Sidebar

16
Thu, May
1 New Articles

பெண்கள் நீச்சல் குளத்தில் குளிக்கலாமா?

பெண்கள் பகுதி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பெண்கள் நீச்சல் குளத்தில் குளிக்கலாமா?

பெண்கள் அவர்களுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளங்களுக்குச் சென்று குளிப்பது தவறில்லை. ஆனால் சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நீச்சல் குளத்தின் பொறுப்பாளர் உட்பட எந்த அந்நிய ஆணும் அவர்கள் குளிப்பதைப் பார்க்க முடியாதவாறு தடுப்பும் பாதுகாப்பு இருக்க வேண்டும். மற்ற பெண்களுக்கு தனது அந்தரங்கப் பகுதிகளை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும். இந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்து குளிப்பது தவறல்ல.

பாதுகாப்பான சூழ்நிலை இருந்தாலும் பெண்கள் நீச்சல் குளங்களுக்கு அறவே செல்லக்கூடாது என்று சிலர் தவறாகக் கூறுகின்றனர். இதற்கு இவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

 அபுல் மலீஹ் அல்ஹதலீ கூறுகிறார்

 حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ أَنْبَأَنَا شُعْبَةُ عَنْ مَنْصُورٍ قَال سَمِعْتُ سَالِمَ بْنَ أَبِي الْجَعْدِ يُحَدِّثُ عَنْ أَبِي الْمَلِيحِ الْهُذَلِيِّ أَنَّ نِسَاءً مِنْ أَهْلِ حِمْصَ أَوْ مِنْ أَهْلِ الشَّيامِ دَخَلْنَ عَلَى عَائِشَةَ فَقَالَتْ أَنْتُنَّ اللَّاتِي يَدْخُلْنَ نِسَاؤُكُنَّ الْحَمَّامَاتِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مِنْ امْرَأَةٍ تَضَعُ ثِيَابَهَا فِي غَيْرِ بَيْتِ زَوْجِهَا إِلَّا هَتَكَتْ السِّتْرَ بَيْنَهَا وَبَيْنَ رَبِّهَا قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ رواه الترمذي

 ஹிம்ஸ் அல்லது ஷாம் நாட்டைச் சார்ந்த சில பெண்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தனர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் உங்கள் பெண்களை குளியல் குளங்களுக்கு நீங்கள் தான் அனுப்புகின்றீர்களா? ஒரு பெண் தன்னுடைய கணவன் வீடு அல்லாத வேறு இடத்தில் தன் ஆடையை (கழற்றி) வைத்தால் அவள் தனக்கும் தன்னுடைய இறைவனுக்கும் இடையேயுள்ள திரையைக் கிழித்து விடுகிறாள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

நூல் : திர்மிதீ (2727)

இந்தச் செய்தியை சரியான அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும். ஆயிஷா (ரலி) அவர்கள் வெளியில் ஆடையைக் களையக் கூடாது என்ற நபிமொழியை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவர்கள் காலத்தில் ஷாம் அல்லது ஹிம்ஸ் பகுதிகளில் இருந்த குளியல் குளங்கள் நபிகளின் இந்தக் கட்டளையை மீறும் வகையில் அமைந்திருந்ததால் தான் ஆயிஷா (ரலி) இப்படி கூறி இருக்கிறார்கள்.

பெண்கள் ஆடையை அவிழ்ப்பது பற்றித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆடையை அவிழ்க்காமல் குளிக்கும் நிலை இருந்தால் அதை இந்தத் தடை கட்டுப்படுத்தாது.

மேலும் கணவனுடைய வீடு என்றால் வீடு என்று இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது. கணவன் அல்லாத மற்றவர்கள் முன்னால் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் வேறு ஒரு உறவினரின் வீட்டுக்குச் செல்கின்றனர். இந்த வீட்டில் கணவன் முன்னால் மனைவி ஆடையை அவிழ்க்கக் கூடாது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். கணவன் முன்னால் என்பதைத் தான் கணவன் வீடு என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

பெண்கள் நவீன நீச்சல் குளத்தில் அன்னியர்கள் பார்க்காமலும் ஆடை அவிழ்க்காமலும் குளிக்கும் நிலை இருந்தால் அங்கே குளிப்பது தவறல்ல. இன்றைக்கு பெண்களுக்கான நவீன பாதுகாப்பான நீச்சல் குளங்கள் இருப்பதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. குளம் குட்டை போன்ற நீர்நிலைகளே பொதுவிடங்களில் இருந்தது. அங்கு சென்று பெண்கள் குளித்து வந்தனர். இவர்கள் குளிப்பதை அந்நிய ஆண்கள் பார்க்க நேரிடும். பாதுகாப்பு அற்ற இது போன்ற நீர்நிலைக்கு சென்று குளிக்கக் கூடாது என்பது தான் நபிகளின் கூற்றிலிருந்து கிடைக்கும் கருத்தாகும்.

எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் இஸ்லாமியப் பெண்கள் ஆறு குளம் ஏரி போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று அறைகுறை ஆடையுடன் குளிக்கக் கூடாது.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பகுதி ஒதுக்கப்பட்டு மறைக்கப்பட்டு  இருந்தால் அப்போது இது தவறாகாது.

குற்றாலம் போன்ற இடங்களிலும் தீம்ஸ் பார்க்குகளிலும் ஆண்கள் பார்வையில் படாமல் பெண்கள் குளிக்க முடியாது என்பதால் அது போன்ற இடங்களில் குளித்து ஆண்களின் காட்சிப்பொருளாக ஆகக் கூடாது

 ஆனால் இன்று விடுதிகளில் தங்கும் தமபதிகள் கூட ரகசியமாக படம் பிடிக்கப்படுகின்றனர். அது போல் குளியறையிலும் ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

பர்தா அணிந்த நிலையில் பொது இடங்களில் குளிக்கலாமா என்றால் அதுவும் கூடாது. ஏனெனில் பர்தா அணிந்தாலும் தண்ணீரில் மூழ்கி நனையும் போது பர்தா இருக்கமடையும். உடலின் கனபரிமானங்களை வெளிப்படுத்தும். அன்னிய ஆண்கள் பார்க்கும் வகையில் பர்தா அணிந்தும் பொது இடங்களில் குளிக்கக் கூடாது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account