Sidebar

25
Thu, Apr
17 New Articles

வெள்ளிக்கிழமை துஆ ஏற்கப்படும் நேரம் எது?

துஆ திக்ர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

 வெள்ளிக்கிழமை துஆ ஏற்கப்படும் நேரம் எது?

வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் கேட்கப்படும் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று பின்வரும் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது. 

1409و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَا أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ عَنْ مَخْرَمَةَ بْنِ بُكَيْرٍ ح و حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ وَأَحْمَدُ بْنُ عِيسَى قَالَا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا مَخْرَمَةُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّه ُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَأْنِ سَاعَةِ الْجُمُعَةِ قَالَ قُلْتُ نَعَمْ سَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاة رواه مسلم

"வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?'' என்று என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். ஆம்; அது, இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ளதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதைச் செவியுற்றதாக என் தந்தை அறிவித்தார் என்று கூறினேன்.

 அறிவிப்பவர் : அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ

 நூல் : முஸ்லிம்

 வெள்ளிக்கிழமை துஆ ஏற்கப்படும் நேரம் எது என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.

அதாவது இமாம் மிம்பரில் அமர்ந்தது முதல் தொழுகையை முடிக்கும் வரை அந்த நேரம் உள்ளதாக இந்த ஹதீஸ் கூறுகிறது.

இமாம் மிம்பரில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரை உள்ள அனைத்து நேரங்களையும் இது குறிக்கும் என்று நாம் புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் அந்த இடைவெளியில் துஆ செய்யத் தடுக்கப்பட்ட நேரங்களும் அடங்கியுள்ளன. இமாம் மிம்பரில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரை உள்ள நேரங்களில் துஆ செய்ய அனுமதி உள்ள நேரத்தைத் தான் இது குறிக்கும்.

இமாம் மிம்பரில் ஏறிய உடன் பாங்கு சொல்லப்படும். அப்போது துஆ செய்ய அனுமதி இல்லை. பாங்குக்கு பதில் சொல்லும் கடமை நம் மீது உள்ளது.

அதன் பின்னர் உடனே இமாம் உரை நிகழ்த்த ஆரம்பித்து விடுவார், அப்போது நாம் துஆ செய்ய முடியாது. உரையைக் கேட்கும் கடமை நம் மீது உள்ளதால் உரை முடியும் வரை நாம் துஆ செய்ய முடியாது.

உரையைக் கேட்பது கடமை என்பதைப் பின்வரும் ஹதீஸ்களில்  இருந்து அறியலாம்.

 883 حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ قَالَ أَخْبَرَنِي أَبِي عَنْ ابْنِ وَدِيعَةَ عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ ثُمَّ يَخْرُجُ فَلَا يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الْإِمَامُ إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى رواه البخاري

ஜுமுஆ நாளில் ஒருவர் குளித்து, தம்மால் இயன்ற தூய்மை செய்து, தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு புறப்பட்டு, இருவரை பிரிக்காமல் வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுது, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற்கிறார் எனில் அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும், அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்படும் பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர் : சல்மான் அல்ஃபார்சீ (ரலி)

 நூல் : புகாரி 883

 934 حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الْجُمُعَةِ أَنْصِتْ وَالْإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغَوْتَ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஜுமுஆ நாளில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் நீ "மௌனமாக இரு!' என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

 நூல் : புகாரி 934

 இமாம் உரையாற்றும் போது அதைக் கேட்பதில் தான் மக்களின் கவனம் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் பிரார்த்தனை செய்யலாம் என்றால் மேற்கண்ட நபிமொழிகளை மீறும் நிலை ஏற்படும்.

முதல் உரை முடித்து இமாம் அமரும் சிறிய இடைவெளி உள்ளது. துஆ செய்யும் அளவுக்கு இடைவெளி கொடுப்பதில்லை. உடனே இரண்டாம் உரையை ஆரம்பித்து விடுவார் என்பதால் பெரும்பாலும் இது சாத்தியமாவதில்லை. அப்படி இமாம் அவகாசம் அளித்தாலும் அந்த நேரத்தை இது குறிக்காது. ஏனெனில் பின் வரும் ஹதீஸில் அந்த நேரம் தொழுகைக்கு வெளியே இல்லை; தொழுகைக்கு உள்ளே தான் இருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக்கியுள்ளனர்.

 و حدثنا يحيى بن يحيى قال قرأت على مالك ح و حدثنا قتيبة بن سعيد عن مالك بن أنس عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم ذكر يوم الجمعة فقال فيه ساعة لا يوافقها عبد مسلم وهو يصلي يسأل الله شيئا إلا أعطاه إياه زاد قتيبة في روايته وأشار بيده يقللها

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில் "அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.

 அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

 நூல் : முஸ்லிம்

துஆ ஏற்கப்படும் நேரம் தொழுகைக்கு உள்ளே தான் இருக்கிறது என்று இந்த ஹதீஸ் கூறுவதால் இமாம் மிம்பரில் அமர்ந்திருக்கும் நேரம், உரை நிகழ்த்தும் நேரம், இடையில் அமரும் நேரம் ஆகியவை இதில் அடங்காது.

தொழுகையில் இருந்து கொண்டே கேட்கும் துஆக்களைத் தான் இது குறிக்கின்றது என்றாலும் தொழுகையில் இருக்கும் எல்லா நிலைகளிலும் நாம் துஆ செய்ய முடியாது. அந்தந்த நிலைகளில் ஓத வேண்டியவகைளைத் தான் நாம் ஓத வேண்டும். ஆனால் இரண்டு நிலைகளில் மட்டும் நாம் துஆ செய்ய அனுமதி உள்ளது.

 ஒன்று ஸஜ்தா, மற்றொன்று அத்தஹிய்யாத் இருப்பு ஆகும்.

 835 حَدَّثَنَا مُسَدَّدٌ ، قَالَ : حَدَّثَنَا يَحْيَى ، عَنِ الْأَعْمَشِ ، حَدَّثَنِي شَقِيقٌ ، عَنْ عَبْدِ اللَّهِقَالَ : كُنَّا إِذَا كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ، قُلْنَا : السَّلَامُ عَلَى اللَّهِ مِنْ عِبَادِهِ، السَّلَامُ عَلَى فُلَانٍ، وَفُلَانٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا تَقُولُوا السَّلَامُ عَلَى اللَّهِ ؛ فَإِنَّ اللَّهَ هُوَ السَّلَامُ، وَلَكِنْ قُولُوا : التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ، عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ؛ فَإِنَّكُمْ إِذَا قُلْتُمْ أَصَابَ كُلَّ عَبْدٍ فِي السَّمَاءِ أَوْ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ". ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الدُّعَاءِ أَعْجَبَهُ إِلَيْهِ فَيَدْعُو.

 835 அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போது அஸ்ஸலாமு அலல்லாஹி மின் இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஃபுலானின் வஃபுலான்' (அடியார்கள் சார்பாக அல்லாஹ்வுக்கு ஸலாம் உண்டாகட்டும்) என்று கூறிக் கொண்டிருந்தோம். (இதனை அறிந்த) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஸலாம் உண்டாகட்டும்' என்று கூறாதீர்கள் ஏனெனில், அல்லாஹ் தான் ஸலாம்' ஆக இருக்கிறான். மாறாக, (சொல், செயல், பொருள் வடிவிலான) எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும், பாராட்டுக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சலாமும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும்' எனக் கூறுங்கள். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்கள் மீதும் ஸலாம் கூறியதாக அமையும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்' என்றும் கூறட்டும். இதன் பிறகு உங்களுக்கு பிடித்தமான பிரார்த்தனையை தேர்ந்தெடுத்து (வேண்டி)க்கொள்ளுங்கள்.

 நூல் : புகாரி 835

 482 ( 215 ) وَحَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ ،وَعَمْرُو بْنُ سَوَّادٍ ، قَالَا : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ ، عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ، أَنَّهُ سَمِعَ أَبَا صَالِحٍ ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ، فَأَكْثِرُوا الدُّعَاءَ ".

ஒரு அடியான் ஸஜ்தா செய்யும் போது தான் அவன் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக ஆகிறான். எனவே ஸஜ்தாவில் துஆவை அதிகமாக்குங்கள்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 நூல் : முஸ்லிம்

 இமாம் அமர்ந்தது முதல் தொழுகையை முடிக்கும் வரை அந்த நேரம் உள்ளது என்ற ஹதீஸ்களையும்

 அந்த நேரம் தொழுகைக்கு வெளியில் இல்லை என்ற ஹதீஸ்களையும்

 தொழுகைக்குள் துஆ செய்வதற்கான இடம் ஸஜ்தாவும் அத்தஹிய்யாத் இருப்பும் தான் என்ற ஹதீஸ்களையும் இணைத்து

ஆய்வு செய்யும் போது ஜும்ஆ நாளில் ஜும்ஆ தொழுகையில் ஸஜ்தாவிலும் அத்தஹிய்யாத் இருப்பிலும் நாம் செய்யும் துஆக்கள் ஏற்கப்படும் என்பதை அறிந்து கொள்ளலாம்.   

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account