Sidebar

29
Wed, Jun
3 New Articles

நபித்தோழர்கள் நட்சத்திரம் போன்றவர்கள் என்ற ஹதீஸ் சரியா?

பலவீனமான ஹதீஸ்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நபித்தோழர்கள் நட்சத்திரம் போன்றவர்கள் என்ற ஹதீஸ் சரியா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாத பல ஹதீஸ்களை அவர்கள் சொன்னதாக மவ்லவிகளில் பலர் ஜும்ஆ மேடைகளிலும், பொதுக் கூட்டங்களிலும் சொல்லி வருவதைக் காண்கிறோம்.

நபித்தோழர்கள் நட்சத்திரம் போன்றவர்கள்; அவர்களில் யாரை நீங்கள் பின்பற்றினாலும் நேர்வழி பெறுவீர்கள் என்ற ஹதீஸ் அத்தகைய பொய்யான ஹதீஸ்களில் ஒன்றாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தில் ஸஹாபாக்களின் தனிச் சிறப்பை எவருமே மறுக்க முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு வாழ்ந்து அவர்களிடம் நெருங்கிப் பழகி அவர்களிடம் பாடம் கற்ற நபித்தோழர்களின் மதிப்பை இந்த உம்மத்தில் எந்த இமாம்களும், மகான்களும் அடைய முடியாது.

காலமெல்லாம் இறை வழிபாட்டில் ஒருவர் ஈடுபட்டாலும் ஒரு நபித்தோழரின் தகுதியை எவரும் பெறவே முடியாது.

இது ஷியாக்களைத் தவிர இந்த சமுதாயத்தில் உள்ள அனைவரும் ஒப்புக் கொண்ட உண்மையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏராளமான பொன்மொழிகள் இந்த உண்மையை நமக்குத் தெளிவாக்குகின்றன.

3673 حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ ، حَدَّثَنَاشُعْبَةُ ، عَنِ الْأَعْمَشِ ، قَالَ : سَمِعْتُ ذَكْوَانَ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” لَا تَسُبُّوا أَصْحَابِي ؛ فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا، مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ، وَلَانَصِيفَهُ

எனது தோழர்களை ஏசாதீர்கள். உங்களில் எவரும் உஹது மலை அளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அவர்கள் இரு கையளவு செய்த தர்மத்துக்கோ, அல்லது அதில் பாதியளவு செய்த தர்மத்துக்கோ ஈடாக முடியாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                .

அறிவிப்பவர்: அபூசயீத் அல் குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 3673

நபித்தோழர்களின் தனிச் சிறப்பை எடுத்துரைக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த நற்சான்று ஒன்றே போதுமானது.

ஆனால் இன்று சிலர் முன்னர் நாம் எடுத்துக்காட்டிய பொய்யான ஹதீஸ் மூலம் நபித்தோழர்களின் சிறப்பை நிலைநாட்டத் துவங்கியுள்ளனர்.

இந்த ஹதீஸ் ஒரு சில நூல்களில் இடம் பெற்றிருந்தாலும் இதன் அறிவிப்பாளர் வரிசையில் கோளாறு உள்ளது.

இந்த ஹதீஸ் உணர்த்துகின்ற கருத்தும் குர்ஆன் ஹதீஸ் போதனைகளுக்கு முரண்படுகின்றது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

முதலில் இதன் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள குறைபாடுகளைப் பார்ப்போம்.

ஹதீஸ் ஒன்று

جامع بيان العلم وفضله

1760 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ قَالَ: نا عَبْدُ بْنُ أَحْمَدَ، ثنا عَلِيُّ بْنُ عُمَرَ، ثنا الْقَاضِي أَحْمَدُ بْنُ كَامِلٍ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ رَوْحٍ، ثنا سَلَّامُ بْنُ سُلَيْمٍ، ثنا الْحَارِثُ بْنُ غُصَيْنٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصْحَابِي كَالنُّجُومِ بِأَيِّهِمُ اقْتَدَيْتُمُ اهْتَدَيْتُمْ»

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ஸலாம் பின் சுலைம் என்பார் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டாவர். ஹாரிஸ் பின் கஸீன் என்பார் யார் என்று அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாகும்.

ஹதீஸ் இரண்டு

جامع بيان العلم وفضله

1757 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعِيدٍ، قِرَاءَةً مِنِّي عَلَيْهِ أَنَّ مُحَمَّدَ بْنَ أَحْمَدَ بْنِ يَحْيَى، حَدَّثَهُمْ قَالَ: نا أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ أَيُّوبَ الرَّقِّيُّ قَالَ: قَالَ لَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ الْخَالِقِ، سَأَلْتُمْ عَمَّا يُرْوَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّا فِي أَيْدِي الْعَامَّةِ يَرْوُونَهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِنَّمَا مَثَلُ أَصْحَابِي كَمَثَلِ النُّجُومِ» أَوْ «أَصْحَابِي كَالنُّجُومِ فَأَيُّهَا اقْتَدَوَا اهْتَدَوْا» ، هَذَا الْكَلَامُ لَا يَصِحُّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ رَوَاهُ عَبْدُ الرَّحِيمِ بْنُ زَيْدٍ الْعَمِّيُّ، عَنْ أَبِيهِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرُبَّمَا رَوَاهُ عَبْدُ الرَّحِيمِ عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، وَأَسْقَطَ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ بَيْنَهُمَا وَإِنَّمَا أَتَى ضَعْفُ هَذَا الْحَدِيثِ مِنْ قِبَلِ عَبْدِ الرَّحِيمِ بْنِ زَيْدٍ؛ لِأَنَّ أَهْلَ الْعِلْمِ قَدْ سَكَتُوا عَنِ الرِّوَايَةِ لِحَدِيثِهِ، وَالْكَلَامُ أَيْضًا مُنْكَرٌ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ،

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அப்துர்ரஹீம் பின் ஸைத் என்பாரைக் குறித்து இப்னு மயீன், அபூஸுர்ஆ, அபூ ஹாத்தம், ஜவ்ஸஜானி, புகாரி, அபூதாவூத், நஸாயீ,ஸாஜீ உள்ளிட்ட அறிஞர்கள் இவரைப் பொய்யர் என்றும் பலவீனர் என்றும் விமர்சித்துள்ளனர்.

ஹதீஸ் மூன்று

مسند عبد بن حميد

(791)- [783] أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، عَنْ حَمْزَةَ الْجَزَرِيِّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَثَلُ أَصْحَابِي مَثَلُ النُّجُومِ يُهْتَدَى بِهِ، فَأَيُّهُمْ أَخَذْتُمْ بِقَوْلِهِ اهْتَدَيْتُمْ "

இதன் அறிவிப்பாளரில் இடம் பெறும் ஹம்ஸா அல் ஜஸ்ரி என்பார் பலவீனமானவர்; பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர். யஹ்யா பின் மயீன், புகாரி, தாரகுத்னீ, இப்னு அதீ, இப்னு ஹிப்பான், இப்னு ஹஜர் உள்ளிட்ட அறிஞர்கள் இவரைப் பொய்யர் என்று விமர்சனம் செய்துள்ளனர்.

ஹதீஸ் நான்கு

جامع بيان العلم وفضله

1759 - قَالَ أَبُو عُمَرَ: قَدْ رَوَى أَبُو شِهَابٍ الْحَنَّاطُ، عَنْ حَمْزَةَ الْجَزَرِيِّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا أَصْحَابِي مِثْلُ النُّجُومِ فَبِأَيِّهِمْ أَخَذْتُمْ بِقَوْلِهِ اهْتَدَيْتُمْ»

இதன் அறிவிப்பாளரில் இடம் பெறும் ஹம்ஸா அல் ஜஸ்ரி என்பார் பலவீனமானவர்; பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர். யஹ்யா பின் மயீன், புகாரி, தாரகுத்னீ, இப்னு அதீ, இப்னு ஹிப்பான், இப்னு ஹஜர் உள்ளிட்ட அறிஞர்கள் இவரைப் பொய்யர் என்று விமர்சனம் செய்துள்ளனர்.

ஹதீஸ் ஐந்து

الأحكام لابن حزم

وأما الرواية: أصحابي كالنجوم فرواية ساقطة، وهذا حديث حدثنيه أبو العباس أحمد بن عمر بن أنس العذري قال: أنا أبو ذر عبد بن أحمد بن محمد الهروي الانصاري قال: أنا علي بن عمر بن أحمد الدارقطني، ثنا القاضي أحمد كامل بن كامل خلف، ثنا عبد الله بن روح، ثنا سلام بن سليمان، ثنا الحارث بن غصين، عن الاعمش، عن أبي سفيان، عن جابر قال : قال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم.

قال أبو محمد: أبو سفيان ضعيف، والحارث بن غصين هذا هو أبو وهب الثقفي، وسلام بن سليمان يروي الاحاديث الموضوعة، وهذا منها بلا شك، فهذا رواية ساقطة من طريق ضعيف إسنادها.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராகிய அபூ சுஃப்யான் என்பார் பலவீனமானவர்.

இதில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளரான ஸலாம் இப்னு ஸுலைம் என்பவர் நிறைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவிப்பவராவார்.

இன்னொரு அறிவிப்பாளரான ஹாரிஸ் பின் கஸீன் என்பார் யாரென அறியப்படாதவர்.

இதில் வரிசையாக பலவீனமான பொய் சொல்லக்கூடிய, யாரென அறியப்படாத மூன்று பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளதால் இது முற்றிலும் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாகும். இதை இப்னு ஹஸ்ம் அவர்களே இந்த ஹதீஸின் அடியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல் : அல்இஹ்காம்

ஹதீஸ் ஆறு

المدخل إلى السنن الكبرى للبيهقي

152 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، وَأَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ الْحَسَنِ , قَالَا: ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ , ثنا بَكْرُ بْنُ سَهْلٍ الدِّمْيَاطِيُّ، ثنا عَمْرُو بْنُ هَاشِمٍ الْبَيْرُوتِيُّ، ثنا سُلَيْمَانُ بْنُ أَبِي كَرِيمَةَ، عَنْ جُوَيْبِرٍ، عَنِ الضَّحَّاكِ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَهْمَا أُوتِيتُمْ مِنْ كِتَابِ اللَّهِ فَالْعَمَلُ بِهِ , لَا عُذْرَ لِأَحَدٍ فِي تَرْكِهِ , فَإِنْ لَمْ يَكُنْ فِي كِتَابِ اللَّهِ , فَسُنَّةٌ مِنِّي مَاضِيَةٌ , فَإِنْ لَمْ يَكُنْ سُنَّتِي , فَمَا قَالَ أَصْحَابِي , إِنَّ أَصْحَابِي بِمَنْزِلَةِ النُّجُومِ فِي السَّمَاءِ فَأَيُّمَا أَخَذْتُمْ بِهِ اهْتَدَيْتُمْ , وَاخْتِلَافُ أَصْحَابِي لَكُمْ رَحْمَةٌ»

இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய ஜுவைபிர், நான்காவது அறிவிப்பாளராகிய சுலைமான் பின் அபீ கரீமா ஆகியோர் பொய்யர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள்.

ஆறாவது அறிவிப்பாளராகிய பக்ர் பின் ஸஹ்ல் பலவீனமானவர்.

ஹதீஸ் ஏழு

الكامل في ضعفاء الرجال

ثَنَا حَمْزَةُ الْكَاْتِبُ، ثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، ثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ زَيْدٍ الْعَمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ عُمَرِ بْنِ الْخَطَّابِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ: " صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلْتُ رَبِّي فِيمَا اخْتَلَفَ فِيهِ أَصْحَابِي مِنْ بَعْدِي، فَأَوْحَى إِلَيَّ، يَا مُحَمَّدُ، إِنَّ أَصْحَابَكَ عِنْدِي بِمَنْزِلَةِ النُّجُومِ فِي السَّمَاءِ، بَعْضُهُمْ أَضْوَأُ مِنْ بَعْضٍ، فَمَنْ أَخَذَ بِشَيْءٍ مِمَّا هُمْ عَلَيْهِ مَنَ اخْتِلافِهِمْ، فَهُوَ عِنْدِي عَلَى هُدَى ". قَالَ الشَّيْخُ: وَهَذَا مُنْكَرُ الْمَتْنِ، يُعْرَفُ بِعَبْدِ الرَّحِيمِ بْنِ زَيْدٍ عَنْ أَبِيهِ

அல்காமில், இப்னு அஸாகிர், அல்ஜாமிவுஸ் ஸகீர் ஆகிய நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள அப்துர்ரஹீம் பின் சைத் அல் அம்மீ என்பார் பொய்யராவார்.

ஹதீஸ் எட்டு

المدخل إلى السنن الكبرى للبيهقي

151 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ , ثنا بَكْرُ بْنُ سَهْلٍ، وَأَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ الْحَارِثِ الْفَقِيهُ، أبنا أَبُو مُحَمَّدِ بْنُ حَيَّانَ الْأَصْبَهَانِيُّ، ثنا حَمْزَةُ أَبُو عَلِيٍّ الْبَغْدَادِيُّ، قَالَا: ثنا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، ثنا عَبْدُ الرَّحِيمِ بْنُ زَيْدٍ الْعَمِّيُّ، عَنْ أَبِيهِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " سَأَلْتُ رَبِّي عَزَّ وَجَلَّ فِيمَا يَخْتَلِفُ فِيهِ أَصْحَابِي مِنْ بَعْدِي , فَأَوْحَى إِلَيَّ: يَا مُحَمَّدُ , إِنَّ أَصْحَابَكَ عِنْدِي بِمَنْزِلَةِ النُّجُومِ فِي السَّمَاءِ , بَعْضُهَا أَضْوَءُ مِنْ بَعْضٍ , فَمَنْ أَخَذَ بِشَيْءٍ مِمَّا هُمْ عَلَيْهِ مِنِ اخْتِلَافِهِمْ , فَهُوَ عِنْدِي عَلَى هُدًى "

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள அப்துர்ரஹீம் பின் சைத் அல் அம்மீ என்பார் பொய்யராவார். மற்றொரு அறிவிப்பாளரான ஹம்ஸா அபூ அலி என்பார் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் ஆவார்.

ஹதீஸ் ஒன்பது

المدخل إلى السنن الكبرى للبيهقي

153 - أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ الْحَارِثِ الْأَصْبَهَانِيُّ، أبنا أَبُو مُحَمَّدِ بْنُ حَيَّانَ الْأَصْبَهَانِيُّ، ثنا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ التَّاجِرُ، ثنا أَبُو زُرْعَةَ، ثنا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، ثنا يَزِيدَ بْنُ هَارُونَ، عَنْ جُوَيْبِرٍ، عَنْ جَوَّابِ بْنِ عُبَيْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مَثَلَ أَصْحَابِي كَمَثَلِ النُّجُومِ , هَهُنَا وَهَهُنَا , مَنْ أَخَذَ بِنَجْمٍ مِنْهَا اهْتَدَى , وَبِأَيِّ قَوْلِ أَصْحَابِي أَخَذْتُمْ , فَقَدِ اهْتَدَيْتُمْ»

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்ற ஜுவைபிர் என்பார் பொய்யர் ஆவார்.

ஹதீஸ் பத்து

مسند الشهاب القضاعي

1346 - أَخْبَرَنَا أَبُو الْفَتْحِ مَنْصُورُ بْنُ عَلِيٍّ الْأَنْمَاطِيُّ، ثنا أَبُو مُحَمَّدٍ الْحَسَنُ بْنُ رَشِيقٍ، ثنا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، ثنا جَعْفَرٌ يَعْنِي ابْنَ عَبْدِ الْوَاحِدِ، قَالَ: قَالَ لَنَا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَثَلُ أَصْحَابِي مَثَلُ النُّجُومِ، مِنَ اقْتَدَى بِشَيْءٍ مِنْهَا اهْتَدَى»

ஜஃபர் பின் அப்துல் வாஹித் ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்பவர்.

முஹம்மத் பின் ஜஃபர் பலவீனமானவர்.

ஹதீஸ் பதினொன்று

مسند عبد بن حميد

 783 - أخبرني أحمد بن يونس ثنا أبو شهاب عن حمزة الجزري عن نافع عن بن عمر أن رسول الله صلى الله عليه و سلم قال : مثل أصحابي مثل النجوم يهتدي به فأيهم أخذتم بقوله اهتديتم

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ஹம்ஸா அல் ஜஸ்ரி இட்டுக்கட்டுபவர்.

இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் இன்னும் சில நூல்களில் இடம் பெற்றாலும் அவை அனைத்திலும் மேற்கண்ட பொய்யர்களான பலவீனர்களான அறிவிப்பாளர்கள் வழியாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கருத்தில் ஒரே ஒரு அறிவிப்பு கூட சரியான அறிவிப்பாளர்களைக் கொண்டதாக இல்லை.

நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தையும் மட்டுமே பின்பற்ற வேண்டும். வேறு எந்த தனி நபரையும் பின்பற்றுவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் குர்ஆனிலும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் உள்ளன. அவை அனைத்திற்குமே இந்தச் செய்தி முரணாக அமைந்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இனி கருத்துக்கள் அடிப்படையில் இந்த ஹதீஸை ஆராய்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் இலக்கியத் தரத்துடன் பேசக் கூடியவர்கள். அவர்களின் ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் அவர்கள் வார்த்தைகளைக் கையாளும் விதமும், உவமை நயமும் பண்டிதர்களையும் திகைக்கச் செய்து விடுமளவுக்கு உயர்ந்த தரத்தில் அமைந்திருக்கும்.

ஆனால் இந்த ஹதீஸில் காட்டப்பட்டுள்ள உவமைகளை நோக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிச்சயம் இதைச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பதை உணர முடியும்.

எனது தோழர்கள் நட்சத்திரம் போன்றவர்கள்; அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள் என்ற இந்த வாசகத்தில் நட்சத்திரங்களுடன் ஸஹாபாக்கள் ஒப்பிடப்படுகிறார்கள்.

அதாவது நட்சத்திரங்களில் எதைப் பின்பற்றினாலும் சரியான திசையை அறிந்து கொள்வது போல் ஸஹாபாக்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழியடையலாம் என்று உவமை கூறப்பட்டுள்ளது.

இந்த உவமை சரியானதன்று. நட்சத்திரங்களில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள் தான் திசை காட்ட முடியும். அனைத்து நட்சத்திரங்களும் திசை காட்டுவதில்லை. எந்த நட்சத்திரத்தைப் பார்த்தாலும் நமக்கு திசைகளை அறிய முடிவதில்லை.

நட்சத்திரங்களில் எதன் மூலமாகவும் திசைகளை அறிவது போல் ஸஹாபாக்களில் எவரைப் பின்பற்றியும் நேர்வழி அடையலாம் என்று கூறப்படுவதில் உவமை பொருத்தமாகப் படவில்லை.

அறிவுக்குப் பொருத்தமற்ற இது போன்ற தவறான உவமைளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறமாட்டார்கள். அவர்களின் பல பொன்மொழிகளை நாம் பார்க்கும் போது இது போன்ற தவறான உவமைகள் காணப்படவே இல்லை. இதன் காரணமாகவும் இந்த ஹதீஸ் இட்டுக்கட்டபட்டது என்பதை  உணரமுடிகிறது.

நபித்தோழர்களில்  பல்வேறு தரத்தினர் இருந்துள்ளனர். செயல்முறைகளிலும், சிந்தனைகளிலும் அவர்களுக்கிடையே ஏற்றத் தாழ்வு இருந்துள்ளது. அவர்களின் அந்தஸ்தும் சமமானது அல்ல. பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களின் நிலையை மற்றவர்கள் அடைய முடியாது. அவர்களிலும் சொர்க்கத்தின் நற்செய்தி பெற்ற பத்து நபித்தோழர்களின் நிலையை மற்றவர்கள் அடைய முடியாது. அந்த பத்துப் பேர்களிலும் நாற்பெரும் கலீபாக்களின் நிலையை மற்றவர்கள் அடைய முடியாது. அந்த நான்கு கலீபாக்களிலும் முதலிருவரின் நிலை பன்மடங்கு மேலானது. அந்த இருவரில் கூட அபூபக்ரு (ரலி) அவர்கள் மிகமிக மேலான தகுதியைப் பெற்றவர்களாவார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து போரிட்டவர்களுக்கு உங்களில் எவரும் சமமாக மாட்டார். (மக்காவின்) வெற்றிக்குப் பின் செலவு செய்து போரிட்டவர்களை விட அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள். எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான்.  மேலும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையே நன்கு தெரிந்தவன்.

திருக்குர் ஆன் 57:10

நபித்தோழர்களில் இவ்வளவு வேறுபாடு இருக்கும் போது அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்று சொல்லி அனைவரையும் சமநிலையில் வைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்களா?

நபித்தோழர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது எந்தக் கருத்தைப் பின்பற்றினாலும் நேர்வழி பெற முடியுமா?

 கருத்து வேறுபாடு தோன்றும் போது குர்ஆன், ஹதீஸ் இவ்விரண்டிலும் உரசிப் பார்க்கும்படி தானே அல்லாஹ் நமக்குப் போதனை செய்கிறான். எந்தக் கருத்தை வேண்டுமானாலும் பின்பற்றி பலவழி செல்லுங்கள் என்று அல்லாஹ் நமக்கு அனுமதிக்கவில்லை.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

திருக்குர்ஆன் 4:59

இந்த திருக்குர்ஆன் வசனத்திற்கு மாற்றமாக யாரை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று எப்படி நபிகள் நாயகம் (ஸல்) சொல்லியிருக்க  முடியும்?

இந்த இடத்தில் இமாம் இப்னு ஹஸ்மு அவர்கள் சில கேள்விகளைத் தொகுத்து இந்த ஹதீஸ் பொய்யென நிலை நாட்டுகிறார்கள் . அதை அப்படியே காண்போம்.

الأحكام لابن حزم (6/ 810)

قال أبو محمد: فقد ظهر أن هذه الرواية لا تثبت أصلا، بلا شك أنها مكذوبة، لان الله تعالى يقول في صفة نبيه (ص): * (وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى) * فإذا كان كلامه عليه السلام في الشريعة حقا كله، فهو من الله تعالى بلا شك، وما كان من الله تعالى فلا اختلاف فيه، بقوله تعالى: * (ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا

وقد نهى تعالى عن التفرق والاختلاف بقوله: * (ولا تنازعوا) * فمن المحال أن يأمر رسول الله (ص) باتباع كل قائل من الصحابة رضي الله عنهم، وفيهم من يحلل الشئ، وغيره منهم يحرمه، ولو كان ذلك لكان بيع الخمر حلالا اقتداء بسمرة بن جندب، ولكان أكل البرد للصائم حلالا اقتداء بأبي طلحة، وحراما اقتداء بغيره منهم، ولكان ترك الغسل من الاكسال واجبا اقتداء بعلي وعثمان وطلحة وأبي أيوب وأبي بن كعب، وحراما اقتداء بعائشة وابن عمر، ولكان بيع الثمر قبل ظهور الطيب فيها حلالا اقتداء بعمر، حراما اقتداء بغيره منهم، وكل هذا مروي عندنا بالاسانيد الصحيحة، تركناها خوف التطويل بها، وقد بينا آنفا إخباره عليه السلام أبا بكر بأنه أخطأ.

وقد كان الصحابة يقولون بآرائهم في عصره (ص)، فيبلغه ذلك فيصوب المصيب ويخطئ المخطئ، فذلك بعد موته (ص) أفشى وأكثر، فمن ذلك فتيا أبي السنابل لسبيعة الاسلمية بأن عليها في العدة آخر الاجلين، فأنكر عليه السلام ذلك، وأخبر أن فتياه باطل.

وقد أفتى بعض الصحابة - وهو (ص) حي - بأن على الزاني غير المحصن الرجم، حتى افتداه والده بمائة شاة ووليدة - فأبطل (ص) ذلك الصلح وفسخه، وذكر (ص) السبعين ألفا من أمته يدخلون الجنة وجوههم كالقمر ليلة البدر، فقال بعض الصحابة: هم قوم ولدوا على الاسلام فخطأ النبي (ص) قائل ذلك.

وقالوا - إذ نام النبي (ص) عن صلاة الصبح -: ما كفارة ما صنعنا ؟ فأنكر النبي (ص) قولهم ذلك، وأراد طلحة بحضرة عمر بيع الذهب بالفضة نسيئة، فأنكر ذلك عمر، وأخبر أن النبي (ص) حرم ذلك.

وباع بلال صاعين من تمر بصاع من تمر، فأنكر النبي (ص) ذلك، وأمره بفسخ تلك البيعة، وأخبره أن هذا عين الربا، وباع بعض الصحابة بريرة واشترط الولاء، فأنكر النبي (ص) ذلك، ولام عليه، وقال عمر لاهل هجرة الحبشة: نحن أحق برسول الله (ص) منكم، فكذبه النبي (ص) في ذلك.

وقال جابر: كنا نبيع أمهات الاولاد ورسول الله (ص) حي بين أظهرنا، وأخبر أبو سعيد أنهم كانوا يخرجون زكاة الفطر والنبي (ص) حي

فذكر الاقط والزبيب، وإنما فرض (ص) التمر والشعير فقط، وأمر سمرة النساء بإعادة الصلاة أيام الحيض، وقال قوم من الصحابة بحضرة النبي (ص): أما أنا فأفيض على رأسي - يعنون في غسل الجنابة - كذا وكذا

مرة فأنكر ذلك النبي (ص) وكان علي يغتسل من المذي والنبي (ص) حي، فأنكر ذلك النبي (ص).

وقال أسيد وغيره - إذ رجع سيف أبي عامر الاشعري عليه - بطل جهاده، وقالوا ذلك في عامر بن الاكوع، فكذبهم النبي (ص) في ذلك، وأفتى عمر المجنب في السفر ألا يصلي شهرا بالتيمم، ولكن يترك الصلاة حتى يجد الماء وقال عمر للنبي (ص) أن يناول القدح أبا بكر وهو عن يسار النبي (ص) فأبى ذلك النبي (ص) وأخبر أن الواجب غير ذلك، وهو أن يناوله الايمن فالايمن، وكان عن يمينه أعرابي، وتمعك عمار في التراب كما تتمعك الدابة، فأنكر ذلك النبي (ص).

وأنكر النبي (ص) على عمر نداءه إياه - إذ أخر (ص) العتمة وقال له: ما كان لكم أن تنذروا رسول الله (ص) وقال أسامة - إذ قتل الرجل بعد أن قال لا إله إلا الله -: يا رسول الله إنما قالها تعوذا، فقال له النبي (ص): هلا شققت عن قلبه وأنكر عليه قتله إياه وخطأه في تأويله حتى قال أسامة: وددت أني لم أكن أسلمت إلا ذلك اليوم، وقال خالد: رب مصل يقول بلسانه ما ليس في قلبه، فأنكر ذلك رسول الله (ص)، وأنكر فعله ببني جذيمة.

وتنزه قوم منهم عن أشياء فعلها (ص) فأنكر ذلك عليه السلام وغضب منه وتأول عمر أنه أخطأ إذ قبل وهو صائم، فخطأه عليه السلام في تأويله ذلك، وأخبر أنه لا شئ عليه فيه، وتأول الانصاري تقبيله عليه السلام وهو صائم وإصباحه جنبا وهو صائم، أن ذلك خصوص له عليه السلام، فخطأه (ص) في ذلك وغضب منه، وتأول عدي في الخيط الابيض أنه عقال أبيض، والنبي (ص) حي.

وأعظم من هذا كله تأخر أهل الحديبية عن الحلق والنحر والاحلال، إذ أمرهم

بذلك (ص)، حتى غضب وشكاهم إلى أم سلمة أم المؤمنين وكل ما ذكرنا محفوظ عندنا بالاسانيد الصحاح الثابتة

அல்லாஹ் தன் நபியைப் பற்றி அந்நஜ்ம் என்ற அத்தியாயத்தில் இவர்தன் மனோ இச்சைப்படி எதையும் பேச மாட்டார். இது இறைவன் மூலமாக அறிவிக்கப்படுகின்ற செய்தியைத் தவிர வேறெதுவுமில்லை என்று கூறுகிறான். அது போல் அல்லாஹ் தன் வேதத்தைப் பற்றிக் கூறும் போது இது அல்லாஹ் அல்லாத மற்றவர்களிடம் இருந்து வந்திருக்குமானால் இதில் அனேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். என்று (அன்னிஸா அத்தியாயத்தின் 82 வது வசனத்தில் ) குறிப்பிடுகிறான். இறைவனிடமிருந்து வந்த இந்தக் குர்ஆனிலும் இறைச் செய்தியை எடுத்துச் சொன்ன நபிமொழிகளிலும் முரண்பாடுகள் இருக்காது. இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்று அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

எந்த சஹாபியையும் பின்பற்றலாமென்றால் ஒரு விஷயத்தில் சிலர் ஹலால் என்றும் வேறு சிலர் ஹராம் என்றும் கூறியிருக்கும் போது எதையும் பின்பற்றி இரண்டு பிரிவுகளாக நாம் ஆக வேண்டுமாஅவ்வாறு பிளவுபடுவதை அல்லாஹ் அனுமதிப்பானாமாறாக அல்அன்பால் என்ற அத்தியாயத்தில் 46வது வசனத்தில் பிளவுபடுவதைக் கண்டிக்கவே செய்கிறான்.

இவ்வாறு பல கருத்துக்கள் நபித்தோழர்களிடம் காணப்படும் போது அல்லாஹ்வின் வேதத்திலும், அவனது தூதரின் பொன் மொழியிலும் உரசிப் பார்த்து எது குர்ஆன் ஹதீஸிற்கு பொருத்தமானது என்று பார்க்கும்படி தான் அல்லாஹ் உத்தரவிடுகிறான்.

இந்த ஹதீஸ் சரியானது என்று வைத்துக் கொண்டால் மது பானங்களை விற்பனை செய்யலாம் என்று சமுரத் இப்னு ஜுன்துப் என்ற நபித்தோழர் கூறியுள்ளார்களே இந்தக் கருத்தை குர்ஆன் ஹதீஸில் உரசிப்பார்க்கக் கூடாதா?

நோன்பு வைத்துக் கொண்டு பனிக்கட்டிகளைச் சாப்பிடலாம்; ஏனெனில் அது உணவுமல்ல பானமுமல்ல என்று அபூதல்ஹா என்ற நபித்தோழர் கருத்து தெரிவித்துள்ளார்களே அதைப் பின்பற்றி நாம் அவ்வாறு செய்தால் நேர்வழி அடைய முடியுமா? நமது நோன்பு முறியாமலிருக்குமாஅப்படி யாராவது ஃபத்வா கொடுத்தால் அவர் நேர்வழியில் இருப்பதாக நாம் ஒப்புக் கொள்ள முடியுமா?

இப்படி ஒரு நிலமையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரிப்பார்களா

என்று இப்னு ஹஸ்ம் ரஹ் அவர்கள் கூறிவிட்டு இன்னும் ஏராளமான மஸ்அலாக்களில் ஸஹாபாக்களின் வேறுபட்ட பல முடிவுகளை வரிசைப்படுத்துகிறார்கள்.

நூல் : அல்இஹ்காம்

கருத்து வேறுபாடு தோன்றும் போது எவரை வேண்டுமானாலும் பின்பற்றும் நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மை விட்டுச் செல்லவில்லை. மாறாக இரண்டை விட்டுச் செல்கிறேன் என்று தான் கூறினார்கள். அவ்விரண்டையும் பின்பற்றும் வரை தான் வழி தவறவே மாட்டீர்கள் என்றும் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் சரியற்றது என்று நன்றாகத் தெரிந்த பின்னரும் இது ஹதீஸ் கலை வல்லுனர்களிடத்தில் சரியற்றது தான், ஆனால் கஷ்பு என்னும் வெளிப்பாடு உடையவர்களிடத்தில் அது சரியானது தான் என்று கூறி ஷஃரானி போன்றவர்கள் சரி காண முயல்வது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளில் தங்கள் சுய கருத்துக்களை இடம் பெறச் செய்வதாகும். இது மக்களைத் திசை திருப்பும் செயலாகும்.

ஆக இந்த ஹதீஸ் திட்டமிட்டு இட்டுக் கட்டப்பட்டது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகிறது.

ஸஹாபாக்களின் மதிப்பு என்பது வேறு!

அவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் அந்தஸ்து என்பது வேறு!

அவர்களில் எவரையும் ஆராயாமல் பின்பற்றலாம் என்பது வேறு!

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது போன்ற இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களைக் கூறுவோருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வன்மையான எச்சரிக்கையை நினைவுபடுத்துகிறோம்.

107 حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ، عَنْ أَبِيهِ ، قَالَ : قُلْتُ لِلزُّبَيْرِ : إِنِّي لَا أَسْمَعُكَ تُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا يُحَدِّثُ فُلَانٌ وَفُلَانٌ، قَالَ : أَمَا إِنِّي لَمْ أُفَارِقْهُ وَلَكِنْ سَمِعْتُهُ يَقُولُ : ” مَنْ كَذَبَ عَلَيَّ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ “

எவன் என் மீது இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்.

நூல்: புகாரி 107

எதிர்க்கேள்விக்கு பதில்

என் தோழர்கள் விண்மீன்களைப் போன்றவர்கள் என்ற ஹதீஸின் தவறைச் சுட்டிக் காட்டும் போது விண்மீன்களில் எதைப் பின்பற்றினாலும் சரியான திசையை அறிந்து கொள்வது போல் சஹாபாக்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்று உவமை கூறப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பொதுவாக உவமை கூறும் போது அப்பொருளின் பொதுவான தன்மைகளையே எடுத்துக் கொள்வர். உதாரணமாக கொத்தவரங்காய் போன்றவன் என்றால் ஒல்லியாக இருக்கிறான் என்று தான் எடுத்துக் கொள்வோம். பச்சைப் பசேலென்று இருக்கிறான் என யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அது போல விண் மீன்களைப் போன்றவர்கள் என்றால் ஒளி மிக்கவர்கள் என்ற பொதுவாக எல்லா நட்சத்திரங்களுக்கும் உள்ள தன்மையை எடுத்துக் கொள்ளாமல் இல்லாத அம்சத்தை ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

என்.கிஷார் முஹம்மது நதீம்நாகர் கோவில்.

உங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதற்கு முன் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் நினைவுபடுத்திக் கொள்கிறோம். விமர்சனத்திற்கு நாம் எடுத்துக் கொண்ட அந்த ஹதீஸ் தவறானது என்பதற்கு நீங்கள் சுட்டிக் காட்டியது மட்டும் காரணமல்ல. வேறு பல காரணங்களையும் நாம் எழுதி இருக்கிறோம். முக்கியமாக அதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் அல்ல. அடுத்து பல குர்ஆன் வசனங்களுடனும், நபிமொழிகளுடனும் அது நேரடியாக மோதுகின்றது. இந்தக் காரணங்களுக்காகத் தான் அந்த ஹதீஸ் மறுக்கப்படுகின்றது.

உவமை கூறப்படும் போது பொதுவான அம்சங்களையே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை. கொத்தவரங்காய் சமாச்சாரத்திலும் நமக்கு ஆட்சேபணை இல்லை.

திசை காட்டுபவை என்பதைக் கருத்தாகக் கொண்டதற்கு நியாயமான காரணம் உண்டு. என் தோழர்கள் விண்மீன்கள் போன்றவர்கள் என்று மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருந்தால் ஒளிமிக்கவர்கள் என்று நாம் கருத்துக் கொள்ளலாம். என் தோழர்கள் விண்மீன்களைப் போன்றவர்கள் என்று கூறிவிட்டு எனவே அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள் என்று கூறப்படுகிறது. இந்த வாக்கிய அமைப்பின்படி எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடைவதற்கு முதலில் கூறப்பட்ட உவமையே ஆதாரமாக்கப்படுகிறது.

அதாவது அவர்கள் விண் மீன்களைப் போல் இருக்கின்ற காரணத்தால் அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்று அந்த வாக்கியம் விளக்குகின்றது. எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்ற கருத்துக்கு அந்த உவமை ஆதாரமாக்கப்படுவதால் விண் மீன்களில் அந்தத் தன்மை கட்டாயம் இருக்க வேண்டும். எந்த விண்மீனும் வழிகாட்டும் தன்மை பெற்றிருக்க வேண்டும். விண்மீன்களில் அத்தகைய தன்மை இல்லை. எனவே உவமை பொருந்தவில்லை என்று நாம் எழுதினோம் இந்தக் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் நாம் சுட்டிக்காட்டிய மற்ற காரணங்களால் சரியானதல்ல என்று உணரலாம்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account