Sidebar

12
Thu, Dec
3 New Articles

வெள்ளிக்கிழமை பெருநாள் வந்தால் ஜும்ஆ கடமையா

பெருநாள் வணக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

வெள்ளிக்கிழமை பெருநாள் வந்தால் ஜும்ஆ கடமையா?

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய பெருநாட்கள் வெள்ளிக்கிழமை வந்தால் அன்று பெருநாள் தொழுகையைக் கட்டாயம் தொழ வேண்டும். ஜும்ஆ தொழுகையை விரும்பினால் தொழலாம்; தொழாமலும் இருக்கலாம்.

இது குறித்து பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் பலவீனமான செய்திகளும் உள்ளன. ஆதாரமான செய்திகளும் உள்ளன.

பலவீனமான ஹதீஸ் ஒன்று


سنن أبي داود

1072 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا إِسْرَائِيلُ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْمُغِيرَةِ عَنْ إِيَاسِ بْنِ أَبِى رَمْلَةَ الشَّامِىِّ قَالَ شَهِدْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِى سُفْيَانَ وَهُوَ يَسْأَلُ زَيْدَ بْنَ أَرْقَمَ قَالَ أَشَهِدْتَ مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- عِيدَيْنِ اجْتَمَعَا فِى يَوْمٍ قَالَ نَعَمْ. قَالَ فَكَيْفَ صَنَعَ قَالَ صَلَّى الْعِيدَ ثُمَّ رَخَّصَ فِى الْجُمُعَةِ فَقَالَ « مَنْ شَاءَ أَنْ يُصَلِّىَ فَلْيُصَلِّ ».

ஒரே நாளில் இரண்டு பெருநாட்கள் இணைந்து வந்தபோது நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தீர்களா? என்று நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அன்று) எப்படி நடந்து கொண்டார்கள்? என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர் ஜுமுஆத் தொழ அனுமதி வழங்கி, தொழ நாடியவர் தொழுது கொள்ளட்டும் என்று கூறியதாகப் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா பின் அபீ ஸுஃப்யான் (ரலி),
நூல்: அபூதாவூத்



இதே செய்தி

இப்னுஹுஸைமா,

மஅரிஃபத்துஸ் ஸுனன் வல் ஆஸார்,

ஸுனன் சகீர் - பைஹகீ,

ஸுனனுல் குப்ரா – பைஹகீ,

முஸ்னத் தயாலிஸீ,

ஹாகிம்,

தப்ரானீ,

முஸ்னத் தாரிமி,

 புகாரியின் தாரீகுல் கபீர்

ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

மேற்கண்ட ஹதீஸ் இடம் பெற்ற மேற்கூறிய அனைத்து நூல்களிலும். இயாஸ் பின் அபீ ரம்லா என்பார் தான் அறிவிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் செய்தியை நாம் ஏற்பதாக இருந்தால் அந்த அறிவிப்பாளரின் நேர்மை, நாணயம், நினைவாற்றல் போன்ற விபரங்கள் கிடைக்க வேண்டும். ஒரு அறிவிப்பாளர் பற்றி எந்த விபரமும் கிடைக்காவிட்டால் அவர் அறியப்படாதவராக ஆவார். அதனால் அவர் அறிவிக்கும் ஹதீஸ் பலவீனமானதாக ஆகிவிடும்.

இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் இயாஸ் பின் அபீ ரம்லா இந்த நிலையில் உள்ளவராவார்.


تهذيب التهذيب 

715 - د س ق (أبي داود والنسائي وابن ماجة) إياس بن أبي رملة الشامي. سمع معاوية يسأل زيد بن أرقم عن اجتماع العيد والجمعة. روى عنه عثمان بن المغيرة الثقفي.قلت: ذكره ابن حبان في الثقات وقال ابن المنذر اياس مجهول. قال ابن القطان هو كما قال.

இவர் ஜும்மாவும் பெருநாளும் ஒரே தினத்தில் வருவது குறித்த ஹதீஸை அறிவித்துள்ளார். இவர் யாரென அறியப்படாதவர் என இப்னுல் முந்திர், யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.\

நூல்:  தஹ்தீபுத் தஹ்தீப்


لسان الميزان لابن حجر

224 - إياس بن أبي رملة شامي قال بن المديني مجهول

இயாஸ் பின் அபீ ரம்லா என்பார்

 யாரென அறியப்படாதவர் என்று இப்னுல் மதீனி கூறுகிறார்கள்.

நூல் : லிஸானுல் மீஸாம்

பலவீனமான ஹதீஸ் இரண்டு

இப்னு உமர் (ரலி)அவர்கள் வழியாக வந்துள்ள செய்தி


الكامل في ضعفاء الرجال ـ موافق للمطبوع - (6 / 456(

سمعت بن حماد يقول قال البخاري مندل بن علي العنزي أبو عبد الله كوفي وقع فيه شريك وسمعت بن حماد قال السعدي مندل وحبان واهيا الحديث قال النسائي مندل بن علي ضعيف أخبرنا أبو يعلى ثنا جبارة ثنا مندل عن عبد العزيز ن عمر عن نافع عن بن عمر قال اجتمع عيدان على عهد رسول الله صلى الله عليه وسلم فصلى بالناس ثم قال من شاء أن يأتي الجمعة فليأتها ومن شاء أن يتخلف فليتخلف


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரே நாளில் இரண்டு பெருநாள் இணந்து வந்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு (பெருநாள் தொழுகையை) தொழுவித்தார்கள். பின்னர் ஜுமுஆவுக்கு வர நினைப்பவர் வரட்டும். (வீட்டில்) தங்கிக் கொள்ள நினைப்பவர் தங்கிக் கொள்ளட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அல்காமில்

இந்தச் செய்தியில் மின்தல் பின் அலீ  என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று ஸஅதீ, நஸாயீ ஆகியோர் கூறியுள்ளனர் என்று இதைப் பதிவு செய்த இப்னு அதீ அவர்கள் அந்தச் செய்தியிலேயே இதைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

பலவீனமான செய்தி மூன்று


مصنف عبد الرزاق الصنعاني - (3 / 304(

5728 - عَنِ الثَّوْرِيِّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ ذَكْوَانَ قَالَ: اجْتَمَعَ عِيدَانِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِطْرٌ وَجُمُعَةٌ - أَوْ أَضْحَى وَجُمُعَةٌ - قَالَ: فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّكُمْ قَدْ أَصَبْتُمْ ذِكْرًا وَخَيْرًا، وَإِنَّا مُجَمِّعُونَ، مَنْ أَرَادَ أَنْ يُجَمِّعُ فَلْيُجَمِّعْ، وَمَنْ أَرَادَ أَنْ يَجْلِسَ فَلْيَجْلِسْ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இரண்டு பெருநாட்கள் - நோன்புப் பெருநாள், அல்லது ஹஜ்ஜுப் பெருநாள் வெள்ளிக்கிழமையன்று – வந்தது அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கள் சிறந்த நாளைப் பெற்றுள்ளீர்கள். (இந்நாளில்) நாம் ஜுமுஆ தொழுவோம். விரும்பியவர் ஜுமுஆ தொழட்டும் விரும்பியவர் (ஜுமுஆத் தொழாமல்) அமர்ந்து கொள்ளட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: தக்வான்,
நூல்: அப்துர்ரஸ்ஸாக்,

இச்செய்தியை தக்வான் என்ற தாபியீ அறிவிக்கிறார். எனவே இந்தச் செய்தி முர்ஸல் வகையைச் சார்ந்ததாகும். அதாவது நபித்தோழர் அல்லாத ஒருவர் நபிகளார் கூறியதாகச் சொல்வது முர்ஸலாகும். இது ஆதாரத்திற்கு ஏற்றது அல்ல! ஏனெனில் நபிகளார் கூறியதை நபித்தோழர்கள் மட்டுமே கேட்டிருக்க முடியும்.

மேற்கண்ட ஹதீஸ்கள் பலவீனமானவையாக இருந்தாலும் இக்கருத்தைச் சொல்லும் சரியான ஹதீஸ்களும் உள்ளன.

சரியான செய்தி ஒன்று

அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக வந்துள்ள செய்திகள்



سنن أبي داود ـ محقق وبتعليق الألباني - (1 / 417(

1075 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى وَعُمَرُ بْنُ حَفْصٍ الْوَصَّابِىُّ - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا بَقِيَّةُ حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْمُغِيرَةِ الضَّبِّىِّ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ عَنْ أَبِى صَالِحٍ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « قَدِ اجْتَمَعَ فِى يَوْمِكُمْ هَذَا عِيدَانِ فَمَنْ شَاءَ أَجْزَأَهُ مِنَ الْجُمُعَةِ وَإِنَّا مُجَمِّعُونَ ».

உங்களுடைய இந்த நாளில் இரண்டு பெருநாட்கள் இணைந்து வந்துள்ளன. யார் நாடுகிறாரோ அவர் ஜுமுஆ தொழுது கொள்ளலாம். நாம் ஜுமுஆ தொழுவிப்போம் என்று நபிகள் நாயகம (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத்

இதே செய்தி பைஹகீ, பஸ்ஸார், ஹாகிம் ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.



السنن الكبرى للبيهقي

6288 - وَحَدَّثَنَا أَبُو سَعْدٍ عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي عُثْمَانَ الزَّاهِدُ إِمْلَاءً , أنبأ أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ بُنْدَارِ بْنِ الْحُسَيْنِ , ثنا عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى الْأَهْوَازِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى، ح وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا أَبُو عَلِيٍّ الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ الْحَافِظُ، ثنا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ كَثِيرٍ الْحِمْصِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى، ثنا بَقِيَّةُ، ثنا شُعْبَةُ، عَنِ الْمُغِيرَةِ بْنِ مِقْسَمٍ الضَّبِّيِّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: " قَدْ اجْتَمَعَ فِي يَوْمِكُمْ هَذَا عِيدَانِ فَمَنْ شَاءَ أَجْزَأَهُ مِنَ الْجُمُعَةِ , وَإِنَّا مُجَمِّعُونَ ". رَوَاهُ أَيْضًا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُنِيبٍ الْمَرْوَزِيُّ عَنْ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ , ثنا أَبُو حَمْزَةَ عَنْ عَبْدِ الْعَزِيزِ مَوْصُولًا وَهُوَ فِي التَّارِيخِ , وَرَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ عَبْدِ الْعَزِيزِ فَأَرْسَلَهُ

مسند البزار

8996- وحَدَّثناه الحسن بن قزعة ، قَال : حَدَّثنا زياد بن عَبد الله ، عَن عَبد العزيز بن رفيع عن أبي صالح ، عَن أبي هُرَيرة ، قال : اجتمع عيدان على عهد رسول الله صَلَّى الله عَلَيه وَسَلَّم في يوم واحد فقال رسول الله صَلَّى الله عَلَيه وَسَلَّم : اجتمع في يومكم هذا عيدان فمن شاء منكم أجزأه من الجمعة وإنا مجمعون إن شاء الله.

المستدرك

1064- حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَافِظُ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ كَثِيرٍ الْحِمْصِيُّ ، حَدَّثَنَا أَبُو عَبْدِ اللهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الصَّفَّارُ حَدَّثَنَا بَقِيَّةُ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنِ الْمُغِيرَةِ بْنِ مِقْسَمٍ الضَّبِّيِّ ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : قَدِ اجْتَمَعَ فِي يَوْمِكُمْ هَذَا عِيدَانِ ، فَمَنْ شَاءَ أَجْزَأَهُ مِنَ الْجُمُعَةِ ، وَإِنَّا مُجَمِّعُونَ.

هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ فَإِنَّ بَقِيَّةَ بْنَ الْوَلِيدِ لَمْ يُخْتَلَفْ فِي صِدْقِهِ إِذَا رَوَى عَنِ الْمَشْهُورِينَ.  وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ شُعْبَةَ وَالْمُغِيرَةِ وَعَبْدِ الْعَزِيزِ ، وَكُلُّهُمْ مِمَّنْ يُجْمَعُ حَدِيثُهُ.

ஹதீஸ் கலையின் விதியை மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்த ஹதீஸ் பலவீனமானது போல் தோன்றலாம். நுணுக்கமாக ஹதீஸ்கலை விதியைக் கவனிக்கும் போது இது பலமான ஹதீஸ் தான் என்பதை அறிய முடியும்.

மேற்கண்ட எல்லா நூல்களிலும் பகிய்யா என்பார் மூலமாகவே இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இடம்பெறும் பக்கிய்யா என்பவரை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

பகிய்யா என்பவர் நம்பகமானவர்கள் வழியாக ஒரு ஹதீஸை  அறிவித்தால் அது சரியான ஹதீஸாகும்.

யாரென அறியப்படாதவர்கள் வழியாக அறிவித்தால் இவர் அறிவிப்பவை பலவீனமாக ஆகும்.



تهذيب التهذيب ـ

وقال ابن أبي خيثمة سئل يحيى عن بقية فقال إذا حدث عن الثقات مثل صفوان بن عمرو وغيره فاقبلوه اما إذا حدث عن اولئك المجهولين فلا وإذا كنى الرجل ولم يسمعه فليس يساوي شيئا

ஸப்வான் பின் அம்ர் மற்றும் அவரைப் போன்ற நம்பகமானவர் வழியாக பக்கிய்யா அறிவித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். அறிப்படாதவர் வழியாக அறிவித்தால் ஏற்றுக் கொள்ளாதீர்கள். அவர் புனைப்பெயருடன் ஒருவரைக் குறிப்பிட்டால் அவரிடம் அவர் செவியுறவில்லை. எனவே அவை எந்த மதிப்பும் இல்லாதது என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்



قال يعقوب بقية ثقه حسن الحديث إذا حدث عن المعروفين.

அறியப்பட்ட நபரிடமிருந்து பக்கிய்யா அறிவித்தால் அவர்கள் நம்பகமானவராவார் என்று யஃகூப் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்.

وقال ابن سعد كان ثقة في روايته عن الثقات ضعيفا في روايته عن غير الثقات

நம்பகமானவர்களிடமிருந்து பக்கிய்யா அறிவித்தால் அவர் அறிவிக்கும் செய்தி நம்பகமானதாகக் கருதப்படும். நம்பகத்தன்மையற்றவர்களிடமிருந்து அறிவித்தால் அவர் அறிவிக்கும் செய்தி பலவீனமாகக் கருதப்படும் என்று இப்னு ஸஅத் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்



وقال العجلي ثقة فيما يروي عن المعروفين وما روى عن المجهولين فليس بشئ

அறியப்பட்டவரிடமிருந்து அவர் அறிவித்தால் நம்பகத்தன்மை உள்ளதாகும். அறியப்படாதவரிடமிருந்து அறிவித்தால் அந்தச் செய்தி எந்த மதிப்பற்றதாகும் என்று இஜ்லீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்



وقال أبو زرعة بقية عجب إذا روى عن الثقات فهو ثقة وقالي النسائي إذا قال حدثنا وأخبرنا فهو ثقة وإذا قال عن فلان فلا يؤخذ عنه لانه لا يدرى عمن أخذه

நம்பகமானவர்களிடமிருந்து அவர் அறிவித்தால் அவர் நம்பகமானவராக்க் கருதப்படுவார் என்று அபூஸுர்ஆ அவர்களும், ஹத்தஸனா, அக்பரனா என்று அவர் அறிவித்தால் அவர் நம்பகமானவராகக் கருதப்படுவார். அன் என்ற சொல்லை குறிப்பிட்டு அறிவித்தால் அவரிடமிருந்து (எதுவும்) எடுக்கப்படாது. ஏனெனில் அந்தச் செய்தியை யாரிடமிருந்து எடுத்தார் என்று தெரியாது என்று நஸாயீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்

பக்கிய்யா என்ற அறிவிப்பாளர் தொடர்பாக அறிஞர்களின் கருத்தை நாம் கவனித்தால் அவர் தத்லீஸ் செய்பவர் என்பது தெளிவாகிறது.



ஹதீஸ் துறையில் தத்லீஸ் என்பது ஒருவர் தன் ஆசிரியரிடமிருந்து சில செய்திகளைக் கேட்டிருப்பார், சில செய்திகளை அவரிடம் நேரடியாக கேட்டிருக்க மாட்டார். இந்நிலையில், தான் நேரடியாகக் கேட்டிராத ஒருவரிடம் நேரடியாக கேட்டிருப்பதற்கும், கேட்காமலிருப்பதற்கும் வாய்ப்புள்ள வாசகத்தைப் பயன்படுத்தி சொல்லுவார்.

இப்படி அறிவிக்கும் பழக்கமுள்ள ஒருவர் அறிவித்தால் அவர் நேடியாக்க் கேட்டேன் என்று தெளிவான வாசகத்தில் அறிவித்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஹதீஸ் கலை வல்லுநர்களின் முடிவாகும்.

தத்லீஸ் என்றால் என்ன பார்க்கவும்

இந்தச் செய்தியில் பக்கிய்யா என்பவர்  ஷுஅபா என்ற அறிவிப்பாளரிடமிருந்து நேரடியாகக் கேட்டேன் என்பதை விளக்கும் வகையில் ஹத்தஸனா என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.

ஷுஅபா அவர்கள் ஹதீஸ் துறையில் முஃமின்களின் தலைவர் என்று போற்றப்பட்டவர். மிகவும் பிரபலமான அறிஞர்.

நம்பகமான, அறியப்பட்டவர் வழியாக அறிவித்தால் அந்தச் செய்தி நம்பகமானது என்ற அறிஞர்களின் கூற்றுப்படி இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதாகும்.

எனவே அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்தி நம்பகமானது என்பதில் சந்தேகமில்லை.

சரியான மற்றொரு செய்தி

இப்னு ஸுபைர் (ரலி) அவர்களின் செய்தி



سنن النسائي المجتبى - (3 / 194)

1592- أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا يَحْيَى ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ ، قَالَ : حَدَّثَنِي وَهْبُ بْنُ كَيْسَانَ ، قَالَ : اجْتَمَعَ عِيدَانِ عَلَى عَهْدِ ابْنِ الزُّبَيْرِ فَأَخَّرَ الْخُرُوجَ حَتَّى تَعَالَى النَّهَارُ ، ثُمَّ خَرَجَ فَخَطَبَ فَأَطَالَ الْخُطْبَةَ ، ثُمَّ نَزَلَ فَصَلَّى وَلَمْ يُصَلِّ لِلنَّاسِ يَوْمَئِذٍ الْجُمُعَةَ ، فَذُكِرَ ذَلِكَ لاِبْنِ عَبَّاسٍ فَقَالَ : أَصَابَ السُّنَّةَ.



இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் காலத்தில் இரண்டு பெருநாட்கள் ஒன்றிணைந்து வந்தன. பகல் உயரும் வரை தொழவைக்க வருவதைத் தாமதப்படுத்தினார்கள். பின் வந்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். சொற்பொழிவை நீட்டினார்கள். பின்னர் தொழுவித்தார்கள். அன்றைய தினம் ஜுமுஆ தொழுவிக்கவில்லை.

இது தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போது, (இப்னு ஸுபைர் (ரலி)) நபிவழியின்படி நடந்துள்ளார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : வஹப் பின் கைஸான்,
நூல் : நஸாயீ

வெள்ளிக்கிழமை பெருநாள் வந்துவிட்டால் ஜுமுஆத் தொழுகையை விரும்பியவர் தொழலாம், விரும்பியவர் விட்டுவிடலாம் என்பதற்கு நாம் மேற்கூறிய நபிமொழிகள் ஆதாரமாக உள்ளன.

வெள்ளிக்கிழமை பெருநாள் தொழுகையைத் தொழுது ஜுமுஆ தொழாதவர் லுஹர் தொழ வேண்டுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐவேளைத் தொழுகையில் வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழும்போது லுஹர் தொழவில்லை. தொழுமாறும் கட்டளையிடவும் இல்லை. லுஹருக்குப் பகரமாக ஜுமுஆ தொழுததே இதற்குக் காரணம்.

மேற்சொன்ன அபூதாவூத் 1075 ஹதீஸில் ஜுமுஆன்று பெருநாள் வந்துவிட்டால் பெருநாள் தொழுகை தொழுதவர்கள் விரும்பினால் ஜுமுஆ தொழலாம். விரும்பினால் தொழாமலும் இருக்கலாம் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

லுஹருக்குப் பகரமாக ஜுமுஆ இருப்பதால் அவர் ஜுமுஆ தொழவில்லை. எனவே அவர் லுஹர் தொழவேண்டுமென சிலர் கூறுகின்றனர். இது தவறாகும்.

ஒருவர் பெருநாள் தொழுகையைத் தொழுதுவிட்டால் அவர் ஜுமுஆ தொழாமலும் இருக்கலாம் என்ற நபிமொழியின் பொருள் என்ன?  ஜுமுஆவிற்குப் பெருநாள் பகரமாக வந்துவிட்டது என்பதுதானே.

