இவன் தான் காதியானி!
மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் தன்னை நபி என்று வாதிட்டு தனி மதத்தை உருவாக்கி இஸ்லாத்தை விட்டு வெளியேறினான்.
இவனைப் பின்பற்றும் குருட்டுக் கும்பல் தம்மை அஹ்மதியா ஜமாஅத் எனக் கூறிக் கொண்டு முஸ்லிம் வேடம் போட்டு அப்பாவிகளை ஏமாற்றப் பார்க்கிறது.
புதிய தலைமுறை மக்களுக்கு மிர்ஸா குலாம் என்பவனின் அயோக்கியத்தனம் தெரியாது என்ற தைரியத்தில் காதியானிகள் என அறியப்படும் இக்கூட்டம் அப்பாவிகளுக்கு வலை வீச ஆரம்பித்துள்ளது.
மிர்ஸா குலாம் என்பவன் எவ்வளவு பெரிய அயோக்கியன் என்பதைப் புதிய தலைமுறை மக்களுக்கும் தெளிவுபடுத்தி எச்சரிக்கும் கடமை நமக்கு உள்ளது.
இந்தக் கூட்டத்துடன் நான் நேருக்கு நேர் விவாதம் நடத்தி மிர்சா குலாம் என்பவன் பொய்யன் என்பதை நிரூபித்திருந்தும் எனக்கே அழைப்பு அனுப்பியது இந்தக் கூட்டம்.
ஆம் இந்தக் கும்பலைச் சேர்ந்த ஜஃபருல்லா என்பவர் jafarla@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதில் காதியானி கும்பலின் வெப்சைட் இடம் பெற்றிருந்தது. இது போன்ற குப்பைகளை எனக்கு அனுப்பக் கூடாது என்று நான் அவருக்குப் பதில் எழுதினேன்.
எது குப்பை? விளக்க முடியுமா என்று கேட்டு மேலும் சில லின்குகள் வந்தன. இந்த லின்குகள் எல்லாம் எனக்கு முன்னரே தெரியும். நீ சரியான ஆளாக இருந்தால் லின்க் அனுப்புவதை விட்டு விட்டு நான் கேட்கும் கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதில் சொல்லத் தயாரா என்று பதில் போட்டேன்.
அனுப்புங்கள் பார்ப்போம் என்று எனக்கு பதில் வந்தது.
நான் கீழ்க்கண்ட முதல் கேள்விப் பட்டியலை அனுப்பினேன்.
நான் எழுதியது:
முதலில் இந்த வீடியோவைப் பார்.
(18 பாகங்கள்)
மிர்ஸா குலாம் சொன்னதில் சில விஷயங்களை முதலில் எடுத்துக் காட்டுகிறேன்.
பொய் ஒன்று
முஹம்மதீ பேகத்தை அல்லாஹ் எனக்கு திருமணம் செய்து வைப்பதாக வஹி அறிவித்தான் என்று மிர்சா பொய் சொன்னான். இது குறித்து அவன் சொன்னதைப் பாருங்கள்!
முஹம்மதீ பேகத்தை நாம் உமக்கு திருமணம் செய்து வைத்தோம் என்று அல்லாஹ் எனக்கு வஹீ அறிவித்தான்.
இது ஒரு முன்னறிவிப்பு அல்ல. இதில் ஆறு முன்னறிவிப்புகள் உள்ளன.
முதலாவது : அவளைத் திருமணம் செய்யும் வரை நான் உயிருடன் இருப்பேன்.
இரண்டாவது; அவளைத் திருமணம் செய்யும் வரை அந்தப் பெண்ணின் தந்தை உயிருடன் இருப்பார்.
மூன்றாவது எனக்குத் திருமணம் செய்து தந்த பின் அவளுடைய தந்தை மூன்று வருடத்துக்குள் இறப்பார்.
நான்காவது முஹம்மதீ பேகத்தின் கணவர் சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் மரணிப்பார்.
ஐந்தாவது அப்போது நான் முஹம்மதீ பேகத்தைத் திருமணம் செய்வேன்.
ஆறாவது அவளை மணப்பேன் . அது வரை அவள் உயிருடன் இருப்பாள்.
இந்த ஆறு அறிவிப்புக்கள் நிறைவேறாவிட்டால் அதுவே நான் பொய்யன் என்பதற்கான ஆதாரம்.
என்று மிர்ஸா குலாம் சொன்னான்.
ஆயினே கமாலாத் என்ற நூலில் 325 ஆம் பக்கத்தில் இதை அவன் எழுதினான்.
இப்போது நான் கேள்விக்கு வருகிறேன்.
ஸைனப் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்ததாக அல்லாஹ் கூறும் போது ஸவ்வஜ்னாகஹா அவரை உமக்கு மணமுடித்துத் தந்தேன் என்று கூறினான்.
அதே வார்த்தையைத் தான் அல்லாஹ் தனக்கும் பயன்படுத்தினான் என்று மிர்ஸா சொன்னான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மணமுடித்துக் கொடுத்ததாகக் கூறியதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனபைத் திருமணம் செய்யாமல் அல்லாஹ் செய்து கொடுத்த திருமணமே போதும் என்று மனைவியாக்கிக் கொண்டார்கள்.
இவ்வாறு ஸவ்வஜ்னாகஹா (அவரை உமக்கு மணமுடித்துத் தந்தேன்) என்று பொய்யன் மிர்சாவுக்கு அல்லாஹ் கூறினால் அது கட்டாயம் நிறைவேற வேண்டும்.
ஆனால் பொய்யன் மிர்சா செத்துப் போகும் வரை அந்தப் பெண்ணை அவன் மணமுடிக்கவில்லை.
இதில் இருந்து அவன் அல்லாஹ்வின் மீது பொய் கூறி விட்டான் என்பது உறுதியாகிறது. மேலும் இது தான் நான் பொய் சொல்லவில்லை என்பதற்கு ஆதாரம் என்றும் அவன் சொன்னான்.
இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல வேண்டும்.
சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் செத்துப் போவார் என்று பொய்யன் மிர்சா கூறினான். அவ்வாறு நடக்காவிட்டால் நான் பொய்யன் என்றும் கூறினான். ஆனால் பொய்யன் சொன்ன படி சுல்தான் முஹம்மத் சாகவில்லை. நீண்ட காலம் வாழ்ந்தார்.
நான் உண்மை சொல்கிறேன் என்பதற்கு ஆதாரமாக இதை பொய்யன் குறிப்பிட்டான். இதுவும் நிறைவேறவில்லை நபிமார்களை மெய்ப்பிக்க அல்லாஹ் வழங்கும் அத்தாட்சிகள் அப்படியே நிறைவேற வேண்டும்.
அதுவும் இது தான் நான் உண்மை சொல்கிறேன் என்பதற்கு ஆதாரம் என்று பொய்யன் அறிவித்திருக்கும் போது அது நிறைவேறாமல் போகாது. இந்தக் கேள்விகளை பொய்யன் கூட்டத்துடன் விவாதம் நடத்திய போது மூல நூலை வாசித்து நான் கேட்டது.
அதைப் பொய்யன் கூட்டம் விவாதத்தில் மறுக்கவில்லை.
அந்தப் பெண்ணின் தந்தை அவளுக்குத் திருமணம் நடக்கும் வரை உயிருடன் இருந்து எனக்கு திருமணம் செய்து வைப்பார் என்று பொய்யன் கூறினான். ஆனால் அந்தப் பெண்ணின் தந்தை மகளுக்கு கல்யாணம் செய்து வைக்காமலே செத்து போய் விட்டார்.
இதிலும் மிர்சா எனும் அயோக்கியன் மாபெரும் பொய்யன் என்பது உறுதியாகி விட்டது.
அல்லாஹ் எனக்குத் திருமணம் செய்து வைத்தான் என்று இந்தப் பாதகன் சொன்னானா இல்லையா?
அல்லாஹ் அப்படி சொல்லி இருக்கும் போது அது போல் நடந்ததா? இது நிறைவேறா விட்டால் அவன் பொய்யன்; இது நிறைவேறி இருந்தால் அவன் பொய்யன் அல்ல.
சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் சாவார் என்று இந்த அயோக்கியன் சொன்னானா இல்லையா? அதன் படி நடந்ததா? நடந்தது என்றால் அவன் உண்மை சொன்னான்; நடக்கவில்லை என்றால் அவன் பொய் சொன்னான்.
அவளுடைய தந்தை தன் மகளை எனக்கு மணமுடித்து தந்து விட்டு மரணிப்பார் என்று இவன் சொன்னானா இல்லையா? அது நிறைவேறினால் அவன் உண்மை சொன்னான். நிறைவேறா விட்டால் அவன் பொய் சொன்னான்.
இது நான் காதியானி கூட்டத்துடன் நடந்த விவாதத்தில் நேருக்கு நேராகக் கேட்ட கேள்விகள். நான் கேட்கும் கேள்விகள் திடீர்க் கேள்விகள் அல்ல. பல வருடங்களுக்கு முன்னர் நான் கேட்ட கேள்விகள் தான். அந்த விவாதத்தின் போதும் அதற்குப் பதில் சொல்லவில்லை. இத்தனை ஆண்டுகள் அவகாசம் எடுத்துக் கொண்ட பிறகு கூட பதில் சொல்ல முடியாது.
நீ இந்தக் கிறுக்கன் மீது குருட்டு நம்பிக்கை வைத்து அவன் தனது பொய்யை நியாயப்படுத்துவதற்காக உளறியதை எனக்குச் சொல்ல வேண்டாம். அவன் அயோக்கியன் எனும் போது அவனுடைய சமாளிப்புகள் எனக்கு தேவை இல்லை. அவனை பொய்யனா? உண்மை சொன்னவனா? என்பதற்கு அவனே எதை ஆதாரமாகக் காட்டினானோ அதைக் கொண்டே அல்லாஹ் அவனை அடையாளம் காட்டி விட்டான்.
அவன் சொன்னது நடந்ததா இல்லையா? இது தான் தேவை. இதற்கு நேரடியாகப் பதில் சொல்லி முடித்த பின் இதே விஷயத்தில் மிச்சமுள்ள மற்ற கேள்விகள் வரும்.
இப்படி பதில் போட்டவுடன் அரை மணி நேரத்துக்கு ஒரு மெயில் அனுப்பிக் கொண்டிருந்த மேற்படி காதியானி அத்துடன் காணாமல் போய் விட்டார்.
டிசம்பர் முதல் தேதியன்று இந்த மின்னஞ்சல் தொடர்பு நடந்தது. நான் கேட்ட கேள்விகளுக்குப் பின் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டார்.
குலாம் அஹ்மத் காதியானி என்ற அயோக்கியனைப் பற்றி இன்றைய பாமர மக்கள் தெரிந்திருக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் இன்னும் யார் யாருக்கோ இது போல் குப்பைகளை மேற்படியார், அல்லது அவரைச் சேர்ந்தவர்கள் அனுப்பி வரலாம் என்பதற்காக ஒரு மாதம் வரை பதிலுக்கு காத்திருந்து விட்டு இதை வெளியிடுகிறேன்.
மேலும் காதியானிகள் என்று அழைக்கப்படும் இந்த அஹ்மதியா மதத்தை உருவாக்கிய மிர்சா குலாம் என்பவனைப் போல் மார்க்க விஷயத்தில் பொய் சொன்ன ஒருவன் உலகில் பிறந்தது இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.
புதிய தலைமுறையினர் இவனைப் பற்றி அறிந்து எச்சரிக்கையாக இருப்பதற்காக அவனது மறுக்க முடியாத புளுகு மூட்டைகளை வெளியிடுகிறேன்.
புளுகு மூட்டை 1
அல்லாஹ் எனக்கு நான்கு ஆண் மக்களைத் தந்துள்ளான். ஐந்தாவதாக ஒரு ஆண் மகன் குறித்து அல்லாஹ் எனக்கு நற்செய்தி கூறினான். இது என்றாவது ஒரு நாள் நடந்தே தீரும் என்று இவன் கூறினான்.
ஆனால் இவனுக்கு ஐந்தாவதாக ஆண் பிள்ளை பிறக்கவில்லை. தன்னைத் தானே பொய்யன் என்று இவன் நிரூபித்தான். இதன் மூலம் இவன் அல்லாஹ்வின் பெயரில் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுபவன் என்பது உறுதியாகி விட்ட பிறகு அவனைப் பொய்யன் என்று அவனது சீடர்களே உணர்ந்தார்கள். இதை மறைப்பதற்காக இவனது நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போது மகன் என்ற இடத்தில் கிராண்ட் சன் பேரன் என்று மாற்றிக் கொண்டது பொய்யனை நம்பிய கூட்டம்.
புளுகு மூட்டை 2
மிர்சா குலாம் காதியானிக்கு ஆங்கிலம் சரியாகத் தெரியாது. அது ஒரு குறைபாடு அல்ல. ஆனால் இவன் தனக்கு உர்துவிலும் அரபியிலும் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் வஹீ வந்ததாக புருடா விட்டான்.
