Sidebar

10
Tue, Dec
4 New Articles

விவாதிக்க மறுப்பவர்களைப் பற்றி

நாத்திகம் பகுத்தறிவு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

விவாதிக்க மறுப்பவர்களைப் பற்றி

நீங்கள் பல விஷயங்கள் குறித்து விவாத அழைப்பு விடுக்கிறீர்கள். சிலர் அந்த அழைப்பை ஏற்று விவாதிக்க முன்வருகின்றனர். சிலர் அதை ஏற்க மறுத்து சில காரணங்களைக் கூறுகின்றனர். அந்தக் காரணங்கள் ஏற்புடையவையா?

பதில்:

(ஜெயமோகன் என்பவர் எழுதிய மறுப்பை ஒரு சகோதரர் சுட்டிக் காட்டி விளக்கம் கேட்ட அடிப்படையில் இது எழுதப்படுகிறது)

விவாதம் செய்ய மறுப்பவர்கள் தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள எதையாவது எழுதத் தான் செய்வார்கள். அவர்கள் விவாதிக்கத் தயாராக இல்லை என்றும் விவாதிக்கும் அளவுக்கு அந்த விஷயத்தில் அவர்களிடம் உண்மை இல்லை என்றும் நாம் புரிந்து கொண்டு அத்துடன் அதை விட்டு விடுகிறோம். நேரடியாக தங்களிடம் உண்மை இல்லை என்று அவர்களால் ஒப்புக் கொள்ள முடியாது.

அவர்கள் என்ன தான் காரணம் கூறினாலும் அதில் அவர்கள் உண்மையாளர்கள் அல்ல என்பதை நீங்கள் எளிதாகக் கண்டு பிடித்து விடலாம்.

நமது விவாத அழைப்பை ஏற்க மறுப்பதற்கு இவர்கள் சொல்லும் காரணம் உண்மை என்றால் அவர்கள் அதன்படி எல்லா நேரங்களிலும் நடந்து கொள்ள வேண்டும்.

ஆனால் அவர்கள் நமது அழைப்பை மறுப்பதற்கு முன்னால் பல விவாதங்களில் பங்கெடுத்துள்ளனர். தொலைக்காட்சியில் முகம் காட்டுவதற்காக நேரடி விவாதங்கள் பலவற்றைச் சந்தித்தவர்களாக இருக்கிறார்கள். அல்லது செய்தித் தாள்களில் பெயர் வர வேண்டுமென்பதற்காக பல விஷயங்களில் வாதங்களை எடுத்து வைத்து எதிரிகளின் வாதங்களை மறுத்துப் பேசியவர்களாக உள்ளனர்.

இதில் இருந்து அவர்கள் சொல்லும் காரணம் உண்மை இல்லை என்று அறிந்து கொள்ளலாம். கீழ்க்கண்ட காரணத்தையும் சொல்கிறார்கள்.

ஏனென்றால் அவற்றின் அடிப்படை என்பது நம்பிக்கை. அதாவது முதலில் இருப்பது உறுதியான மாற்ற முடியாத நம்பிக்கை. நபி மீது, அவர் முன்வைத்த அல்லாஹ் மீது ,அவரில் வெளிப்பட்ட குர்ஆன் மீது உறுதியான முழுமுற்றான நம்பிக்கையில் இருந்தே இஸ்லாம் உருவாகிறது. அவற்றைப் பற்றிய அவநம்பிக்கையை, மறுப்பை இஸ்லாம் மத நிந்தனைக் குற்றமாக மட்டுமே நினைக்கிறது. இந்நிலையில் எதைப் பற்றி விவாதிப்பது?

இப்படி காரணம் சொல்கிறார்கள்

மதத்தில் பிடிமானம் இருப்பதால் விவாதிப்பதால் பயன் இல்லை என்று இவர்கள் சொல்லும் காரணமும் கேலிக்குரியதாக உள்ளது. மதத்தில் நமக்குப் பிடிமானம் உள்ளது போல் அதற்கு எதிரான கருத்தில் அவர்களுக்குப் பிடிமானம் உள்ளது.

பிடிமானம் உள்ளதால் தான் அவர்கள் ஒரு கருத்திலும் நாம் ஒரு கருத்திலும் இருக்கிறோம்.

ஆனால் இப்படிச் சொல்பவர்கள் ஊடகங்கள் மூலம் இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு இது ஏன் பொருந்தாமல் போனது? ஊடகங்கள் மூலம் எழுதும் போது மட்டும் முஸ்லிம்களின் பிடிமானம் இல்லாமல் போய்விடுமா?

இந்த வாதத்தில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இஸ்லாம் குறித்து எதையும் எப்போதும் எழுதாமல் இருந்திருக்க வேண்டும்.

யார் இவர்களின் வாதங்களுக்குப் பதில் சொல்லத் தயாராக இருக்கிறார்களோ அந்தக் களத்துக்கு வந்து சொல்ல மாட்டார்களாம். பதில் சொல்ல யாரும் இல்லாத களத்தில் அல்லது பதில் சொன்னாலும் அதை வெளியிட மாட்டோம் என்று முடிவு செய்துள்ள களத்தில் மட்டும் தமது கருத்தை விவாதிப்பார்களாம்!

இவர்கள் சொன்ன காரணம் இதற்கு மட்டும் இது பொருந்தாதா?

அடுத்து அவர்கள் இன்னொரு விஷயத்தையும் சொல்லி இருக்கிறார்கள்.

ஆக, அந்த விவாதங்கள் எல்லாம் வெறும் மேடை நாடகங்கள் மட்டுமே. நானே ஜெய்னுலாப்தீன் அவர்களின் இரு நிகழ்ச்சிகளில் பார்வையாளராகப் பங்கெடுத்திருக்கிறேன். கேட்கப்படும் வினாக்கள் முன்னரே எழுதிக் கொடுக்கப்படுகின்றன. அந்த வினாக்களில் தேவையானவற்றை ஜெய்னுலாபிதீன் தேர்வு செய்கிறார். அதற்கு வழக்கமான விடைகளைச் சொல்கிறார். இதே நிகழ்ச்சியை இப்படியே சாது செல்லப்பா போன்ற பெந்தேகொஸ்தே பிரச்சாரகர்களும் செய்கிறார்கள்.

இதில் கடுகளவும் உண்மை இல்லை. அவர் என்னுடைய நிகழ்ச்சிக்கு வந்ததாகச் சொல்வது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது வேண்டுமென்றே அவர் பொய்யாகச் சொல்லி இருக்க வேண்டும்.

நான் பங்கேற்கும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியிலோ, வேறு கேள்வி பதில் நிகழ்ச்சிகளிலோ இவர் கூறுவது போல் கேள்விகளை முன்னரே எழுதிக் கொடுத்து கேட்கச் செய்யும் ஒரு நிகழ்ச்சி கூட நாம் நடத்தியதில்லை.

நிகழ்ச்சி ஆரம்பித்ததும் ஒரு முன்னுரையை நான் நிகழ்த்தி விட்டு ஒரு அறிவிப்பும் செய்வேன்.

இந்த நிகழ்ச்சி முன்னரே கேள்வியும், கேள்வி கேட்பவர்களும் தயார் செய்யப்பட்டு நடக்கும் நிகழ்ச்சி அல்ல. யார் கேள்வி கேட்க விரும்புகிறீர்களோ அவர்களுக்கு இனிமேல் தான் உங்கள் முன்னிலையில் தான் டோக்கன் கொடுக்கப்படும். யார் டோக்கன் வாங்கப் போகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் என்ன கேள்வி கேட்பார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. இஸ்லாம் குறித்து எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்குப் பதில் இருக்கிறது என்ற தன்னம்பிக்கை காரணமாகவே உங்களின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல நாம் தயாராக இருக்கிறோம் என்றும் இப்போது கேள்வி கேட்பவர்கள் கைகளை உயர்த்தினால் டோக்கன் தரப்படும் என்றும் அறிவித்து விட்டு டோக்கன் கொடுப்போம்.

ஆனால் அந்தச் சகோதரர் கூறுவது போல் கேள்விகளை செட்டிங் செய்து வேறு சிலர் பதில் சொல்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அந்த நிகழ்ச்சிக்கு அவர் சென்றிருக்கலாம். அது நாம் நடத்தும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிழ்ச்சி அல்ல.

இரண்டையும் போட்டு குழப்பிக் கொண்டதால் அவர் இப்படி எழுதிவிட்டாரோ என்னவோ தெரியவில்லை.

செட்டிங் என்பது தான் இவர்கள் விவாதிக்க மறுக்கக் காரணம் என்றால் அந்தக் காரணமும் நமக்குப் பொருந்தாது. செட்டிங் செய்து பதில் சொல்பவரை எதிர்கொள்வது எளிது. எதிர்பாராத அதிரடிக் கேள்விகளை என்னிடம் எழுப்ப இது வாய்பாக அமையும்.

ஈரானிலும் பாகிஸ்தானிலும் பலர் கொல்லப்பட்டுள்ளதாக இவர்கள் கூறுவதும் இதற்குச் சம்மந்தமில்லாதது. இது போன்ற பயங்கரவாதச் செயல்களை நாம் இவர்களை விட வலிமையாக எதிர்க்கிறோம். இதற்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தம் இல்லை என தெளிவுபடுத்தி வருகிறோம்.

09.02.2013. 22:03 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account