Sidebar

29
Wed, Jun
3 New Articles

அரஃபா தினத்தில் ஹாஜிகள் நோன்பு வைக்க வேண்டுமா?

சுன்னத்தான நோன்புகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அரஃபா தினத்தில் ஹாஜிகள் நோன்பு வைக்க வேண்டுமா?

அரஃபா நாள் நோன்பு

துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரஃபா பெருவெளியில் தங்குவார்கள். அதனால் அந்த நாளுக்கு அரஃபா நாள் என்று குறிப்பிடுவர்.

அரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை உள்ளது. ஆனால் ஹாஜிகள் அல்லாதவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

صحيح مسلم

قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ فَقَالَ « يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ »

அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: முஸ்லிம்

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நோன்பை நோற்குமாறு ஆரவ்மூட்டிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது அரபா நாளில் நோன்பு நோற்கவில்லை. 

صحيح البخاري مشكول (2/ 161)

1658 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا سَالِمٌ قَالَ: سَمِعْتُ عُمَيْرًا مَوْلَى أُمِّ الفَضْلِ، عَنْ أُمِّ الفَضْلِ، شَكَّ النَّاسُ يَوْمَ عَرَفَةَ فِي صَوْمِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَبَعَثْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَرَابٍ فَشَرِبَهُ»

صحيح البخاري مشكول (2/ 162)

1661 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عُمَيْرٍ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ العَبَّاسِ، عَنْ أُمِّ الفَضْلِ بِنْتِ الحَارِثِ، أَنَّ نَاسًا اخْتَلَفُوا عِنْدَهَا يَوْمَ عَرَفَةَ فِي صَوْمِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ بَعْضُهُمْ: هُوَ صَائِمٌ، وَقَالَ بَعْضُهُمْ: لَيْسَ بِصَائِمٍ، «فَأَرْسَلْتُ إِلَيْهِ بِقَدَحِ لَبَنٍ وَهُوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ، فَشَرِبَهُ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்றுள்ளார்களா என்று மக்கள் உம்முல் ஃபழ்ல் அவர்கள் முன்னால் பேசிக் கொண்டனர். நபிகள் நாஒன்பு வைத்துள்ளார்கள் என சிலரும் வைக்கவில்லை என சிலரும் கூறினார்கள். அப்போது உம்முல் ஃபழ்ல் அவர்கள், ஒட்டகத்தில் அமர்ந்திருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு  ஒரு பாத்திரத்தில் பாலைக் கொடுத்து அனுப்பினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பாலை அருந்தினார்கள்.

நூல் : புகாரி 1661, 1658

ஆர்வமூட்டும் எந்த வணக்கத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) முதலில் செய்பவர்களாக இருப்பார்கள். அப்படி இருந்தும் அரபா நாள் நோன்பை ஹஜ்ஜின் போது அவர்கள் நோற்கவில்லை. இதில் இருந்து ஹாஜிகளை தவிர மற்றவர்களுக்குத் தான் இந்த நோன்பு சுன்னத் ஆகும் என்பதை அறியலாம்.

பின்வரும் ஹதீஸையும் இதற்கு ஆதாரமாக காட்டுவார்கள்.

سنن ابن ماجه

1732 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ، حَدّثَنِي حَوْشَبُ بْنُ عَقِيلٍ، حَدّثَنِي مَهْدِيٌّ الْعَبْدِي، عَنْ عِكْرِمَةَ، قَالَ: دَخَلْتُ عَلَى أَبِي هُرَيْرَةَ فِي بَيْتِهِ، فَسَأَلْتُهُ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَاتٍ، فَقَالَ أَبُو هُرَيْرَةَ: نَهَى رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَاتٍ

அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: இப்னுமாஜா

இது பலவீனமான ஹதீஸாகும், இதன் அறிவிப்பாளர் தொடரில் உள்ள மஹ்தீ என்பார் பலவீனமானவர் ஆவார். ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல் விளக்கம் ஹாஜிகளுக்கு அரஃபா நோன்பு இல்லை என்பதற்கு போதிய ஆதாரமாகும்.

அரஃபா நாள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு அதை நடைமுறைப்படுத்தினார்களோ அவ்வாறு தான் நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை விசாரிக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அவர்கள் எப்போது தங்குகிறார்கள் என்பதை அறியாமலேயே மதீனாவில் காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாளில் நோன்பு நோற்றார்கள். மக்காவில் பிறை காணப்பட்டவுடன் அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்து கொள்ள வசதிகள் இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தவில்லை.

எனவே சவூதி அரேபியாவில் அரஃபாவில் தங்கும் நாள், நாம் பிறை பார்த்த கணக்குப்படி எட்டாம் நாளாகவும் இருக்கலாம். அதைப் பின்பற்றத் தேவையில்லை. அதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. நாம் பிறை பார்த்த கணக்குப்படி ஒன்பதாம் நாளில் நோன்பு நோற்க வேண்டும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account