அதிகமாக தர்க்கம் புரிவதால் அறிவு குறையுமா?
கேள்வி அதிகமாக தர்க்கம் செய்தால் அறிவு குறையும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா?
முஹம்மது இஹ்ஸாஸ்
பதில் :
அதிகமாக தர்க்கம் புரிவதால் அறிவு குறையும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஹதீஸையும் நம்மால் பார்கக்க முடியவில்லை. இவ்வாறு ஹதீஸ் இருப்பதாக யார் கூறுகின்றார்களோ அவர்களிடம் இந்தச் செய்தி எந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது எனக் கேளுங்கள்.
மேலும் இதன் கருத்து குர்ஆனுக்கு முரணாகவும் அமைந்துள்ளது. ஏனென்றால் அழகிய முறையில் விவாதம் செய்ய வேண்டும் என குர்ஆன் கூறுகின்றது.
ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ(125)16
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன் அவன் நேர்வழி பெற்றோரையும் அறிந்தவன்.
திருக்குர்ஆன்16 : 125்
இறைத்தூதர்கள் இறை மறுப்பாளர்களிடம் விவாதம் செய்த வரலாறுகளை திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது. எனவே அழகிய முறையில் விவாதம் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் வந்து ஒருவர் அதிகமாக விவாதம் செய்தால் அது நன்மையான காரியமே.
நபிமார்கள் விவாதம் செய்த போது நீர் அதிகம் விவாதம் செய்கிறீர் என்று எதிரிகள் குற்றம் சாட்டியதை திருக்குர்ஆன் எடுத்துக் காட்டுகிறது.
"நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!'' என்று அவர்கள் கூறினர்.
திருக்குர்ஆன் 11:32
நபிமார்கள் அதிகமாக விவாதம் செய்துள்ளனர் என்று இவ்வசனத்தில் இருந்து அறியலாம்.
இதனால் அவர்களின் அறிவு குறைந்து விட்டதா?
மேலும் ஒருவர் முறையான அடிப்படையில் விவாதம் செய்தால் அதன் மூலம் அவருடைய அறிவு அதிகரிக்கும் என்பதே உண்மை.
அதிகமாக தர்க்கம் புரிவதால் அறிவு குறையுமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode