Sidebar

09
Wed, Oct
50 New Articles

அத்தியாயம் : 4 உளூ (135-247)

புகாரி தமிழாக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

‏4 - كِتَابُ الوُضُوءِ

அத்தியாயம் : 4 உளூ

بَابُ مَا جَاءَ فِي الوُضُوءِ
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاَةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى المَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى ‏الكَعْبَيْنِ} قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «وَبَيَّنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ فَرْضَ الوُضُوءِ مَرَّةً مَرَّةً، وَتَوَضَّأَ أَيْضًا مَرَّتَيْنِ وَثَلاَثًا، ‏وَلَمْ يَزِدْ عَلَى ثَلاَثٍ، وَكَرِهَ أَهْلُ العِلْمِ الإِسْرَافَ فِيهِ، وَأَنْ يُجَاوِزُوا فِعْلَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»‏

பாடம் : 1‎

உளூ செய்வது குறித்த செய்திகள்

அல்லாஹ் கூறுகிறான்:‎

‎நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் ‎போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் ‎கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் ‎கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் ‎கொள்ளுங்கள்!‎

திருக்குர்ஆன் 5:6‎

அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:‎

உளூ செய்யும் போது உறுப்புக்களை ஒரு தடவை கழுவுவது ‎தான் கட்டாயம் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎தெளிவுபடுத்தியுள்ளார்கள். மேலும் அவர்கள் இரண்டிரண்டு ‎தடவைகளும், மும்மூன்று தடவைகளும் (கழுவி) உளூ ‎செய்திருக்கிறார்கள். மூன்று தடவைக்கு மேல் அதிகப்படுத்தியது ‎இல்லை.‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்முறைக்கு மாற்றம் ‎செய்வதையும், உளூ செய்வதில் இந்த வரம்பை மீறுவதையும் ‎மார்க்க அறிஞர்கள் வெறுத்திருக்கிறார்கள்.‎

بَابٌ: لاَ تُقْبَلُ صَلاَةٌ بِغَيْرِ طُهُورٍ

பாடம் : 2‎

தூய்மையின்றித் தொழுகை ஏற்கப்படாது


‏135 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الحَنْظَلِيُّ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ ‏أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُقْبَلُ صَلاَةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ» قَالَ رَجُلٌ مِنْ ‏حَضْرَمَوْتَ: مَا الحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ؟، قَالَ: فُسَاءٌ أَوْ ضُرَاطٌ

135. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுதுடக்கு ‎ஏற்பட்டவர் உளூசெய்யாத வரை அவருடைய தொழுகை ‎ஏற்கப்படாது எனக் கூறியதாக அபுஹுரைரா (ரலி) அவர்கள் ‎கூறினார்கள். அப்போது ஹள்ரமவ்த் என்ற ஊரைச் சேர்ந்த ‎ஒருவர் அபூஹுரைரா (ரலி) அவர்களே! சிறுதுடக்கு என்பது ‎என்ன?' என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் ‎சப்தத்துடனோ, சப்தமின்றியோ காற்றுப் பிரிவது' என்று ‎பதிலளித்தார்கள்.‎

அறிவிப்பவர் : ஹம்மாம் பின் முனப்பஹ்


بَابُ فَضْلِ الوُضُوءِ، وَالغُرُّ المُحَجَّلُونَ مِنْ آثَارِ الوُضُوءِ

பாடம் : 3‎

உளூவின் சிறப்பும் உளூ செய்தோரின் முகம், கை, கால் ஆகியன ‎‎(மறுமையில்) பிரகாசிப்பதும்.‎

‏136 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ خَالِدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ نُعَيْمٍ المُجْمِرِ، قَالَ: رَقِيتُ مَعَ ‏أَبِي هُرَيْرَةَ عَلَى ظَهْرِ المَسْجِدِ، فَتَوَضَّأَ، فَقَالَ: إِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ «إِنَّ أُمَّتِي يُدْعَوْنَ يَوْمَ القِيَامَةِ ‏غُرًّا مُحَجَّلِينَ مِنْ آثَارِ الوُضُوءِ، فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ»‏

136. பள்ளிவாசலின் மாடியில் அபூ ஹுரைரா (ரலி) அவர்களுடன் ‎நானும் ஏறிச் சென்றேன். அபூஹுரைரா (ரலி) அவர்கள் உளூ ‎செய்தார்கள். (உளூ செய்து முடித்ததும்) மறுமை நாளில் என் ‎சமுதாயத்தார் முகம், கை, கால் பிரகாசிப்போரே! என்று ‎அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் எவருக்குத் தமது ‎பிரகாசத்தை நீட்டிக்கொள்ள முடியுமோ அதனைச் செய்து ‎கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறியதைக் கேட்டிருக்கிறேன் என்றனர்.‎

அறிவிப்பவர் : நுஅய்ம் அல்முஜ்மிர்

بَابُ مَنْ لاَ يَتَوَضَّأُ مِنَ الشَّكِّ حَتَّى يَسْتَيْقِنَ

பாடம் : 4‎

உறுதியாகத் தெரியும் வரை சந்தேகப்பட்டு உளூ செய்யத் ‎தேவையில்லை


‏137 - حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، ح وَعَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، ‏أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلُ الَّذِي يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّيْءَ فِي الصَّلاَةِ؟ فَقَالَ: «لاَ يَنْفَتِلْ - أَوْ لاَ ‏يَنْصَرِفْ - حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا»‏


‎137. தொழும் போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ‎ஒருவருக்கு ஏற்படுகிறது என்று நான் அல்லாஹ்வின் தூதர் ‎‎(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள் ‎சப்தத்தைக் கேட்காத வரை அல்லது நாற்றத்தை உணராத வரை ‎‎(தொழுகையிலிருந்து) திரும்ப வேண்டாம் என்றனர்.‎

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி)‎


بَابُ التَّخْفِيفِ فِي الوُضُوءِ

பாடம் : 5‎

சுருக்கமாக உளூ செய்தல்

‏138 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ: أَخْبَرَنِي كُرَيْبٌ، عَنِ ابْنِ عَبَّاسٍ " أَنَّ النَّبِيَّ صلّى ‏الله عليه وسلم نَامَ حَتَّى نَفَخَ، ثُمَّ صَلَّى - وَرُبَّمَا قَالَ: اضْطَجَعَ حَتَّى نَفَخَ، ثُمَّ قَامَ فَصَلَّى - " ثُمَّ حَدَّثَنَا بِهِ سُفْيَانُ، مَرَّةً بَعْدَ ‏مَرَّةٍ عَنْ عَمْرٍو، عَنْ كُرَيْبٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ لَيْلَةً فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ اللَّيْلِ، ‏فَلَمَّا كَانَ فِي بَعْضِ اللَّيْلِ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَتَوَضَّأَ مِنْ شَنٍّ مُعَلَّقٍ وُضُوءًا خَفِيفًا يُخَفِّفُهُ - عَمْرٌو وَيُقَلِّلُهُ -، ‏وَقَامَ يُصَلِّي، فَتَوَضَّأْتُ نَحْوًا مِمَّا تَوَضَّأَ، ثُمَّ جِئْتُ فَقُمْتُ، عَنْ يَسَارِهِ - وَرُبَّمَا قَالَ سُفْيَانُ عَنْ شِمَالِهِ - فَحَوَّلَنِي فَجَعَلَنِي ‏عَنْ يَمِينِهِ، ثُمَّ صَلَّى مَا شَاءَ اللَّهُ، ثُمَّ اضْطَجَعَ فَنَامَ حَتَّى نَفَخَ، ثُمَّ أَتَاهُ المُنَادِي فَآذَنَهُ بِالصَّلاَةِ، فَقَامَ مَعَهُ إِلَى الصَّلاَةِ، فَصَلَّى ‏وَلَمْ يَتَوَضَّأْ» قُلْنَا لِعَمْرٍو إِنَّ نَاسًا يَقُولُونَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَنَامُ عَيْنُهُ وَلاَ يَنَامُ قَلْبُهُ» قَالَ عَمْرٌو ‏سَمِعْتُ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ يَقُولُ: " رُؤْيَا الأَنْبِيَاءِ وَحْيٌ، ثُمَّ قَرَأَ {إِنِّي أَرَى فِي المَنَامِ أَنِّي أَذْبَحُكَ} [الصافات: 102] "‏

138. நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் ‎இல்லத்தில் ஓரிரவு தங்கியிருந்தேன். இரவின் ஒரு பகுதி ‎ஆனதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து, ‎தொங்கவிடப்பட்டிருந்த ஒரு பழைய தோல்பையிலிருந்து, ‎சுருக்கமாக உளூ செய்தார்கள்.‎

‎-(இதனை அறிவிப்பவர்களில் ஒருவரான) அம்ர் பின் தீனார் ‎அவர்கள், சுருக்கமாக உளூ செய்தார்கள்' என்பதோடு குறைந்தபட்ச ‎அளவில்' என்ற வார்த்தையையும் சேர்த்துக் கூறினார்கள்.-‎

பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவதற்கு ‎நின்றார்கள். உடனே நானும் அவர்களைப் போன்றே உளூ ‎செய்துவிட்டு அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்று கொண்டேன். ‎உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி ‎தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்திக் கொண்டார்கள். பின்னர் ‎அவர்கள் அல்லாஹ் நாடிய அளவு தொழுதுவிட்டுப் பின்னர் ‎மீண்டும் சாய்ந்துபடுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பிறகு ‎அவர்களிடம் தொழுகை அழைப்பாளர் வந்து தொழுகைக்கு ‎அவர்களை அழைத்தார். அப்போது எழுந்து அவருடன் போய் ‎மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். (மீண்டும்) அவர்கள் உளூ ‎செய்யவில்லை.‎

‎(இதன் அறிவிப்பாளரான) சுஃப்யான் பின் உயைனா அவர்கள் ‎கூறுகின்றார்கள்:‎

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கண்கள் தாம் ‎உறங்குகின்றன; அவர்களின் உள்ளம் உறங்காது என்று மக்கள் ‎கூறுகின்றனரே! என்று நாங்கள் அம்ர் பின் தீனார் அவர்களிடம் ‎கேட்டோம். அதற்கு அம்ர் அவர்கள் இறைத்தூதர்களின் கனவு ‎இறைவனிடமிருந்து வரும் செய்தியாகும்' என்று உபைத் பின் ‎உமைர் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என்று ‎கூறினார்கள். பிறகு (மகனே!) உன்னை நான் அறுத்துப் ‎பலியிடுவதாக கனவு கண்டேன் என்று (இப்ராஹீம் நபி கூறிய ‎திருக்குர்ஆன் 37:102 ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள்.‎

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் சுஃப்யான் ‎அவர்கள் சில நேரங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎குறட்டைவிட்டுத் தூங்கிவிட்டு பிறகு (எழுந்து) தொழுவார்கள்' ‎என்றும், மற்ற சில நேரங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎சாய்ந்துபடுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பிறகு எழுந்து ‎தொழுதார்கள்' என்றும் அறிவித்துள்ளார்கள். ஆனால், மேற்கண்ட ‎முழு ஹதீஸிலுள்ளவாறே பல்வேறு சந்தர்ப்பங்களில் ‎அறிவித்துள்ளார்கள்.‎

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)‎

بَابُ إِسْبَاغِ الوُضُوءِ

وَقَالَ ابْنُ عُمَرَ: «إِسْبَاغُ الوُضُوءِ الإِنْقَاءُ»‏

பாடம் : 6‎

உளூவை முழுமையாகச் செய்தல்.‎

இப்னு உமர் (ரலி) அவர்கள், உளூவை முழுமையாகச் செய்தல்' ‎என்பதன் கருத்து நன்கு தூய்மைப்படுத்துதல் என்பது தான்' என்று ‎கூறியுள்ளார்கள்.‎

‏139 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّهُ ‏سَمِعَهُ يَقُولُ: دَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عَرَفَةَ حَتَّى إِذَا كَانَ بِالشِّعْبِ نَزَلَ فَبَالَ، ثُمَّ تَوَضَّأَ وَلَمْ يُسْبِغِ ‏الوُضُوءَ فَقُلْتُ الصَّلاَةَ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ: «الصَّلاَةُ أَمَامَكَ» فَرَكِبَ، فَلَمَّا جَاءَ المُزْدَلِفَةَ نَزَلَ فَتَوَضَّأَ، فَأَسْبَغَ الوُضُوءَ، ثُمَّ ‏أُقِيمَتِ الصَّلاَةُ، فَصَلَّى المَغْرِبَ ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ، ثُمَّ أُقِيمَتِ العِشَاءُ فَصَلَّى، وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا

‎139. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து ‎கிளம்பி, அங்கிருந்த ஒரு கணவாயில் இறங்கிச் சிறுநீர் ‎கழித்தார்கள். பின்னர் உளூ செய்தார்கள்; உளூவை ‎முழுமையாக்கவில்லை. அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! ‎‎(இங்கு) தொழப் போகிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு ‎அவர்கள், தொழுகை உமக்கு முன்னர் (உள்ள முஸ்தலிஃபாவில்) ‎நடைபெறும் என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறிக் ‎கொண்டார்கள். முஸ்தலிஃபா வந்ததும், இறங்கி மீண்டும் உளூ ‎செய்தார்கள். இப்போது உளூவை முழுமையாக்கினார்கள். பின்னர் ‎தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும், மஃக்ரிப் தொழுகை ‎நடத்தினார்கள். பிறகு ஒவ்வொரு மனிதரும் தத்தமது ‎ஒட்டகத்தை தம் தங்குமிடங்களில் படுக்க வைத்தனர். தொடர்ந்து ‎இஷாத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்ட போது அதையும் ‎தொழுவித்தார்கள். (மஃக்ரிப், இஷா ஆகிய) இரு ‎தொழுகைகளுக்கிடையிலும் வேறெந்தத் தொழுகையையும் ‎அவர்கள் தொழவில்லை.‎

அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி)‎

بَابُ غَسْلِ الوَجْهِ بِاليَدَيْنِ مِنْ غَرْفَةٍ وَاحِدَةٍ

பாடம் : 7‎

ஒரு கையில் தண்ணீர் அள்ளி இரண்டு கைகளையும் சேர்த்துக் ‎கொண்டு முகத்தைக் கழுவுதல்.‎


‏140 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ: أَخْبَرَنَا أَبُو سَلَمَةَ الخُزَاعِيُّ مَنْصُورُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ بِلاَلٍ يَعْنِي ‏سُلَيْمَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ «تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ، أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، ‏فَمَضْمَضَ بِهَا وَاسْتَنْشَقَ، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَجَعَلَ بِهَا هَكَذَا، أَضَافَهَا إِلَى يَدِهِ الأُخْرَى، فَغَسَلَ بِهِمَا وَجْهَهُ، ثُمَّ أَخَذَ ‏غَرْفَةً مِنْ مَاءٍ، فَغَسَلَ بِهَا يَدَهُ اليُمْنَى، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَغَسَلَ بِهَا يَدَهُ اليُسْرَى، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ ‏مَاءٍ، فَرَشَّ عَلَى رِجْلِهِ اليُمْنَى حَتَّى غَسَلَهَا، ثُمَّ أَخَذَ غَرْفَةً أُخْرَى، فَغَسَلَ بِهَا رِجْلَهُ، يَعْنِي اليُسْرَى» ثُمَّ قَالَ: هَكَذَا رَأَيْتُ ‏رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ

‎140. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உளூ செய்தார்கள். அப்போது ‎தமது முகத்தைக் கழுவினார்கள். - அதாவது ஒரு கைத் தண்ணீர் ‎எடுத்து அதன் மூலம் வாய் கொப்பளித்து, மூக்கிற்கும் நீர் ‎செலுத்தினார்கள்.‎

பிறகு ஒரு கைத் தண்ணீர் அள்ளி அதனை –இவ்வாறு - ‎மற்றொரு கையால் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தமது ‎முகத்தைக் கழுவினார்கள்.‎

பிறகு ஒரு கைத் தண்ணீர் அள்ளி அதன் மூலம் தமது வலக் ‎கையைக் கழுவினார்கள். பின்னர் ஒரு கைத் தண்ணீர் அள்ளி ‎அதன் மூலம் தமது இடக் கையைக் கழுவினார்கள். பிறகு தமது ‎‎(ஈரக் கையால்) தலையைத் தடவி மஸ்ஹுச் செய்தார்கள்.‎

பிறகு ஒரு கைத் தண்ணீர் அள்ளி அதனைத் தமது வலக் காலின் ‎மீது சிறுகச் சிறுக ஊற்றி அதனைக் கழுவினார்கள். பின்னர் ‎இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தமது இடது காலில் ஊற்றிக் ‎கழுவினார்கள்.‎

பிறகு இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூ ‎செய்ய நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : அதா பின் யஸார்

بَابُ التَّسْمِيَةِ عَلَى كُلِّ حَالٍ وَعِنْدَ الوِقَاعِ

பாடம் : 8‎

தாம்பத்திய உறவின்போதும், மற்ற எல்லா நிலைகளிலும் ‎அல்லாஹ்வின் பெயரைக் கூறுவது

‏141 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، ‏يَبْلُغُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَتَى أَهْلَهُ قَالَ بِاسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا ‏رَزَقْتَنَا، فَقُضِيَ بَيْنَهُمَا وَلَدٌ لَمْ يَضُرُّهُ»‏

141. உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் செல்லும் போது ‎பிஸ்மில்லாஹ் -அல்லாஹ்வின் திருப்பெயரால்... இறைவா! ‎ஷைத்தானை எங்களை விட்டு விலகியிருக்கச் செய்! எங்களுக்கு ‎நீ அளிக்கின்ற (குழந்தைச் செல்வத்)திலிருந்தும் ஷைத்தானை ‎விலகியிருக்கச் செய்! என்று பிரார்த்தித்து அதன் மூலம் ‎அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ‎ஷைத்தான் தீங்கு விளைவிப்பதில்லை என்று நபிகள் நாயகம் ‎‎(ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)‎

بَابُ مَا يَقُولُ عِنْدَ الخَلاَءِ

பாடம் : 9‎

கழிப்பிடம் செல்லும் போது சொல்ல வேண்டியவை

‏142 - حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ العَزِيزِ بْنِ صُهَيْبٍ، قَالَ: سَمِعْتُ أَنَسًا، يَقُولُ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ ‏وَسَلَّمَ إِذَا دَخَلَ الخَلاَءَ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الخُبُثِ وَالخَبَائِثِ» تَابَعَهُ ابْنُ عَرْعَرَةَ، عَنْ شُعْبَةَ، وَقَالَ غُنْدَرٌ، عَنْ ‏شُعْبَةَ «إِذَا أَتَى الخَلاَءَ» وَقَالَ مُوسَى عَنْ حَمَّادٍ «إِذَا دَخَلَ» وَقَالَ سَعِيدُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ «إِذَا أَرَادَ أَنْ يَدْخُلَ»‏

142. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைய ‎முற்படும் போது, இறைவா! ஆண் பெண் ஷைத்தானிலிருந்து ‎உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவார்கள்.‎

இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் ‎வந்துள்ளது. ஷுஅபா அவர்களின் ஓர் அறிவிப்பில் நுழைய ‎முற்பட்டால்' என்றும், அப்துல் அஸீஸ் அவர்களின் அறிவிப்பில் ‎நுழைய நினைத்தால்' என்றும் இடம்பெற்றுள்ளது.‎

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)‎

بَابُ وَضْعِ المَاءِ عِنْدَ الخَلاَءِ

பாடம் : 10‎

கழிப்பிடம் அருகில் தண்ணீர் வைத்தல்

‏143 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا هَاشِمُ بْنُ القَاسِمِ، قَالَ: حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنِ ابْنِ ‏عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الخَلاَءَ، فَوَضَعْتُ لَهُ وَضُوءًا قَالَ: «مَنْ وَضَعَ هَذَا فَأُخْبِرَ فَقَالَ اللَّهُمَّ فَقِّهْهُ فِي ‏الدِّينِ»‏

143. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் ‎நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்காக நான் தண்ணீர் ‎வைத்தேன். இதை வைத்தவர் யார்? என்று கேட்டார்கள். ‎அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே இறைவா! இவருக்கு ‎மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பாயாக! என்று (எனக்காக) ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.‎

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)‎

بَابٌ: لاَ تُسْتَقْبَلُ القِبْلَةُ بِغَائِطٍ أَوْ بَوْلٍ، إِلَّا عِنْدَ البِنَاءِ، جِدَارٍ أَوْ نَحْوِهِ

பாடம் : 11‎

மலஜலம் கழிக்கும் போது கிப்லா திசையை முன்னோக்கக் ‎கூடாது. மதில், அல்லது கட்டடம் இருந்தால் தவறில்லை


‏144 - حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ ‏الأَنْصَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا أَتَى أَحَدُكُمُ الغَائِطَ، فَلاَ يَسْتَقْبِلِ القِبْلَةَ وَلاَ يُوَلِّهَا ظَهْرَهُ، شَرِّقُوا ‏أَوْ غَرِّبُوا»‏

‎144. உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் ‎கிப்லாவை முன்னோக்க வேண்டாம். தமது முதுகுப் புறத்தால் ‎பின்னோக்கவும் வேண்டாம். கிழக்கு நோக்கியோ, மேற்கு ‎நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் ‎‎(ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி)‎

‎(குறிப்பு: இந்த ஹதீஸ், கிப்லா தெற்கு வடக்காக அமைந்த ‎மதீனா, யமன், சிரியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கே ‎பொருந்தும். நமது நாட்டைப் பொறுத்த வரையில் கிப்லா ‎மேற்குத் திசையில் அமைந்துள்ளதால் வடக்கு தெற்காக அமர ‎வேண்டும்.)‎

بَابُ مَنْ تَبَرَّزَ عَلَى لَبِنَتَيْنِ

பாடம் : 12‎

இரண்டு செங்கற்களின் மீது அமர்ந்து மலம் கழித்தல்

‏145 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَمِّهِ، ‏وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقُولُ: إِنَّ نَاسًا يَقُولُونَ إِذَا قَعَدْتَ عَلَى حَاجَتِكَ فَلاَ تَسْتَقْبِلِ القِبْلَةَ وَلاَ بَيْتَ ‏المَقْدِسِ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: لَقَدْ ارْتَقَيْتُ يَوْمًا عَلَى ظَهْرِ بَيْتٍ لَنَا، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «عَلَى ‏لَبِنَتَيْنِ، مُسْتَقْبِلًا بَيْتَ المَقْدِسِ لِحَاجَتِهِ». وَقَالَ: لَعَلَّكَ مِنَ الَّذِينَ يُصَلُّونَ عَلَى أَوْرَاكِهِمْ؟ فَقُلْتُ: لاَ أَدْرِي وَاللَّهِ. قَالَ مَالِكٌ: ‏يَعْنِي الَّذِي يُصَلِّي وَلاَ يَرْتَفِعُ عَنِ الأَرْضِ، يَسْجُدُ وَهُوَ لاَصِقٌ بِالأَرْضِ

145. இயற்றைக் கடனை நிறைவேற்ற அமரும் போது ‎கிப்லாவையோ, பைத்துல் மக்திஸையோ முன்னோக்கக் கூடாது ‎என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் ஒரு நாள் எங்கள் ‎வீட்டின் கூரையின் மீது ஏறினேன். தற்செயலாக அல்லாஹ்வின் ‎தூதர் (ஸல்) அவர்கள் இரு செங்கற்களின் மீது பைத்துல் ‎மக்திஸின் திசையை முன்னோக்கிய படி இயற்கைக் கடனை ‎நிறைவேற்ற அமர்ந்திருக்கக் கண்டேன் என்று அப்துல்லாஹ் ‎பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். பிறகு என்னிடம் ‎புட்டங்களில் தொழுபவர்களில் நீங்களும் ஒருவரோ! என்று ‎கேட்டார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ‎‎(நான் அவ்வாறு தொழுதேனா என்று) எனக்குத் தெரியாது ‎என்றேன்.‎

அறிவிப்பவர் : வாஸிவு பின் ஹப்பான்

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மாலிக் அவர்கள் ‎கூறுகிறார்கள்:‎

தரையுடன் (தம் புட்டத்தை) அப்பிக் கொண்டவராகவும், ‎புட்டத்தைத் தரையிலிருந்து உயர்த்தாமலும் சஜ்தா செய்பவரைத் ‎தான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (இடித்துக்) ‎கூறினார்கள்.‎

بَابُ خُرُوجِ النِّسَاءِ إِلَى البَرَازِ

பாடம் : 13‎

இயற்றைக் கடனை நிறைவேற்ற பெண்கள் வெட்டவெளிகளுக்குச் ‎செல்லுதல்

‏146 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ ‏أَزْوَاجَ النَّبِيّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنَّ يَخْرُجْنَ بِاللَّيْلِ إِذَا تَبَرَّزْنَ إِلَى المَنَاصِعِ وَهُوَ صَعِيدٌ أَفْيَحُ " فَكَانَ عُمَرُ يَقُولُ لِلنَّبِيِّ ‏صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: احْجُبْ نِسَاءَكَ، فَلَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ "، فَخَرَجَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ، زَوْجُ ‏النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَيْلَةً مِنَ اللَّيَالِي عِشَاءً، وَكَانَتِ امْرَأَةً طَوِيلَةً، فَنَادَاهَا عُمَرُ: أَلاَ قَدْ عَرَفْنَاكِ يَا سَوْدَةُ، حِرْصًا ‏عَلَى أَنْ يَنْزِلَ الحِجَابُ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ الحِجَابِ

146. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியர் இயற்கைக் ‎கடனை நிறைவேற்ற இரவு நேரத்தில் மனாஸிஉகளுக்கு ‎வெளியே செல்பவர்களாய் இருந்தார்கள். - மனாஸிஉ என்பது ‎விசாலமான திறந்த வெளிகளாகும்.- உங்கள் துணைவியரை ‎உடலை மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள் என்று உமர் (ரலி) ‎அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், சொல்லிக் ‎கொண்டிருந்தார்கள். ஆயினும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‎அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை. (இப்படியிருக்க) நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியாரான சவ்தா (ரலி) ‎அவர்கள் ஓர் இரவு இஷா நேரத்தில் சென்றார்கள். - நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியரில் சவ்தா (ரலி) ‎அவர்கள் உயரமான பெண்மணியாக இருந்தார்கள். - அவர்களைப் ‎பார்த்த உமர் (ரலி) அவர்கள், சவ்தா! உங்களைக் கண்டு ‎கொண்டோம்' என ஹிஜாப்' (பர்தா பற்றிய வசனம்) அருளப்படாதா ‎என்ற பேராவலில் சவ்தா (ரலி) அவர்களை அழைத்துக் ‎கூறினார்கள். அப்போது அல்லாஹ், ஹிஜாப்' பற்றிய வசனத்தை ‎அருளினான்.‎

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)‎


‏147 - حَدَّثَنَا زَكَرِيَّاءُ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ ‏وَسَلَّمَ قَالَ: «قَدْ أُذِنَ أَنْ تَخْرُجْنَ فِي حَاجَتِكُنَّ» قَالَ هِشَامٌ: يَعْنِي البَرَازَ

‎147. நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்ல உங்களுக்கு ‎அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் (தமது மனைவியரிடம்) சொன்னார்கள்.‎

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)‎

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் உர்வா ‎அவர்கள் வெளியே செல்லல்' என்பதற்கு இயற்கைக் கடனை ‎நிறைவேற்ற திறந்த வெளிகளுக்குச் செல்லுதல்' என்பதே ‎கருத்தாகும் என்று கூறினார்கள்.‎


بَابُ التَّبَرُّزِ فِي البُيُوتِ

பாடம் : 14‎

வீடுகளில் கழிப்பறைகள் அமைத்தல்

‏148 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ [ص:42] مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، ‏عَنْ وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: ارْتَقَيْتُ فَوْقَ ظَهْرِ بَيْتِ حَفْصَةَ لِبَعْضِ حَاجَتِي، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْضِي حَاجَتَهُ مُسْتَدْبِرَ القِبْلَةِ، مُسْتَقْبِلَ الشَّأْمِ

148. நான் என் தேவைக்காக (என் சகோதரி) ஹப்ஸா (ரலி) ‎அவர்களின் வீட்டுக் கூரை மீது ஏறினேன். அப்போது ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிப்லாவின் திசையைப் ‎பின்னோக்கியும் (பைத்துல் மக்திஸ் அமைந்துள்ள) ஷாம் ‎திசையை முன்னோக்கியும் அமர்ந்தவர்களாகத் இயற்கைக் ‎கடனை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை நான் கண்டேன்.‎

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)‎

‏149 - حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، أَنَّ ‏عَمَّهُ، وَاسِعَ بْنَ حَبَّانَ، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ أَخْبَرَهُ قَالَ: لَقَدْ ظَهَرْتُ ذَاتَ يَوْمٍ عَلَى ظَهْرِ بَيْتِنَا، فَرَأَيْتُ «رَسُولَ اللَّهِ ‏صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدًا عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلَ بَيْتِ المَقْدِسِ»‏

149. எங்கள் வீட்டுக் கூரை மீது நான் ஏறினேன். அப்போது ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பைத்துல் மக்திஸை ‎முன்னோக்கி இரு செங்கற்கள் மீது அமர்ந்திருந்ததைக் கண்டேன்.‎

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)‎

بَابُ الِاسْتِنْجَاءِ بِالْمَاءِ

பாடம் : 15‎


தண்ணீரால் துப்புரவு செய்தல்


‏150 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ المَلِكِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي مُعَاذٍ، وَاسْمُهُ عَطَاءُ بْنُ أَبِي مَيْمُونَةَ قَالَ: سَمِعْتُ ‏أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا خَرَجَ لِحَاجَتِهِ، أَجِيءُ أَنَا وَغُلاَمٌ، مَعَنَا إِدَاوَةٌ مِنْ مَاءٍ، يَعْنِي ‏يَسْتَنْجِي بِهِ»‏

150. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை ‎நிறைவேற்ற வீட்டைவிட்டுப் புறப்பட்டால், நானும் இன்னொரு ‎சிறுவனும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றை ‎எங்களுடன் எடுத்துக் கொண்டு செல்வோம்.‎
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)‎


بَابُ مَنْ حُمِلَ مَعَهُ المَاءُ لِطُهُورِهِ
وَقَالَ أَبُو الدَّرْدَاءِ: «أَلَيْسَ فِيكُمْ صَاحِبُ النَّعْلَيْنِ وَالطَّهُورِ وَالوِسَادِ؟»‏

பாடம் : 16‎
ஒருவர் துப்புரவு செய்திட மற்றவர் தண்ணீர் எடுத்துச் செல்லுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலணிகள், அவர்கள் சுத்தம் ‎செய்வதற்குரிய தண்ணீர், மற்றும் தலையணையை சுமந்து ‎‎(சேவகம் புரிந்து) கொண்டிருந்தவர் (இப்னு மஸ்வூத்-ரலி) ‎உங்களிடையே இல்லையா? என்று அபுத் தர்தா (ரலி) அவர்கள் ‎அல்கமா பின் கைஸ் அவர்களிடம் கேட்டார்கள்.‎


‏151 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي مُعَاذٍ هُوَ عَطَاءُ بْنُ أَبِي مَيْمُونَةَ، قَالَ: سَمِعْتُ أَنَسًا، يَقُولُ ‏كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا خَرَجَ لِحَاجَتِهِ، تَبِعْتُهُ أَنَا وَغُلاَمٌ مِنَّا، مَعَنَا إِدَاوَةٌ مِنْ مَاءٍ»‏

151. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை ‎நிறைவேற்ற வெளியே சென்றால், நானும் எங்களில் ஒரு ‎சிறுவனும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றுடன் ‎அவர்களைப் பின்தொடர்ந்து செல்வோம்.‎
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)‎


بَابُ حَمْلِ العَنَزَةِ مَعَ المَاءِ فِي الِاسْتِنْجَاءِ

பாடம் : 17‎
துப்புரவு செய்யும் தண்ணீருடன் கைத்தடியையும் எடுத்துச் ‎செல்லல்


‏152 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، سَمِعَ أَنَسَ بْنَ ‏مَالِكٍ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَدْخُلُ الخَلاَءَ، فَأَحْمِلُ أَنَا وَغُلاَمٌ إِدَاوَةً مِنْ مَاءٍ وَعَنَزَةً، يَسْتَنْجِي ‏بِالْمَاءِ» تَابَعَهُ النَّضْرُ وَشَاذَانُ، عَنْ شُعْبَةَ العَنَزَةُ: عَصًا عَلَيْهِ زُجٌّ

152. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் செல்லும் ‎போது நானும், ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய தோல் ‎பாத்திரத்தையும், அனஸா எனும் கைத்தடியையும் எடுத்துச் ‎செல்வோம். தண்ணீரால் அவர்கள் துப்புரவு செய்வார்கள்.‎


அறிவிப்பவர் : அனஸ் (ரலி)‎


இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் ‎வந்தள்ளது. அதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா ‎அவர்கள் அனஸா என்பது மேற்புறத்தில் பூண் இடப்பட்டுள்ள ‎கைத்தடியாகும் என்று குறிப்பிடுகிறார்கள்.‎


بَابُ النَّهْيِ عَنْ الِاسْتِنْجَاءِ بِاليَمِينِ

பாடம் : 18‎
வலக் கரத்தால் சுத்தம் செய்யத் தடை


‏153 - حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ هُوَ الدَّسْتُوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ ‏أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ، وَإِذَا أَتَى الخَلاَءَ فَلاَ يَمَسَّ ذَكَرَهُ ‏بِيَمِينِهِ، وَلاَ يَتَمَسَّحْ بِيَمِينِهِ»‏

‎153. நீங்கள் பருகும் போது பாத்திரத்திற்குள் மூச்சுவிட ‎வேண்டாம்; கழிப்பிடம் சென்றால் பிறப்புறுப்பை வலக் கரத்தால் ‎தொட வேண்டாம்; வலக்கரத்தால் சுத்தம் செய்ய வேண்டாம் ‎என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎


அறிவிப்பவர் : அபூகத்தாதா (ரலி)‎


بَابٌ: لاَ يُمْسِكُ ذَكَرَهُ بِيَمِينِهِ إِذَا بَالَ

பாடம் : 19‎
சிறுநீர் கழிக்கும் போது வலக்கரத்தால் பிறவிஉறுப்பைத் பிடிக்கக் ‎கூடாது


‏154 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ عَنِ ‏النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا بَالَ أَحَدُكُمْ فَلاَ يَأْخُذَنَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَلاَ يَسْتَنْجِي بِيَمِينِهِ، وَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ»‏

‎154. உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது பிறவிஉறுப்பைத் ‎தமது வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத்தால் சுத்தம் ‎செய்யவும் வேண்டாம். பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் ‎வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : அபூகத்தாதா (ரலி)‎


بَابُ الِاسْتِنْجَاءِ بِالحِجَارَةِ

பாடம் : 20‎
கற்களால் (துடைத்து) சுத்தம் செய்தல்


‏155 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ المَكِّيُّ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ سَعِيدِ بْنِ عَمْرٍو المَكِّيُّ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، ‏قَالَ: اتَّبَعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَخَرَجَ لِحَاجَتِهِ، فَكَانَ لاَ يَلْتَفِتُ، فَدَنَوْتُ مِنْهُ، فَقَالَ: «ابْغِنِي أَحْجَارًا أَسْتَنْفِضْ بِهَا ‏‏- أَوْ نَحْوَهُ - وَلاَ تَأْتِنِي بِعَظْمٍ، وَلاَ رَوْثٍ، فَأَتَيْتُهُ بِأَحْجَارٍ بِطَرَفِ ثِيَابِي، فَوَضَعْتُهَا إِلَى جَنْبِهِ، وَأَعْرَضْتُ عَنْهُ، فَلَمَّا قَضَى ‏أَتْبَعَهُ بِهِنَّ»‏

155. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை ‎நிறைவேற்றுவதற்காக வெளியே சென்ற போது அவர்களைப் ‎பின்தொடர்ந்து நானும் சென்றேன். அவர்கள் திரும்பிப் பார்க்க ‎மாட்டார்கள். அவர்களின் அருகில் நான் சென்ற போது, சுத்தம் ‎செய்வதற்காக எனக்காகச் சில கற்களை எடுத்து வா! ‎எலும்புகளையோ, கெட்டிச் சாணங்களையோ கொண்டு ‎வந்துவிடாதே! என்று சொன்னார்கள். நான் எனது ஆடையின் ‎ஓரத்தில் இட்டுக் கொண்டு வந்து நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் பக்கத்தில் வைத்துவிட்டு அங்கிருந்து திரும்பி ‎விட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அக்கற்களால் சுத்தம் ‎செய்து கொண்டார்கள். பிறகு அவர்களைப் பின்தொடர்ந்து ‎நானும் சென்றேன்.‎
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)‎


بَابٌ: لاَ يُسْتَنْجَى بِرَوْثٍ

பாடம் : 21‎
கெட்டிச் சாணத்தின் மூலம் துப்புரவு செய்யக் கூடாது


‏156 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: - لَيْسَ أَبُو عُبَيْدَةَ ذَكَرَهُ - وَلَكِنْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ ‏الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ يَقُولُ: «أَتَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الغَائِطَ فَأَمَرَنِي أَنْ آتِيَهُ بِثَلاَثَةِ أَحْجَارٍ، ‏فَوَجَدْتُ حَجَرَيْنِ، وَالتَمَسْتُ الثَّالِثَ فَلَمْ أَجِدْهُ، فَأَخَذْتُ رَوْثَةً فَأَتَيْتُهُ بِهَا، فَأَخَذَ الحَجَرَيْنِ وَأَلْقَى الرَّوْثَةَ» وَقَالَ: «هَذَا ‏رِكْسٌ» وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ

156. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்ற ‎போது தமக்காக மூன்று கற்களைக் கொண்டு வருமாறு என்னைப் ‎பணித்தார்கள். இரண்டு கற்கள் மட்டுமே கிடைத்தது. மூன்றாவது ‎கல்லைத் தேடிப் பார்த்தேன்; கிடைக்கவில்லை. கெட்டிச் ‎சாணத்தை எடுத்துக் கொண்டு அவர்களிடம் வந்தேன். ‎நபியவர்கள் கற்களைப் பெற்றுக் கொண்டு சாணத்தை எறிந்து ‎விட்டு இது அசுத்தமானது எனக் கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)‎

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் ‎வந்துள்ளது.‎


بَابُ الوُضُوءِ مَرَّةً مَرَّةً

பாடம் : 22‎
ஒவ்வொரு தடவை (கழுவி) உளூ செய்தல்


‏157 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: ‏‏«تَوَضَّأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّةً مَرَّةً»‏

‎157. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தடவை (கழுவி) உளூ ‎செய்தார்கள்.‎

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)‎


بَابٌ: الوُضُوءُ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ

பாடம் : 23‎

இரண்டிரண்டு தடவைகள் (கழுவி) உளூ செய்தல்


‏158 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عِيسَى، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ ‏عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ»‏

158. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டிரண்டு தடவைகள் ‎‎(கழுவி) உளூ செய்தார்கள்.‎

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)‎


بَابُ: الوُضُوءُ ثَلاَثًا ثَلاَثًا

பாடம் : 24‎

மும்மூன்று தடவை கழுவி உளூ செய்தல்


‏159 - حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِيُّ، قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عَطَاءَ بْنَ يَزِيدَ، ‏أَخْبَرَهُ أَنَّ حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ أَخْبَرَهُ أَنَّهُ، رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ دَعَا بِإِنَاءٍ، فَأَفْرَغَ عَلَى كَفَّيْهِ ثَلاَثَ مِرَارٍ، فَغَسَلَهُمَا، ثُمَّ ‏أَدْخَلَ يَمِينَهُ فِي الإِنَاءِ، فَمَضْمَضَ، وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، وَيَدَيْهِ إِلَى المِرْفَقَيْنِ ثَلاَثَ مِرَارٍ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ ‏غَسَلَ رِجْلَيْهِ ثَلاَثَ مِرَارٍ إِلَى الكَعْبَيْنِ، ثُمَّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ ‏صَلَّى رَكْعَتَيْنِ لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»،

159. உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் ‎கொண்டு வரச் சொல்லி தமது இரு முன் கைகளில் மூன்று ‎முறை ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தம் வலக்கரத்தைப் ‎பாத்திரத்திற்குள் செலுத்தி, வாய்க் கொப்பளித்து, (மூக்கிற்கு நீர் ‎செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று ‎முறை கழுவினார்கள். (பிறகு) தமது இரு கைகளையும் ‎மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக் ‎கையால் தடவினார்கள் (பின்னர் தமது இரு கால்களையும் ‎கணுக்கால் வரை மூன்று முறை கழுவினார்கள்.‎

பின்னர் யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச்செய்து, ‎வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் ‎தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் ‎மன்னிக்கப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‎கூறியதாக உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : உஸ்மான் (ரலி) அவர்களால் விடுதலை ‎செய்யப்பட்ட அடிமை ஹும்ரான்


‏160 - وَعَنْ إِبْرَاهِيمَ قَالَ: قَالَ صَالِحُ بْنُ كَيْسَانَ، قَالَ: ابْنُ شِهَابٍ، وَلَكِنْ عُرْوَةُ، يُحَدِّثُ عَنْ حُمْرَانَ، فَلَمَّا تَوَضَّأَ عُثْمَانُ ‏قَالَ: أَلاَ أُحَدِّثُكُمْ حَدِيثًا لَوْلاَ آيَةٌ مَا حَدَّثْتُكُمُوهُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ يَتَوَضَّأُ رَجُلٌ يُحْسِنُ وُضُوءَهُ، ‏وَيُصَلِّي الصَّلاَةَ، إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلاَةِ حَتَّى يُصَلِّيَهَا» قَالَ عُرْوَةُ: " الآيَةَ {إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ ‏البَيِّنَاتِ} [البقرة: 159] "‏

160. உஸ்மான் (ரலி) அவர்கள், உளூச் செய்யும் போது நான் ஒரு ‎நபிமொழியை உங்களுக்குச் சொல்லட்டுமா? (குர்ஆனின்) ஒரு ‎வசனம் மட்டும் இல்லையானால் அதை நான் உங்களுக்குச் ‎சொல்லியிருக்க மாட்டேன்' என்று சொல்லி விட்டு, ஒரு மனிதர் ‎அழகிய முறையில் உளூச் செய்து, தொழுகையை ‎நிறைவேற்றினால் அவர் தொழுதுமுடிக்கும் வரை அவருக்கும் ‎அந்தத் தொழுகைக்கும் இடையில் ஏற்பட்ட பாவங்கள் ‎மன்னிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்றனர்.‎

‎(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா அவர்கள் ‎கூறுகிறார்கள்:‎

வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் ‎அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் ‎மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் ‎தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர் எனும் 2:159 வசனமே அந்த ‎வசனமாகும்.‎

அறிவிப்பவர் : ஹும்ரான்


بَابُ الِاسْتِنْثَارِ فِي الوُضُوءِ
ذَكَرَهُ عُثْمَانُ، وَعَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمْ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

பாடம் : 25‎
உளூவின் போது மூக்கிற்கு நீர் செலுத்திச் சிந்துதல்

உஸ்மான் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி), அப்துல்லாஹ் ‎பின் அப்பாஸ் (ரலி) ஆகியோர் வழியாக இது குறித்து ‎அறிவிக்கப்பட்டுள்ளது.‎


‏161 - حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ، أَنَّهُ سَمِعَ أَبَا ‏هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَنْ تَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ، وَمَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ»‏

161. உளூ செய்பவர் மூக்கிற்கு நீர் செலுத்திச் சிந்தட்டும்; மலஜலம் ‎கழித்துவிட்டு கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் ‎செய்யட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)‎


بَابُ الِاسْتِجْمَارِ وِتْرًا

பாடம் : 26‎

கற்களால் சுத்தம் செய்யும் போது ஒற்றைப் படையாகச் செய்தல்


‏162 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ ‏صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَجْعَلْ فِي أَنْفِهِ، ثُمَّ لِيَنْثُرْ، وَمَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ، وَإِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ ‏نَوْمِهِ فَلْيَغْسِلْ يَدَهُ قَبْلَ أَنْ يُدْخِلَهَا فِي وَضُوئِهِ، فَإِنَّ أَحَدَكُمْ لاَ يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»‏

‎162. உங்களில் ஒருவர் உளூச் செய்தால் தமது மூக்கிற்கு நீர் ‎செலுத்திச் சிந்தட்டும். மலஜலம் கழித்துவிட்டு கற்களால் சுத்தம் ‎செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் ‎உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் உளூ செய்வதற்காக ‎பாத்திரத்திற்குள் கையை நுழைப்பதற்கு முன்னால் கையைக் ‎கழுவிக்கொள்ளட்டும். ஏனென்றால் உங்களில் எவரும் இரவில் ‎தமது கை எங்கே கிடந்தது என்பதை அறிய மாட்டார் என நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)‎


بَابُ غَسْلِ الرِّجْلَيْنِ، وَلاَ يَمْسَحُ عَلَى القَدَمَيْنِ

பாடம் : 27‎
உளூ செய்யும் போது கால்களைக் கழுவ வேண்டும்; தண்ணீர் ‎தொட்டுத் தடவக் கூடாது


‏163 - حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: تَخَلَّفَ ‏النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنَّا فِي سَفْرَةٍ سَافَرْنَاهَا، فَأَدْرَكَنَا وَقَدْ أَرْهَقْنَا العَصْرَ، فَجَعَلْنَا نَتَوَضَّأُ وَنَمْسَحُ عَلَى أَرْجُلِنَا، ‏فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ: «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ» مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا

‎163. ஒரு பயணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎எங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் ‎அஸ்ர் (தொழுகையின்) நேரத்தை அடைந்த போது எங்களிடம் ‎வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் உளூ செய்து ‎கொண்டிருந்தோம். கால்களைத் ஈரக்கையால் தடவிக் ‎கொண்டிருந்தோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎இத்தகைய குதிகால்களுக்கு நரகம் தான் என்று இரண்டு அல்லது ‎மூன்று தடவைகள் உரத்த குரலில் கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)‎


بَابُ المَضْمَضَةِ فِي الوُضُوءِ
قَالَهُ ابْنُ عَبَّاسٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

