கூட்டு துவா ஓதும் இமாமைப் பின்பற்றி தொழுவது கூடுமா?
இதில் நமது தவ்ஹீத் சகோதரர்களே! சமரசம் ஆகி விடுகிறார்களே! இது சரியா?
நிரவி, அதீன், பிரான்ஸ்
பதில் :
இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதை மார்க்கம் தடுக்கின்றது. இணைவைக்கும இமாமைப் பின்பற்றலாமா? என்ற கேள்விக்குரிய பதிலை வேறு கட்டுரையில் விளக்கியுள்ளோம்.
பித்அத் செய்யும் இமாம்களைப் பின்பற்றித் தொழுவதற்கு மார்க்கத்தில் தடை ஏதும் இல்லை. எனவே மார்க்கம் தடுக்காத ஒரு காரியத்தை நாம் தடுக்க முடியாது. பித்அத் செய்யும் இமாம்களைப் பின்பற்றித் தொழுவதற்கு நபிமொழிகளில் ஆதாரம் உள்ளது.
صحيح مسلم
1497 – حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ح قَالَ وَحَدَّثَنِى أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِىُّ وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِىُّ قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ أَبِى عِمْرَانَ الْجَوْنِىِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ عَنْ أَبِى ذَرٍّ قَالَ قَالَ لِى رَسُولُ اللَّهِ « كَيْفَ أَنْتَ إِذَا كَانَتْ عَلَيْكَ أُمَرَاءُ يُؤَخِّرُونَ الصَّلاَةَ عَنْ وَقْتِهَا أَوْ يُمِيتُونَ الصَّلاَةَ عَنْ وَقْتِهَا ». قَالَ قُلْتُ فَمَا تَأْمُرُنِى قَالَ « صَلِّ الصَّلاَةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكْتَهَا مَعَهُمْ فَصَلِّ فَإِنَّهَا لَكَ نَافِلَةٌ ». وَلَمْ يَذْكُرْ خَلَفٌ عَنْ وَقْتِهَا.
அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்துபவர்கள், அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் உங்களது நிலை எப்படி இருக்கும்?'' என்று கேட்டார்கள். நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுதுகொள்ளுங்கள். பிறகு அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்து கொண்டால் அப்போதும் (அவர்களுடன் இணைந்து) தொழுது கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி)
நூல் : முஸ்லிம்
தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது தான் நபிவழியாகும். தொழுகையைப் பிற்படுத்தித் தொழுவது தவறு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்தத் தவறில் நாம் பங்கெடுத்து விடக்கூடாது என்பதால் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது விட வேண்டும் என்று உத்தரவிடுகிறார்கள்.
அதே நேரத்தில் தொழுகையைத் தாமதப்படுத்துதல் என்ற பித்அத்தைச் செய்யக்கூடிய ஆட்சியாளர்கள் வந்தாலும் அவர்களைப் பின்பற்றி நாம் தொழுவது குற்றம் இல்லை என்பதால் அவர்களையும் பின்பற்றித் தொழுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
பித்அத் செய்பவர்களைப் பின்பற்றி தொழக்கூடாது என்றால் பித்அத் செய்யும் இந்த ஆட்சியாளர்களைப் பின்பற்றி தொழக்கூடாது என்றே கூறியிருப்பார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாமல் இதை அனுமதித்திருப்பதால் பித்அத் செய்யும் இமாம்கள் தொழுகைக்குள் பித்அத்களை நுழைக்காதவரை பின்பற்றி தொழுவது தவறில்லை.
தொழுது முடித்தபின் ஓதும் கூட்டு துஆ பித்அத் என்பதால் அதில் கலந்து கொள்ளக் கூடாது
கூட்டு துவா ஓதும் இமாமைப் பின்பற்றலாமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode