ஸமுது சமுதாயம் அழிக்கப்பட்டது குறித்து குர்ஆன் முரண்பட்டு பேசுகிறதா?
கேள்வி
ஸமூது சமூகத்தினர் அழிக்கப்பட்ட வரலாற்றை கூறும் குர்ஆன் 7:78 என்ற வசனத்தில் பூகம்பம் என்றும் மற்ற வசனங்களில் இடிமுழக்கம் பெரும் சப்தம் என்று வருகிறது
குர்ஆன் ஒன்றுகொன்று முரண்படுகிறது என்று கிறித்தவர்கள் பரப்புகின்றனர். இது பற்றி விளக்கம் அளியுங்கள்
பதில்
காழ்ப்புணர்வு கொண்டு பார்ப்பதால் முரண்பாடு இல்லாதவை அவர்களுக்கு முரண்பாடாகத் தோன்றியுள்ளது.
ஒரு நேரத்தில் இடி இடித்து புயல் அடித்து பெருமழை பெய்து வெள்ளமும் ஏற்பட்டு பூகம்பமும் ஏற்படுகிறது என்றால் இதில் எந்த ஒன்றைச் சொன்னாலும் அது தவறாக ஆகாது.
பூகம்பம் ஏற்பட்டது என்றாலும் அது உண்மை தான்.
பெருவெள்ளம் ஏற்பட்டது என்று சொன்னாலும் அதுவும் உண்மை தான்.
மழைபெய்தது என்று சொன்னாலும் அதுவும் உண்மை தான்.
ஒவ்வொரு நேரத்தில் ஒன்றைச் சொன்னாலும் அனைத்துமே உண்மைகள் தான்.
பெரும் சப்தமும் ஏற்பட்டு பூகம்பமும் ஏற்பட்டால் இரண்டையும் சொல்லலாம். இரண்டில் ஒன்றைச் சொல்லலாம். எதுவும் தவறில்லை.
பூகம்பம் ஏற்பட்டது என்று ஒரு வசனத்திலும் பூகம்பம் ஏற்படவில்லை என்று வேறு வசனத்திலும் சொன்னால் அது தான் முரண்பாடு. இது போன்ற முரண்பாடுகள் பைபிளில் கணக்கின்றி காணப்படுகின்றன. குரானில் இப்படி எதுவுமே இல்லை
ஸமூது சமுதாயம் அழிக்கப்பட்டது குறித்து குர்ஆன் முரண்பட்டு பேசுகிறதா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode