Sidebar

18
Thu, Apr
4 New Articles

அனைவரும் ஒன்றுபட முடியாதா

அரசியல் சமுதாயப் பிரச்சனைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அனைவரும் ஒன்று பட முடியாதா?

அன்பு ரஹ்மான்

உங்கள் கேள்வியில் உங்கள் நல்ல எண்ணம் தெரிகிறது. நாம் எதை ஆசைப்பட்டாலும் அது சத்தியமாகுமா என்பதை அடிப்படையாக வைத்துத் தான் ஆசைப்பட வேண்டும். அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துப் பார்த்துத் தான் ஆசைப்பட வேண்டும்.

இது பற்றி நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள சில விபரங்களை முன் வைக்கிறோம்.

நாங்கள் ஒற்றுமைக்கு எதிராக உள்ளதாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஒற்றுமை ஏற்படுத்தப் போகிறோம் என்று கூட்டப்படும் கூட்டங்களில் நாம் கலந்து கொள்வதில்லை என்பதால் இந்தப் பெயரை நாம் எடுத்துள்ளோம்.

நம்மை விட்டு விடுங்கள். நம்மைத் தவிர மற்ற இயக்கங்கள் இடையே பெருத்த வேறுபாடு இல்லை.

மார்க்க விஷயத்தில் உள்ள கருத்து வேறுபாடுகளைப் பிரச்சாரம் செய்யக் கூடாது எனக் கூறும் இவர்கள் எங்களை மட்டும் எதிர்க்கலாம் என்ற நிலபாட்டில் உள்ளனர்.

நம்மை எதிர்ப்பதிலும், தமக்கிடையே எதிர்த்துச் செயல்படக் கூடாது என்பதிலும் இவர்கள் ஒத்த கருத்தில் உள்ளதால் நம்மை மட்டும் ஓரம் கட்டிவிட்டு அவர்கள் ஒன்று படலாம் அல்லவா? ஏன் இவர்கள் ஒன்றுபடவில்லை?

நம்மை எதிர்க்கும் தீர்மானம் நிறைவேற்றும் ஒரு விஷயத்தில் தவிர வேறு எதிலாவது இவர்கள் ஒன்று பட்டதுண்டா?

ஒற்றுமைக்கு ஆசைப்படும் தனவந்தர்கள் இதற்காக பல தடவை முயற்சி எடுத்துப் பார்த்தனர். பல தடவை ஒற்றுமைக்கு கூட்டம் கூட்டப்பட்டதுண்டு. விருந்து சாப்பிட்டுக் கலைந்தது தவிர ஒற்றுமை ஏன் ஏற்படவில்லை என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?

ஒற்றுமை சாத்தியம் என்பதில் இவர்கள் ஒத்த கருத்துள்ளவர்கள் தானே?

மார்க்க அடிப்படையில் உள்ள கருத்து வேறுபாடுகளைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்று இவர்கள் பிரச்சாரம் செய்பவர்கள் தானே?

ஒத்த கருத்துடைய இவர்கள் நம்மை மட்டும் ஒதுக்கி விட்டு ஒன்றுபட்டு காட்டலாம் அல்லவா?

தேர்தலில் ஒன்றுபட்டு ஒரு முடிவு எடுத்துக் காட்டட்டும்.

அல்லது டிசம்பர் போராட்டம் போன்றவைகளில் ஒன்றுபட்டுக் காட்டட்டும்.

சமுதாயத்தைப் பாதிக்கும் விஷயங்கள் அனைத்திலும் அவர்கள் ஒன்றுபட்டு ஒரே முடிவை எடுத்துக் காட்டட்டும்.

உங்களைப் போன்றவர்களின் ஆதரவை இழந்து விடக் கூடாது என்பதற்காக ஐம்பது வருடமாக ஒற்றுமைக்கு நாங்களும் தயார் என்று கூறி நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டு அதற்காக போராட்டம் நடத்த இவர்கள் கூடினால் அந்த நிமிடமே சிதைந்து போய் விடுவார்கள். ஏனெனில் திமுகவின் அடிமைகளாக இருக்கும் இயக்கத்தினர் இதற்கு உடன்பட மாட்டார்கள்.

அது போல் அதிமுக ஆட்சி நடக்கும் போது முஸ்லிம்களுக்குக் கொடுமை நடந்து அதை எதிர்த்துப் போராடினால் அதிமுக அடிமைகளால் அந்த ஒற்றுமை சிதைந்து விடும்.

தேர்தல் வந்து விட்டால் ஒரு பக்கமாக வாக்கு வங்கியைத் திருப்பி சமுதாயம் பயன் அடையும் வகையில் முடிவு எடுக்க முடியுமா? ஏற்கனவே இவர்கள் ஒரு பக்கம் செட்டாகி உள்ளதால் அந்தப் பக்கம் போய் விடுவார்கள்.

டிசம்பர் ஆறு போன்ற விஷயங்களில் ஒன்றுபட்டு போராடுவர்களா?

யார் பெரிய சக்தி? யாருடைய பெயரை முதலில் போடுவது? யார் சிறப்புரை ஆற்றுவது? என்பதில் சண்டை போட்டுக் கொள்வார்கள். ஒவ்வொருவரும் தம்மைத் தாமே பாராட்டிக் கொண்டு அங்கேயே சண்டை ஆரம்பமாகி விடும்.

ஒற்றுமைக்கு பாடுபடும் இவர்கள் அது எப்படி நடக்கும் என்ற திட்டம் இல்லாமல், நடக்காத ஒன்றை நடக்கும் என்று நம்புவது ஒரு வகை மனநோயாகும். இதற்காக செய்யப்பட்ட முயற்சிகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

ஒற்றுமைக்கு முயற்சித்தவர்கள் பின்னர் தனி இயக்கமாக ஆகி இன்னொரு பிரிவு அதிகமானதைத் தவிர வேறு எந்தப் பயனும் இதனால் ஏற்படாது. ஏற்பட்டதுமில்லை

இதன் பிறகும் இந்த உண்மை எப்படி உங்களுக்குப் புரியவில்லை.

எனவே தலைவர்கள் ஒற்றுமையை விட மக்கள் ஒற்றுமை மிக எளிதானது. ஏனெனில் மக்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. தலைவர்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளது.

யார் இயக்கம் அமைத்தாலும் அதை ஆதரிக்க நாலு பேர் முன் வந்து விட்டு நாமே இயக்கங்களின் எண்ணிக்கையை அதிகமாக்கி விட்டு பின்னர் ஒன்று படுங்கள் என்று கூறுவதில் ஒரு பயனும் ஏற்படாது.

இருக்கும் இயக்கங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து தகுதி இல்லாததாக தெரியும் இயக்கங்களை விட்டு விலகி சரியான இயக்கங்கள் பால் மக்கள் மாறினால் ஒற்றுமை தானாக ஏற்படும்.

நூறு சதவிகிதம் நல்ல மனிதன் இருக்க முடியாது என்பது போல் நூறு சதவிகிதம் நல்ல இயக்கமும் இருக்க முடியாது. ஆனால் உள்ளதில் சிறந்த இயக்கத்தைக் கண்டறிய முடியும்.

நாட்டில் உள்ள எல்லா இயக்கங்களையும் பாருங்கள். அனைத்து இயக்கங்கள் மீதும் உள்ள பற்றை ஓரமாக வைத்து விட்டு ஒவ்வொரு இயக்கமாக எடை போடுங்கள்.

எந்த இயக்கத்தின் தலைவர்கள் தங்களுடைய பணத்தை அல்லது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்காக உள்ளனர்? இயக்கம் ஆரம்பித்து அதன் மூலம் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள் யார்?

ஊழல், ஒழுக்கக் கேடு, சுய நலன், தனி மரியாதை, கட்அவுட்கள், தனிமனித துதி பாடல், இஸ்லாமிய நெறிமுறைகளை மீறுதல், பதவிக்காக அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்குதல், செல்வந்தர்கள் முன்னிலையில் பல்லிளித்து சாமான்ய மக்களை அலட்சியப்படுத்துவது, மக்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்தல், கொண்ட கொள்கையை மாற்றிக் கொள்வது, அனைத்து விதமான சமரசங்களையும் செய்து கொள்வது, வாக்கு மீறுவது என்று தீய பண்புகள் யாரிடம் இல்லை அல்லது எங்கே குறைவாக உள்ளது என்று சீர்தூக்கிப் பாருங்கள்!

எந்தக் கேள்வி கேட்டாலும் ஏற்கத்தக்க பதில் சொல்லும் தன்மை எங்கே அதிகமாக உள்ளது.

செய்யும் அனைத்து காரியத்திலும் மார்ர்க்கத்தின் விதிமுறை மீறப்படாமல் உள்ளதா என்று கவனமாகச் செயல்படுவோர் யார்? இன்னும் அத்தனை விஷயங்களையும் எடை போடுங்கள்.

எந்த இயக்கம் அதிக மதிப்பெண் பெறுகிறதோ அதில் உங்களை இணைத்துக் கொண்டு மார்க்கத்துக்கு முரணில்லாத விஷயங்களில் அந்த இயக்கத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க முடிவு செய்யுங்கள். மற்ற இயக்கங்களில் இருந்து விலகுங்கள். தலைவர்கள் மக்களை விட்டு தனியாகி விடுவார்கள். மக்கள் ஒற்றுமை தானாக ஏற்பட்டு விடும்

அனைவருக்கும் ஒரு பக்கம் நீங்களே அங்கீகாரம் கொடுத்து விட்டு ஒன்றுபட மாட்டீர்களா என்று இன்னொரு பக்கம் கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

இது குறித்து உங்களுக்குக் குழப்பம் இருந்தால் அனைத்து குழப்பங்களையும் தெளிவுபடுத்தும் உரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை கேட்கவும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account