அத்தியாயம் : 97 அல்கத்ர்
மொத்த வசனங்கள் : 5
அல்கத்ர் - மகத்துவம்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் கத்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. மகத்துவமிக்க இரவில்447 இதை (குர்ஆனை) நாம் அருளினோம்.
2. மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
3. மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
4. வானவர்களும், ரூஹும்444 அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர்.
5. ஸலாம்!159 இது கிழக்கு வெளுக்கும் வரை இருக்கும்.
அத்தியாயம் 97 அல்கத்ர்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode