாஹ் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்க முடியும்.

வந்தவன் ஒரிஜினல் ஷைத்தான் என்று பொருள் கொண்டால் ஷைத்தானைப் பார்க்க முடியாது என்ற வசனத்துக்கு முரணாக அமையுமா? என்றால் அமையாது.

ஷைத்தானை சாதாரணமாக மனிதனால் காண முடியாது. மனிதக் கண்களில் தென்படுவதற்கான உடலமைப்பு ஷைத்தானுக்கு இல்லை என்பது தான் இதன் கருத்தாகும்.

நபிமார்கள் வாழும் காலத்தில் கண்களுக்குப் புலப்படும் வகையில் ஷைத்தான்களைக் காட்ட அல்லாஹ் நாடினால் மனித வடிவில் வரவைத்து அல்லாஹ் காட்டுவான். இது மேற்கண்ட வசனத்துக்கு முரணாக ஆகாது.

ஆனால் விதிவிலக்காக ஷைத்தானை மனித உருவம் எடுக்க வைத்தால் அப்போது பார்க்க முடியும். ஆனால் மனித வடிவில் வந்தவன் ஒரிஜினல் ஷைத்தான் என்று நபிமார்கள் வாழும் போதுதான் உறுதிப்படுத்த முடியும்.

உதாரணமாக மலக்குகள் விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம். ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபிகளை பல முறை சந்தித்துள்ளார்கள். அந்த சந்திப்புகளின் போது அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் தென்பட்டுள்ளார். அந்த சபையில் உள்ள மற்றவர்களுக்குத் தென்படவில்லை. ஆனால் மனித வடிவில் ஜிப்ரீலை வரவைத்து மக்களுக்கு ஏதேனும் சொல்ல அல்லாஹ் நாடும் போது மனித வடிவில் வருவார். அவர் மனிதர் என்றே சஹாபாக்கள் நினைத்துக் கொள்வார்கள். பின்னர் அவர் தான் ஜிப்ரீல் என்று நபிகள் விளக்குவார்கள்.

இதற்கான ஆதாரங்கள்

صحيح البخاري

3768 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَبُو سَلَمَةَ: إِنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا: «يَا عَائِشَ، هَذَا جِبْرِيلُ يُقْرِئُكِ السَّلاَمَ» فَقُلْتُ: وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، تَرَى مَا لاَ أَرَى «تُرِيدُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

3768 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள், ஆயிஷே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு ஸலாம் உரைக்கிறார் என்று சொன்னார்கள். நான், சலாமுக்கு பதில் கூறும் முகமாக வஅலைஹிஸ்ஸலாம் வரஹ்மத்துல் லாஹி வபரக்காத்துஹு' - அவர் மீதும் ஸலாம் பொழியட்டும். மேலும், அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும் என்று பதில் முகமன் சொல்லி விட்டு, நான் பார்க்க முடியாதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 3768

ஆயிஷா (ரலி) அவர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இருந்த போது ஜிப்ரீல் வருகிறார். ஆனால் அவரை ஆயிஷா (ரலி) அவர்களால் பார்க்க முடியவில்லை. நபியின் வழியாக ஒருவருக்கொருவர் ஸலாமைப் பரிமாரிக் கொள்கிறார்கள். சாதாரணமாக வானவர்களை மனிதர்கள் பார்க்க முடியாது என்பதை இதிலிருந்து அறியலாம்.

