அத்தியாயம் : 94 அஷ்ஷரஹ்
மொத்த வசனங்கள் : 8
அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்) - விரிவாக்குதல்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், உமது உள்ளத்தை விரிவாக்கவில்லையா? என்று கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. உமது உள்ளத்தை நாம் விரிவாக்கவில்லையா?
2, 3. (முஹம்மதே!) உமது முதுகை முறித்துக் கொண்டிருந்த உமது சுமையை உம்மை விட்டும் நாம் இறக்கவில்லையா?26
4. உமக்காக உமது புகழை உயர்த்தினோம்.
5. சிரமத்துடன் தான் எளியதும் உள்ளது.
6. சிரமத்துடன் தான் எளியதும் உள்ளது.
7. எனவே ஓய்வெடுத்ததும் தயாராவீராக!
8. உமது இறைவனிடம் ஆசை வைப்பீராக!
அத்தியாயம் 94 அஷ்ஷரஹ்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode