அத்தியாயம் : 114 அந்நாஸ்
மொத்த வசனங்கள் : 6
அந்நாஸ் - மனிதர்கள்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அந்நாஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1, 2, 3, 4. மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும்,499 மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!26
5. அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.
6. ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.
அத்தியாயம் 114 அந்நாஸ்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode