Sidebar

16
Tue, Apr
4 New Articles

சொர்க்கத்தில் 72 கன்னிகள் என்பது சரியா

இஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

சொர்க்கத்தில் 72 கன்னிகள் என்பது சரியா

  • இறைவனுக்காக உயிர் தியாகம் செய்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் 72 ஹூருல் ஈன்கள் கிடைக்கும் என்ற ஹதீஸை எடுத்துக்காட்டி இஸ்லாமை விமர்சனம் செய்கிறார்கள்.
  • அப்படி ஹதீஸ் உள்ளதா? இருந்தால் இந்த விமர்சனத்துக்கு இஸ்லாத்தின் பதில் என்ன?
  • இந்தச்  செய்தி தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக அறியப்படாவிட்டாலும் ஆங்கில உலகத்தில் இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமாக இஸ்லாத்தைக்  அசிங்கமாகக் காண்பிப்பதற்காக இந்த ஹதீஸைப் பரப்புகிறார்கள்.
  • இம்ரான் கோவை

பதில்

இந்தக் கருத்துடைய ஹதீஸ்கள் அஹ்மத், தப்ரானி திர்மிதி உள்ளிட்ட நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

.

இது ஆதாரப்பூர்வமான செய்தி தான்.

ஆனால் இதில் விமர்சனம் செய்ய எதுவும் இல்லை.

இது குறித்து விமர்சிக்கும் கிறித்தவர்கள் பைபிளை சரியாக அறியாமல் விமர்சிக்கிறார்கள்.

கீழ்க்கண்ட வசனங்களை மட்டும் பார்த்து விட்டு பரலோக ராஜ்ஜியம் குறித்து முடிவு செய்கிறார்கள்

24. போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்க வேண்டும் என்று மோசே சொன்னாரே.

25. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம் பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப் போனான்.

26. அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன் முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள்.

27. எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.

28. ஆகையால், உயிர்த்தெழுதலில், அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்களெல்லாரும் அவளை விவாகம் பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.

29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.

30. உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப் போல் இருப்பார்கள்;

மத்தேயு 22:24-30

பரலோக ராஜ்ஜியத்தில் உண்ணுதல், பருகுதல், உடல் இன்பம் போன்றவை இல்லை. வானவர்களைப் போல் அவர்கள் எந்த இன்பங்களையும் அனுபவிக்காமல் நித்திய ஜீவனை அடைவார்கள் என்று இவ்வசங்களின் அடிப்படையில் நம்புகிறார்கள்.

அதனால் சொர்க்கத்தில் கன்னியர் கிடைப்பார்கள் என்ற செய்தி அவர்களுக்கு வியப்பாகத் தெரிகிறது.

பரலோக ராஜ்ஜியத்தில் இன்பங்கள் உண்டு எனக் கூறும் வசனங்களும் உள்ளன.

29. என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்;

மத்தேயு 19:29

பரலோக ராஜ்ஜியத்தில் தேவ தூதர்களைப் போல் இருக்க மாட்டார்கள். மாறாக இந்த உலகத்தில் தியாகம் செய்தவைகளை பன்மடங்காகப் பெற்று இன்பம் அனுபவிப்பார்கள் என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

கர்த்தருக்காக மனைவியை தியாகம் செய்தவன் அது போல் நூறு மனைவிகளைப் பெறுவான். நிலங்களை தியாகம் செய்தவன் அது போல் நூறு மடங்கை அடைவான் என்று இவ்வசனங்களில் கூறப்படுகிறது.

கர்த்தருக்காக மனைவியை தியாகம் செய்தால் நூறு மனைவியைப் பெறுவார்கள் என்று சொல்லும் பைபிளை வேதமாக ஏற்றுள்ளவர்கள் 72 கன்னிகள் பற்றி கேள்வி கேட்பது அறியாமையாகும்.

6. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத் தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.

7. சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.

8. சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.

ரோமர் 2:6,7,8

அவனவனது கிரியைகளுக்கு தக்க பலனை அனுபவிப்பார்கள் என்ற இந்த வசனம் பரலோக ராஜ்ஜியத்தில் வானவர்கள் போல் இருப்பார்கள் என்ற கிறித்தவர்களின் நம்பிக்கை தவறு என்று நிரூபிக்கிறது.

பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.

2 கொரிந்திர 5:1

பரலோக ராஜ்ஜியத்தில் தேவனால் உருவாக்கப்பட்ட வீடுகள் மாளிகைகள் உள்ளன என்று இவ்வசனம் கூறுகிறது.

தேவன் கட்டிய வீடுகள் கிடைக்கும் என்றால் என்ன பொருள்? வீடுகளில் இருக்கும் அனைத்து சாதனங்களும் இருக்கும். அதை பரலோக ராஜ்ஜியத்தில் அனுபவிப்பார்கள் என்பது தான் பொருள்.

34. அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்.

மத்தேயு 25:34

நன்மக்களுக்காக தேவனால் ஒரு ராஜ்ஜியம் உருவாக்கப்பட்டுள்ளது. அதை உரிமையாக்கிக் கொள்வார்கள் என்றால் அங்கே அனைத்து இன்பங்களும் உண்டு என்பதைத் தான் பைபிள் கூறுகிறது.

21. இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்பு கூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.

மார்க் 10:21

தனது செல்வத்தை நல் வழியில் செலவு செய்தவனுக்கு பரலோக ராஜ்ஜியத்தில் பொக்கிசம் உண்டு என்று இயேசு கூறியதாக இவ்வசனம் கூறுகிறது. தேவதூதர்கள் போல் இருப்பவர்களுக்கு பொக்கிஷம் எதற்கு?

அப்படியானால் தேவதூதர்கள் போல் இருப்பீர்கள் என்று இயேசு சொன்னதற்கு என்ன பொருள்?

தேவதூதர்கள் உண்ணாமல் பருகாமல் இருப்பவர்கள் அல்லர்:. மனிதர்களைப் போலவே சாப்பிடுபவர்கள் என்று பைபிள் கூறுகிறது.

ஆப்ரஹாமைச் சந்தித்த மூன்று தேவதூதர்கள் மனிதர்களின் உணவை மனிதர்களைப் போல் சாப்பிட்டுள்ளார்கள் என்று பைபிள் கூறுகிறது.

6. அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்று படி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான்.

7. ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான்.

8. ஆபிரகாம் வெண்ணெயையும், பாலையும், சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள்.

ஆதியாகமம் 18:6,7,8

அது போல் லோத்துவைச் சந்தித்த தேவ தூதர்கள் உணவு உட்கொண்டதாக பைபிள் சொல்கிறது

1. அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:

2. ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.

3. அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக் கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்து பண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.

ஆதியாகமம் 19:1,2,3

பரலோக ராஜ்ஜியத்தில் தேவதூதர்கள் போல் இருப்பார்கள் என்பதை பைபிள் அடிப்படையில் புரிந்து கொண்டால் தேவதூதர்கள் உண்பார்கள்; பருகுவார்கள் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

பல கணவன்மார்களை மணந்த பெண் யாருக்கு மனைவியாக இருப்பாள் என்ற கேள்விக்குத் தான் தேவதூதர்கள் போல் இருப்பார்கள் என்று இயேசு பதில் கூறியுள்ளார். அவள் எனக்கு உனக்கு என்று சண்டையிட்டுக் கொள்ள மாட்ட்டார்கள். கடவுள் தீர்ப்பை தேவதூதர்கள் போல் ஏற்றுக் கொள்வார்கள் என்ற கருத்தில் தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். அப்போது தான் நாம் எடுத்துக்காட்டிய மற்ற வசனங்களுடன் இணக்கமாக அமையும்.

பரலோக ராஜ்ஜியத்தில் ஒன்றுக்கு நூறாக மனைவியர் கிடைப்பார்கள் என்று பைபிள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள் 72 கன்னிகள் குறித்து கேலி செய்து தங்களையே கேலி செய்கிறார்கள்.

அடுத்து மறுமை வாழ்க்கை என்பது இவ்வுலக வாழ்வில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.

அங்கே சாப்பிடுவார்கள் ஆனால் மலம் கழிக்க மாட்டார்கள்.

பருகுவார்கள். சிறு நீர் கழிக்க மாட்டார்கள்.

நோய், முதுமை இருக்காது.

அங்கே சோர்வு அசதி இருக்காது. முதுமை இருக்காது. மாறாத இளமையுடன் இருப்பார்கள். அங்கே கள்ளம் கபடம் இருக்காது.

இந்த உலகத்தில் எடுக்கும் முடிவைப் போல் அங்கே முடிவு எடுக்க மாட்டார்கள்.

இவை எல்லாம் சாத்தியமற்றதாக இவ்வுலகப் பார்வையில் தெரியும். ஆனால் இறைவன் தனது பேராற்றலால் மனிதர்களுக்கு இவற்றைச் செய்து கொடுக்கிறான்.

ஒருவனுக்கு கிடைக்கும் சொர்க்கம் பல மாதங்கள் பயணிக்கும் அளவு விசாலமானதாக இருக்கும். எல்லாமே பிரம்மாண்டமாக வழன்கப்படும் சொர்க்கத்தில் எத்தனை கன்னிகள் கொடுக்கப்பட்டாலும் அந்த உலகில் அது பிரச்சனையாக இருக்காது.

இதில் கிறித்தவர்கள் விமர்சிக்க ஒன்றும் இல்லை. அவர்களின் வேதத்திலும் இது போல் சொல்லப்பட்டுள்ளது என்பதே அவர்களுக்கான பதிலாகும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account