Sidebar

27
Sat, Jul
5 New Articles

ஜின் அத்தியாயம் குறித்து கிறித்தவர்கள் விமர்சனம்

இஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஜின் அத்தியாயம் குறித்து கிறித்தவ போதகர்களின் விதண்டாவாதம்

கேள்வி:

குர்ஆனின் அல்-ஜின் சூராவின் ஒரு பகுதியை இங்கு கொடுக்கிறோம் (முஹம்மது ஜான் குர்ஆன் தமிழாக்கம்). இந்த சூராவில் ஜின் பேசியதாக உள்ள வசனங்களை பச்சை வண்ணத்தில் தருகிறோம்.

72:1 நிச்சயமாக, ஜின்களில் சில (திருக்குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்) நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம் என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.

72:2 அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது, ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம் (என்று அந்த ஜின் கூறலாயிற்று).

72:3 மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது, அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.

72:4 ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

72:5 மேலும் மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள் என்று நிச்சயமாக நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.

72:6 ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர், இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்.

72:7 இன்னும், நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவே, அல்லாஹ் ஒருவரையும் (மறுமையில் உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று எண்ணிக் கொண்டு இருந்தனர்.

72:8 நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.

72:9 (முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே கண்பான்.

72:10 அன்றியும், பூமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டிருக்கிறதா, அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம்.

72:11 மேலும், நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர், அப்படியல்லாதவர்களும் நம்மில் இருக்கின்றனர், நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம்.

72:12 அன்றியும், நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வை இயலாமலாக்க முடியாது என்பதையும், அவனை விட்டு ஓடி (ஒளிந்து) கொள்வதாலும் அவனை (எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும், நாம் அறிந்து கொண்டோம்.

72:13 இன்னும், நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம். எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ, அவன் இழப்பைப் பற்றியும், அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான்.

72:14 இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் - எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.

72:15 அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி விறகாய் விட்டனர் (என்று அந்த ஜின் கூறிற்று).

72:16 (மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம்.

இந்த அதிகாரத்தில் பதினான்கரை வசனங்களை (1b - 15) ஜின்கள் பேசினார்கள், அதுவும் குர்ஆனின் இலக்கிய நடையிலேயே பேசினார்கள். இந்த பேச்சும் குர்ஆனின் ஒரு பாகமாக உள்ளது. இந்த சூராவில் உள்ள அரபி இலக்கிய நடைக்கும், இதர சூராவில் உள்ள அரபி இலக்கிய நடைக்கும் ஏதாவது வித்தியாசம் உங்களுக்குத் தெரிகிறதா?

சாதிக்

பதில்:

இஸ்லாத்திற்கு ஈடு கொடுக்க இயலாத கிறித்தவ போதகர்கள் பைபிள் குறித்து முஸ்லிம்கள் கேட்கும் எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லத் திராணியற்று குர்ஆனுக்கு எதிராக நாங்களும் கேள்வி கேட்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக உளறல்களைக் கேள்விகளாக்கி வருகின்றனர். அத்தகைய கேள்விகளில் ஒன்று தான் நீங்கள் மேலே காண்பது.

கிறித்தவ போதகர்கள் கேட்ட கேள்வியை சாதிக் என்பவர் நம் கவனத்துக்குக் கொண்டு வருகிறாரா? அல்லது வழக்கம் போல் முஸ்லிம் பெயரில் கள்ளக் கிறித்தவக் கூட்டம் செய்யும் விஷமத்தனமா என்று தெரியவில்லை.

இந்தக் கேள்வியைப் பார்த்தவுடன் இவர்கள் எந்த அளவு அறிவீனர்கள் என்பதையும், குர்ஆனுக்கு எதிராக இது போல் உளறத் தான் முடியும் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த அளவுக்கு மூளை கெட்டவர்களும் இருப்பார்களா என்று கருதும் அளவுக்கு இந்தக் கேள்வி அமைந்துள்ளது.

அரபு இலக்கிய நடை குறித்து கேள்வி எழுப்பினால் தமிழ் மொழிபெயர்ப்பை வைத்து எவராவது கேள்வி கேட்பாரா?

அரபு மொழியில் அதை வெளியிட்டு இரண்டும் ஒரே தரத்தில் உள்ளது என்று அரபு இலக்கிய விதிகளை மேற்கோளாக எடுத்துக் காட்டி கேள்வி கேட்டால் அவரை மூளையுள்ளவராகக் கருதலாம்.

மொழி பெயர்ப்பை வெளியிட்டு அரபு இலக்கிய நடையில் வித்தியாசம் உண்டா என்று கேட்டால் இவரை என்னவென்பது? இந்த மொழி பெயர்ப்பைப் பார்த்து விட்டு அரபு இலக்கியப்படி இது சரி என்று எப்படி விளங்க முடியும்?

குர்ஆனில் மோசே, ஏசு, மற்றும் கடந்த காலத்தில் வாழ்ந்த நல்லவர்கள், கெட்டவர்கள் ஆகியோரின் பேச்சுக்களும் உள்ளன. அவர்களில் யாருக்கும் அரபு மொழி தெரியாது. அவர்கள் தமது மொழியில் கூறியதை இறைவன் அரபு மொழியில் மாற்றிக் கூறுகிறான் என்று அறிவுடைய மக்கள் புரிந்து கொள்வார்கள்.

அது போல் தான் ஜின்கள் தமது மொழி வழக்கில் பேசியதை இறைவன் அரபு மொழிக்கு மாற்றிக் கூறுகிறான். இவ்வாறு மாற்றிக் கூறும் போது இறைவன் தனக்கே உரிய நடையில் தான் கூறுவான்.

இது குர்ஆனுக்கு மட்டும் உள்ளது அல்ல. சாக்ரடீஸ் கூறியதாக அவரது கூற்றை நான் எடுத்துக் காட்டினால் சாக்ரடிஸ் தனது மொழியில் கூறியதை நான் உள்வாங்கி எனது மொழியிலும், எனது மொழி அறிவுக்கு ஏற்ற நடையிலும் தான் நான் கூறுவேன்.

இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் கள்ளக் கிறித்தவர்கள் கேள்வி கேட்டு தங்களின் மடமையை நிரூபித்துக் கொள்கிறார்கள்.

ஒரு ஆங்கில நூலை சாதாரண தமிழறிவு பெற்றவன் மொழி பெயர்ப்பதற்கும் தமிழ் பண்டிதன் மொழி பெயர்ப்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்கும்.

பண்டிதன் மொழி பெயர்க்கும் போது அந்த மூல நூலின் தரத்தை உயர்வாகக் கருதும் அளவுக்கு சிறப்பு சேர்ப்பான். தமிழ்ப் பண்டிதனாக இல்லாதவன் மொழி பெயர்த்தால் உயர்ந்த தரத்தில் உள்ளதை தன் தரத்துக்கு கீழே இறக்கி மொழி பெயர்ப்பான்.

கள்ளக் கிறித்தவர்கள் பேசும் அற்புதமான அலட்டல் நடையை நாம் அறிவோம். இதை இறைவன் எடுத்துக் காட்ட நினைத்தால் இவர்களைப் போல் வார்த்தைகளை மென்று துப்புவது போல் இல்லாமல் அவனுக்கே உரிய அழகிய நடையில் மாற்றித்தான் கூறுவான்.

14.09.2011. 8:11 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account