பாடம் : 28‎
உளூச் செய்யும் போது வாய் கொப்பளித்தல்

இது குறித்து இப்னு அப்பாஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸைத் ‎ஆகியோர் அறிவித்துள்ளனர்.‎


‏164 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ، عَنْ حُمْرَانَ، مَوْلَى عُثْمَانَ ‏بْنِ عَفَّانَ أَنَّهُ رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ دَعَا بِوَضُوءٍ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ مِنْ إِنَائِهِ، فَغَسَلَهُمَا ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي ‏الوَضُوءِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا وَيَدَيْهِ إِلَى المِرْفَقَيْنِ ثَلاَثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ كُلَّ ‏رِجْلٍ ثَلاَثًا، ثُمَّ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ نَحْوَ وُضُوئِي هَذَا، وَقَالَ: «مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ‏ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»‏

164. உஸ்மான் (ரலி) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, ‎தமது (முன்) கைகளில் பாத்திரத்திலிருந்து மூன்று முறை ‎ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் ‎பாத்திரத்திற்குள் செலுத்தி வாய்க்கொப்பளித்து, மூக்கிற்கு நீர் ‎செலுத்தி மூக்கைச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று ‎முறை கழுவினார்கள். தமது இரு கைகளையும் மூட்டுவரை ‎மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலைக்கு மஸஹ் ‎செய்தார்கள். பிறகு ஒவ்வொரு காலையும் மூன்று முறை ‎கழுவினார்கள். பிறகு நான் செய்த இந்த உளூவைப் போன்றே ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூ செய்யக் கண்டேன் என்று ‎கூறிவிட்டு, யார் என்னுடைய இந்த உளூவைப் போன்று ‎உளூச்செய்து, பின்னர் வேறு எந்த எண்ணங்களுக்கும் தம் ‎உள்ளத்தில் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ ‎அவருக்கு அவரது முன் பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான் ‎என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றனர்.‎

அறிவிப்பவர் : ஹும்ரான்


بَابُ غَسْلِ الأَعْقَابِ
وَكَانَ ابْنُ سِيرِينَ: «يَغْسِلُ مَوْضِعَ الخَاتَمِ إِذَا تَوَضَّأَ»‏

பாடம் : 29‎
குதிகால்களைக் கழுவுதல்

இப்னு சீரீன் அவர்கள் உளூ செய்யும் போது மோதிரம் அணிந்த ‎பகுதியையும் கழுவுபவராக இருந்தார்கள்.‎


‏165 - حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، وَكَانَ يَمُرُّ بِنَا ‏وَالنَّاسُ يَتَوَضَّئُونَ مِنَ المِطْهَرَةِ، قَالَ: أَسْبِغُوا الوُضُوءَ، فَإِنَّ أَبَا القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ ‏النَّارِ»‏

‎165. தூய்மை செய்வதற்கான பாத்திரத்திலிருந்து மக்கள் ‎உளூச்செய்து கொண்டிருந்த போது எங்களைக் கடந்து ‎அபூஹுரைரா (ரலி) அவர்கள் சென்றார்கள். அப்போது உளூவை ‎முழுமையாகச் செய்யுங்கள். ஏனெனில், அபுல்காசிம் (முஹம்மத்-‎ஸல்) அவர்கள் சரியாகக் கழுவப்படாத குதிகால்களுக்கு நரகம் ‎தான் என்று கூறினார்கள்' என்றனர்.‎

அறிவிப்பவர் : முஹம்மத் பின் ஸியாத்


بَابُ غَسْلِ الرِّجْلَيْنِ فِي النَّعْلَيْنِ، وَلاَ يَمْسَحُ عَلَى النَّعْلَيْنِ

பாடம் : 30‎
செருப்பு அணிந்திருந்தாலும் இரு கால்களையும் கழுவ ‎வேண்டும்; செருப்புகள் மீது தண்ணீர் தொட்டுத் தடவக் கூடாது


‏166 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ، أَنَّهُ قَالَ: لِعَبْدِ اللَّهِ بْنِ ‏عُمَرَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ رَأَيْتُكَ تَصْنَعُ أَرْبَعًا لَمْ أَرَ أَحَدًا مِنْ أَصْحَابِكَ يَصْنَعُهَا، قَالَ: وَمَا هِيَ يَا ابْنَ جُرَيْجٍ قَالَ: رَأَيْتُكَ لاَ ‏تَمَسُّ مِنَ الأَرْكَانِ إِلَّا اليَمَانِيَّيْنِ، وَرَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ، وَرَأَيْتُكَ تَصْبُغُ بِالصُّفْرَةِ، وَرَأَيْتُكَ إِذَا كُنْتَ بِمَكَّةَ أَهَلَّ ‏النَّاسُ إِذَا رَأَوُا الْهِلاَلَ وَلَمْ تُهِلَّ أَنْتَ حَتَّى كَانَ يَوْمُ التَّرْوِيَةِ. قَالَ عَبْدُ اللَّهِ: أَمَّا الأَرْكَانُ: فَإِنِّي لَمْ «أَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ ‏عَلَيْهِ وَسَلَّمَ يَمَسُّ إِلَّا اليَمَانِيَّيْنِ»، وَأَمَّا النِّعَالُ السِّبْتِيَّةُ: فَإِنِّي «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُ النَّعْلَ الَّتِي لَيْسَ ‏فِيهَا شَعَرٌ وَيَتَوَضَّأُ فِيهَا»، فَأَنَا أُحِبُّ أَنْ أَلْبَسَهَا، وَأَمَّا الصُّفْرَةُ: فَإِنِّي «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْبُغُ بِهَا، ‏فَأَنَا أُحِبُّ أَنْ أَصْبُغَ بِهَا»، وَأَمَّا الإِهْلاَلُ: فَإِنِّي «لَمْ أَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهِلُّ حَتَّى تَنْبَعِثَ بِهِ رَاحِلَتُهُ»‏

‎166. அபூஅப்திர் ரஹ்மானே! நீங்கள் நான்கு காரியங்களைச் ‎செய்வதை நான் பார்க்கிறேன். உங்கள் நண்பர்களில் வேறெவரும் ‎அவற்றைச் செய்வதை நான் பார்க்கவில்லை என்று ‎அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், கேட்டேன். அதற்கு ‎அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், இப்னு ஜுரைஜே, அவை ‎எவை? என்று கேட்டார்கள். நான், (தவாஃபின் போது கஅபாவின் ‎மூலைகளில்) ருக்னுல் யமானீ மற்றும் ருக்னுல் இராக்கீ ஆகிய ‎இரு மூலைகளை மட்டுமே நீங்கள் தொடுவதைக் கண்டேன். ‎மேலும் முடி களையப்பட்ட தோல் செருப்பையே நீங்கள் ‎அணிவதை நான் பார்க்கிறேன். நீங்கள் உங்கள் ஆடைக்கு மஞ்சள் ‎நிறச் சாயம் பூசுவதை நான் பார்க்கிறேன். மேலும் நீங்கள் ‎மக்காவில் இருக்கும் போது மக்கள் (துல்ஹஜ்) பிறை ‎கண்டவுடன் இஹ்ராம் கட்டுவதைப் போன்று இஹ்ராம் ‎கட்டாமல் துல்ஹஜ் எட்டாம் நாள் வரை இருப்பதைக் கண்டேன் ‎‎(இவை தாம் அந்த நான்கு காரியங்கள்) என்றேன்.‎

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) ‎பதிலளித்தார்கள்:‎

கஅபாவின் மூலைகளைப் பொறுத்தவரை அல்லாஹ்வின் தூதர் ‎‎(ஸல்) அவர்கள் ருக்னுல் யமானீ, ருக்னுல் இராக்கீ ஆகிய இரு ‎மூலைகளைத் தவிர வேறெதையும் தொடுவதை நான் ‎காணவில்லை. முடி களையப்பட்ட செருப்புகளைப் பொறுத்த ‎வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முடியில்லாத ‎செருப்புகளை அணிவதையும் அதனுடன் உளூ செய்வதையும் ‎நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அதை அணிவதை ‎விரும்புகிறேன். மஞ்சள் நிறத்தைப் பொறுத்த வரை ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் ஆடையில்) அதன் ‎மூலம் தான் சாயமிடுவதை நான் பார்த்திருக்கிறேன். எனவே ‎அதைக் கொண்டு சாயமிடுவதை நான் விரும்புகிறேன். இஹ்ராம் ‎கட்டுவதைப் பொறுத்த வரையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‎அவர்கள் தமது வாகனம் பயணத்திற்குத் தயாராகி நிற்கும் ‎‎(துல்ஹஜ் எட்டாம் நாள்) வரை இஹ்ராம் கட்டுவதை நான் ‎பார்த்ததில்லை.‎

அறிவிப்பவர் : உபைத் பின் ஜுரைஜ்


بَابُ التَّيَمُّنِ فِي الوُضُوءِ وَالغَسْلِ

பாடம் : 31‎

உளூவிலும் குளியலிலும் வலப் பக்கத்திலிருந்து ஆரம்பித்தல்


‏167 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: قَالَ النَّبِيُّ ‏صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَهُنَّ فِي غَسْلِ ابْنَتِهِ: «ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الوُضُوءِ مِنْهَا»‏

‎167. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மக(ள் ஸைனப் இறந்த ‎போது அவர்க)ளை நீராட்டுவது குறித்துப் பெண்களிடம் ‎கூறுகையில், அவருடைய வலப் பக்கத்திலிருந்தும், உளூ செய்ய ‎வேண்டிய உறுப்புக்களிலிருந்தும் (கழுவ) ஆரம்பியுங்கள் என்று ‎சொன்னார்கள்.‎

அறிவிப்பவர் : உம்மு அத்திய்யா (ரலி)‎


‏168 - حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي أَشْعَثُ بْنُ سُلَيْمٍ، قَالَ: سَمِعْتُ أَبِي، عَنْ مَسْرُوقٍ، عَنْ ‏عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُعْجِبُهُ التَّيَمُّنُ، فِي تَنَعُّلِهِ، وَتَرَجُّلِهِ، وَطُهُورِهِ، وَفِي شَأْنِهِ كُلِّهِ»‏

168. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செருப்பு அணியும் போதும் ‎தலைவாரும் போதும் சுத்தம் செய்யும் போதும் மற்றும் தம் ‎அனைத்துக் காரியங்களிலும் வலப் பக்கத்திலிருந்து ‎தொடங்குவதையே விரும்பினார்கள்.‎

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)‎


بَابُ التِمَاسِ الوَضُوءِ إِذَا حَانَتِ الصَّلاَةُ
وَقَالَتْ عَائِشَةُ: «حَضَرَتِ الصُّبْحُ، فَالْتُمِسَ المَاءُ فَلَمْ يُوجَدْ، فَنَزَلَ التَّيَمُّمُ»‏

பாடம் : 32‎
தொழுகையின் நேரம் வந்ததும் உளூ செய்வதற்காகத் ‎தண்ணீரைத் தேடுதல்

சுப்ஹுத் தொழுகையின் நேரம் வந்ததும் தண்ணீர் தேடப்பட்டது. ‎தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது தான் தயம்மும்' (குறித்த ‎வசனம்) அருளப்பெற்றது என ஆயிஷா (ரலி) அவர்கள் ‎கூறினார்கள்.‎


‏169 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ قَالَ: ‏رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَانَتْ صَلاَةُ العَصْرِ، فَالْتَمَسَ النَّاسُ الوَضُوءَ فَلَمْ يَجِدُوهُ، فَأُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى ‏اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَضُوءٍ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ الإِنَاءِ يَدَهُ، وَأَمَرَ النَّاسَ أَنْ يَتَوَضَّئُوا مِنْهُ قَالَ: ‏‏«فَرَأَيْتُ المَاءَ يَنْبُعُ مِنْ تَحْتِ أَصَابِعِهِ حَتَّى تَوَضَّئُوا مِنْ عِنْدِ آخِرِهِمْ»‏

169. (ஒருநாள்) அஸ்ர் தொழுகையின் நேரம் நெருங்கிய போது ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்தேன். ‎மக்கள் உளூ செய்வதற்குத் தண்ணீரைத் தேடினார்கள். தண்ணீர் ‎கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‎அவர்களிடம் ஒரு பாத்திரத்தில் (சிறிது) தண்ணீர் கொண்டு ‎வரப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் ‎பாத்திரத்தினுள் தமது கரத்தை வைத்து, அப்பாத்திரத்திலிருந்து ‎உளூ செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது விரல்களுக்குக் ‎கீழேயிருந்து தண்ணீர் சுரப்பதை நான் கண்டேன். மக்கள் ‎‎(அதிலிருந்து) உளூ செய்தார்கள். எந்த அளவிற்கென்றால், ‎அவர்களில் கடைசி நபர் வரை உளூ செய்து முடித்தார்கள்.‎

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)‎


بَابُ المَاءِ الَّذِي يُغْسَلُ بِهِ شَعَرُ الإِنْسَانِ
وَكَانَ عَطَاءٌ: «لاَ يَرَى بِهِ بَأْسًا أَنْ يُتَّخَذَ مِنْهَا الخُيُوطُ وَالحِبَالُ. وَسُؤْرِ الكِلاَبِ وَمَمَرِّهَا فِي المَسْجِدِ» وَقَالَ الزُّهْرِيُّ: ‏‏«إِذَا وَلَغَ فِي إِنَاءٍ لَيْسَ لَهُ وَضُوءٌ غَيْرُهُ يَتَوَضَّأُ بِهِ» وَقَالَ سُفْيَانُ: " هَذَا الفِقْهُ بِعَيْنِهِ، يَقُولُ اللَّهُ تَعَالَى: {فَلَمْ تَجِدُوا مَاءً ‏فَتَيَمَّمُوا} [النساء: 43] وَهَذَا مَاءٌ، وَفِي النَّفْسِ مِنْهُ شَيْءٌ، يَتَوَضَّأُ بِهِ وَيَتَيَمَّمُ "‏

பாடம் : 33‎
மனிதனின் முடிகளைக் கழுவிய தண்ணீர் பற்றிய பாடம்

மனித முடியிலிருந்து கயிறுகளும், நூல்களும் திரித்தெடுப்பதை ‎அதாவு பின் அபீரபாஹ் அவர்கள் குற்றமாகக் கருதவில்லை. ‎இவ்வாறே நாய் வாய் வைத்த தண்ணீரையும், பள்ளிவாசலுக்குள் ‎நாய் கடந்துசென்ற இடத்தையும் அசுத்தமானவையாக அவர்கள் ‎கருதவில்லை.‎

நாய் ஒரு பாத்திரத்தில் வாய் வைத்து அதைத் தவிர வேறு ‎தண்ணீர் இல்லையென்றால் அந்தத் தண்ணீரால் உளூ ‎செய்யலாம் என முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ ‎அவர்கள் கூறுகிறார்கள்.‎

ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ அவர்கள் கூறுகிறார்கள்:‎

இந்தச் சட்டம் நீங்கள் தண்ணீரைப் பெற்றுக் ‎கொள்ளவில்லையானால் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்து ‎கொள்ளுங்கள் எனும் (4:43 ஆவது) வசனத்திலிருந்து ‎பெறப்படுகிறது. இதுவும் தண்ணீர்தான் என்றாலும் உளூ ‎செய்பவருடைய மனத்தில் உறுத்தல் ஏற்படுகிறது. ஆகவே ‎அந்தத் தண்ணீரில் உளூ செய்பவர் தயம்மும் செய்ய வேண்டும்.‎


‏170 - حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عَاصِمٍ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ: قُلْتُ لِعَبِيدَةَ «عِنْدَنَا مِنْ شَعَرِ ‏النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصَبْنَاهُ مِنْ قِبَلِ أَنَسٍ أَوْ مِنْ قِبَلِ أَهْلِ أَنَسٍ» فَقَالَ: لَأَنْ تَكُونَ عِنْدِي شَعَرَةٌ مِنْهُ أَحَبُّ إِلَيَّ مِنَ ‏الدُّنْيَا وَمَا فِيهَا

‎170. அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து' அல்லது அனஸின் ‎குடும்பத்தாரிடமிருந்து' நாங்கள் பெற்ற நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்களின் சில முடிகள் எங்களிடம் இருக்கின்றது' என்று நான் ‎உபைதா அவர்களிடம் சொன்னேன். அதற்கு உபைதா அவர்கள், ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரு முடி என்னிடம் ‎இருப்பது உலகமும் அதில் உள்ளவற்றையும் விட எனக்கு மிக ‎உகப்பானதாகும்' என்று கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : முஹம்மத் பின் சீரீன்


‏171 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ: أَخْبَرَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا عَبَّادٌ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنِ ابْنِ سِيرِينَ، ‏عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَمَّا حَلَقَ رَأْسَهُ كَانَ أَبُو طَلْحَةَ أَوَّلَ مَنْ أَخَذَ مِنْ شَعَرِهِ»‏

171. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது) ‎தமது தலை முடியை மழித்த போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் ‎முதன் முதலில் அவர்களது முடிகளில் சிலவற்றைப் எடுத்துக் ‎கொண்டார்கள்.‎

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)‎

பாடம்


‏172 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى ‏اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا شَرِبَ الكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعًا»‏

‎172. உங்களில் ஒருவருடைய பாத்திரத்தில் நாய் ‎குடித்துவிடுமானால் அவர் அந்தப் பாத்திரத்தை ஏழு முறை ‎கழுவட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)‎


‏173 - حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، سَمِعْتُ أَبِي، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ ‏أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّ رَجُلًا رَأَى كَلْبًا يَأْكُلُ الثَّرَى مِنَ العَطَشِ، فَأَخَذَ الرَّجُلُ خُفَّهُ، فَجَعَلَ ‏يَغْرِفُ لَهُ بِهِ حَتَّى أَرْوَاهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَأَدْخَلَهُ الجَنَّةَ»‏

‎173. ஒரு நாய் தாகத்தால் ஈர மண்ணை (நக்கி) உண்டு ‎கொண்டிருப்பதை ஒரு மனிதர் பார்த்தார். உடனே அவர் ‎காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் ‎தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ், அவருடைய ‎நற்செயலைப் பாராட்டி அங்கீகரித்து அவரைச் சுவர்க்கத்தில் ‎நுழைத்தான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)‎


‏174 - وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي [ص:46] حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ ‏أَبِيهِ قَالَ: «كَانَتِ الكِلاَبُ تَبُولُ، وَتُقْبِلُ وَتُدْبِرُ فِي المَسْجِدِ، فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَكُونُوا يَرُشُّونَ ‏شَيْئًا مِنْ ذَلِكَ»‏

‎174. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ‎பள்ளிவாசலுக்குள் நாய்கள் வந்து கொண்டும், போய்க் கொண்டும் ‎இருந்தன. இதற்காக மக்கள் எதையும் தெளிப்பவர்களாக ‎இருக்கவில்லை.‎

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)‎


‏175 - حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ ابْنِ أَبِي السَّفَرِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: سَأَلْتُ ‏النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ المُعَلَّمَ فَقَتَلَ فَكُلْ، وَإِذَا أَكَلَ فَلاَ تَأْكُلْ، فَإِنَّمَا أَمْسَكَهُ عَلَى نَفْسِهِ» قُلْتُ: ‏أُرْسِلُ كَلْبِي فَأَجِدُ مَعَهُ كَلْبًا آخَرَ؟ قَالَ: «فَلاَ تَأْكُلْ، فَإِنَّمَا سَمَّيْتَ عَلَى كَلْبِكَ وَلَمْ تُسَمِّ عَلَى كَلْبٍ آخَرَ»‏

‎175. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்ட போது, ‎வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீர் அனுப்பி ‎வைத்து, அது கொன்று விட்டாலும் அதை நீங்கள் சாப்பிடலாம். ‎‎(அந்தப் பிராணியை) நாய் சாப்பிட்டிருந்தால் அதை நீர் ‎சாப்பிடாதீர். எனெனில் அது (அப்பிராணியை) தனக்காகவே ‎பிடித்தது என்று கூறினார்கள். எனது நாயை வேட்டையாட ‎அனுப்புகிறேன்; அதனுடன் மற்றொரு நாயையும் காண்கிறேன் ‎என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீர் உமது ‎நாயைத்தான் பிஸ்மில்லாஹ் கூறி அனுப்பினீர். மற்றொரு ‎நாயை பிஸ்மில்லாஹ் கூறி அனுப்பவில்லை என்று ‎சொன்னார்கள்.‎

அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி)‎


بَابُ مَنْ لَمْ يَرَ الوُضُوءَ إِلَّا مِنَ المَخْرَجَيْنِ: مِنَ القُبُلِ وَالدُّبُرِ
وَقَوْلُ اللَّهِ تَعَالَى: {أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الغَائِطِ} [النساء: 43] وَقَالَ عَطَاءٌ: - فِيمَنْ يَخْرُجُ مِنْ دُبُرِهِ الدُّودُ، أَوْ مِنْ ذَكَرِهِ ‏نَحْوُ القَمْلَةِ - «يُعِيدُ الوُضُوءَ» وَقَالَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ: «إِذَا ضَحِكَ فِي الصَّلاَةِ أَعَادَ الصَّلاَةَ وَلَمْ يُعِدِ الوُضُوءَ» وَقَالَ ‏الحَسَنُ: «إِنْ أَخَذَ مِنْ شَعَرِهِ وَأَظْفَارِهِ، أَوْ خَلَعَ خُفَّيْهِ فَلاَ وُضُوءَ عَلَيْهِ» وَقَالَ أَبُو هُرَيْرَةَ: «لاَ وُضُوءَ إِلَّا مِنْ حَدَثٍ» ‏وَيُذْكَرُ عَنْ جَابِرٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي غَزْوَةِ ذَاتِ الرِّقَاعِ فَرُمِيَ رَجُلٌ بِسَهْمٍ، فَنَزَفَهُ الدَّمُ، فَرَكَعَ، ‏وَسَجَدَ وَمَضَى فِي صَلاَتِهِ» وَقَالَ الحَسَنُ: «مَا زَالَ المُسْلِمُونَ يُصَلُّونَ فِي جِرَاحَاتِهِمْ» وَقَالَ طَاوُسٌ، وَمُحَمَّدُ بْنُ عَلِيٍّ، ‏وَعَطَاءٌ، وَأَهْلُ الحِجَازِ لَيْسَ فِي الدَّمِ وُضُوءٌ وَعَصَرَ ابْنُ عُمَرَ بَثْرَةً فَخَرَجَ مِنْهَا الدَّمُ وَلَمْ يَتَوَضَّأْ وَبَزَقَ ابْنُ أَبِي أَوْفَى ‏دَمًا فَمَضَى فِي صَلاَتِهِ " وَقَالَ ابْنُ عُمَرَ، وَالحَسَنُ: " فِيمَنْ يَحْتَجِمُ: لَيْسَ عَلَيْهِ إِلَّا غَسْلُ مَحَاجِمِهِ "‏

பாடம் : 34‎

முன் பின் இரு துவாரங்களில் இருந்து ஏதேனும் ‎வெளியேறினால் மட்டுமே உளூ நீங்கும்

உங்களில் ஒருவர் கழிப்பிடத்திலிருந்து வந்தால்... ‎‎(தொழுகைக்காக உளூ செய்ய வேண்டும்.) (4:43) என்று

அல்லாஹ் ‎கூறுகிறான்.‎

ஒருவருடைய பின் துவாரத்திலிருந்து புழு அல்லது முன் ‎துவாரத்திலிருந்து பேன் போன்ற சிறு பூச்சியோ வெளியேறினால் ‎அவர் உளூச் செய்ய வேண்டும் என அதாவு பின் அபீரபாஹ் ‎அவர்கள் கூறியுள்ளார்கள்.‎

ஒருவர் தொழுகையில் சிரித்தால் அவர் அந்தத் தொழுகையைத் ‎திரும்பத் தொழ வேண்டும் திரும்பவும் உளூ செய்ய ‎வேண்டியதில்லை என ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ‎கூறியுள்ளார்கள்.‎

ஒருவர் முடியையோ, நகங்களையோ களைவதால் அல்லது தமது ‎காலுறையைக் கழற்றிவிடுவதால் அவர் மீண்டும் உளூச் செய்ய ‎வேண்டியதில்லை என ஹஸன் அல்பஸரி அவர்கள் ‎கூறியுள்ளார்கள்.‎

சிறுதுடக்கு ஏற்பட்டால் தான் உளூவைத் திரும்பச் செய்ய ‎வேண்டும் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.‎

தாத்துர் ரிகாவு போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ‎இருந்தார்கள். அப்போரில் ஒருவர் மீது அம்பு பாய்ந்து அவருக்கு ‎கடுமையான இரத்தக் கசிவு ஏற்பட்டது. ஆயினும் அவர் ருகூஉ, ‎ஸஜ்தா செய்து தொழுகையைத் தொடர்ந்தார் என ஜாபிர் (ரலி) ‎அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது.‎

தங்களுடைய உடலில் காயங்கள் இருக்கும் நிலையில் ‎முஸ்லிம்கள் தொழுது கொண்டேயிருந்தார்கள் என ஹஸன் ‎அல்பஸரி அவர்கள் கூறியுள்ளார்கள்.‎

இரத்தம் வெளிவருவதன் காரணமாக உளூவைத் திரும்பச் செய்ய ‎வேண்டியதில்லை என தாவூஸ் பின் கைசான், முஹம்மத் பின் ‎அலீ, அதாவு பின் அபீரபாஹ் மற்றுமுள்ள ஹிஜாஸ் வாசிகள் ‎ஆகியோர் கூறியுள்ளனர்.‎

இப்னு உமர் (ரலி) அவர்கள் சிறு கொப்புளத்தை நசுக்கினார்கள். ‎அதிலிருந்து இரத்தம் வெளியானது. ஆனால் அவர்கள் உளூச் ‎செய்யவில்லை.‎

அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களின் உமிழ் நீரில் ‎இரத்தம் வந்தது. அவர்கள் தொழுகையைத் தொடர்ந்து ‎கொண்டிருந்தார்கள்.‎

இப்னு உமர் (ரலி), ஹஸன் அல்பஸரி ஆகியோர் கூறினர்:‎

ஒருவர் குருதி உறிஞ்சி எடுப்பாரானால் அவர் அந்த இடத்தை ‎மட்டும் கழுவினால் போதும். (உளூச் செய்ய வேண்டியதில்லை)‎


‏176 - حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ المَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى ‏اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ يَزَالُ العَبْدُ فِي صَلاَةٍ مَا كَانَ فِي المَسْجِدِ يَنْتَظِرُ الصَّلاَةَ مَا لَمْ يُحْدِثْ» فَقَالَ رَجُلٌ أَعْجَمِيٌّ: مَا الحَدَثُ ‏يَا أَبَا هُرَيْرَةَ؟ قَالَ: الصَّوْتُ يَعْنِي الضَّرْطَةَ

‎176. ஓர் அடியார் பள்ளிவாசலில் தொழுகையை எதிர்பார்த்தபடி ‎இருக்கும் நேரமெல்லாம் அவர் தொழுகையில் இருப்பவராகவே ‎கருதப்படுகிறார். அவருக்கு ஹதஸ் (சிறுதுடக்கு) ஏற்படாத வரை' ‎என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக ‎அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு ‎பாரசீகர் ஹதஸ் என்றால் என்ன அபூஹுரைரா அவர்களே!? ‎என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், பின் ‎துவராத்திலிருந்து வெளியாகும் காற்று என்று பதிலளித்தார்கள்.‎

அறிவிப்பவர் : சயீத் அல்மக்புரீ


‏177 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ ‏عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ يَنْصَرِفْ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا»‏

‎177. சப்தத்தைக் கேட்காத வரை அல்லது நாற்றத்தை உணராத ‎வரை திரும்பிச் செல்ல வேண்டியதில்லை என நபிகள் நாயகம் ‎‎(ஸல்) அவர்கள் கூறினார்கள்:‎

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)‎


‏178 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُنْذِرٍ أَبِي يَعْلَى الثَّوْرِيِّ، عَنْ مُحَمَّدِ ابْنِ الحَنَفِيَّةِ، ‏قَالَ: قَالَ عَلِيٌّ كُنْتُ رَجُلًا مَذَّاءً فَاسْتَحْيَيْتُ أَنْ أَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرْتُ المِقْدَادَ بْنَ الأَسْوَدِ فَسَأَلَهُ ‏فَقَالَ: «فِيهِ الوُضُوءُ» وَرَوَاهُ شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ

‎178. இச்சைக் கசிவு அதிமாக வெளிப்படும் ஆடவனாக நான் ‎இருந்தேன். (இது பற்றிக்) கேட்க வெட்கப்பட்டு மிக்தாத் பின் ‎அஸ்வத் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‎அவர்களிடம் கேட்குமாறு பணித்தேன். அவ்வாறே அவர் ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்காக ‎உளூ செய்வது தான் கடமை; என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‎அவர்கள் பதிலளித்தார்கள்.‎

அறிவிப்பவர் : அலீ (ரலி)‎

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் ‎வந்துள்ளது.‎


‏179 - حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ، أَخْبَرَهُ أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ، ‏أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ عُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قُلْتُ أَرَأَيْتَ إِذَا جَامَعَ فَلَمْ يُمْنِ، قَالَ عُثْمَانُ «يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ ‏لِلصَّلاَةِ وَيَغْسِلُ ذَكَرَهُ» قَالَ عُثْمَانُ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتُ عَنْ ذَلِكَ عَلِيًّا، وَالزُّبَيْرَ، وَطَلْحَةَ، ‏وَأُبَيَّ بْنَ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ فَأَمَرُوهُ بِذَلِكَ

179. ஒருவர் தாம்பத்திய உறவு மேற்கொண்டார். ஆனால் விந்து ‎வெளியாக்கவில்லை என நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) ‎அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் அவர் தமது ‎உறுப்பைக் கழுவிவிட்டுத் தொழுகைக்குச் செய்வது போன்று ‎உளூச் செய்ய வேண்டும். இதை நான் அல்லாஹ்வின் தூதர் ‎‎(ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றுள்ளேன் என்று ‎கூறினார்கள். மேலும் இது பற்றி அலீ, ஸுபைர், தல்ஹா, உபை ‎பின் கஅப் (ரலி) ஆகியோரைக் கேட்ட போது இவ்வாறே அவர் ‎செய்ய வேண்டுமென அவர்கள் அனைவரும் வலியுறுத்தினர்.‎

அறிவிப்பவர் : ஸைத் பின் காலித் (ரலி)‎


‏180 - حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ، عَنْ ذَكْوَانَ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ ‏الخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْسَلَ إِلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ فَجَاءَ وَرَأْسُهُ يَقْطُرُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ ‏عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَلَّنَا أَعْجَلْنَاكَ»، فَقَالَ: نَعَمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أُعْجِلْتَ أَوْ قُحِطْتَ فَعَلَيْكَ ‏الوُضُوءُ» تَابَعَهُ وَهْبٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَلَمْ يَقُلْ غُنْدَرٌ، وَيَحْيَى، عَنْ شُعْبَةَ الوُضُوءُ

‎180. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ‎ஒருவரை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். ‎தலையிலிருந்து தண்ணீர் சொட்டும் நிலையில் அவர் வந்தார். ‎இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாம் உம்மை ‎அவசரப்படுத்தி விட்டோம் போலும்? என்றனர். அதற்கு அவர் ‎ஆம்' என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‎நீங்கள் அவசரப்பட்டு எழநேர்ந்தால், அல்லது விந்து ‎வெளியாக்காமலிருந்தால் உளூச் செய்வது மட்டுமே உங்கள் மீது ‎கடமை என்று கூறினார்கள்.‎
மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் ‎வந்துள்ளது.‎

அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:‎

ஷுஅபா அவர்களிடமிருந்து குன்துர் மற்றும் யஹ்யா ஆகியோர் ‎வழியாக வரும் அறிவிப்பில் உளூ கடமையாகும்' எனும் வாசகம் ‎இடம்பெறவில்லை.‎

அறிவிப்பாவ்ர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)‎


بَابٌ: الرَّجُلُ يُوَضِّئُ صَاحِبَهُ

பாடம் : 35‎
ஒருவர் தம் நண்பருக்கு உளூச் செய்ய உதவுதல்


‏181 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ يَحْيَى، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ ‏عَبَّاسٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا أَفَاضَ مِنْ عَرَفةَ عَدَلَ إِلَى الشِّعْبِ فَقَضَى حَاجَتَهُ، ‏قَالَ أُسَامَةُ بْنُ زَيْدٍ فَجَعَلْتُ أَصُبُّ عَلَيْهِ وَيَتَوَضَّأُ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتُصَلِّي؟ فَقَالَ: «المُصَلَّى أَمَامَكَ»‏

‎181. அல்லாஹ்வின் (ஸல்) அவர்கள் அரஃபா ‎பெருவெளியிலிருந்து புறப்பட்ட போது ஒரு கணவாயை நோக்கிச் ‎சென்று அங்கு இயற்கைக் கடனை நிறைவேற்றினார்கள். ‎அப்போது நான் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுக்க, ‎அவர்கள் உளூச் செய்யலானார்கள். அப்போது நான், ‎அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' ‎என்று கேட்டேன். அதற்கு, தொழும் இடம் உமக்கு முன்னால் ‎‎(முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது என்று அல்லாஹ்வின் ‎தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : உசாமா பின் ஸைத் (ரலி)‎


‏182 - حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، أَنَّ ‏نَافِعَ بْنَ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ عُرْوَةَ بْنَ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، يُحَدِّثُ عَنِ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ ‏اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، وَأَنَّهُ ذَهَبَ لِحَاجَةٍ لَهُ، وَأَنَّ مُغِيرَةَ «جَعَلَ يَصُبُّ المَاءَ عَلَيْهِ وَهُوَ يَتَوَضَّأُ، فَغَسَلَ وَجْهَهُ ‏وَيَدَيْهِ، وَمَسَحَ بِرَأْسِهِ، وَمَسَحَ عَلَى الخُفَّيْنِ»‏

‎182. நான் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‎அவர்களுடன் இருந்தேன். அவர்கள் தமது (இயற்கைத்) ‎தேவைக்காக புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களின் மீது நான் ‎தண்ணீர் ஊற்றிக்கொடுக்க, அவர்கள் தமது முகத்தையும், இரு ‎கைகளையும் கழுவினார்கள். ஈரக் கையால் தலையைத் ‎தடவினார்கள். ஈரக் கையால் காலுறைகள் மீதும் தடவினார்கள்.‎

அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி


بَابُ قِرَاءَةِ القُرْآنِ بَعْدَ الحَدَثِ وَغَيْرِهِ
وَقَالَ مَنْصُورٌ، عَنْ إِبْرَاهِيمَ: «لاَ بَأْسَ بِالقِرَاءَةِ فِي الحَمَّامِ، وَبِكَتْبِ الرِّسَالَةِ عَلَى غَيْرِ وُضُوءٍ» وَقَالَ حَمَّادٌ، عَنْ ‏إِبْرَاهِيمَ: «إِنْ كَانَ عَلَيْهِمْ إِزَارٌ فَسَلِّمْ، وَإِلَّا فَلاَ تُسَلِّمْ»‏

பாடம் : 36‎
சிறு துடக்கான பின்னரும் குர்ஆன் முதலியவற்றை ஓதுதல்

மன்சூர் பின் முஃதமிர் அவர்கள் கூறுகின்றார்கள்: குளியல் ‎அறையில் குர்ஆன் ஓதுவதும் உளூவின்றி கடிதம் வரைவதும் ‎குற்றமில்லை என்று இப்றாஹீம் அந்நகயீ அவர்கள் கூறினார்கள்.‎

ஹம்மாத் பின் அபீசுலைமான் அவர்கள் கூறுகின்றார்கள்: ‎‎(குளியல் அறையில் இருப்போர்) கீழாடை அணிந்திருந்தால் ‎அவர்களுக்கு ஸலாம் சொல்லுங்கள்; அவ்வாறில்லை என்றால் ‎ஸலாம் சொல்லாதீர்கள் என்று இப்றாஹீம் அந்நகயீ அவர்கள் ‎கூறினார்கள்.‎


‏183 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ ‏عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّهُ بَاتَ لَيْلَةً عِنْدَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ خَالَتُهُ فَاضْطَجَعْتُ فِي عَرْضِ الوِسَادَةِ " ‏وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى إِذَا انْتَصَفَ ‏اللَّيْلُ، أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ، اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَلَسَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدِهِ، ثُمَّ قَرَأَ ‏العَشْرَ الآيَاتِ الخَوَاتِمَ مِنْ سُورَةِ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ مِنْهَا فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي. قَالَ ابْنُ ‏عَبَّاسٍ: فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ يَدَهُ اليُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي اليُمْنَى ‏يَفْتِلُهَا، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ اضْطَجَعَ حَتَّى أَتَاهُ ‏المُؤَذِّنُ، فَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ "‏

‎183. நான் என் சிறிய தாயாரும் நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்களின் துணைவியாருமான மைமூனா (ரலி) அவர்களின் ‎இல்லத்தில் (ஒரு நாள்) இரவு தங்கினேன். நான் ‎தலையணையின் அகலவாட்டில் படுத்துக் கொண்டேன். ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களது வீட்டாரும் ‎அதன் நீளவாட்டில் படுத்திருந்தனர்.‎

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் பாதி வரை ‎அல்லது அதற்கு சற்று முன்பு வரை அல்லது சற்றுப் பின்பு ‎வரை உறங்கினார்கள். (பின்னர்) அவர்கள் விழித்தெழுந்து ‎அமர்ந்து, தமது கரத்தால் தம் முகத்தில் தடவித் தூக்கத்தைத் ‎துடைக்கலானார்கள். பிறகு ஆலு இம்ரான் அத்தியாயத்தின் ‎கடைசிப் பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். பிறகு ‎தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று ‎அதிலிருந்து உளூச் செய்தார்கள். தமது உளூவைச் ‎செம்மையாகச் செய்த பின்னர் தொழுவதற்காக நின்றார்கள். ‎நானும் (எழுந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தது ‎போன்று செய்துவிட்டு அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் போய் ‎நின்றேன். உடனே அவர்கள் தம் வலக் கரத்தை என் தலை மீது ‎வைத்து, என் வலது காதைப் பிடித்து (தம் வலப் பக்கத்தில் ‎இழுத்து) நிறுத்தினார்கள்.‎

அப்போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ‎ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அஅத்கள் ‎தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள், மறுபடியும் இரண்டு ‎ரக்அத்துகள், மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு ‎வித்ர் தொழுதார்கள்.‎

பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து ‎படுத்திருந்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் ‎தொழுதுவிட்டு புறப்பட்டுச் சென்று சுப்ஹுத் தொழுவித்தார்கள்.‎

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)‎


بَابُ مَنْ لَمْ يَتَوَضَّأْ إِلَّا مِنَ الغَشْيِ المُثْقِلِ

பாடம் : 37‎
உணர்வு நிலையற்ற மயக்கத்தினால் தான் உளூ நீங்கும்


‏184 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ امْرَأَتِهِ فَاطِمَةَ، عَنْ جَدَّتِهَا أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ‏أَنَّهَا قَالَتْ: أَتَيْتُ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ خَسَفَتِ الشَّمْسُ، فَإِذَا النَّاسُ قِيَامٌ يُصَلُّونَ، وَإِذَا هِيَ قَائِمَةٌ ‏تُصَلِّي، فَقُلْتُ: مَا لِلنَّاسِ؟ فَأَشَارَتْ بِيَدِهَا نَحْوَ السَّمَاءِ، وَقَالَتْ: سُبْحَانَ اللَّهِ، فَقُلْتُ: آيَةٌ؟ فَأَشَارَتْ: أَيْ نَعَمْ، فَقُمْتُ حَتَّى ‏تَجَلَّانِي الغَشْيُ، وَجَعَلْتُ أَصُبُّ فَوْقَ رَأْسِي مَاءً، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ ‏قَالَ: " مَا مِنْ شَيْءٍ كُنْتُ لَمْ أَرَهُ إِلَّا قَدْ رَأَيْتُهُ فِي مَقَامِي هَذَا، حَتَّى الجَنَّةَ وَالنَّارَ، وَلَقَدْ أُوحِيَ إِلَيَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي القُبُورِ ‏مِثْلَ - أَوْ قَرِيبَ مِنْ - فِتْنَةِ الدَّجَّالِ - لاَ أَدْرِي أَيَّ ذَلِكَ، قَالَتْ: أَسْمَاءُ - يُؤْتَى أَحَدُكُمْ، فَيُقَالُ لَهُ: مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ؟ فَأَمَّا ‏المُؤْمِنُ أَوِ المُوقِنُ - لاَ أَدْرِي أَيَّ ذَلِكَ قَالَتْ: أَسْمَاءُ - فَيَقُولُ: هُوَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، جَاءَنَا بِالْبَيِّنَاتِ وَالهُدَى، فَأَجَبْنَا وَآمَنَّا ‏وَاتَّبَعْنَا، فَيُقَالُ لَهُ: نَمْ صَالِحًا، فَقَدْ عَلِمْنَا إِنْ كُنْتَ لَمُؤْمِنًا، وَأَمَّا المُنَافِقُ أَوِ المُرْتَابُ - لاَ أَدْرِي أَيَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ - ‏فَيَقُولُ: لاَ أَدْرِي، سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ شَيْئًا فَقُلْتُهُ "‏

‎184. சூரிய கிரகணம் எற்பட்ட போது நான் நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் ‎சென்றேன். அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். மக்களும் ‎தொழுது கொண்டிருந்தார்கள். மக்களுக்கு என்ன நேர்ந்து ‎விட்டது? என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ‎வானை நோக்கித் தமது கரத்தால் சைகை செய்து, ‎சுப்ஹானல்லாஹ் என்று கூறினார்கள். இது (ஏதாவது) ‎அடையாளமா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ‎ஆம் என்று தலையால் கைசை செய்தார்கள். உடனே நானும் ‎மய்க்கம் ஏற்படுமளவுக்கு நின்றேன். என் தலை மீது தண்ணீரை ‎ஊற்றலானேன்.‎

தொழுது முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‎அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, எனக்கு இது வரை ‎காட்டப்பட்டிராத சொர்க்கம், நரகம் உட்பட அனைத்தையும் இந்த ‎இடத்தில் கண்டேன். நிச்சயமாக நீங்கள் உங்கள் ‎மண்ணறைகளில் தஜ்ஜால் என்பவனுடைய சோதனைக்கு ‎நிகரான அல்லது நெருக்கமான அளவிற்கு சோதிக்கப்படுவீர்கள் ‎என எனக்கு அறிவிக்கப்பட்டது:‎

-இதன் அறிவிப்பாளரான பாத்திமா பின்த் முன்திர் கூறுகிறார்: ‎‎(நிகரான/ நெருக்கமான) இவற்றில் எந்த வாசகத்தை அஸ்மா ‎‎(ரலி) அவர்கள் கூறினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.-‎
அப்போது (கப்ரிலிருக்கும்) உங்களில் ஒருவரிடம் ‎‎(முஹம்மதாகிய) இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன ‎தெரியும்?' என்று கேட்கப்படும்.‎
அதற்கு விசுவாசிகள் அல்லது உறுதி கொண்டவர்கள் -இவற்றில் ‎அஸ்மா (ரலி) அவர்கள் எதைச் சொன்னார்கள் என்று எனக்குத் ‎தெரியவில்லை.-‎

அவர்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ‎ஆவார்கள். அவர்கள் எங்களிடம் தெளிவான சான்றுகளையும், ‎நேர்வழியையும் கொண்டு வந்தார்கள். நாங்கள் ஏற்றுப் ‎பின்பற்றினோம் என்று பதிலளிப்பார். அப்போது கேள்வி ‎கேட்டவர்களின் தரப்பிலிருந்து நல்லபடியாக நீர் உறங்குவீராக! ‎நீர் நம்பிக்கையாளராய் இருந்தீர் என்று நாங்கள் அறிந்து ‎கொண்டோம் என்று கூறப்படும்.‎

நயவஞ்சகரோ, அல்லது சந்தேகப்பேர்வழியோ -இவற்றில் ‎அஸ்மா (ரலி) அவர்கள் எதைச் சொன்னார்கள் என்று எனக்குத் ‎தெரியவில்லை- எனக்கு எதுவும் தெரியாது. மக்கள் எதையோ ‎சொல்லக் கேட்டேன். அதையே நானும் சொன்னேன் என்று ‎கூறுவார்.‎

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)‎


بَابُ مَسْحِ الرَّأْسِ كُلِّهِ
لِقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَامْسَحُوا بِرُءُوسِكُمْ} وَقَالَ ابْنُ المُسَيِّبِ: «المَرْأَةُ بِمَنْزِلَةِ الرَّجُلِ تَمْسَحُ عَلَى رَأْسِهَا» وَسُئِلَ مَالِكٌ: ‏‏«أَيُجْزِئُ أَنْ يَمْسَحَ بَعْضَ الرَّأْسِ؟ فَاحْتَجَّ بِحَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ»‏

‎ ‎
பாடம் : 38‎

உளூவில் தலை முழுவதும் மஸஹ் செய்தல்

ஏனெனில் உங்களுடைய தலைக்கு மஸஹ் செய்யுங்கள் (5:6) ‎என்று அல்லாஹ் கூறுகின்றான்.‎
சயீத் பின் அல்முஸய்யப் அவர்கள், பெண்களும் ஆண்களைப் ‎போன்றே மஸஹ் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.‎

மாலிக் அவர்களிடம், (உளூவில்) தலையில் ஒரு பகுதி மட்டும் ‎மஸஹ் செய்தால் போதுமா? என்று கேட்கப்பட்டது அதற்கு ‎மாலிக் அவர்கள் பின்வரும் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) ‎அவர்களின் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பதிலளித்தார்கள்.‎


‏185 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى المَازِنِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلًا، قَالَ لِعَبْدِ اللَّهِ ‏بْنِ زَيْدٍ، وَهُوَ جَدُّ عَمْرِو بْنِ يَحْيَى أَتَسْتَطِيعُ أَنْ تُرِيَنِي، كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ ‏بْنُ زَيْدٍ: نَعَمْ، فَدَعَا بِمَاءٍ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ فَغَسَلَ مَرَّتَيْنِ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ يَدَيْهِ ‏مَرَّتَيْنِ مَرَّتَيْنِ إِلَى المِرْفَقَيْنِ، ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ، بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ حَتَّى ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ، ثُمَّ رَدَّهُمَا ‏إِلَى المَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ "‏

‎185. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் ‎வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி உளூச் ‎செய்தார்கள் என்பதை எனக்கு நீங்கள் செய்து காட்ட முடியுமா? ‎எனக் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) ‎அவர்கள் ஆம்' என்று கூறித் தண்ணீர் கொண்டு வரச் ‎சொன்னார்கள். அதைத் தமது இரு (முன்) கைகளிலும் ஊற்றி ‎இரு முறை கழுவினார்கள். பின்னர் மூன்று முறை வாய் ‎கொப்பளித்து, (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்கைச் சிந்தினார்கள். ‎பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் ‎தமது இரு கைகளையும் மூட்டுவரை இரண்டிரண்டு முறை ‎கழுவினார்கள். பின்னர் தமது தலைக்கு மஸஹ் செய்தார்கள். ‎‎(அதாவது) தமது இரு கைகளையும் முன் தலையில் வைத்து ‎பின்னே கொண்டு சென்றார்கள். பிறகு பின் தலையில் வைத்து ‎முன்னே கொண்டு வந்தார்கள். ஆரம்பமாக முன் தலையில் ‎வைத்து அப்படியே அதை தமது பிடரிவரை கொண்டு சென்ற ‎பின் அப்படியே ஆரம்பித்த இடத்திற்கே திரும்பவும் கொண்டு ‎வந்தார்கள். பிறகு இரு கால்களையும் கழுவினார்கள்.‎

அறிவிப்பவர் : யஹ்யா அல்மாஸினீ


بَابُ غَسْلِ الرِّجْلَيْنِ إِلَى الكَعْبَيْنِ

பாடம் : 39‎
இரு கால்களையும் கணுக்கால்கள் வரை கழுவுதல்


‏186 - حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِيهِ، شَهِدْتُ عَمْرَو بْنَ أَبِي حَسَنٍ، سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ، عَنْ ‏وُضُوءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ، فَتَوَضَّأَ لَهُمْ وُضُوءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، «فَأَكْفَأَ عَلَى يَدِهِ ‏مِنَ التَّوْرِ، فَغَسَلَ يَدَيْهِ ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي التَّوْرِ، فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ، ثَلاَثَ غَرَفَاتٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَغَسَلَ ‏وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ إِلَى المِرْفَقَيْنِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَمَسَحَ رَأْسَهُ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ مَرَّةً وَاحِدَةً، ثُمَّ غَسَلَ ‏رِجْلَيْهِ إِلَى الكَعْبَيْنِ»‏

‎186. அம்ர் பின் அபீஹசன் அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் ‎‎(ரலி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ‎உளூவைப் பற்றிக் கேட்ட இடத்தில் நானும் இருந்தேன். ‎அப்போது அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஒரு ‎பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, நபிகள் நாயகம் ‎‎(ஸல்) அவர்கள் செய்தது போன்று உளூச் செய்து காட்டினார்கள்.‎

‎(ஆரம்பமாக) பாத்திரத்திலிருந்த தண்ணீரைத் தமது கையில் ‎ஊற்றி மூன்று முறை கைகளைக் கழுவினார்கள். பின்னர் தமது ‎கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை தண்ணீர் அள்ளி ‎வாய் கொப்பளித்து மூக்கிற்குள் நீர் செலுத்திச் சிந்தினார்கள். ‎மீண்டும் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை ‎முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தமது இரு கைகளையும் ‎மூட்டுவரை இரு முறை கழுவினார்கள். பின்னர் கையை ‎‎(பாத்திரத்தில்) நுழைத்து தமது தலைக்கு மஸஹ் செய்தார்கள். ‎‎(அதாவது) இரு கைகளையும் முன் தலையில் வைத்து பின்னால் ‎கொண்டு சென்றார்கள். அப்படியே பின்னாலிருந்து முன் பகுதிக்கு ‎கொண்டு வந்தார்கள். இவ்வாறு ஒரு தடவை மட்டுமே ‎செய்தார்கள். பின்னர் தமது கால்களை கணுக்கால்கள் வரை ‎கழுவினார்கள்.‎

அறிவிப்பவர் : யஹ்யா அல்மாஸினீ


بَابُ اسْتِعْمَالِ فَضْلِ وَضُوءِ النَّاسِ
وَأَمَرَ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ: «أَهْلَهُ أَنْ يَتَوَضَّئُوا بِفَضْلِ سِوَاكِهِ»‏

பாடம் : 40‎

மக்கள் உளூ செய்து மிச்சம் வைத்த தண்ணீரைப் ‎பயன்படுத்துதல்

தாம் பல் துலக்கிவிட்டு மிச்சம் வைத்த தண்ணீரில் உளூச் ‎செய்ய தம் வீட்டாரை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ‎அனுமதித்தார்கள்.‎


‏187 - حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا الحَكَمُ، قَالَ: سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ، يَقُولُ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ ‏عَلَيْهِ وَسَلَّمَ بِالهَاجِرَةِ، فَأُتِيَ بِوَضُوءٍ فَتَوَضَّأَ، فَجَعَلَ النَّاسُ يَأْخُذُونَ مِنْ فَضْلِ وَضُوئِهِ فَيَتَمَسَّحُونَ بِهِ، فَصَلَّى النَّبِيُّ صَلَّى ‏اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ رَكْعَتَيْنِ، وَالعَصْرَ رَكْعَتَيْنِ، وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ

‎187. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் ‎எங்களிடம் வந்தார்கள். அவர்கள் உளூ செய்யத் தண்ணீர் ‎கொண்டு வரப்பட்டு, அதில் உளூச் செய்தார்கள். அவர்கள் உளூச் ‎செய்த தண்ணீரின் மிச்சத்தை எடுத்து மக்கள் தங்கள் மீது ‎தடவிக் கொண்டனர். அப்போது தமக்கு முன் கைத்தடி ஒன்றை ‎வைத்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ரையும், ‎அஸ்ரையும் இரண்டிரண்டு ரக்அத்க்களாகத் தொழுதார்கள்.‎

அறிவிப்பவர் : அபூஜுஹைஃபா (ரலி)‎


‏188 - وَقَالَ أَبُو مُوسَى: دَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَدَحٍ فِيهِ مَاءٌ، فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ فِيهِ، وَمَجَّ فِيهِ، ثُمَّ قَالَ لَهُمَا: ‏‏«اشْرَبَا مِنْهُ، وَأَفْرِغَا عَلَى وُجُوهِكُمَا وَنُحُورِكُمَا»‏

188. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தண்ணீர் குவளையைக் ‎கொண்டு வரச்சொல்லி, அதில் தம்மிரு கைகளையும், தமது ‎முகத்தையும் கழுவிவிட்டு, அதனுள் தண்ணீரை உமிழ்ந்தார்கள். ‎பிறகு எங்கள் இருவரிடமும், இதிலிருந்து சிறிது பருகிவிட்டு, ‎உங்கள் முகத்திலும், கழுத்திலும் ஊற்றிக்கொள்ளுங்கள் என்று ‎சொன்னார்கள்.‎

அறிவிப்பவர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)‎


‏189 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، ‏قَالَ: أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ، قَالَ «وَهُوَ الَّذِي مَجَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَجْهِهِ وَهُوَ غُلاَمٌ مِنْ بِئْرِهِمْ» ‏وَقَالَ عُرْوَةُ، عَنِ المِسْوَرِ، وَغَيْرِهِ يُصَدِّقُ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا صَاحِبَهُ «وَإِذَا تَوَضَّأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَادُوا يَقْتَتِلُونَ ‏عَلَى وَضُوئِهِ»‏

‎189. தான் சிறுவனாக இருந்த போது தனது வீட்டிலுள்ள ‎கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் அதை தம்முடைய முகத்தில் உமிழ்ந்ததாக என்னிடம் ‎குறிப்பிட்ட மஹ்மூத் பின் ரபீவு (ரலி) (பின்வருமாறும்) ‎கூறினார்கள்:‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்யும் போது, அவர்கள் ‎உளூசெய்துவிட்டு மீதி வைக்கின்ற தண்ணீரை எடுத்துக் ‎கொள்வதற்காக மக்கள் ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் ‎கொள்ளுமளவிற்குச் சென்று விடுவார்கள்.‎

இதை உர்வா பின் ஸுபைர் அவர்கள் மிஸ்வர் பின் மக்ரமா ‎‎(ரலி) மற்றும் மற்றொருவரிடமிருந்து அறிவிக்கிறார்கள். ‎இவ்விருவரும் மற்றவர் சொன்னதை ‎உறுதிப்படுத்தியுமுள்ளார்கள்.‎

அறிவிப்பவர் : இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ

இது குறித்து அறிய


https://onlinepj.in/index.php/history/the-prophet-muhammad-history/nabiyin-saliyai


‏190 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنِ الجَعْدِ، قَالَ: سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ، يَقُولُ: ‏ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ ابْنَ أُخْتِي وَجِعٌ «فَمَسَحَ رَأْسِي وَدَعَا لِي ‏بِالْبَرَكَةِ، ثُمَّ تَوَضَّأَ، فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ، ثُمَّ قُمْتُ خَلْفَ ظَهْرِهِ، فَنَظَرْتُ إِلَى خَاتَمِ النُّبُوَّةِ بَيْنَ كَتِفَيْهِ، مِثْلَ زِرِّ الحَجَلَةِ»‏

‎190. என் சிறிய தாயார் என்னை நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்களிடம் அழைத்துச் சென்று அல்லாஹ்வின் தூதரே! என் ‎சகோதரி மகன் நோய் கண்டுள்ளான் என்று சொன்னார்கள். ‎அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனது தலையை ‎வருடிக்கொடுத்து எனது நற்சுகத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். ‎பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். ‎அவர்கள் உளூச் செய்துவிட்டு மீதி வைத்த தண்ணீரில் சிறிதை ‎நான் அருந்தினேன். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய ‎இரு புஜங்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையை நான் ‎பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்றிருந்தது.‎

அறிவிப்பவர் : சாயிப் பின் யஸீத் (ரலி)‎

நபித்துவ முத்திரை குறித்து அறிய


بَابُ مَنْ مَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ غَرْفَةٍ وَاحِدَةٍ

பாடம் : 41‎
ஒரு கை நீரில் வாய் கொப்பளித்து மூக்கைச் சிந்துதல்.‎


‏191 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، أَنَّهُ أَفْرَغَ ‏مِنَ الإِنَاءِ عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا، ثُمَّ غَسَلَ - أَوْ مَضْمَضَ وَاسْتَنْشَقَ - مِنْ كَفَّةٍ وَاحِدَةٍ، فَفَعَلَ ذَلِكَ ثَلاَثًا، فَغَسَلَ يَدَيْهِ إِلَى ‏المِرْفَقَيْنِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، وَمَسَحَ بِرَأْسِهِ، مَا أَقْبَلَ وَمَا أَدْبَرَ، وَغَسَلَ رِجْلَيْهِ إِلَى الكَعْبَيْنِ، ثُمَّ قَالَ: «هَكَذَا وُضُوءُ رَسُولِ اللَّهِ ‏صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»‏

‎191. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் பாத்திரத்திலிருந்த ‎தண்ணீரைத் தம்மிரு முன் கைகளிலும் ஊற்றிக் கழுவினார்கள். ‎பிறகு ஒரு கைத் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்து ‎மூக்கிற்கும் நீர் செலுத்தினார்கள். இவ்வாறு மூன்று முறை ‎செய்தார்கள். பிறகு தம் தமது முகத்தை மூன்று முறை ‎கழுவினார்கள். பிறகு இரு கைகளையும் மூட்டு வரை இரண்டு ‎இரண்டு முறை கழுவினார்கள். முன் தலைக்கும், பின் தலைக்கும் ‎மஸஹ் செய்தார்கள். மேலும் தம் இரு கால்களையும் ‎கணுக்கால்கள் வரை கழுவினார்கள். பின்னர், இப்படித்தான் ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உளூ அமைந்திருந்தது ‎என்று கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : யஹ்யா அல்மாஸினீ


بَابُ مَسْحِ الرَّأْسِ مَرَّةً

பாடம் : 42‎
தலைக்கு ஒரு தடவை மஸஹ் செய்தல்


‏192 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، قَالَ: شَهِدْتُ عَمْرَو بْنَ أَبِي ‏حَسَنٍ، سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ عَنْ وُضُوءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ فَتَوَضَّأَ لَهُمْ، فَكَفَأَ عَلَى يَدَيْهِ ‏فَغَسَلَهُمَا ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ ثَلاَثًا، بِثَلاَثِ غَرَفَاتٍ مِنْ مَاءٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي ‏الإِنَاءِ، فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ، فَغَسَلَ يَدَيْهِ إِلَى المِرْفَقَيْنِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَمَسَحَ ‏بِرَأْسِهِ، فَأَقْبَلَ بِيَدَيْهِ وَأَدْبَرَ بِهِمَا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَغَسَلَ رِجْلَيْهِ» وحَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ قَالَ: مَسَحَ رَأْسَهُ ‏مَرَّةً

‎192. அம்ர் பின் அபீஹசன் அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் ‎‎(ரலி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ‎உளூவைப் பற்றிக் கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) ‎அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, ‎அவர்களுக்கு உளூச் செய்துகாட்டினார்கள்.‎

தம்மிரு கையில் (தண்ணீர்) ஊற்றி முன் இரு கைகளையும் ‎மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது கையைப் ‎பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை தண்ணீர் அள்ளி மூன்று ‎முறை வாய் கொப்பளித்து மூக்கைச் சிந்தினார்கள். பிறகு தமது ‎கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் ‎கழுவினார்கள். பிறகு தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து ‎இரு கைகளையும் மூட்டு வரை இரண்டிரண்டு முறை ‎கழுவினார்கள். பிறகு பாத்திரத்தில் தமது கையை நுழைத்து ‎தமது தலைக்கு மஸஹ் செய்தார்கள். அதாவது தமது இரு ‎கைகளையும் முன்னிருந்து பின்னாக, பின்னிருந்து முன்னாகக் ‎கொண்டு வந்தார்கள். பிறகு அந்தப் பாத்திரத்தில் தமது கையை ‎நுழைத்து தமது இரு கால்களையும் கழுவினார்கள்.‎
உஹைப் பின் காலித் அவர்களின் மற்றோர் அறிவிப்பில் ‎அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் தமது தலைக்கு ஒரு ‎தடவை மஸஹ் செய்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது.‎
அறிவிப்பவர் : யஹ்யா பின் உமாரா


بَابُ وُضُوءِ الرَّجُلِ مَعَ امْرَأَتِهِ، وَفَضْلِ وَضُوءِ المَرْأَةِ
وَتَوَضَّأَ عُمَرُ بِالحَمِيمِ وَمِنْ بَيْتِ نَصْرَانِيَّةٍ

பாடம் : 43‎
ஒரு மனிதர் தம் மனைவியுடன் உளூச் செய்வதும், பெண் உளூச் ‎செய்து மிச்சம் வைத்த தண்ணீர் பற்றிய சட்டமும்.‎

உமர் (ரலி) அவர்கள் வெந்நீரில் உளூ செய்தார்கள்; ஒரு ‎கிறிஸ்தவப் பெண்ணின் வீட்டில் உளூச் செய்தார்கள்.‎


‏193 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: «كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ ‏يَتَوَضَّئُونَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمِيعًا»‏

‎193. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் ‎ஆண்களும், பெண்களும் சேர்ந்தே உளூச் செய்வார்கள்.‎

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)‎


بَابُ صَبِّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضُوءهُ عَلَى المُغْمَى عَلَيْهِ

பாடம் : 44‎
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் உளூச் செய்த தண்ணீரை ‎மயக்கமுற்றவர் மீது ஊற்றியது


‏194 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، قَالَ: سَمِعْتُ جَابِرًا يَقُولُ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ ‏عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي، وَأَنَا مَرِيضٌ لاَ أَعْقِلُ، فَتَوَضَّأَ وَصَبَّ عَلَيَّ مِنْ وَضُوئِهِ، فَعَقَلْتُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ لِمَنِ المِيرَاثُ؟ ‏إِنَّمَا يَرِثُنِي كَلاَلَةٌ، فَنَزَلَتْ آيَةُ الفَرَائِضِ

‎194. நான் நோயுற்று சுய நினைவில்லாமல் இருந்த போது ‎என்னை நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‎அவர்கள் வந்தார்கள். அவர்கள் உளூச் செய்துவிட்டு தாம் உளூச் ‎செய்த தண்ணீரில் சிறிதை என் மீது ஊற்றினார்கள். நான் ‎உணர்வு பெற்று, அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய சொத்துக்கு ‎யார் வாரிசு? என்னுடைய சொத்துக்கு என் சகோதரர்கள் மட்டுமே ‎எனக்கு வாரிசாக ஆகும் நிலையில் நான் உள்ளேனே? என்று ‎கேட்டேன். அப்போது தான் பாகப் பிரிவினை தொடர்பான ‎‎(4:176ஆவது) வசனம் அருளப்பெற்றது.‎

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)‎


بَابُ الغُسْلِ وَالوُضُوءِ فِي المِخْضَبِ وَالقَدَحِ وَالخَشَبِ وَالحِجَارَةِ

பாடம் : 45‎
துணி அலசும் தொட்டி, வாய் குறுகிய மரப் பாத்திரம், மரம் ‎மற்றும் கற்களினாலான பாத்திரங்களில் உளூச் செய்தல், ‎குளித்தல்


‏195 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ بَكْرٍ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ قَالَ: حَضَرَتِ الصَّلاَةُ، فَقَامَ مَنْ كَانَ ‏قَرِيبَ الدَّارِ إِلَى أَهْلِهِ، وَبَقِيَ قَوْمٌ، «فَأُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِخْضَبٍ مِنْ حِجَارَةٍ فِيهِ مَاءٌ، فَصَغُرَ ‏المِخْضَبُ أَنْ يَبْسُطَ فِيهِ كَفَّهُ، فَتَوَضَّأَ القَوْمُ كُلُّهُمْ» قُلْنَا: كَمْ كُنْتُمْ؟ قَالَ: «ثَمَانِينَ وَزِيَادَةً»‏

‎195. தொழுகை நேரம் வந்த போது அருகில் வீடு சமீபத்தில் ‎உள்ளவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். மற்றவர்கள் ‎அங்கேயே இருந்தனர். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‎அவர்களிடம் தண்ணீருள்ள ஒரு கல்லாலான பாத்திரம் கொண்டு ‎வரப்பட்டது. அந்தப் பாத்திரத்திற்குள் அல்லாஹ்வின் தூதர் ‎‎(ஸல்) அவர்கள் தமது கையை விரித்துக் கழுவ முடியாத படி ‎‎(அதன் வாய்) சிறியதாக இருந்தது. அங்கிருந்த மக்கள் ‎அனைவரும் அதில் உளூச் செய்தனர்.‎

‎(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைத் அவர்கள் ‎கூறுகிறார்கள்:‎

நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்? என்று நாங்கள் அனஸ் (ரலி) ‎அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், எண்பதுக்கும் ‎அதிகமானவர்கள் இருந்தோம் என்று கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)‎


‏196 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ العَلاَءِ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ ‏عَلَيْهِ وَسَلَّمَ «دَعَا بِقَدَحٍ فِيهِ مَاءٌ، فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ فِيهِ، وَمَجَّ فِيهِ»‏

‎196. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ‎கொண்டுவரச் சொல்லி அதில் தமது இரு கைகளையும், ‎முகத்தையும் கழுவிவிட்டு அதில் உமிழ்ந்தார்கள்.‎

அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)‎


‏197 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ ‏اللَّهِ بْنِ زَيْدٍ قَالَ: «أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْرَجْنَا لَهُ مَاءً فِي تَوْرٍ مِنْ صُفْرٍ فَتَوَضَّأَ، فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ‏وَيَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، وَمَسَحَ بِرَأْسِهِ، فَأَقْبَلَ بِهِ وَأَدْبَرَ، وَغَسَلَ رِجْلَيْهِ»‏

‎197. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) வந்த ‎போது அவர்களுக்காக செம்பினாலான ஒரு குவளையில் ‎தண்ணீர் கொணர்ந்தோம். அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‎அவர்கள் உளூச் செய்தார்கள். தமது முகத்தை மூன்று முறையும், ‎கைகளை இரண்டு முறையும் கழுவினார்கள். மேலும் தமது ‎தலைக்கு முன்னிருந்து பின்னாக, பின்னிருந்து முன்னாகக் ‎கொண்டு சென்று மஸஹ் செய்து தமது இரு கால்களையும் ‎கழுவினார்கள்.‎

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)‎


‏198 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، ‏قَالَتْ: لَمَّا ثَقُلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاشْتَدَّ بِهِ وَجَعُهُ، اسْتَأْذَنَ أَزْوَاجَهُ فِي أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي، فَأَذِنَّ لَهُ، فَخَرَجَ ‏النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ رَجُلَيْنِ، تَخُطُّ رِجْلاَهُ فِي الأَرْضِ، بَيْنَ عَبَّاسٍ وَرَجُلٍ آخَرَ. قَالَ عُبَيْدُ اللَّهِ: فَأَخْبَرْتُ عَبْدَ ‏اللَّهِ بْنَ عَبَّاسٍ فَقَالَ: " أَتَدْرِي مَنِ الرَّجُلُ الآخَرُ؟ قُلْتُ: لاَ. قَالَ: هُوَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ " وَكَانَتْ عَائِشَةُ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا تُحَدِّثُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ، بَعْدَمَا دَخَلَ بَيْتَهُ وَاشْتَدَّ وَجَعُهُ: «هَرِيقُوا عَلَيَّ مِنْ سَبْعِ قِرَبٍ، ‏لَمْ تُحْلَلْ أَوْكِيَتُهُنَّ، لَعَلِّي أَعْهَدُ إِلَى النَّاسِ» وَأُجْلِسَ فِي مِخْضَبٍ لِحَفْصَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ طَفِقْنَا ‏نَصُبُّ عَلَيْهِ تِلْكَ، حَتَّى طَفِقَ يُشِيرُ إِلَيْنَا: «أَنْ قَدْ فَعَلْتُنَّ». ثُمَّ خَرَجَ إِلَى النَّاسِ

‎198. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக ‎நோய்வாய்ப்பட்டு, அவர்களின் நோய் அதிகரித்த போது, எனது ‎வீட்டில் தங்கி சிகிச்சையும், பராமரிப்பும் பெற, (மற்ற) ‎துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் ‎அனுமதி வழங்கினர். அப்போது தமது கால்கள் தரையில் இழுபட, ‎அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும், வேறு ஒரு மனிதருக்கும் ‎இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட்டார்கள்.‎

‎-(அறிவிப்பாளர்களில் ஒருவரான) உபைதுல்லாஹ் பின் ‎அப்தில்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:‎

இந்த ஹதீஸை நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) ‎அவர்களிடம் தெரிவித்த போது அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் ‎பெயர் குறிப்பிடாத அந்த வேறொரு மனிதர் யார் என்று ‎தெரியுமா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்று ‎பதிலளித்தேன். அவர் தாம் அலீ (ரலி) என்று அவர்கள் ‎கூறினார்கள்.-‎

மேலும், அயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் இல்லத்திற்கு வந்து, ‎அவர்களின் நோய் கடுமையான நேரத்தில் மக்களுக்கு நான் ‎அறிவுரை கூறுவதற்காக வாய்ப் பகுதி அவிழ்க்கப்படாத ஏழு ‎தோல் பைகளிலிருந்து என் மீது ஊற்றுங்கள் என்றார்கள். ‎அவர்களின் மனைவி ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குச் ‎சொந்தமான துணி அலசும் பாத்திரத்தின் மீது ‎அமர்த்தப்பட்டார்கள். பிறகு அவர்கள் மீது தோல் பைகளிலிருந்த ‎நீரை ஊற்றத் தொடங்கினோம். (சரியாகச்) செய்து விட்டீர்கள் ‎என்று (கையால்) சைகை செய்தார்கள். பிறகு மக்களை நோக்கிப் ‎புறப்பட்டுச் சென்றார்கள்.‎

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)‎


بَابُ الوُضُوءِ مِنَ التَّوْرِ

பாடம் : 46‎
பாத்திரத்தில் உளூச் செய்தல்


‏199 - حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ عَمِّي يُكْثِرُ ‏مِنَ الوُضُوءِ، قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ: أَخْبِرْنِيا كَيْفَ رَأَيْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ؟ «فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ، فَكَفَأَ ‏عَلَى يَدَيْهِ، فَغَسَلَهُمَا ثَلاَثَ مِرَارٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي التَّوْرِ، فَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلاَثَ مَرَّاتٍ مِنْ غَرْفَةٍ وَاحِدَةٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ ‏فَاغْتَرَفَ بِهَا، فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ يَدَيْهِ إِلَى المِرْفَقَيْنِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، ثُمَّ أَخَذَ بِيَدِهِ مَاءً فَمَسَحَ رَأْسَهُ، فَأَدْبَرَ ‏بِهِ وَأَقْبَلَ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ» فَقَالَ: هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ

‎199. என் தந்தையின் சகோதரரர் அடிக்கடி உளூச் செய்பவராக ‎இருந்தார். அவர் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம், ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூ செய்யக் ‎கண்டீர்கள் என்று கூறுங்கள்!' என்று கேட்டார். அப்துல்லாஹ் பின் ‎ஸைத் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு ‎வரச் சொல்லி, தமது இருகைகள் மீது சரித்து இரு கைகளையும் ‎மூன்று முறை கழுவினார்கள். பிறகு அந்தப் பாத்திரத்தில் தமது ‎கையை நுழைத்து ஒரு கை தண்ணீர் எடுத்து மூன்று முறை ‎வாய் கொப்பளித்து மூக்கைச் சிந்தினார்கள். பிறகு தமது ‎கையைப் பாத்திரத்தில் நுழைத்து தண்ணீர் அள்ளி மூன்று முறை ‎முகத்தைக் கழுவினார்கள். பிறகு தமது இரு கைகளையும் ‎மூட்டுவரை இரண்டிரண்டு முறை கழுவினார்கள். பிறகு தமது ‎கையில் தண்ணீர் எடுத்து அதன் மூலம் தமது தலைக்கு மஸஹ் ‎செய்தார்கள். அதாவது தமது கையை முன்னிருந்து பின்னாக, ‎பின்னிருந்து முன்னாகக் கொண்டு சென்றார்கள். பிறகு தமது ‎இரு கால்களையும் கழுவிவிட்டு, இப்படித்தான் நபிகள் நாயகம் ‎‎(ஸல்) அவர்கள் உளூ செய்யக் கண்டேன் என்றனர்.‎

அறிவிப்பவர் : யஹ்யா அல்மாஸினீ


‏200 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «دَعَا بِإِنَاءٍ مِنْ مَاءٍ، فَأُتِيَ ‏بِقَدَحٍ رَحْرَاحٍ، فِيهِ شَيْءٌ مِنْ مَاءٍ، فَوَضَعَ أَصَابِعَهُ فِيهِ» قَالَ أَنَسٌ: «فَجَعَلْتُ أَنْظُرُ إِلَى المَاءِ يَنْبُعُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ» قَالَ ‏أَنَسٌ: فَحَزَرْتُ مَنْ تَوَضَّأَ، مَا بَيْنَ السَّبْعِينَ إِلَى الثَّمَانِينَ

200. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் ‎கொண்டு வரச் சொன்னார்கள். அப்போது தண்ணீருடன் வாய் ‎அகன்ற ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் கொண்டு வரப்பட்டது. ‎அதனுள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது விரல்களை ‎வைத்தார்கள். அப்போது அவர்களது விரல்களினூடே நீர் ‎சுரப்பதை நான் பார்த்தேன். அதிலிருந்து உளூச் செய்தவர்களை ‎நான் கணக்கிட்டுப் பார்த்த போது (கிட்டத்தட்ட) எழுபது ‎பேரிலிருந்து எண்பது பேர்கள் வரை இருந்தனர்.‎

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)‎


بَابُ الوُضُوءِ بِالْمُدِّ

பாடம் : 47‎
இரு கைகள் கொள்ளளவு தண்ணீரில் உளூ செய்வது


‏201 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، قَالَ: حَدَّثَنِي ابْنُ جَبْرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسًا، يَقُولُ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ ‏وَسَلَّمَ يَغْسِلُ، أَوْ كَانَ يَغْتَسِلُ، بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ، وَيَتَوَضَّأُ بِالْمُدِّ»‏

‎201. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஸாவு முதல் ஐந்து ‎முத்து தண்ணீரில் குளிப்பார்கள். இருகைகள் கொள்ளளவு ‎தண்ணீரில் உளூச் செய்வார்கள்.‎

முத்து என்பது இரு கைகள் கொள்ளளவு ஆகும். ஸாவு என்பது ‎இது போல் நான்கு மடங்காகும்.‎

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)‎


بَابُ المَسْحِ عَلَى الخُفَّيْنِ

பாடம் : 48‎
காலுறைகள் மீது மஸஹ் செய்தல்


‏202 - حَدَّثَنَا أَصْبَغُ بْنُ الفَرَجِ المِصْرِيُّ، عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ الحَارِثِ، حَدَّثَنِي أَبُو النَّضْرِ، عَنْ أَبِي ‏سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ «النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ مَسَحَ عَلَى ‏الخُفَّيْنِ» وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ سَأَلَ عُمَرَ عَنْ ذَلِكَ فَقَالَ: نَعَمْ، إِذَا حَدَّثَكَ شَيْئًا سَعْدٌ، عَنِ النَّبِيّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلاَ ‏تَسْأَلْ عَنْهُ غَيْرَهُ. وَقَالَ مُوسَى بْنُ عُقْبَةَ: أَخْبَرَنِي أَبُو النَّضْرِ، أَنَّ أَبَا سَلَمَةَ، أَخْبَرَهُ أَنَّ سَعْدًا حَدَّثَهُ، فَقَالَ عُمَرُ لِعَبْدِ اللَّهِ: ‏نَحْوَهُ

202. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலுறைகள் மீது மஸஹ் ‎செய்தார்கள் என்று சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் ‎கூறினார்கள். நான் இது பற்றி (என் தந்தை) உமர் (ரலி) ‎அவர்களிடம் கேட்ட போது ஆம், நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்களைப் பற்றிய ஒரு செய்தியை சஅத் உன்னிடம் ‎சொன்னால் அது பற்றி வேறு யாரிடமும் நீ கேட்க ‎வேண்டியதில்லை என்றனர்.‎

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் ‎வந்துள்ளது.‎

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)‎


‏203 - حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ الحَرَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ نَافِعِ بْنِ ‏جُبَيْرٍ، عَنْ عُرْوَةَ بْنِ المُغِيرَةِ، عَنْ أَبِيهِ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّهُ خَرَجَ لِحَاجَتِهِ، ‏فَاتَّبَعَهُ المُغِيرَةُ بِإِدَاوَةٍ فِيهَا مَاءٌ، فَصَبَّ عَلَيْهِ حِينَ فَرَغَ مِنْ حَاجَتِهِ فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى الخُفَّيْنِ»‏

‎203. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைத் ‎தேவையை நிறைவேற்ற வெளியே சென்றார்கள். அப்போது ‎தண்ணீர் நிரம்பிய ஒரு தோல்பையுடன் அவர்களைத் தொடர்ந்து ‎நானும் சென்றேன். அவர்கள் தமது தேவையை ‎நிறைவேற்றிவிட்டு வந்த போது அவர்களுக்குத் தண்ணீர் ‎ஊற்றினேன். அவர்கள் தமது காலுறைகள் மீது மஸஹ் ‎செய்தார்கள்.‎

அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)‎


‏204 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ، أَنَّ أَبَاهُ، ‏أَخْبَرَهُ أَنَّهُ «رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى الخُفَّيْنِ» وَتَابَعَهُ حَرْبُ بْنُ شَدَّادٍ، وَأَبَانُ، عَنْ يَحْيَى

‎204. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது காலுறைகள் மீது ‎மஸஹ் செய்ததை நான் பார்த்தேன்.‎

அறிவிப்பவர் : அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி)‎


‏205 - حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ ‏أُمَيَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى عِمَامَتِهِ وَخُفَّيْهِ» وَتَابَعَهُ مَعْمَرٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي ‏سَلَمَةَ، عَنْ عَمْرٍو قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

‎205. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் ‎மீதும், தமது இரு காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் ‎பார்த்தேன்.‎

அறிவிப்பவர் : அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி)‎


بَابُ إِذَا أَدْخَلَ رِجْلَيْهِ وَهُمَا طَاهِرَتَانِ

பாடம் : 49‎
இரு கால்களும் சுத்தமாக இருக்கும் நிலையில் காலுறை ‎அணிந்தால்...‎


‏206 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، عَنْ عُرْوَةَ بْنِ المُغِيرَةِ، عَنْ أَبِيهِ قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ ‏عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَهْوَيْتُ لِأَنْزِعَ خُفَّيْهِ، فَقَالَ: «دَعْهُمَا، فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ». فَمَسَحَ عَلَيْهِمَا

‎206. நான் ஒரு பயணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ‎இருந்தேன். அவர்கள் அவர்களது இரு காலுறைகளையும் ‎கழற்றுவதற்காக நான் என் கையை நீட்டினேன். அப்போது நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள், அவற்றை விட்டுவிடுங்கள். கால்கள் ‎சுத்தமாக இருக்கும் போது தான் காலுறைகளை அணிந்தேன் ‎என்று கூறிவிட்டு, அவ்விரு காலுறைகள் மஸஹ் செய்தார்கள்.‎

அறிவிப்பவர் : முஃகீரா (ரலி)‎


بَابُ مَنْ لَمْ يَتَوَضَّأْ مِنْ لَحْمِ الشَّاةِ وَالسَّوِيقِ وَأَكَلَ أَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَعُثْمَانُ، رَضِيَ اللَّهُ عَنْهُمْ، «فَلَمْ يَتَوَضَّئُوا»‏

பாடம் : 50‎
ஆட்டிறைச்சி, மாவு ஆகியவற்றைச் சாப்பிட்டதற்காக உளூ ‎செய்தல் இல்லை

அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோர் சாப்பிட்ட பின் உளூச் ‎செய்யவில்லை.‎


‏207 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ أَنَّ ‏رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَكَلَ كَتِفَ شَاةٍ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»‏

‎207. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டின் சப்பைப் ‎பகுதியைச் சாப்பிட்ட பின் (அதற்காக) உளூச் செய்யாமல் ‎தொழுதார்கள்.‎

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)‎


‏208 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي جَعْفَرُ بْنُ عَمْرِو بْنِ أُمَيَّةَ، أَنَّ ‏أَبَاهُ أَخْبَرَهُ أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَحْتَزُّ مِنْ كَتِفِ شَاةٍ، فَدُعِيَ إِلَى الصَّلاَةِ، فَأَلْقَى السِّكِّينَ، فَصَلَّى وَلَمْ ‏يَتَوَضَّأْ»‏

‎208. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெட்டிக் ‎கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக ‎அழைக்கப்பட்டார்கள். உடனே கத்தியைக் கீழே போட்டுவிட்டுத் ‎தொழுதார்கள். உளூச் செய்யவில்லை.‎

அறிவிப்பவர் : அம்ர் பின் உமய்யா (ரலி)‎


بَابُ مَنْ مَضْمَضَ مِنَ السَّوِيقِ وَلَمْ يَتَوَضَّأْ

பாடம் : 51‎
மாவு சாப்பிட்டுவிட்டு உளூச் செய்யாமல் வாய் கொப்பளிப்பது


‏209 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، مَوْلَى بَنِي حَارِثَةَ أَنَّ ‏سُوَيْدَ بْنَ النُّعْمَانِ أَخْبَرَهُ أَنَّهُ خَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ خَيْبَرَ، حَتَّى إِذَا كَانُوا بِالصَّهْبَاءِ، وَهِيَ أَدْنَى ‏خَيْبَرَ، «فَصَلَّى العَصْرَ، ثُمَّ دَعَا بِالأَزْوَادِ، فَلَمْ يُؤْتَ إِلَّا بِالسَّوِيقِ، فَأَمَرَ بِهِ فَثُرِّيَ، فَأَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏وَأَكَلْنَا، ثُمَّ قَامَ إِلَى المَغْرِبِ، فَمَضْمَضَ وَمَضْمَضْنَا، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»‏

‎209. நான் கைபர் போர் நடந்த (ஹிஜ்ரீ 7ஆம்) ஆண்டில் ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சென்றேன். கைபரை ‎அடுத்துள்ள ஸஹ்பா எனும் இடத்தை அடைந்ததும் ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் ‎தொழுவித்தார்கள். பிறகு பயண உணவைக் கொண்டு வரச் ‎சொன்னார்கள். அப்போது மாவைத் தவிர வேறெதுவும் கொண்டு ‎வரப்படவில்லை. அதைத் தண்ணீரில் நனைக்கும் படி ‎பணித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், ‎நாங்களும் சாப்பிட்டோம். பிறகு மஃக்ரிப் தொழுகைக்காக எழுந்து ‎சென்றார்கள். அப்போது அவர்கள் வாயை (மட்டும்) ‎கொப்பளித்தார்கள்; நாங்களும் வாய் மட்டும் கொப்பளித்தோம். ‎உளூச் செய்யாமலேயே (மஃக்ரிப்) தொழுவித்தார்கள்.‎

அறிவிப்பவர் : சுவைத் பின் நுஃமான் (ரலி)‎


‏210 - وحَدَّثَنَا أَصْبَغُ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الحَارِثِ، عَنْ بُكَيْرٍ، عَنْ كُرَيْبٍ، عَنْ مَيْمُونَةَ، ‏أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَكَلَ عِنْدَهَا كَتِفًا، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»‏

‎210. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஆட்டுச் சப்பை ‎இறைச்சியைச் சாப்பிட்டார்கள். பின்னர் உளூச் செய்யாமல் ‎தொழுதார்கள்.‎

அறிவிப்பவர் : மைமூனா (ரலி)‎


بَابٌ: هَلْ يُمَضْمِضُ مِنَ اللَّبَنِ؟

பாடம் : 52‎
பால் குடித்தால் வாய் கொப்பளிக்க வேண்டுமா?‎


‏211 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، وَقُتَيْبَةُ، قَالاَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، ‏عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " شَرِبَ لَبَنًا فَمَضْمَضَ، وَقَالَ: «إِنَّ لَهُ دَسَمًا» تَابَعَهُ يُونُسُ ، ‏وَصَالِحُ بْنُ كَيْسَانَ، عَنِ الزُّهْرِيِّ

‎211. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு ‎வாய் கொப்பளித்தார்கள். பிறகு இதில் கொழுப்பு இருக்கிறது ‎என்று சொன்னார்கள்.‎

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் ‎வந்துள்ளது.‎

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)‎


بَابُ الوُضُوءِ مِنَ النَّوْمِ، وَمَنْ لَمْ يَرَ مِنَ النَّعْسَةِ وَالنَّعْسَتَيْنِ، أَوِ الخَفْقَةِ وُضُوءًا

பாடம் : 53‎
ஆழ்ந்து உறங்கினால் உளூ செய்வதும், ஓரிரு முறை ‎கண்ணயர்ந்து விடுவதலோ, தூங்கி விழுவதாலோ உளூச் ‎செய்யாமலிருத்தலும்


‏212 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى ‏اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا نَعَسَ أَحَدُكُمْ وَهُوَ يُصَلِّي فَلْيَرْقُدْ، حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى وَهُوَ نَاعِسٌ، لاَ ‏يَدْرِي لَعَلَّهُ يَسْتَغْفِرُ فَيَسُبُّ نَفْسَهُ»‏

‎212. உங்களில் எவரேனும் தொழுது கொண்டிருக்கும் போது கண் ‎அயர்ந்தால் அவரை விட்டும் உறக்கக் கலக்கம் விலகும் வரை ‎அவர் உறங்கட்டும்! ஏனெனில், உங்களில் ஒருவர் உறங்கியவாறே ‎தொழுவாரானால் அவர் தம்மையும் அறியாமல் பாவ மன்னிப்புக் ‎கோர அது அவருக்கு எதிரான பிரார்த்தனையாக ஆகிவிடலாம் ‎என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)‎


‏213 - حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏قَالَ: «إِذَا نَعَسَ أَحَدُكُمْ فِي الصَّلاَةِ فَلْيَنَمْ، حَتَّى يَعْلَمَ مَا يَقْرَأُ»‏

‎213. உங்களில் ஒருவர் தொழுகையில் கண்ணயர்ந்து ‎விடுவாரானால், தாம் என்ன ஓதுகிறோம் என்பதை அறியும் வரை ‎அவர் தூங்கட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)‎


بَابُ الوُضُوءِ مِنْ غَيْرِ حَدَثٍ

பாடம் : 54‎
தொடக்கு ஏற்படாமல் உளூச் செய்தல்


‏214 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: ح وحَدَّثَنَا ‏مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ عَامِرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ ‏وَسَلَّمَ «يَتَوَضَّأُ عِنْدَ كُلِّ صَلاَةٍ» قُلْتُ: كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ؟ قَالَ: يُجْزِئُ أَحَدَنَا الوُضُوءُ مَا لَمْ يُحْدِثْ

‎214. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ‎தொழுகைக்காகவும் உளூச் செய்வார்கள் என அனஸ் (ரலி) ‎அவர்கள் கூறினார்கள். நீங்கள் எப்படிச் செய்வீர்கள்? என்று ‎அனஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அனஸ் ‎‎(ரலி) அவர்கள் தொடக்கு ஏற்படாதவரை ஒரு உளூவே ‎எங்களுக்குப் போதுமானதாக இருந்தது என்று கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : அம்ர் பின் ஆமிர்


‏215 - حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنِي بُشَيْرُ بْنُ يَسَارٍ، ‏قَالَ: أَخْبَرَنِي سُوَيْدُ بْنُ النُّعْمَانِ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ خَيْبَرَ، حَتَّى إِذَا كُنَّا بِالصَّهْبَاءِ، ‏‏«صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العَصْرَ، فَلَمَّا صَلَّى دَعَا بِالأَطْعِمَةِ، فَلَمْ يُؤْتَ إِلَّا بِالسَّوِيقِ، فَأَكَلْنَا وَشَرِبْنَا، ثُمَّ ‏قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى المَغْرِبِ، فَمَضْمَضَ، ثُمَّ صَلَّى لَنَا المَغْرِبَ وَلَمْ يَتَوَضَّأْ»‏

‎215. நாங்கள் கைபர் போர் நடந்த ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் ‎‎(ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். ஸஹ்பா என்ற ‎இடத்தை நாங்கள் அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‎அவர்கள் எங்களுக்கு அஸ்ர் தொழுகை நடத்தினார்கள். தொழுது ‎முடித்ததும் உணவு கொண்டு வரும்படி கூறினார்கள். ‎அவர்களிடம் மாவு தான் கொண்டு வரப்பட்டது. நாங்கள் ‎அனைவரும் சாப்பிட்டோம்; குடித்தோம். பிறகு அல்லாஹ்வின் ‎தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்காக எழுந்தார்கள். ‎அப்போது வாயை கொப்பளித்தார்கள். உளூச் செய்யாமல் ‎எங்களுக்கு மஃக்ரிப் தொழுகை நடத்தினார்கள்.‎

அறிவிப்பவர் : சுவைத் பின் நுஃமான் (ரலி)‎


بَابٌ: مِنَ الكَبَائِرِ أَنْ لاَ يَسْتَتِرَ مِنْ بَوْلِهِ

பாடம் : 55‎
சிறுநீர் கழிக்கும் போது மறைக்காமலிருப்பது பெரும் ‎பாவங்களில் ஒன்றாகும்


‏216 - حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ ‏وَسَلَّمَ بِحَائِطٍ مِنْ حِيطَانِ المَدِينَةِ، أَوْ مَكَّةَ، فَسَمِعَ صَوْتَ إِنْسَانَيْنِ يُعَذَّبَانِ فِي قُبُورِهِمَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‏‏«يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ» ثُمَّ قَالَ: «بَلَى، كَانَ أَحَدُهُمَا لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ، وَكَانَ الآخَرُ يَمْشِي بِالنَّمِيمَةِ». ثُمَّ دَعَا ‏بِجَرِيدَةٍ، فَكَسَرَهَا كِسْرَتَيْنِ، فَوَضَعَ عَلَى كُلِّ قَبْرٍ مِنْهُمَا كِسْرَةً، فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، لِمَ فَعَلْتَ هَذَا؟ قَالَ: «لَعَلَّهُ أَنْ ‏يُخَفَّفَ عَنْهُمَا مَا لَمْ تَيْبَسَا» أَوْ: «إِلَى أَنْ يَيْبَسَا»‏

216. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிலுள்ள ஒரு ‎தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, அடக்கத்தலத்தில் ‎வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இரு மனிதர்களுடைய ‎ஓலத்தைச் செவியுற்றர்கள். அப்போது, இவர்கள் இருவரும் ‎வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய செயலுக்காக ‎இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை என்று ‎சொல்லிவிட்டு, ஆம்! இவ்விருவரில் ஒருவரோ, சிறுநீர் கழிக்கும் ‎போது மறைக்காமலிருந்தார். மற்றொருவரோ, கோள் சொல்லித் ‎திரிந்தார் என்று கூறிவிட்டு, ஒரு பேரீச்சை மட்டையைக் ‎கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு ‎அடக்கத்தலத்தின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், நீங்கள் ஏன் இவ்வாறு ‎செய்தீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள், இவ்விரு மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின் ‎வேதனை குறைக்கப்படலாம் என்று பதிலளித்தார்கள்.‎
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜரீர் பின் அப்தில் ஹமீத் ‎அவர்கள் (மதீனாவிலுள்ள ஒரு தோட்டத்தை எனும் ‎வாசகத்திற்குப் பின் அல்லது மக்காவிலுள்ள ஒரு தோட்டத்தை ‎என்று ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.‎

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)‎


بَابُ مَا جَاءَ فِي غَسْلِ البَوْلِ
وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَاحِبِ القَبْرِ: «كَانَ لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ». وَلَمْ يَذْكُرْ سِوَى بَوْلِ النَّاسِ

‎ பாடம் : 56‎
சிறுநீர் கழித்தபின் கழுவுதல்.‎

அடக்கத்தலத்தை உடையவர் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் தமது சிறுநீரிலிருந்து அவர் மறைக்காலிருந்தார் என்றே ‎கூறினார்கள். மனிதர்களுடைய சிறுநீரைத் தவிர வேறெந்த ‎‎(உயிரினங்களின்) சிறுநீர் குறித்தும் அவர்கள் குறிப்பிடவில்லை.‎


‏217 - حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنِي رَوْحُ بْنُ القَاسِمِ، قَالَ: حَدَّثَنِي عَطَاءُ بْنُ ‏أَبِي مَيْمُونَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا تَبَرَّزَ لِحَاجَتِهِ، أَتَيْتُهُ بِمَاءٍ فَيَغْسِلُ بِهِ»‏

‎217.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் இயற்கைக் கடனை ‎நிறைவேற்ற திறந்தவெளிகளுக்குச் செல்வார்களானால் ‎அவர்களுக்கு நான் தண்ணீர் கொண்டு செல்வேன். அதன் மூலம் ‎அவர்கள் சுத்தம் செய்வார்கள்.‎

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)‎


‏218 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ ، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ ‏عَبَّاسٍ قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرَيْنِ، فَقَالَ: «إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لاَ ‏يَسْتَتِرُ مِنَ البَوْلِ، وَأَمَّا الآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ» ثُمَّ أَخَذَ جَرِيدَةً رَطْبَةً، فَشَقَّهَا نِصْفَيْنِ، فَغَرَزَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً، ‏قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، لِمَ فَعَلْتَ هَذَا؟ قَالَ: «لَعَلَّهُ يُخَفِّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا» وَقَالَ مُحَمَّدُ بْنُ المُثَنَّى، وَحَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: ‏حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: سَمِعْتُ مُجَاهِدًا مِثْلَهُ: «يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ»‏

‎218. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு அடக்கத்தலங்களைக் ‎கடந்து சென்றார்கள். அப்போது இவர்கள் இருவரும் வேதனை ‎செய்யப்படுகிறார்கள். ஒரு பெரும் செயலுக்காக இவர்கள் ‎இருவரும் வேதனை செய்யப்படவில்லை; இவ்விருவரில் ‎ஒருவரோ, சிறுநீரின் போது மறைக்காமலிருந்தார்; மற்றவரோ, ‎கோள் சொல்லித் திரிந்தார் என்று கூறினார்கள். பிறகு ஒரு ‎பச்சை பேரீச்சை மட்டையைப் பெற்று அதை இரண்டாகப் ‎பிளந்து ஒவ்வொரு அடக்கத்தலத்தின் மீதும் ஒன்றை ‎ஊன்றினார்கள். அது பற்றி மக்கள், ஏன் இவ்வாறு செய்தீர்கள் ‎அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். இவ்விரு ‎மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின் வேதனை ‎குறைக்கப்படலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎பதிலளித்தார்கள்.‎

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)‎


بَابُ تَرْكِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسِ الأَعْرَابِيَّ حَتَّى فَرَغَ مِنْ بَوْلِهِ فِي المَسْجِدِ

பாடம் : 57‎
பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழித்த கிராமவாசியை, அவர் சிறுநீர் ‎கழித்து முடிக்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ‎மக்களும் விட்டுவிட்டது பற்றிய பாடம்


‏219 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، أَخْبَرَنَا إِسْحَاقُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏رَأَى أَعْرَابِيًّا يَبُولُ فِي المَسْجِدِ فَقَالَ: «دَعُوهُ حَتَّى إِذَا فَرَغَ دَعَا بِمَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ»‏

‎219. ஒரு கிராமவாசி பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழிப்பதை நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். (அவரை மக்கள் கண்டித்த ‎போது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவரை விட்டுவிடுங்கள் ‎என்று சொல்லி விட்டு, அவர் (சிறுநீர் கழித்து) முடித்த பின் ‎தண்ணீர் கொண்டு வரச்சொல்லி அதன் மீது ஊற்றினார்கள்.‎

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)‎


بَابُ صَبِّ المَاءِ عَلَى البَوْلِ فِي المَسْجِدِ

பாடம் : 58‎

பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழித்துவிட்டால் அதன் மீது தண்ணீர் ‎ஊற்றுதல்


‏220 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ ‏أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَامَ أَعْرَابِيٌّ فَبَالَ فِي المَسْجِدِ، فَتَنَاوَلَهُ النَّاسُ، فَقَالَ لَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعُوهُ وَهَرِيقُوا ‏عَلَى بَوْلِهِ سَجْلًا مِنْ مَاءٍ، أَوْ ذَنُوبًا مِنْ مَاءٍ، فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ، وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ»‏

‎220. ஒரு கிராமவாசி எழுந்து பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழித்து ‎விட்டார். உடனே மக்கள் அவரைக் கண்டித்தனர். நபிகள் நாயகம் ‎‎(ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள்; அவரது சிறுநீர் மீது ‎ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள். நீங்கள் நளினமாக எடுத்துச் ‎சொல்பவர்களாக அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் ‎சொல்பவர்களாக அனுப்பப்படவில்லை என்று கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)‎


بَابُ: يُهَرِيقُ المَاءَ عَلَى البَوْلِ
حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلّى الله عليه ‏وسلم

பாடம்
சிறுநீர் மீது தண்ணீரை ஊற்றுவது.‎

மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) ‎அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் ‎வந்தள்ளது.‎


‏221 - حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، قَالَ: وَحَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ ‏فَبَالَ فِي طَائِفَةِ المَسْجِدِ، فَزَجَرَهُ النَّاسُ، «فَنَهَاهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا قَضَى بَوْلَهُ أَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ ‏وَسَلَّمَ بِذَنُوبٍ مِنْ مَاءٍ فَأُهْرِيقَ عَلَيْهِ»‏

‎221. ஒரு கிராமவாசி வந்து பள்ளிவாசலின் ஒரு பகுதியில் சிறுநீர் ‎கழித்துவிட்டார். அப்போது அவரை மக்கள் கண்டித்தனர். (இதைக் ‎கண்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மக்களைத் தடுத்து ‎நிறுத்தினார்கள். அவர் சிறுநீர் கழித்து முடித்த பின்னர், ஒரு ‎வாளியில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லிக் ‎கட்டளையிட்டார்கள். அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது.‎

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)‎


بَابُ بَوْلِ الصِّبْيَانِ

பாடம் : 59‎
சிறுவர்களின் சிறுநீர்


‏222 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ أَنَّهَا قَالَتْ: ‏‏«أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَبِيٍّ، فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ إِيَّاهُ»‏

‎222. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் ‎குழந்தை கொண்டுவரப்பட்டது. அக்குழந்தை, அல்லாஹ்வின் தூதர் ‎‎(ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது ‎தண்ணீர் கொண்டு வரச்சொல்லி அதைச் சிறுநீர்பட்ட இடத்தில் ‎ஊற்றினார்கள்.‎

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)‎


‏223 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أُمِّ قَيْسٍ ‏بِنْتِ مِحْصَنٍ، أَنَّهَا «أَتَتْ بِابْنٍ لَهَا صَغِيرٍ، لَمْ يَأْكُلِ الطَّعَامَ، إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَجْلَسَهُ رَسُولُ اللَّهِ ‏صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجْرِهِ، فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ، فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ»‏

‎223. உணவு சாப்பிடாத எனது சிறிய ஆண் குழந்தையை ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தமது ‎மடியில் உட்கார வைத்தார்கள். அப்போது அக்குழந்தை ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் ‎கழித்து விட்டது. அப்போது தண்ணீர் கொண்டு வரச்சொல்லி ‎அதைத் தெளித்தார்கள். அதைக் கழுவவில்லை.‎

அறிவிப்பவர் : உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி)‎


بَابُ البَوْلِ قَائِمًا وَقَاعِدًا

பாடம் : 60‎
நின்றும், உட்கார்ந்தும் சிறுநீர் கழித்தல்.‎


‏224 - حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ «أَتَى النَّبِيُّ صلّى الله عليه وسلم ‏سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ فَجِئْتُهُ بِمَاءٍ فَتَوَضَّأَ»‏

‎224. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் ‎குழிக்கு வந்து (அங்கு) நின்று சிறுநீர் கழித்தார்கள். பிறகு

‎தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் அவர்களுக்குத் ‎தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் உளூச் செய்தார்கள்.‎

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)‎


بَابُ البَوْلِ عِنْدَ صَاحِبِهِ، وَالتَّسَتُّرِ بِالحَائِطِ

பாடம் : 61‎
மற்றொருவர் பக்கத்தில் சிறுநீர் கழிப்பதும் சுவற்றினால் ‎மறைத்துக்கொள்வதும்


‏225 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: «رَأَيْتُنِي أَنَا ‏وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَتَمَاشَى، فَأَتَى سُبَاطَةَ قَوْمٍ خَلْفَ حَائِطٍ، فَقَامَ كَمَا يَقُومُ أَحَدُكُمْ، فَبَالَ، فَانْتَبَذْتُ مِنْهُ، فَأَشَارَ إِلَيَّ ‏فَجِئْتُهُ، فَقُمْتُ عِنْدَ عَقِبِهِ حَتَّى فَرَغَ»‏

‎225. நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நடந்து சென்று ‎கொண்டிருந்தோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎ஒரு சுவருக்குப் பின்னாலிருந்த ஒரு குலத்தாரின் குப்பைக் ‎குழிக்கு வந்து உங்களில் ஒருவர் நிற்பது போன்று நின்று சிறுநீர் ‎கழித்தார்கள். உடனே நான் அவர்களை விட்டு சற்று ஒதுங்கிச் ‎சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎என்னை(த் தம்மிடம் வருமாறு) சைகை செய்தார்கள். நான் ‎அவர்களிடம் வந்து அவர்கள் தமது தேவையை நிறைவேற்றும் ‎வரை அவர்களுக்குப் பின் பக்கம் நின்று கொண்டிருந்தேன்.‎

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)‎


بَابُ البَوْلِ عِنْدَ سُبَاطَةِ قَوْمٍ

பாடம் : 62‎
ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழியில் சிறுநீர் கழித்தல்


‏226 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ: كَانَ أَبُو مُوسَى الأَشْعَرِيُّ يُشَدِّدُ ‏فِي البَوْلِ، وَيَقُولُ: " إِنَّ: بَنِي إِسْرَائِيلَ كَانَ إِذَا أَصَابَ ثَوْبَ أَحَدِهِمْ قَرَضَهُ " فَقَالَ: حُذَيْفَةُ لَيْتَهُ أَمْسَكَ «أَتَى رَسُولُ اللَّهِ ‏صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا»‏

‎226. அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் சிறுநீர் விஷயத்தில் ‎மிகவும் கண்டிப்பவர்களாய் இருந்தார்கள். பனூ இஸ்ராயீல் ‎மக்களில் ஒருவருடைய ஆடையில் சிறுநீர் பட்டுவிட்டால் ‎அவர்கள் அந்தப் பாகத்தைக் கத்தரித்து விடக்கூடியவர்களாக ‎இருந்தார்கள்' எனக் கூறுவார்கள். இதைக் கேள்விப்பட்ட ‎ஹுதைஃபா (ரலி) அவர்கள், அவர் இந்தப் போக்கை நிறுத்திக் ‎கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு, நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து நின்று ‎கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்றனர்.‎

அறிவிப்பவர் : அபூவாயில்


بَابُ غَسْلِ الدَّمِ

பாடம் : 63‎
இரத்தத்தைக் கழுவுதல்


‏227 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ: حَدَّثَتْنِي فَاطِمَةُ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ: جَاءَتِ امْرَأَةٌ ‏النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: أَرَأَيْتَ إِحْدَانَا تَحِيضُ فِي الثَّوْبِ، كَيْفَ تَصْنَعُ؟ قَالَ: «تَحُتُّهُ، ثُمَّ تَقْرُصُهُ بِالْمَاءِ، ‏وَتَنْضَحُهُ، وَتُصَلِّي فِيهِ»‏

‎227. ஒரு பெண்மணி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‎எங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் ‎பட்டு விட்டால் அவள் என்ன செய்ய வேண்டும், என்கிறீர்கள்? ‎என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த ‎இடத்தைச் சுரண்ட வேண்டும்; பின்னர் அதைத் தண்ணீர்விட்டு ‎கசக்கிக் கழுவ வேண்டும்; பின்னர் அந்தத் துணியுடன் தொழலாம் ‎என்று கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)‎


‏228 - حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: جَاءَتْ ‏فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ ‏الصَّلاَةَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ، إِنَّمَا ذَلِكِ عِرْقٌ، وَلَيْسَ بِحَيْضٍ، فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، ‏وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي» - قَالَ: وَقَالَ أَبِي: - «ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلاَةٍ، حَتَّى يَجِيءَ ذَلِكَ الوَقْتُ»‏

228. பாத்திமா பின்த் அபீஹுபைஷ் என்ற பெண்மணி, நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் ‎உயர் இரத்தப்போக்கு ஏற்படும் ஒரு பெண் ஆவேன்; நான் ‎சுத்தமாவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா? என்று ‎கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இல்லை! இது ‎‎(சாதாரண) இரத்தமாகும். மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு ‎மாதவிடாய் வரும் போது தொழுகையை விட்டுவிடு; அது ‎நின்றுவிட்டால் இரத்தத்தைக் கழுவி விட்டுத் தொழுதுகொள்! ‎என்று கூறினார்கள்.‎
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அப்பெண்மணியிடம்) ‎பின்னர் அடுத்த மாதவிடாய் காலம் வரும் வரை ஒவ்வொரு ‎தொழுகைக்கும் நீ உளூச் செய்துகொள்! என்றும் சொன்னார்கள்.‎

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)‎


بَابُ غَسْلِ المَنِيِّ وَفَرْكِهِ، وَغَسْلِ مَا يُصِيبُ مِنَ المَرْأَةِ

பாடம் : 64‎
இந்திரியத்தைக் கழுவுவதும், அதைச் சுரண்டிவிடுவதும் ‎பெண்ணிடமிருந்து படுவதைக் கழுவுவதும்


‏229 - حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ، قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَيْمُونٍ الجَزَرِيُّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، ‏عَنْ عَائِشَةَ قَالَتْ: «كُنْتُ أَغْسِلُ الجَنَابَةَ مِنْ ثَوْبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَخْرُجُ إِلَى الصَّلاَةِ، وَإِنَّ بُقَعَ المَاءِ فِي ‏ثَوْبِهِ»‏

‎229. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆடையில் இந்திரியம் ‎பட்ட இடத்தை நான் கழுவுவேன். செல்வார்கள். அவர்களின் ‎ஆடையில் ஈரம் அப்படியே இருக்கும்.‎

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)‎


‏230 - حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: حَدَّثَنَا عَمْرٌو يَعْنِي ابْنَ مَيْمُونٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، قَالَ: سَمِعْتُ عَائِشَةَ، ‏ح وحَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ مَيْمُونٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ عَنِ ‏المَنِيِّ، يُصِيبُ الثَّوْبَ؟ فَقَالَتْ: «كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَخْرُجُ إِلَى الصَّلاَةِ، وَأَثَرُ الغَسْلِ ‏فِي ثَوْبِهِ» بُقَعُ المَاءِ

‎230. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஆடையில் படும் ‎இந்திரியத்தைப் பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள், ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட ‎இந்திரியத்தை நான் கழுவுவேன். அவர்கள் தொழுகைக்காகச் ‎செல்வார்கள். கழுவியதால் ஏற்பட்ட ஈரம் அவர்களின் ஆடையில் ‎காணப்படும்' என்று கூறினார்கள்

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் ‎வந்துள்ளது.‎

அறிவிப்பவர் : சுலைமான் பின் யசார்


بَابُ إِذَا غَسَلَ الجَنَابَةَ أَوْ غَيْرَهَا فَلَمْ يَذْهَبْ أَثَرُهُ

பாடம் : 65‎
இந்திரியம் முதலியவை பட்ட இடத்தைக் கழுவிய பின்னரும் ‎அதனைக் கழுவிய அடையாளம் விலகவில்லையென்றால்


‏231 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ المِنْقَرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ مَيْمُونٍ، قَالَ: سَأَلْتُ سُلَيْمَانَ ‏بْنَ يَسَارٍ فِي الثَّوْبِ تُصِيبُهُ الجَنَابَةُ، قَالَ: قَالَتْ عَائِشَةُ: «كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ ‏يَخْرُجُ إِلَى الصَّلاَةِ، وَأَثَرُ الغَسْلِ فِيهِ» بُقَعُ المَاءِ

‎231. நான் சுலைமான் பின் யசார் அவர்களிடம் இந்திரியம் ‎பட்டுவிட்ட ஆடையைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட ‎இந்திரியத்தைக் கழுவுவேன். பின்னர் (அந்த ஆடையோடு) ‎அவர்கள் தொழுகைக்காகச் செல்வார்கள். கழுவியதால் ஏற்பட்ட ‎ஈரம் அவர்களுடைய ஆடையில் அப்படியே இருக்கும் என்று ‎ஆயிஷா (ரலி) கூறியதாக பதிலளித்தார்கள்.‎


‏232 - حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ ‏عَائِشَةَ: أَنَّهَا كَانَتْ تَغْسِلُ المَنِيَّ مِنْ ثَوْبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ أَرَاهُ فِيهِ بُقْعَةً أَوْ بُقَعًا "‏

‎232. ஆயிஷா (ரலி) அவர்கள், தாம் நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவியதாகவும் ‎பிறகு அதே ஆடையில் ஓரிரு இடங்களில் அதன் ஈரத்தின் ‎அடையாளத்தைப் பார்த்ததாகவும் கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : சுலைமான் பின் யசார்


بَابُ أَبْوَالِ الإِبِلِ، وَالدَّوَابِّ، وَالغَنَمِ وَمَرَابِضِهَا
وَصَلَّى أَبُو مُوسَى فِي دَارِ البَرِيدِ وَالسِّرْقِينِ، وَالبَرِّيَّةُ إِلَى جَنْبِهِ، فَقَالَ: «هَاهُنَا وَثَمَّ سَوَاءٌ»‏

பாடம் : 66‎
ஒட்டகம், ஆடு மற்றும் பிற கால்நடைகளின் சிறுநீரும், ஆட்டுத் ‎தொழுவமும்

அபூமூஸா (ரலி) அவர்கள் தாருல் பரீத்' எனும் இடத்தில் ‎தொழுதார்கள். சாணமும் வெட்ட வெளியும் அவர்களுக்குப் ‎பக்கத்தில் இருந்தன. தொழுது முடித்த பிறகு இந்த இடமும் ‎அந்த இடமும் சமம் தான் என்றனர்.‎


‏233 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَدِمَ ‏أُنَاسٌ مِنْ عُكْلٍ أَوْ عُرَيْنَةَ، فَاجْتَوَوْا المَدِينَةَ «فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِلِقَاحٍ، وَأَنْ يَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا ‏وَأَلْبَانِهَا» فَانْطَلَقُوا، فَلَمَّا صَحُّوا، قَتَلُوا رَاعِيَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتَاقُوا النَّعَمَ، فَجَاءَ الخَبَرُ فِي أَوَّلِ النَّهَارِ، ‏فَبَعَثَ فِي آثَارِهِمْ، فَلَمَّا ارْتَفَعَ النَّهَارُ جِيءَ بِهِمْ، «فَأَمَرَ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسُمِرَتْ أَعْيُنُهُمْ، وَأُلْقُوا فِي الحَرَّةِ، ‏يَسْتَسْقُونَ فَلاَ يُسْقَوْنَ». قَالَ أَبُو قِلاَبَةَ: «فَهَؤُلاَءِ سَرَقُوا وَقَتَلُوا، وَكَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ، وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ»‏

‎233. உக்ல்' அல்லது உரைனா' குலத்தாரில் சிலர் (மதீனாவிற்கு) ‎வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக் ‎கொள்ளவில்லை. எனவே பால் ஒட்டகங்களைச் சென்றடைந்து, ‎அவற்றின் சிறு நீரையும் பாலையும் பருகிக் கொள்ளுமாறு ‎அவர்களை நபியவர்கள் பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் ‎‎(ஒட்டகங்களை நோக்கி) நடந்தனர். அவர்கள் உடல் நலம் ‎தேறியதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகப் ‎பராமரிப்பாளரைக் கொன்று விட்டு ஒட்கங்களை ஓட்டிச் ‎சென்றனர். முற்பகல் வேளையில் இந்தச் செய்தி நபிகள் நாயகம் ‎‎(ஸல்) அவர்களிடம் வரவே அவர்களுக்குப் பின்னால் படைப் ‎பிரிவை அனுப்பி வைத்தார்கள். நண்பகல் நேரத்தில் அவர்கள் ‎கொண்டு வரப்பட்டனர். அவர்களுடைய கைகளையும், ‎கால்களையும் துண்டிக்கச் செய்தார்கள். அவர்களுடைய ‎கண்களில் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால் சூடிடப்பட்டது. பிறகு ‎ஹர்ரா பகுதியில் அவர்கள் போடப்பட்டனர். அவர்கள் தண்ணீர் ‎கேட்டும் அவர்களுக்கு தண்ணீர் புகட்டப்படவில்லை.‎

அறிவிப்பாளர் அபூகிலாபா அவர்கள் கூறுகின்றார்கள்:‎

இவர்கள் திருடினார்கள்; கொலை செய்தார்கள்; நம்பிக்கை ‎கொண்ட பின்னர் நிராகரிப்பாளர்களாய் மாறினார்கள்; ‎அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்த்துப் ‎போரிட்டனர்.‎

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)‎


‏234 - حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنَا أَبُو التَّيَّاحِ يَزِيدُ بْنُ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ ‏وَسَلَّمَ يُصَلِّي، قَبْلَ أَنْ يُبْنَى المَسْجِدُ، فِي مَرَابِضِ الغَنَمِ»‏

‎234. பள்ளிவாசல் கட்டப்படுவதற்கு முன்னால் நபிகள் நாயகம் ‎‎(ஸல்) அவர்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழுவார்கள்.‎

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)‎


بَابُ مَا يَقَعُ مِنَ النَّجَاسَاتِ فِي السَّمْنِ وَالمَاءِ
وَقَالَ الزُّهْرِيُّ: «لاَ بَأْسَ بِالْمَاءِ مَا لَمْ يُغَيِّرْهُ طَعْمٌ أَوْ رِيحٌ أَوْ لَوْنٌ» وَقَالَ حَمَّادٌ: «لاَ بَأْسَ بِرِيشِ المَيْتَةِ» وَقَالَ الزُّهْرِيُّ: ‏‏" فِي عِظَامِ المَوْتَى، نَحْوَ الفِيلِ وَغَيْرِهِ: أَدْرَكْتُ نَاسًا مِنْ سَلَفِ العُلَمَاءِ، يَمْتَشِطُونَ بِهَا، وَيَدَّهِنُونَ فِيهَا، لاَ يَرَوْنَ بِهِ بَأْسًا ‏‏" وَقَالَ ابْنُ سِيرِينَ وَإِبْرَاهِيمُ: «وَلاَ بَأْسَ بِتِجَارَةِ العَاجِ»‏

பாடம் : 67‎
நெய்யிலோ, தண்ணீரிலோ அசுத்தமான பொருட்கள் ‎விழுந்துவிட்டால்?‎

ருசியோ, வாடையோ, நிறமோ தண்ணீரை மாற்றி ‎விடாமலிருக்கும் வரை எந்தத் தண்ணீரையும் பயன்படுத்தலாம் ‎என்று முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ அவர்கள் ‎கூறியுள்ளார்கள்.‎

