அத்தியாயம் : 111 தப்பத்
மொத்த வசனங்கள் : 5
தப்பத் - அழிந்தது
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் தப்பத் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான்.
2. அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை.
3, 4. கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும், விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள்.26
5. அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது.356
அத்தியாயம் 111 தப்பத்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode