Sidebar

21
Tue, May
51 New Articles

ரஹ்மத் இதழின் குதர்க்க வாதம்

தமிழக தவ்ஹீத் வரலாறு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ரஹ்மத் இதழின் குதர்க்க வாதம்

ரஹ்மத் ஜூன் 1988 இதழில் நபித் தோழர்கள் விண்மீன்களைப் போன்றவர்கள் என்ற ஹதீஸை நிலைநாட்டவும் நமது வாதங்களை மறுக்கவும் முற்பட்டு அர்த்தமற்ற வாதங்களை எடுத்து வைத்துள்ளது. புதிய ஆசிரியர் காலம் சென்ற பழைய ஆசிரியரின் பெயரால் அதை வெளியிட்டிருக்கிறார். அது பற்றிய உண்மைகளை நாம் விளக்கியாக வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

ரஹ்மத் வாதம் 1

முதலாவதாக அதில் கூறப்பட்டுள்ள உவமை சரியில்லையாம். வானத்திலுள்ள எல்லா நட்சத்திரங்களும் வழிகாட்டுவதில்லை. எனவே இப்படி பொருந்தாத உவமையை நபி ஸல் அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என வாதிடுகிறார். அன்னுஜூம் என்று அல் வைத்து குறிப்பிட்டு கூறியிருப்பதிலேயே வழிகாட்டும் நட்சத்திரங்களளையே நபி ஸல் கருதியுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்கின்ற இல்க்கண ஆற்றல் இல்லாத இவருக்கு இந்த உவமை பொருந்தாததாக இருப்பதில் வியப்பில்லை தான்.

நமது விளக்கம். 1

அல் என்ற இடைச் சொல் பெயற் சொற்களின் ஆரம்பத்தில் சில சமயங்களில் பயன்படுத்தப்படும். அல் என்ற சொல் பயன்படுத்தப்படும் போது அதற்கு இரண்டு விதமான பொருள் உண்டு.

உதாரணமாக கிதாப் என்றால் புத்தகம்.

அதன் ஆரம்பித்தில் அல் இணைத்து அல்கிதாப் என்றால் அந்த புத்தகம் என்று பொருள்.

the என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக அல் பயன்படுத்தப்படுகிறது. இதே அல் என்ற சொல்லுக்,கு இன்னொரு பொருளும் உண்டு. இன்ஸான் என்றால் மனிதன் அல் இன்ஸான் என்றால் மனிதன் ஒவ்வொருவரும் என்ற பொருளும் உண்டு. இந்த அடிப்படையிலேயே ஹம்து என்ற வார்த்தையுடன் அல் இணைத்து அல்ஹம்து என்று ஆனதும் எல்லாப் புகழும் என்று பொருள் செய்யப்படுகிறது.

ரஹ்மத் இதழ் அல் என்ற சொல்லுக்கு முதல் அர்த்தம் மட்டுமே உள்ளது என்று கருதிவிட்டது போலும் அன்னுஜூமு என்றால் குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள் என்று பொருள் கொள்ள முடியும் என்பது போலவே அனைத்து நட்சத்திரங்கள் என்றும் பொருள் கொள்ள முடியும். இரண்டு பொருளுக்கும் அந்த வார்த்தை இடம் தரும். இந்த இரண்டில் எந்த பொருளையாவது குறிப்பாக நாம் முடிவு செய்வதென்றால் அது பயன்படுத்தப்படும் வாக்கியத்தில் அதை உணர்த்தக்கூடிய கரு அமைத்திருக்கும். அரபி இலக்கியத்தில் இதை கரீனா என்பர்.

குறிப்பிட்ட வழிகாட்டும் நட்சத்திரங்கள் என்ற பொருளை நாம் கொள்ளாமல் அனைத்து நட்சத்திரங்கள் என்ற பொதுவான பொருளை நாம் ஏன் தேர்வு செய்தோம் என்றால் அதற்கான கரு அந்த வாக்கியத்திலேயே உள்ளதால் தான்.

எவரைப் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள் என்பதே அந்த கரு.

எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடைய முடியும் என்றே அங்கே உவமை கூறப்படுகின்றது. எனவே இலக்கண இலக்கிய அடிப்படையில் நாம் செய்த பொருளே சரியானது. ரஹ்மத் நுனிப்புல் மேய்ந்துள்ளது.

(இதை எழுதியவர் காலம் சென்று விட்டதால் அவர் பதில் சொல்ல மாட்டார். அவரது பொறுப்பை ஏற்றுள்ள இப்போதைய ஆசிரியர் இலக்கண இலக்கிய அடிப்படையில் சர்ச்சை செய்ய முன்வந்தால் அதற்கும் நாம் தயாராகவே இருக்கிறோம்.

ரஹ்மத் வாதம் 2

மேற்கூறிய ஹதீஸ் ரஸீன் நூலில் உள்ளது. அதை மிஷ்காத்தில் பதிவு செய்துள்ளனர். உமர் ரலி அவர்கள் அதை அறிவித்துள்ளனர். என்கிறது ரஹ்மத்.

நமது விளக்கம் 2

இது பற்றி வருகின்ற எல்லா ஹதீஸ்களுமே இட்டுக் கட்டப்பட்டது என்பதை நாம் முன்பே குறிப்பிட்டுள்ளோம். அந்த இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களில் ஒன்றைத் தான் ரஹ்மத் எடுத்து வைக்கின்றது. அது எடுத்து வைத்த ஹதீஸில் எந்தக் குறைபாடும் இல்லை என்பது போல் சித்தரிக்க முற்படுகின்றது. புதிதாக இப்போது எடுத்து வைத்திருக்கும் ஹதீஸின் தரத்தையும் அலசுவோம்.

அதன் அறிவிப்பாளர் வரிசையில் நயீம் இப்னு ஹம்மாத் இடம் பெறுகிறார். அவர் பெருமளவு தவறாகக் கூறுபவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜ்ர் (ரஹ்மத்தும் ஒப்புக் கொண்ட அறிஞர்) கூறுகிறார்கள். இதில் இடம் பெறுகின்ற அப்துர் ரஹீம் இப்னு ஸைது என்பவன் பெரும் பொய்யன் என்கிறார்கள். இப்னு மயீன், ஹாபிழ் தஹபீ ஆகியோர் இதுதவறான ஹதீஸ் என்கிறார்கள். நயீம் என்பவர் குறை கூறப்பட்டவர் என இப்னுல் ஜவ்ஸி அவர்கள் இலல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

ரஹ்மத் ஒப்புக் கொண்ட அறிஞர்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களைக் குறை கூறிய பின்னரும் இதை ஏன் ரஹ்மத் நியாயப்படுத்துகிறதோ தெரியவில்லை.

ரஹ்மத் வாதம் 3

ஹதீஸ் கலைத்துறையில் திறமைமிக்க ஷைகுல் ஹதீஸ்கள் பலரும் இதைக் கையாண்டுள்ளனர் என்கிறது.

நமது விளக்கம் 3

மேலே இதைக் கடுமையாக விமர்சனம் செய்தவர்களை விட எந்த மேதையும் இதைக் கையாளவில்லை. கப்ரிலிருந்து கை வெளியே வந்தது, கப்ரில் பதில் ஸலாம் வந்தது, 27ல் லைலத்துல் கத்ர் இறங்கியதைப் பெரியார்கள் பார்த்துள்ளனர். என்பது போன்ற அனேக பொய்களை அரங்கேற்றிய இந்தியாவின் ஷைகுல் ஹதீஸ் ஒருவரைத் தவிர வேறு எந்த மேதைகளும் இதைக் கையாளவில்லை. ஷைகுல் ஹதீஸ்கள் பலர் கையாண்டதாக வைத்துக் கொண்டாலும் தக்க சான்றுகளுடன் சுட்டிக் காட்டப்படும் விமர்சனங்களுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதை ரஹ்மத் மறுக்காது என்றே எண்ணுகிறோம். மறுத்தால் அவர்கள் ஏற்றுக் கொண்ட நூல்களிலிருந்தே சான்றுகள் தருவோம்.

ரஹ்மத் விளக்கம் 4.

நாம் தான் புதிதாக குழப்பம் விளைவிக்கிறோம் என்று இதுவரை சொல்லி வந்ததை ரஹ்மத் இப்போது மறுத்து விட்டது.அந்த காலத்திலேயே குழப்பவாதிகள் இருந்தார்களாம். அந்த ஹதீஸ் ஆதாரமற்றது என்பதற்கு எவர்களுடைய கூற்றுகளை நாம் எடுத்து வைத்தோம் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகின்றோம்.

அஹ்மத் இப்னு ஹம்பல், இப்னு ஹிப்பான் இப்னு ஹர்ராஷ், இப்னு ஹஸ்ம, இப்னு அப்துல் பர் ஆகிய அறிஞர் பெருமக்களின் விமர்சனங்களை சான்றாக சமர்ப்பித்தோம்.

அஹ்மது இப்னு ஹம்பல் உள்பட அந்த அறிஞர்களை எல்லாம் அந்தக் கால குதர்க்கவாதிகள் என்கிறது ரஹ்மத், இமாம் அஹ்மது இப்னு ஹம்பலையே குதர்க்கவாதிகள் என்பவர்கள் தான் இமாம்களை மதிப்பவர்களா? இந்தியாவி;ல் முரீது வியாபாரம் செய்தவர்களுக்கு ஷெய்குல் ஹதீஸ் பட்டமாம். அஹ்மது இப்னு ஹம்பல் குதர்க்கவாதியாம். அவர்கள் குதர்க்கவாதி என்றால் நாங்களும் குதர்க்கவாதியாகவே இருந்து விட்டுப் போகிறோம்.

ஹ்மத் வாதம்5

இவர்களது வாதங்களை எல்லாம் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி அவர்கள் தோலூரித்துக் காட்டிவிட்டார்கள்.

நமது விளக்கம் 5

அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி எப்படி தோலுரித்துக் காட்டினார் என்று ரஹ்மத் குறிப்பிடவில்லை. அதை நாம் நமது முதல் இதழிலிலேயே குறிப்பிட்டுள்ளோம். (கஷ்பி மூலம் இந்த ஹதீஸ் சரி காணப்பட்டுள்ளது என்பது தான் ஷஃரானியின் தோலுரிப்பு கஷ்பு என்பது மெஞ்ஞானம்) இதைத் தவிர வேறு என்ன தோலை ஷஃரானி உரித்து விட்டார். ரஹ்மத் சொல்லுமா? தயவு செய்து ஷஃரானி புராணத்தை ரஹ்மத் சொல்லுமா? தயவு செய்து ஷஃரானி புராணத்தை ரஹ்மத் பாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அந்த தபகாத் நூலில் உள்ள கஷ்பு ஆபாசம் எல்லாம் வெளிவரும்.

ஷஃரானியின் தபகாத் நூலில் இருந்து சாம்பிள் பார்க்க

கஷ்பு என்ற பெயரால் இவர் கூறியருக்கும் ஆபாசக் கதைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இவரது ஷைகு கழுதையுடன் உடலுறவு கொண்டதெல்லாம் அதில் உண்டு. அதையும் கஷ்பு என்வர் தானே இந்த ஷஃரானி. இவரது நூலைக் குப்பை கிதாபு என்று கூறாமல் வேறு எப்படிக் கூறுவதாம்?

ஸஹாபாக்களுக்கு உள்ள சிறப்புக்களை நாம் மறுக்கவில்லை. சிறப்பு என்பது வேறு. எதைப் பின்பற்ற வேண்டும் என்பது வேறு. இதை நாம் முன்பே தெளிவாக்கி விட்டோம்.

ரஹ்மத் ஆசிரியர் காலம் சென்று விட்ட ஒரே காரணத்தினாலேயே சுருக்கமான விளக்கம். பதில் சொல்லும் பொறுப்பை புதிய ஆசிரியர் ஏற்றால் விரிவான விளக்கம் தருவோம்.

 

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account