صحيح البخاري

50 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَارِزًا يَوْمًا لِلنَّاسِ، فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ: مَا الإِيمَانُ؟ قَالَ: «الإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ، وَكُتُبِهِ، وَبِلِقَائِهِ، وَرُسُلِهِ وَتُؤْمِنَ بِالْبَعْثِ». قَالَ: مَا الإِسْلاَمُ؟ قَالَ: " الإِسْلاَمُ: أَنْ تَعْبُدَ اللَّهَ، وَلاَ تُشْرِكَ بِهِ شَيْئًا، وَتُقِيمَ الصَّلاَةَ، وَتُؤَدِّيَ الزَّكَاةَ المَفْرُوضَةَ، وَتَصُومَ رَمَضَانَ ". قَالَ: مَا الإِحْسَانُ؟ قَالَ: «أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ»، قَالَ: مَتَى السَّاعَةُ؟ قَالَ: " مَا المَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ، وَسَأُخْبِرُكَ عَنْ أَشْرَاطِهَا: إِذَا وَلَدَتِ الأَمَةُ رَبَّهَا، وَإِذَا تَطَاوَلَ رُعَاةُ الإِبِلِ البُهْمُ فِي البُنْيَانِ، فِي خَمْسٍ لاَ يَعْلَمُهُنَّ إِلَّا اللَّهُ " ثُمَّ تَلاَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ} [لقمان: 34] الآيَةَ، ثُمَّ أَدْبَرَ فَقَالَ: «رُدُّوهُ» فَلَمْ يَرَوْا شَيْئًا، فَقَالَ: «هَذَا جِبْرِيلُ جَاءَ يُعَلِّمُ النَّاسَ دِينَهُمْ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: جَعَلَ ذَلِكَ كُلَّهُ مِنَ الإِيمَانِ

50 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்குத் தென்படும் விதத்தில் (அமர்ந்து) இருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈமான் என்பது, அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவதும், (மறுமையில்) உயிர்ப்பித்து எழுப்பப்படுவதை நீர் நம்புவதுமாகும் என்று பதிலளித்தார்கள். அடுத்து அவர், இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீர் வணங்குவதும், அவனுக்கு (எதனையும் எவரையும்) இணையாக்காமலிருப்பதும், தொழுகையை நிலை நிறுத்துவதும், கடமையாக்கப்பட்ட (வறியோர் உரிமையான) ஜகாத்தைக் கொடுத்து வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதுமாகும் என்றனர்.

அடுத்து இஹ்ஸான் (அழகுறசெய்தல்) என்றால் என்ன? என்று அவர் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றனர்.

அடுத்து அவர் மறுமை நாள் எப்போது? என்று கேட்க, அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்), (அதைப் பற்றிக்) கேட்கின்றவரை (-உம்மை விட) மிக அறிந்தவரல்லர். (அது பற்றி எனக்கும் தெரியாது; உமக்கும் தெரியாது. வேண்டுமானால்,) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். (அவை:) ஓர் அடிமைப் பெண் தன் எஜமானைப் பெற்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற (அடிமட்ட) ஒட்டகங்களை மேய்ப்பவர்கள் உயரமான கட்டடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். (மறுமை நாள் எபபோது வரவிருக்கிறது எனும் அறிவு) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும் என்று கூறிவிட்டு, உலக இறுதி பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்றது... எனும் (31:34ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை (என்னிடம்) திரும்ப அழைத்து வாருங்கள் என்றனர். (அவரைத் தேடிச் சென்றவர்கள்) அவரை எங்கேயும் காணவில்லை. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவர் தாம் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களது மார்க்கத்தைக் கற்றுத்தர வந்திருந்தார் என்றனர்.

நூல் : புகாரி 50

வானவர்களை மனிதர்கள் பார்க்க முடியாது என்றாலும் இறைத்தூதர்கள் வாழும் காலத்தில் மனித வடிவில் அல்லாஹ் அனுப்பினால் பார்க்க முடியும் என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது.

மேலும் இப்ராஹீம் நபியின் மனைவிக்கு வானவர்கள் மனித வடிவில் வந்து நற்செய்தி சொன்னார்கள் என்று 11:71,72 மற்றும் 51:30 வசனங்களிலும் கூறப்படுகிறது. மனித வடிவில் வரும் போது மலக்குகளைப் பார்க்கலாம் என்பதை பொதுவாக பார்க்கலாம் என்று புரிந்து கொள்ள முடியாது.

இதே அடிப்படையில் ஆயதுல் குர்ஸியை ஷைத்தானே கற்றுக் கொடுத்தான் என்று புரிந்து கொண்டாலும் மனித ஷைத்தான் என்று புரிந்து கொண்டாலும் எந்தக் குழப்பமும் இல்லை.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account