ஒருவர் ஜுமுஆவிற்குப் பகரமாக பெருநாள் தொழுகையை நிறைவேற்றிவிட்டால் அவர் லுஹருக்குப் பகரமான தொழுகையை நிறைவேற்றிவிட்டார் என்ற பொருள் தானே வரும்.

லுஹருக்குப் பகரம் ஜுமுஆ; ஜுமுஆத் தொழுகைக்கு பகரம் பெருநாள் தொழுகை. எனவே பெருநாள் தொழுகையை நிறைவேற்றியவர் ஜுமுஆவை நிறைவேற்றியவராகக் கருதப்படுவார். எனவே அவர் லுஹர் தொழத் தேவையில்லை.

தூரமான பகுதியில் உள்ளவர்தான் ஜுமுஆ தொழுகை விடவேண்டுமா?

வெள்ளிக்கிழமை பெருநாள் வந்துவிட்டால் பள்ளியிலிருந்து தூரமான பகுதியில் இருந்து வந்தவர் தான் பெருநாள் தொழுகை மட்டும் தொழுதால் போதுமானது. பள்ளியின் பக்கத்தில் இருப்பவர் ஜுமுஆவைக் கண்டிப்பாக சேர்த்து தொழவேண்டுமென சிலர் கூறுகின்றனர். அதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.


صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (7 / 134)

5572- قَالَ أَبُو عُبَيْدٍ ثُمَّ شَهِدْتُ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ فَكَانَ ذَلِكَ يَوْمَ الْجُمُعَةِ فَصَلَّى قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ خَطَبَ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ هَذَا يَوْمٌ قَدِ اجْتَمَعَ لَكُمْ فِيهِ عِيدَانِ فَمَنْ أَحَبَّ أَنْ يَنْتَظِرَ الْجُمُعَةَ مِنْ أَهْلِ الْعَوَالِي فَلْيَنْتَظِرْ ، وَمَنْ أَحَبَّ أَنْ يَرْجِعَ فَقَدْ أَذِنْتُ لَهُ.

5572 அபூஉபைத் (ரஹ்) அவர்கள் (தொடர்ந்து) கூறியதாவது:

பின்னர் நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடன் ஒரு பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அன்று வெள்ளிக் கிழமையாக இருந்தது. அவர்கள் குத்பா-உரை நிகழ்த்தும் முன்பே தொழுது விட்டுப் பிறகு உரை (குத்பா) நிகழ்த்தினார்கள். அப்போது, மக்களே! இது எத்தகைய நாளென்றால், இதில் உங்களுக்கு (ஈதுல் அள்ஹா, வெள்ளிக்கிழமை ஆகிய) இரு பெருநாட்கள் ஒன்று சேர்ந்து (கிடைத்து) உள்ளன. ஆகவே, புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்களில் எவர் ஜுமுஆவை (வெள்ளிக் கிழமைத் தொழுகையை) எதிர்பார்த்துக் காத்திருக்க விரும்புகிறான்றாரோ அவர் எதிர்பார்த்துக் காத்திருக்கட்டும். (அவர்களில்) எவர் தமது இல்லத்துக்குத் திரும்பிச் செல்ல வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருக்கு (அவ்வாறே திரும்பிச் சென்றுவிட) நான் அனுமதியளித்து விட்டேன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்  அபூஉபைதா
நூல் புகாரி (5572)



புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்களில் எவர் ஜுமுஆவை (வெள்ளிக் கிழமைத் தொழுகையை) எதிர்பார்த்துக் காத்திருக்க விரும்புகிறான்றாரோ அவர் எதிர்பார்த்துக் காத்திருக்கட்டும். (அவர்களில்) எவர் தமது இல்லத்துக்குத் திரும்பிச் செல்ல வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருக்கு (அவ்வாறே திரும்பிச் சென்றுவிட) நான் அனுமதியளித்து விட்டேன் என்ற உஸ்மான் (ரலி) அவர்களின் கூற்று, தூரப்பகுதியில் வருபவர் தான் ஜுமுஆத் தொழாமல் இருக்கலாம் என்று தெளிவாக அறிவிக்கிறது.

ஆனால் இது நபிகளாரின் கருத்து இல்லை. நபிகளார் விரும்பியவர் ஜுமுஆத் தொழலாம் விரும்பியவர் தொழாமலும் இருக்கலாம் என்று பொதுவாகக் கூறிய பின்னர் அதில் நிபந்தனை போடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. எனவே இதை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account