Sidebar

25
Thu, Apr
17 New Articles

அரபு இலக்கணத்துக்கு மாற்றமாக 2:102 வசனத்துக்கு பீஜே மொழி பெயர்த்துள்ளாரா?

தஃப்சீர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அரபு இலக்கணத்துக்கு மாற்றமாக 2:102 வசனத்துக்கு பீஜே மொழி பெயர்த்துள்ளாரா?

2:102 வசனத்தின் தமிழாக்கத்தில்

"நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே!'' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. எனவே எதன் மூலம் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவார்களோ அதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர்.

என்று நாம் மொழிபெயர்த்துள்ளோம்.

இது அரபு இலக்கண விதிக்கு எதிரானது என்று சிலர் விமர்சனம் செய்து பதிவுகளைப் போட்டு வருகின்றனர்.

அவர்களது பதிவின் சாராம்சம் என்னவென்றால் சூனியம் கற்றால் காஃபிராகி விடுவீர்கள் என்று எச்சரிக்கப்பட்டனர். இந்த எச்சரிக்கையின் காரணமாக அவர்கள் கணவன் மனைவிக்கு இடையில் பிரிவினை ஏற்படுத்துவதைக் கற்றுக் கொண்டனர்.

இந்தக் கருத்தைத் தருவதற்காக

فَيَتَعَلَّمُونَ

என்ற சொல்லில் உள்ள

 فَ ஃபா

என்ற சொல்லுக்கு எனவே என்று நாம் மொழி பெயர்த்துள்ளோம்.

எனவே என்று காரணத்தைக் கூறுவதாக இருந்தால்

فَيَتَعَلَّمُونَ

என்று இறுதியில் நூன் இருக்கக் கூடாது. நூனை நீக்கி விட்டு

  فَيَتَعَلَّمُو

என்று தான் சொல்லப்படும்.

இவ்வசனத்தில் நூன் நீக்கப்படவில்லை என்பதால் எனவே என்று பொருள் செய்திருப்பது தவறு என்பது அவர்களின் வாதம்.

பாதி இலக்கணம் படித்ததால் இப்படி வாதிட்டுள்ளனர்.

இரு செய்திகளுக்கு இடையே ஃபா என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள்.

இரண்டாவதாக சொன்ன செய்திக்கு முதலில் சொன்ன செய்தி காரணமாக இருக்கும்.  இதன் காரணமாக இதை (சபபிய்யா) காரணத்துடன் இணைந்து வரும் ஃபா என்று சொல்லப்படுகிறது.

காரணத்துடன் இணைந்து  பயன்படுத்தப்படும்

 ஃபா فَ

என்ற சொல் இரு வகைகளில் பயன்படுத்தப்படும்.

ஒரு வகையான பயன்பாட்டில் வருங்கால வினையில் உள்ள நூன் நீக்கப்படும். 

இன்னொரு வகையான பயன்பாட்டில் நூன் நீக்கப்படாது.

இதை இரு உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

وَقُلْنَا يَاآدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ (35)2

இம்மரத்தை நெருங்காதீர்கள். அநியாயக்காரர்களில் நீங்கள் ஆகி விடுவீர்கள்.

இதில் இரண்டு செய்திகள் உள்ளன.

மரத்தை நெருங்காதீர்கள் என்பது முதல் செய்தி.

அநியாயக்காரராகி விடுவீர்கள் என்பது இரண்டாவது செய்தி.

இரண்டாவது செய்தியுடன் ஃபா என்பது சேர்ந்துள்ளது.

மரத்தை நெருங்கியது தான் அநியாயக்காரர்களாக ஆவதற்குக் காரணம்.

இந்த இடத்தில் அரபு மூலத்தில்

 فَتَكُونَا

என்று உள்ளது. இதன் அசல் வடிவம்

فَتَكُوْنَانِ

காரணமாக உள்ள இரண்டாம் வாக்கியத்தில் ஃபா இணைந்ததால் فَتَكُوْنَانِ

என்ற சொல்லில் நூன் நீக்கப்பட்டு

فَتَكُونَا

என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த விதியின் அடிப்படையில் தான் 2:102 வசனத்தில்

فَيَتَعَلَّمُونَ

என்ற சொல்லில் நூன் நீக்கப்படாமல் உள்ளதால் காரணம் என்ற பொருளில் எனவே என்று பொருள் செய்யக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

காரணமாக உள்ள வாக்கியத்துடன் ஃபா இணைவது இரு வகைகளில் உள்ளதை அறியாமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.

காரணம் நடந்து முடிந்த பின் அதன் விளைவைச் சொல்வது ஒரு வகை.

காரணம் நிகழ்வதற்கு முன் அதன் விளைவைச் சொல்வது இரண்டாம் வகை.

இம்மரத்தை நெருங்காதீர்கள். அநியாயக்காரராகி விடுவீர்கள் என்ற வாக்கியத்தை அல்லாஹ் சொல்லும் போது ஆதம் ஹவ்வா ஆகிய இருவரும் மரத்தை நெருங்கவில்லை. இனி நெருங்கினால் அநியாயம் செய்தவர்களாவீர் என்று சொல்லப்பட்டுள்ளது.

இது காரணம் நிகழ்வதற்கு முன் ஃபா இனைவதற்கு உதாரணமாகும்.

எனக்கு நீ உதவி செய்தாய்! எனவே நான் உனக்கு உதவி செய்வேன் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். நான் உதவி செய்வதற்கு நீ உதவி செய்தது தான் காரணம் என்ற கருத்து உள்ளது.

ஆனால் முதல் வாக்கியத்தில் இருந்து இது வேறுபடுகிறது.

முதல் உதாரணத்தில் மரத்தை நெருங்கவில்லை. இனிமேல் நெருங்கினால் அநியாயம் என்ற கருத்தில் உள்ளது.

இரண்டாம் உதாரணத்தில் உதவி செய்தல் எனும் காரியம் உன்னிடமிருந்து நிகழ்ந்து விட்டது. அதன் காரணமாக நான் உதவி செய்வேன் என்று சொல்லப்பட்டுள்ளது

காரணம் நிகழ்வதற்கு முன் அதனுடன் ஃபா சேர்த்தால் அப்போது தான் அதன்னுடன் இணைந்த வருங்கால வினையில் நூனை நீக்க வேண்டும்.

காரியம் நிகழ்ந்த பின் அதனுடன் ஃபா சேர்த்தால் அப்போது நூன் போகாது.

இந்த வேறுபாடு விளங்காமல் தான் அரபு இலக்கணத்தில் பிழை என்று வாதிடுகிறார்கள்.

இம்மரத்தை நெருங்காதீர்கள்.

அநியாயம் செய்தவர்களாவீர்

என்ற இரு வாக்கியத்துக்கு இடையில் அப்படி செய்தால் என்ற  வாக்கியம் மறைந்து இருக்கும்.

இம்மரத்தை நெருங்காதீர்கள்.

அப்படிச்செய்தால்

அநியாயம் செய்தவர்களாவீர்

என்பது இதன் முழு வடிவமாகும்.

இதனால் இதை

السببية الجزائية

என்று கூறுவார்கள்.

இரண்டாம் வகையில் எந்த வாக்கியமும் மறைந்து இருக்காது. எனவே அவற்றில் நூனை நீக்கக் கூடாது.

எனவே என்று பொருள் செய்யும் எல்லா இடங்களும் இந்த வகையானவை தான்.

உதாரணத்துக்கு சில வசனங்களை எடுத்துக் காட்டுகிறோம்.

مَا يَنْظُرُونَ إِلَّا صَيْحَةً وَاحِدَةً تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُونَ (49) فَلَا يَسْتَطِيعُونَ تَوْصِيَةً وَلَا إِلَى أَهْلِهِمْ يَرْجِعُونَ (50)36

அவர்கள் விவாதித்துக் கொண்டு இருக்கும் போது திடீரென பெரும் சப்தம் ஏற்பட்டு அவர்கள் அழிவார்கள். எனவே அவர்கள் தமது சொத்துக்கள் குறித்து மரண சாசனம் செய்ய இயலாது என்று அல்லாஹ் இவ்வசனங்களில் கூறுகிறான்.

அவர்கள் மரண சாசனம் செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் இதற்கு முன்னர் சொல்லப்பட்ட விஷயம் தான். அதாவது எதிர்பாராமல் கியாமத் நாள் வருவதால் மரண சாசனம் செய்ய இயலாது என்று இங்கே சொல்லப்படுகிறது.

இந்த இடத்தில்

فَلَا يَسْتَطِيعُونَ

என்று இறுதியில் நூன் நீக்கப்படாமல் உள்ளது.

فَلَا يَسْتَطِيعُو

சொல்லப்படவில்லை.

انْظُرْ كَيْفَ ضَرَبُوا لَكَ الْأَمْثَالَ فَضَلُّوا فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًا (48)17

அவர்கள் உமக்கு எப்படி உதாரணம் கூறுகின்றனர் எனக் கவனிப்பீராக! எனவே அவர்கள் வழிகெட்டனர் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவர்கள் வழி கெட்டதற்குக் காரணம் இதற்கு முன்னர் சொன்னது தான். அதாவது பொருத்தமில்லாத உதாரணங்களை நபிக்குப் பயன்படுத்தியதால் இவர்கள் வழிகெட்டனர்.

இந்த இடத்தில்

فَلَا يَسْتَطِيعُونَ

என்று இறுதியில் நூன் நீக்கப்படாமல் உள்ளது.

فَلَا يَسْتَطِيعُو

என்று சொல்லப்படவில்லை.

أُولَئِكَ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ رَبِّهِمْ وَلِقَائِهِ فَحَبِطَتْ أَعْمَالُهُمْ فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا (105)16

அவர்களின் அமல்கள் அழிந்து விட்டன. எனவே அவர்களுக்கு நாம் தராசை நிறுவ மாட்டோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவர்களின் அமல்கள் அழிந்து போனது தான் அவர்களுக்காக தராசை நிறுவாததற்குக் காரணம் என்பது எனவே என்ற சொல்லால் இங்கே உணர்த்தப்படுகிறது.

முதல் வகையான ஃபா என்ற சொல்லாக இருந்தால்

ஃபலா நுகீம

فَلَا نُقِيم

என்று வந்திருக்கும்.

ஃபலா நுகீமு என்று வந்திருக்காது.

காரணம் நிகழ்ந்த பின் காரியம் கூறப்படும் சொற்களில் ஃபா என்ற சொல் இடம் பெற்றால் அங்கே நூன் நீக்கப்படாது. இதனடிப்படையில் தான் 2:102 வசனத்தில் நூன் நீக்கப்படவில்லை

சூனியத்தைக் கற்றால் காஃபிராகி விடுவீர்கள் என்ற எச்சரிக்கை நிகழ்ந்து விட்டது. அதன் காரணமாக சூனியம் அல்லாததைக் கற்றனர் என்று சொல்லப்பட்டுள்ளதால் இது இரண்டாம் வகை ஃபா ஆகும்.

இதை விளங்காமல் விமர்சனம் செய்துள்ளனர் என்பதை இந்த விளக்கத்தின் மூலம் அறியலாம்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account