Sidebar

27
Mon, May
279 New Articles

பெண்கள் தலையை மறைப்பது அவசியமா?

பெண்கள் பகுதி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பெண்கள் அறைகுறையாக தலையை மறைப்பது சரியா?

கேள்வி;

பெண்கள் அறைகுறையாக தலையை மறைப்பது சரியா?‎

ஃபர்வீன்

பதில்

பெண்களின் தலை மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும். பெண்கள் தலையை முழுமையாக மறைக்க வேண்டும்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

திருக்குர்ஆன் 24 : 31

முக்காடுகள் என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் குர்ஆனில் கும்ரு என்ற அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது. கிமார் என்பது இதன் ஒருமைச் சொல்லாகும். கிமார் என்றால் தலையை மறைக்கும் துணி என்பது இதன் சரியான பொருள். இவ்வாறே அரபு அகராதி நூற்களிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது.

المعجم الوسيط

( الخمار ) كل ما ستر و منه خمار المرأة و هو ثوب تغطي به رأسها

المصباح المنير في غريب الشرح الكبير

( خ م ر ) : الْخِمَارُ ثَوْبٌ تُغَطِّي بِهِ الْمَرْأَةُ رَأْسَهَا وَالْجَمْعُ خُمُرٌ

التعريفات الفقهية

الخِمار: يقال لما يُسْتَرُ به خمارٌ لكنَّ الخمارَ صار في التعارف: اسماً لما تغطِّي به المرأة رأسها.

شرح غريب ألفاظ المدونة

الخمار: كل ما خمر رأسها أي غطاه

الإبانة في اللغة العربية

قولهم: قد خمرت المرأة رأسها الخمار إذا غطتهُ

அல்முஃஜமுல் வசீத், மிஸ்பாஹுல் முனீர் உள்ளிட்ட அரபு அகராதி நூற்களில்  பெண்களின் கிமார் என்பது அவர்கள் தங்களுடைய தலையை மறைத்துக் கொள்ளும் துணி என்று சொல்லப்பட்டுள்ளது

எனவே மேற்கண்ட வசனம் பெண்கள் தலையை மறைக்க வேண்டும் என்று கூறுகின்றது.

பெண்களின் தலை மறைக்கப்பட வேண்டியது என்று நபிமொழிகளும் கூறுகின்றன.

مسند أحمد

25167 - حَدَّثَنَا أَبُو كَامِلٍ، وَعَفَّانُ، قَالَا: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ قَتَادَةَ - قَالَ عَفَّانُ: أَخْبَرَنَا قَتَادَةُ - عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ الْحَارِثِ، عَنْ عَائِشَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَا تُقْبَلُ صَلَاةُ حَائِضٍ إِلَّا بِخِمَارٍ "

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

மாதவிடாய் (ஏற்படும் பருமடைந்த) பெண்ணின் தொழுகையை முக்காடுடன் (அவள் தொழுதாலே) தவிர அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நுகள் : அஹ்மத் , அபூதாவூத்

3582 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى حَدَّثَنَا أَبُو جُمَيْعٍ سَالِمُ بْنُ دِينَارٍ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى فَاطِمَةَ بِعَبْدٍ كَانَ قَدْ وَهَبَهُ لَهَا قَالَ وَعَلَى فَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ثَوْبٌ إِذَا قَنَّعَتْ بِهِ رَأْسَهَا لَمْ يَبْلُغْ رِجْلَيْهَا وَإِذَا غَطَّتْ بِهِ رِجْلَيْهَا لَمْ يَبْلُغْ رَأْسَهَا فَلَمَّا رَأَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا تَلْقَى قَالَ إِنَّهُ لَيْسَ عَلَيْكِ بَأْسٌ إِنَّمَا هُوَ أَبُوكِ وَغُلَامُكِ رواه أبو داود

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு ஒரு அடிமையை அன்பளிப்புச் செய்திருந்தார்கள். அந்த அடிமையுடன் அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் தாம் அணிந்திருந்த ஒரு ஆடையால் தமது தலையை மூடிய போது அவர்களின் கால்களுக்கு அது போதவில்லை. கால்களை அவர்கள் மறைத்த போது தலைக்குப் போதவில்லை. ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்ட போது உன் மீது எந்தக் குற்றமும் ஏற்படாது. ஏனென்றால் (உனக்கு முன்னால்) உனது தந்தையும், உனது அடிமையும் (மட்டுமே) உள்ளனர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்

நூல் : அபூதாவூத்

பெண்கள் தலையை மறைக்க வேண்டும் என்று ஃபாத்திமா (ரலி) அவர்கள் புரிந்திருந்த காரணத்தினால் அவ்வாறு மறைக்க முயல்கிறார்கள். தந்தைக்கு முன்னால் தலையை மறைக்கத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணர்த்துகிறார்கள்.

எனவே அந்நியர்களுக்கு முன்னால் பெண்கள் தலையை மறைக்க வேண்டும் என்பதை நபியவர்களின் இந்தச் சொல்லிலிருந்து அறியலாம்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account