இறந்து போன பறவைகளின் இறகுகள் பரவாயில்லை என்று ‎ஹம்மாத் பின் அபீசுலைமான் அவர்கள் கூறுகின்றார்கள்.‎

இறந்துவிட்ட யானை போன்ற மிருகங்களின் எலும்புகள் ‎விஷயத்தில் அஸ்ஸுஹ்ரீ அவர்கள், நான் மூத்த அறிஞர்கள் ‎பலரைச் சந்தித்திருக்கின்றேன். அவற்றின் எலும்புகளால் ‎அவர்கள் தலைவாருவார்கள்; எண்ணெய் வைத்துக் கொள்வார்கள். ‎அதைப் பயன்படுத்துவதைக் குற்றமென அவர்கள் கருதவில்லை. ‎முஹம்மத் பின் சீரீன், இப்றாஹீம் அந்நகயீ ஆகியோர், யானைத் ‎தந்தத்தை வியாபாரம் செய்வது குற்றமில்லை எனக் ‎கூறியுள்ளனர்.‎


‏235 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ ‏مَيْمُونَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: سُئِلَ عَنْ فَأْرَةٍ سَقَطَتْ فِي سَمْنٍ، فَقَالَ: «أَلْقُوهَا وَمَا حَوْلَهَا فَاطْرَحُوهُ، ‏وَكُلُوا سَمْنَكُمْ»‏

‎235. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நெய்யில் விழுந்த ‎எலியைக் குறித்து வினவப்பட்டது. அதற்கு அந்த எலியையும் ‎அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எறிந்துவிட்டு உங்கள் ‎நெய்யைச் சாப்பிடுங்கள் என்று அவர்கள் பதிலளித்தார்கள்.‎

அறிவிப்பவர் : மைமூனா (ரலி)‎


‏236 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا مَعْنٌ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ فَأْرَةٍ سَقَطَتْ فِي سَمْنٍ، فَقَالَ: «خُذُوهَا ‏وَمَا حَوْلَهَا فَاطْرَحُوهُ» قَالَ مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، مَا لاَ أُحْصِيهِ يَقُولُ عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ

‎236. நெய்யில் விழுந்த எலியைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், அந்த எலியையும் ‎அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்து விடுங்கள்! ‎என்று பதிலளித்தார்கள்.‎

இந்த ஹதீஸை மாலிக் அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) ‎அவர்கள் வழியாக மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து ‎எண்ணற்ற முறை எமக்கு அறிவித்துள்ளார்கள் என மஅன் ‎அவர்கள் கூறுகின்றார்கள்:‎
அறிவிப்பவர் : மைமூனா (ரலி)‎


‏237 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ‏صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّ كَلْمٍ يُكْلَمُهُ المُسْلِمُ فِي سَبِيلِ اللَّهِ، يَكُونُ يَوْمَ القِيَامَةِ كَهَيْئَتِهَا، إِذْ طُعِنَتْ، تَفَجَّرُ دَمًا، اللَّوْنُ ‏لَوْنُ الدَّمِ، وَالعَرْفُ عَرْفُ المِسْكِ»‏

‎237. அல்லாஹ்வின் பாதையில் ஒரு முஸ்லிமுக்கு ‎ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு காயமும் தாக்கப்பட்ட போது ‎இருந்தது போன்றே இரத்தம் பீறிட்ட நிலையில் இருக்கும். அந்த ‎நிறம் இரத்தத்தின் நிறத்தில் இருக்கும்; அதன் வாடையோ ‎கஸ்தூரி வாடையாக இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)‎


بَابُ البَوْلِ فِي المَاءِ الدَّائِمِ

பாடம் : 68‎
தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்தல்


‏238 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ: أَخْبَرَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ هُرْمُزَ الأَعْرَجَ، حَدَّثَهُ، أَنَّهُ ‏سَمِعَ أَبَا هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ»‏

‎238. நாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) ‎முந்ததியவர்களாகவும் உள்ளோம் என. நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் கூறினார்கள்:‎


‏239 - وَبِإِسْنَادِهِ قَالَ: «لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي المَاءِ الدَّائِمِ الَّذِي لاَ يَجْرِي، ثُمَّ يَغْتَسِلُ فِيهِ»‏

‎239. ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் ‎சிறுநீர் கழித்து விட்டு பின்னர் அதில் குளிக்கவும் வேண்டாம் என ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:‎

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)‎


بَابُ إِذَا أُلْقِيَ عَلَى ظَهْرِ المُصَلِّي قَذَرٌ أَوْ جِيفَةٌ، لَمْ تَفْسُدْ عَلَيْهِ صَلاَتُهُ
وَكَانَ ابْنُ عُمَرَ: «إِذَا رَأَى فِي ثَوْبِهِ دَمًا، وَهُوَ يُصَلِّي، وَضَعَهُ وَمَضَى فِي صَلاَتِهِ» وَقَالَ ابْنُ المُسَيِّبِ وَالشَّعْبِيُّ: «إِذَا ‏صَلَّى وَفِي ثَوْبِهِ دَمٌ أَوْ جَنَابَةٌ، أَوْ لِغَيْرِ القِبْلَةِ، أَوْ تَيَمَّمَ صَلَّى، ثُمَّ أَدْرَكَ المَاءَ فِي وَقْتِهِ، لاَ يُعِيدُ»‏

பாடம் : 69‎
தொழுது கொண்டிருப்பவரின் முதுகில் அசுத்தமான பொருளோ ‎இறந்த பிராணிகளோ போடப்படுமானால் அதனால் அவருடைய ‎தொழுகை வீணாகாது

இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது ‎தமது ஆடையில் அசுத்தம் இருப்பதைக் கண்டால் அதைக் ‎கழற்றி விட்டுத் தமது தொழுகையைத் தொடர்வார்கள்.‎

தமது ஆடையில் இரத்தமோ இந்திரியமோ இருக்க ஒருவர் ‎தொழுதார். அல்லது கிப்லா திசையை விட்டு வேறு திசையில் ‎தொழுதார். அல்லது தயம்மும் செய்து தொழுது முடித்தார். பிறகு ‎அதே நேரத்திற்குள் அவருக்குத் தண்ணீர் கிடைத்துவிட்டது. ‎இந்நிலைகளில் அவர் தொழுகையைத் திரும்பத் தொழ ‎வேண்டியதில்லை என சயீத் பின் அல்முஸய்யப், ஷஅபீ ‎ஆகியோர் கூறியுள்ளனர்.‎


‏240 - حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: بَيْنَا ‏رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاجِدٌ قَالَ: ح وحَدَّثَنِي أَحْمَدُ بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، قَالَ: حَدَّثَنَا ‏إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ مَيْمُونٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ ‏صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي عِنْدَ البَيْتِ، وَأَبُو جَهْلٍ وَأَصْحَابٌ لَهُ جُلُوسٌ، إِذْ قَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: أَيُّكُمْ يَجِيءُ بِسَلَى ‏جَزُورِ بَنِي فُلاَنٍ، فَيَضَعُهُ عَلَى ظَهْرِ مُحَمَّدٍ إِذَا سَجَدَ؟ فَانْبَعَثَ أَشْقَى القَوْمِ فَجَاءَ بِهِ، فَنَظَرَ حَتَّى سَجَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ ‏وَسَلَّمَ، وَضَعَهُ عَلَى ظَهْرِهِ بَيْنَ كَتِفَيْهِ، وَأَنَا أَنْظُرُ لاَ أُغْنِي شَيْئًا، لَوْ كَانَ لِي مَنَعَةٌ، قَالَ: فَجَعَلُوا يَضْحَكُونَ وَيُحِيلُ بَعْضُهُمْ ‏عَلَى بَعْضٍ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاجِدٌ لاَ يَرْفَعُ رَأْسَهُ، حَتَّى جَاءَتْهُ فَاطِمَةُ، فَطَرَحَتْ عَنْ ظَهْرِهِ، فَرَفَعَ ‏رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ ثُمَّ قَالَ: «اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ». ثَلاَثَ مَرَّاتٍ، فَشَقَّ عَلَيْهِمْ إِذْ دَعَا عَلَيْهِمْ، قَالَ: ‏وَكَانُوا يَرَوْنَ أَنَّ الدَّعْوَةَ فِي ذَلِكَ البَلَدِ مُسْتَجَابَةٌ، ثُمَّ سَمَّى: «اللَّهُمَّ عَلَيْكَ بِأَبِي جَهْلٍ، وَعَلَيْكَ بِعُتْبَةَ بْنِ رَبِيعَةَ، وَشَيْبَةَ بْنِ ‏رَبِيعَةَ، وَالوَلِيدِ بْنِ عُتْبَةَ، وَأُمَيَّةَ بْنِ خَلَفٍ، وَعُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ» - وَعَدَّ السَّابِعَ فَلَمْ يَحْفَظْ -، قَالَ: فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَدْ ‏رَأَيْتُ الَّذِينَ عَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَرْعَى، فِي القَلِيبِ قَلِيبِ بَدْرٍ

‎240. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபா அருகில் தொழுது ‎கொண்டிருந்தார்கள். அப்போது அபூஜஹ்லும், அவனுடைய ‎சகாக்களும் அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரிடம், ‎இறைச்சிக்காக அறுக்கப்பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகக் ‎கருவைச் சுற்றியுள்ள சவ்வைக் கொண்டு வந்து முஹம்மத் ‎ஸஜ்தா செய்யும் போது அவருடைய முதுகின் மீது வைப்பர் ‎யார்? என்று கேட்டனர். அக்கூட்டதிலேயே படுபாதகனாயிருந்த ‎ஒருவன் புறப்பட்டுச் சென்று அதைக் கொண்டுவந்து நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும் நேரம் பார்த்து ‎அவர்களின் இரு தோள்களுக்கிடையில் முதுகின் மீது போட்டான். ‎இதையெல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். ‎என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது எனக்கு ‎ஒத்தாசை செய்பவர்கள் இருந்திருந்தால் ?‎

இந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த (அபூ ஜஹ்லும், ‎சகாக்களும்) ஒருவர் மீது ஒருவர் விழுந்து சிரிக்கத் ‎தொடங்கினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை ‎உயர்த்தாமல் ஸஜ்தாவிலேயே இருந்தார்கள். நபிகள் நாயகம் ‎‎(ஸல்) அவர்களின் புதல்வி, சிறுமி ஃபாத்திமா (ரலி) அவர்கள் ‎வந்து அவர்களின் முதுகிலிருந்து அவற்றைத் தூக்கி வீசும் ‎வரையில் (அப்படியே இருந்தார்கள்). பிறகு தமது தலையை ‎உயர்த்தி, இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்! என்று ‎மூன்று முறை பிரார்த்தித்தார்கள். தங்களுக்கெதிராக நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்தது குறைஷிகளுக்கு ‎மன வேதனை அளித்தது. (காரணம்,) அந்த (மக்கா) நகரில் ‎செய்யப்படும் பிரார்த்தனை ஏற்கப்படும் என்று அவர்களும் ‎நம்பியிருந்தனர்.‎

பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அங்கிருந்தோரின்) ‎பெயர்களைக் குறிப்பிட்டு, இறைவா! அபூஜஹ்லை நீ கவனித்துக் ‎கொள்வாயாக! உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உமய்யா பின் ‎கலஃப், உக்பா பின் அபீமுஐத் ஆகியோரைக் கவனித்துக் ‎கொள்வாயாக! என்று (அறுவரின் பெயர் குறிப்பிட்டு) ‎பிரார்த்தனை செய்தார்கள்.‎

அறிவிப்பாளர்களில் ஒருவர் குறிப்பிடுகிறார்:‎

ஏழாவது நபரின் பெயரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎குறிப்பிட்டார்கள். ஆனால் அதை நான் மறந்துவிட்டேன்.‎

தொடர்ந்து அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் ‎கூறினார்கள்:‎

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நபர்கள் ‎உருமாறி கலீபு பத்ர்' எனும் அந்த பாழும் கிணற்றில் மாண்டு ‎கிடந்ததை நான் பார்த்தேன்.‎
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)‎


بَابُ البُزَاقِ وَالمُخَاطِ وَنَحْوِهِ فِي الثَّوْبِ
قَالَ عُرْوَةُ، عَنِ المِسْوَرِ، وَمَرْوَانَ خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ حُدَيْبِيَةَ فَذَكَرَ الحَدِيثَ: «وَمَا تَنَخَّمَ النَّبِيُّ صَلَّى ‏اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نُخَامَةً، إِلَّا وَقَعَتْ فِي كَفِّ رَجُلٍ مِنْهُمْ، فَدَلَكَ بِهَا وَجْهَهُ وَجِلْدَهُ»‏

பாடம் : 70‎
ஆடையில் எச்சில், மூக்குச் சளி போன்றவை படுதல்

ஹுதைபியா உடன்படிக்கை நடைபெற்ற காலகட்டத்தில் நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள் என்று கூறிவிட்டு, ‎பின்வரும் செய்தியை மிஸ்வர் (ரலி), மர்வான் பின் ஹகம் ‎ஆகியோர் கூறினர்:‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உமிழ்ந்தால் அதை அவருடைய ‎தோழர்களில் ஒருவர் தமது கையில் ஏந்திக் கொள்கிறார். அதை ‎அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார்.‎


‏241 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حُمَيْدٍ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «بَزَقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ ‏وَسَلَّمَ فِي ثَوْبِهِ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: طَوَّلَهُ ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنِي حُمَيْدٌ، قَالَ: سَمِعْتُ أَنَسًا، ‏عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

‎241. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆடையில் ‎உமிழ்ந்தார்கள்.‎

இப்னு அபீமர்யம் அவர்கள் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் ‎வழியாக அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ‎நீண்டதோர் ஹதீஸும் உள்ளது.‎

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)‎


بَابُ لاَ يَجُوزُ الوُضُوءُ بِالنَّبِيذِ، وَلاَ المُسْكِرِ
وَكَرِهَهُ الحَسَنُ، وَأَبُو العَالِيَةِ وَقَالَ عَطَاءٌ: «التَّيَمُّمُ أَحَبُّ إِلَيَّ مِنَ الوُضُوءِ بِالنَّبِيذِ وَاللَّبَنِ»‏

பாடம் : 71‎
பழரசம், போதையூட்டும் பானம் ஆகியவற்றில் உளூ செய்வது ‎கூடாது

இவற்றில் உளூச் செய்வதை ஹஸன் அல்பஸரி, அபுல் ஆலியா ‎ஆகியோர் வெறுப்பிற்குறிய செயலாகக் கருதுகின்றனர். அதாவு ‎பின் அபீரபாஹ் அவர்கள், பழரசம், பால் ஆகியவற்றில் உளூச் ‎செய்வதை விட, தயம்மும் செய்வதே எனக்கு மிகவும் ‎விருப்பமானது என்று கூறியுள்ளார்கள்.‎


‏242 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ ‏عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ»‏

‎242. போதை தரும் எல்லா பானமும் ஹராமாகும் என நாயகம் ‎‎(ஸல்) அவர்கள் கூறினார்கள்:‎

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)‎


بَابُ غَسْلِ المَرْأَةِ أَبَاهَا الدَّمَ عَنْ وَجْهِهِ
وَقَالَ أَبُو العَالِيَةِ: «امْسَحُوا عَلَى رِجْلِي، فَإِنَّهَا مَرِيضَةٌ»‏

பாடம் : 72‎
ஒரு பெண் தம் தந்தையின் முகத்திலிருந்து இரத்தத்தைக் ‎கழுவுதல்

எனது கால் மீது மஸஹ் செய்யுங்கள் ஏனெனில் அதில் ‎சுகவீனம் ஏற்பட்டுள்ளது என்று அபுல் ஆலியா அவர்கள் ‎கூறினார்கள்.‎


‏243 - حَدَّثَنَا مُحَمَّدٌ يَعْنِي ابْنَ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي حَازِمٍ، سَمِعَ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، وَسَأَلَهُ ‏النَّاسُ، وَمَا بَيْنِي وَبَيْنَهُ أَحَدٌ: بِأَيِّ شَيْءٍ دُووِيَ جُرْحُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: مَا بَقِيَ أَحَدٌ أَعْلَمُ بِهِ مِنِّي، «كَانَ ‏عَلِيٌّ يَجِيءُ بِتُرْسِهِ فِيهِ مَاءٌ، وَفَاطِمَةُ تَغْسِلُ عَنْ وَجْهِهِ الدَّمَ، فَأُخِذَ حَصِيرٌ فَأُحْرِقَ، فَحُشِيَ بِهِ جُرْحُهُ»‏

‎243. ஸஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களிடம் நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்களின் காயத்திற்கு எது மருந்தாக ‎இடப்பட்டது? என்று மக்கள் கேட்டார்கள். அப்போது எனக்கும், ‎ஸஹ்ல் (ரலி) அவர்களுக்கும் இடையில் வேறு யாரும் ‎இருக்கவில்லை. அதற்கு ஸஹ்ல் (ரலி) அவர்கள், இதைப் பற்றி ‎என்னை விட அறிந்தவர்கள் தற்போது யாரும் இல்லை. அலீ ‎‎(ரலி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் கொண்டு வர, ‎ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ‎முகத்திலிருந்து இரத்தத்தைக் கழுவிக்கெண்டிருந்தார்கள். (ஈச்சம்) ‎பாய் எடுத்துக் கரிக்கப்பட்டது. சாம்பலை நபியவர்களின் ‎காயத்தில் வைத்து அழுத்தப்பட்டது என்று பதிலளித்தார்கள்.‎

அறிவிப்பவர் : அபூஹாஸிம்


بَابُ السِّوَاكِ
وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «بِتُّ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَنَّ»‏

பாடம் : 73‎

பல் துலக்கல்

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள் என இப்னு ‎அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:‎


‏244 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ ‏صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدْتُهُ «يَسْتَنُّ بِسِوَاكٍ بِيَدِهِ يَقُولُ أُعْ أُعْ، وَالسِّوَاكُ فِي فِيهِ، كَأَنَّهُ يَتَهَوَّعُ»‏

‎244. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் வந்த போது ‎அவர்கள் தமது கையிலிருந்த ஒரு குச்சியால் பல் துலக்கிக் ‎கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது அவர்கள் தமது வாயில் ‎குச்சியை வைத்து வாந்தி எடுப்பது போல் ஊவ் ஊவ்' என்று ‎சொல்லிக் கொண்டிருந்தார்கள்

அறிவிப்பவர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)‎


‏245 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى ‏اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا قَامَ مِنَ اللَّيْلِ، يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ»‏

‎245. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் எழுந்ததும் பல் ‎துலக்கும் குச்சியால் தம் வாயைச் சுத்தம் செய்வார்கள்.‎

அறிவிப்பவர் : ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)‎


بَابُ دَفْعِ السِّوَاكِ إِلَى الأَكْبَرِ

பாடம் : 74‎
வயதில் மூத்தவரிடம் பல்துலக்கும் குச்சியைக் கொடுப்பது


‏246 - وَقَالَ عَفَّانُ، حَدَّثَنَا صَخْرُ بْنُ جُوَيْرِيَةَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " أَرَانِي ‏أَتَسَوَّكُ بِسِوَاكٍ، فَجَاءَنِي رَجُلاَنِ، أَحَدُهُمَا أَكْبَرُ مِنَ الآخَرِ، فَنَاوَلْتُ السِّوَاكَ الأَصْغَرَ مِنْهُمَا، فَقِيلَ لِي: كَبِّرْ، فَدَفَعْتُهُ إِلَى ‏الأَكْبَرِ مِنْهُمَا " قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: اخْتَصَرَهُ نُعَيْمٌ، عَنِ ابْنِ المُبَارَكِ، عَنْ أُسَامَةَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ

‎246. நான் ஒரு குச்சியால் பல் துலக்கிக் கொண்டிருப்பது போன்று ‎‎(கனவு) கண்டேன். அப்போது என்னிடம் இரு மனிதர்கள் வந்தனர். ‎அவ்விருவரில் ஒருவர் மற்றவரை விட பெரியவராயிருந்தார். ‎நான் அவ்விருவரில் வயதில் சிறியவரிடம் அந்த பல் துலக்கும் ‎குச்சியைக் கொடுத்தேன். அப்போது வயதில் மூத்தவரிடம் ‎முதலில் கொடுப்பீராக என்று எனக்குச் சொல்லப்பட்டது. உடனே ‎அவ்விருவரில் வயதில் பெரியவரிடம் அதைக் ‎கொடுத்துவிட்டேன் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள்:‎
அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:‎

நுஐம் அவர்கள் இந்த ஹதீஸின் மூல உரையை இப்னு உமர் ‎‎(ரலி) அவர்கள் வாயிலாக சுருக்கமாக அறிவித்துள்ளார்கள்.‎

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)‎


بَابُ فَضْلِ مَنْ بَاتَ عَلَى الوُضُوءِ

பாடம் : 75‎
உளூவுடன் நித்திரை செய்பவரின் சிறப்பு


‏247 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنِ البَرَاءِ ‏بْنِ عَازِبٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ، فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاَةِ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ ‏الأَيْمَنِ، ثُمَّ قُلْ: اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لاَ مَلْجَأَ وَلاَ ‏مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ، اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ، فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ، فَأَنْتَ عَلَى الفِطْرَةِ، ‏وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَتَكَلَّمُ بِهِ ". قَالَ: فَرَدَّدْتُهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا بَلَغْتُ: اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، ‏قُلْتُ: وَرَسُولِكَ، قَالَ: «لاَ، وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ»‏

‎247. என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ ‎உன் படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்காக உளூச் ‎செய்வது போன்று உளூச் செய்து கொள். பிறகு உன் வலப் ‎பாகத்தின் மீது சாய்ந்து படுத்துக்கொள். பிறகு இறைவா! உன் ‎மீதுள்ள ஆவலிலும், அச்சத்திலும் உன்னிடம் என்னை ‎ஒப்படைத்தேன். எனது காரியத்தை உன் பொறுப்பில் ‎விட்டுவிட்டேன். என் முதுகை உன்னளவில் சார்ந்திருக்கச் ‎செய்தேன். உன்னை விட்டும் தப்பிச் செல்லவும் உன்னை ‎விட்டும் ஒதுங்கிவிடவும் உன்னிடம் தவிர வேறு ‎போக்கிடமில்லை. நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் ‎நம்பினேன். நீ அனுப்பிய உன் நபியை நான் நம்பினேன். என்று ‎பிரார்த்தித்துக்கொள்! அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ ‎இயற்கை நெறியில் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை ‎உன் (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக்கொள்!‎

இந் நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ (ரலி) அவர்கள் ‎கூறுகின்றார்கள்:‎

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இந்தப் ‎பிரார்த்தனையை திரும்ப ஓதிக் காண்பித்தேன். நீ இறக்கியருளிய ‎உனது வேதத்தை நான் நம்பினேன்' என்ற இடத்தை அடைந்ததும் ‎‎(உன் நபியை' என்பதற்கு பதிலாக) உன் ரசூலை' என்று ‎சொல்லிவிட்டேன். (உடனே) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‎இல்லை. நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன் என்று சொல் ‎எனச் சொன்னார்கள்.‎

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)‎

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account