Sidebar

27
Sat, Jul
5 New Articles

நாத்திகரின் கேள்வியும் நமது பதிலும்

தமிழக தவ்ஹீத் வரலாறு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நாத்திகரின் கேள்வியும் நமது பதிலும்

நாத்திகர்களின் கேள்விகள் சிலவற்றை ஒரு இனிமை என்ற சகோதரர் நம்க்கு அனுப்பி பதில் கேட்டுள்ளார். அந்தக் கேள்விகலூம் அதற்கான பதில்களும் கீழே

அஸ்ஸலாமு அலைக்கும் அருண்ராஜ் என்பவர் செங்கொடியின் தளத்தில் சில கேள்விகளை கேட்டு பின்னூட்டமிட்டிருந்தார்.

அவைகள் கீழே,

//1.இபிலீஸை ஏன் அல்லாவால் அழிக்க முடியவில்லை!?

2.எல்லாம் தெரிந்த கடவுளுக்கு ஏன் ஒரே வேத புத்தகத்தில் விசயத்தைச் சொல்ல முடியவில்லை!?

3.சகல சக்தி வாய்ந்த கடவுளுக்கு உலகைப் படைக்க ஏன் ஏழு நாட்கள் ஆயிற்று!?

4.இந்த உலகைப் படைத்தது கடவுள் என்றால், அந்த கடவுளைப் படைத்தது யார்!?

5.கடவுள் தான் தோன்றி என்றால் இந்த உலகம் ஏன் தான் தோன்றியாக இருக்கக் கூடாது!?

இதுல அஞ்சு கேள்வி இருக்கு, பதில் சொல்லுங்க, வரிசையா கேட்டுகிட்டே இருக்கேன்!

என்று கேட்டுள்ளார்.

இதற்கு நேரடி விவாதத்திற்கு அவரையும் அவரைச் சேர்ந்தவங்களையும் அழைத்து வரச் சொன்னதற்கு TNTJ தலைமையகத்தை தொடர்பு கொள்ளச் சொல்லி முகவரியையும் கொடுத்ததற்கு நான் எந்த இயக்கத்தை சேர்ந்தவனும் இல்லை தனி ஒருவனாக வருகிறேன் என்று தன்னுடைய பெயரையும், மொபைல் நம்பர் 9994500540 யும் தந்து

//ஈரோட்டுக்கு வந்து போன் செய்தால் பொது இடத்தில் சந்திக்கலாம்!, அல்லது ஈரோட்டில் இருக்கும் உங்கள் ஜமாத்தில் கூட!

வீட்டில் தான் விவாதிக்க வேண்டும் என கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன்! என்று பதில் தந்துள்ளார்.

இது தங்கள் மேலான பார்வைக்கு.

நமது பதில்

நாத்திகர்கள் அனைவரின் கோளாறும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்பது இதில் இருந்து தெரிகிறது. அதாவது எதையும் அரை குறையாகப் புரிந்து கொள்வது தான் அந்தக் கோளாறு.

மேற்கண்ட கேள்விகள் அனைத்திலும் அது தான் தெரிகிறது.

இப்லீஸை அழிக்கவில்லை என்பதற்கும், அழிக்க இயலவில்லை என்பதற்கும் அவருக்கு வித்தியாசம் தெரியவில்லை.

நமக்கு இயலுமான அனைத்தையும் நாம் செய்ய மாட்டோம். நமக்கு இயலுமான விஷயத்தில் நமக்கு எது விருப்பமோ அதைத் தான் செய்வோம். இப்லீஸை அல்லாஹ்வுக்கு அழிக்க முடியவில்லை என்று குர்ஆன் எந்த வசனத்தில் கூறி இருக்கிறது என்பதற்கு அவரிடம் ஆதாரம் கேளுங்கள்.

நம்மால் ஒழிக்க முடிந்தாலும் சிலரை நாம் விட்டுப் பிடித்தால் ஒழிக்க முடியவில்லை என்று எப்படி அர்த்தமாகும்? அதைத் தான் அரைகுறை என்கிறோம்.

இரண்டாவது கேள்வியும் இதே அரைவேக்கட்டுத் தனத்துடன் தான் உள்ளது. ஒரே வேதப்புத்தகத்தில் என்னால் சொல்ல முடியாததால் பல வேதங்களில் சொல்லி இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறினால் தான் இப்படி கேட்க முடியும்.

இவர் ஐந்து கேள்விகள் மட்டும் கேட்கிறார்? அவரிடம் உள்ள எல்லாக் கேள்விகளையும் ஒரே மூச்சில் ஏன் கேட்கவில்லை?

மக்கள் மனதில் நன்றாகப் பதிய வேண்டும் என்பதற்காக வாரம் ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால் ஐந்துக்கும் ஒரே நேரத்தில் பதில் சொல்ல முடியவில்லை என்று ஆகுமா? அதை நான் விரும்பவில்லை என்று ஆகுமா?

இங்கேயும் அதே அறைகுறை தான் வெளிப்படுகிறது.

நமக்கு ஐம்பது கிலோ எடையுள்ள பொருளைத் தூக்க முடியும். ஆனால் தேவைக்கேற்ப சிறிது சிறிதாகத் தூக்கினால் நமக்கு ஐம்பது கிலோ எடையை நமக்குத் தூக்க முடியவில்லை என்று அர்த்தமா? ஐம்பது கிலோ தூக்க உனக்கு சக்தி இருந்தால் ஏன் கொஞ்சம் கொஞ்சமாகத் தூக்க வேண்டும்? என்று எந்த மனிதரிடமாவது இவர் கேட்பாரா?

நாலாவது மற்றும் ஐந்தாவது கேள்விகளுக்குத் தான் நாத்திகர்களுடன் நடந்த விவாதத்தில் நிரூபித்துள்ளோம். அதை பார்க்கச் சொல்லவும்.

நாத்திகர்களுடன் விவாதம்

அதில் நாம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லச் சொல்லவும்.

கடவுள் உலகைப் படைக்கவில்லை என்று கூறும் இவர்களும் ஒரு இடத்தில் நிறுத்தி விடுகிறார்கள்.

ஒரு அணு வெடித்து இந்த உலகம் உண்டானது என்று நாத்திகர்கள் கூறுகிறார்கள்.

அந்த அணு எப்படி உண்டானது என்று கேட்டால் திரு திருவென முழிக்கிறார்கள்.

ஒரு அணு தான் அனைத்துக்கும் மூலம் என்று முடித்துக் கொள்வதை விட மாபெரும் ஆற்றல் மிக்கவன் படைத்தான் என்று முடிப்பது தான் அறிவுப்பூர்வமானது.

எந்த ஒன்றையும் ஒரு இடத்தில் முடிப்பது தான் பகுத்தறிவு. இது கூட விளங்காமல் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார்.

அவர் தனி நபராக இருந்தாலும் அவர் நம்மை தொட்ரபு கொண்டு அவர் கேட்ட ஐந்து கேள்விகள் குறித்து முதலில் விவாதிக்க வரச் சொல்லுங்கள். நாம் தயாராக இருக்கிறோம்.

Published on: January 23, 2010, 4:08 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account