இந்த வஹியில் லட்சனம் பின்னால் வருகிறது
وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلاَّ بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ اللّهُ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (4)
எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
திருக்குர்ஆன் 14:4
எந்த இறைத்தூதரை அனுப்புவதாக இருந்தாலும் அவரது சமுதாயம் எந்த மொழி பேசுகிறதோ அந்த மொழியிலேயே வஹீ அனுப்புவதாக அல்லாஹ் கூறுகிறான். மேலும் தூதர் அதை விளக்கிக் கூறுவார் என்றும் அல்லாஹ் கூறுகிறான். விளக்கிக் கூறும் அளவுக்கு தூதருக்கு அந்த மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது இதில் இருந்து விளங்குகிறது. ஆனால் இவனோ தனக்கு ஆங்கிலத்தில் வஹீ வந்தது என்கிறான். அதன் அர்த்தத்தை மற்றவரிடம் கேட்டு தெரிந்து கொள்வதாகவும் கூறினான்.
இவனுக்கு வஹீ வரவில்லை என்பதற்கு இதுவே போதிய ஆதாரம்.
இந்தப் பொய் மட்டுமின்றி இது தொடர்பான மற்றொரு பொய்யை இப்போது பார்ப்போம்.
புளுகு மூட்டை 3
எந்த ஒரு மனிதனின் எந்த மொழியில் அமைந்த வாசகமானாலும் அதில் சில பிழைகள் வரலாம். அதைக் குறை சொல்ல முடியாது. ஆனால் அல்லாஹ்விடமிருந்து வந்த வஹியில் பிழை இருக்கக் கூடாது. அல்லாஹ் பிழைக்கு அப்பாற்பட்டவன்.
ஆனால் இந்தக் கேடு கெட்டவனுக்கு வந்த ஆங்கில வஹீயில் பிழைகள் பல இருந்தன. இவன் சுயமாக எழுதிய வாசகம் என்று சொல்வானானால் அதில் பிழை இருப்பதை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் இவனுக்கு அல்லாஹ்விடமிருந்து வந்த வஹீயின் இலட்சணத்தைப் பாருங்கள்!
தத்கிரா நூல் பக்கம் 116
இதில் இவனுக்கு வந்த ஆங்கில வஹியை ஆங்கிலத்திலும் எழுதியுள்ளான். அதையே உருது லிபியிலும் எழுதியுள்ளான்.
கடவுளின் வார்த்தை மாற்ற முடியாது என்பதை அல்லாஹ் இவனுக்கு அங்கிலத்தில் சொன்னானாம்.
எப்படிச் சொன்னான் தெரியுமா?
Words of god not can exchange
இப்படி இவனுக்கு வஹீ வந்ததாம்.
Words of god cannot exchange
என்று கூறுவதற்குப் பதிலாக இவன் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில்
Words of god not can exchange
என்று எழுதி விட்டான்.
என்னடா கடவுளின் வார்த்தையில் இப்படிப் பிழை வரலாமா என்று கேட்டு இவன் ஒரு அயோக்கியன் என்று புரிந்து கொண்டு சிலர் அவனை உதறி விட்டு வெளியேறினர்.
இதை நியாயப்படுத்தி வஹீ என்பது ஃபோர்ஸாக வரும் போது இலக்கண விதிகளைக் கண்டு கொள்ளாது எனக் கூறி தன்னுடன் உள்ள மரமண்டைகளை ஏமாற்றினான்.
ஆனால் இந்த நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடும் போது இலக்கணப் பிழையை நீக்கி அதாவது வஹீயை சேஞ்ச் பண்ணி வெளியிட்டனர் இந்தக் கேடு கெட்ட மூளையற்ற காதியானிக் கும்பல்.
தத்கிரா மொழியாக்கம் பக்கம் 63
அல்லாஹ்வின் வார்த்தையில் மாற்றம் இல்லை என்று சொல்லும் வார்த்தையே மாறிப்போய் விட்டது என்றால் இது எவ்வளவு பெரிய அற்புதம். தன் பெயரில் பொய் சொன்னவனை அவனது வாயாலே அல்லாஹ் பொய்யன் என்று எப்படி அடையாளம் காட்டி விட்டான் என்று பாருங்கள்.
இவனது புளுகு மூட்டை இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்
04.01.2011. 7:53 AM
இவன் தான் காதியானி!
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode