221. தண்ணீர் பொங்கிய போது
இவ்வசனங்களில் (11:40, 23:27) தண்ணீர் என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் 'தன்னூர்' என்ற சொல் இடம் பெற்றுள்ளது.
இது அரபு அல்லாத வேற்றுமொழிச் சொல்லாகும். பெரும்பாலான அறிஞர்கள் இதற்கு அடுப்பு என்று பொருள் கொண்டுள்ளனர். பாரசீகம், உருது ஆகிய மொழிகளில் அடுப்பு என்ற பொருளில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
தண்ணீர் என்பது தான் இதன் பொருள் என்று சில நபித்தோழர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இது தான் பொருத்தமாக இருக்கிறது. தண்ணீர் பொங்குவது வெளியில் தெரியக் கூடிய அழிவுக்கான அறிகுறி என்பது பொருத்தமாக உள்ளது. எனவே தன்னூர் என்பதற்கு நாம் தண்ணீர் என மொழி பெயர்த்துள்ளோம்.
221. தண்ணீர் பொங்கியபோது
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode