388. கவ்ஸர் என்றால் என்ன?
இவ்வசனத்தில் (108:1) கூறப்படும் கவ்ஸர் என்பதற்கு ‘அதிகமான நன்மைகள்' என்று சிலர் பொருள் கொண்டுள்ளனர். அகராதியில் இச்சொல்லுக்கு இந்தப் பொருள் இல்லை. நபிவழியிலும் இதற்குச் சான்று இல்லை.
அதிகமான நன்மைகள் என்று இப்னு அப்பாஸ் கூறியதாக புகாரீ 6578, 4966 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.
நியாயத் தீர்ப்பு நாளில் மக்கள் தாகத்தால் தவிக்கும் போது அவர்களுக்கு விநியோகம் செய்வதற்கு அல்லாஹ் கவ்ஸர் எனும் ஒரு தடாகத்தை ஏற்படுத்துவான். அதன் நீரை விநியோகம் செய்யும் பொறுப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வழங்கப்படும். இந்தத் தடாகத்தின் பெயரே கவ்ஸர் ஆகும். இது நபிகள் நாயகம் (ஸல்) அளித்த விளக்கமாகும். (பார்க்க: புகாரீ: 4964, 4965, 6581, 7517)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த விளக்கத்துக்கு மாற்றமாக உள்ள இப்னு அப்பாஸ் (ரலி) கூறிய விளக்கத்தை நாம் ஏற்கக் கூடாது.
388. கவ்ஸர் என்றால் என்ன?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode