ருகூவுகள்
தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வளவு தான் ஓத வேண்டும் என்று சிலர் தன்னிச்சையாக எவ்விதச் சான்றுமில்லாமல் முடிவு செய்து திருக்குர்ஆனை 558 ருகூவுகளாகவும் பிரித்தனர். இதை ஐன் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இதற்கு அடையாளமாக ஓரங்களில் "ஐன்' என்ற அரபு எழுத்தை அச்சிட்டுள்ளனர்.
தொழுகையைப் பொறுத்த வரை ஒவ்வொருவரும் தமக்கு இயன்ற அளவுக்கு ஓதலாம் எனத் திருக்குர்ஆன் அனுமதிக்கிறது
பார்க்க : திருக்குர்ஆன் 73:20இந்த அளவு தான் ஓத வேண்டும் என்று அளவிட்டுக் கூறுவது மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்திற்கு முரணாக இருப்பதால் இந்தப் பிரிவை நமது இந்த வெளியீட்டில் அடியோடு புறக்கணித்து விட்டோம். 'ஐன்' என்ற எழுத்தை அச்சிடுவதைத் தவிர்த்து விட்டோம். ஏனெனில் தொழுகை எனும் வணக்கத்தில் தலையிடுவதாக இந்தப் பிரிவு அமைந்துள்ளது. ஒரு ரக்அத்தில் இவ்வளவு தான் ஓத வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
ருகூவுகள்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode