Sidebar

27
Sat, Jul
5 New Articles

அத்தியாயம் 32

தமிழ் மொழிபெயர்ப்பு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அத்தியாயம் : 32 அஸ்ஸஜ்தா

மொத்த வசனங்கள் : 30

அஸ்ஸஜ்தா - சிரம் பணிதல்

இறைவனுக்காக ஸஜ்தாச் செய்வோர் பற்றியும் அவர்களுக்குக் கிடைக்கும் பரிசுகள் பற்றியும் 15 முதல் 17 வரை உள்ள வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. அலிஃப், லாம், மீம்.2

2. (இது) அகிலத்தின் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

3. "இதை இவர் இட்டுக்கட்டி விட்டார்'' என்று அவர்கள் கூறுகிறார்களா? அவ்வாறில்லை! உமக்கு முன்னர் எச்சரிப்பவர் வராத சமுதாயத்தை (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காகவும், அவர்கள் நேர்வழி பெறுவதற்காகவும் (இது) உம் இறைவனிடமிருந்து உமக்கு வந்த உண்மை.

4. வானங்களையும்,507 பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான்.179 பின்னர் அர்ஷின்488 மீது அமர்ந்தான்.511 உங்களுக்கு அவனன்றி பொறுப்பாளரோ, பரிந்துரைப்பவரோ17 இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

5. வானத்திலிருந்து507 பூமி வரை காரியங்களை அவனே நிர்வகிக்கிறான். அது ஒரு நாளில் அவனிடம் மேலேறிச் செல்லும். அது நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள் அளவுடையது.293

6. அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன்; மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

7. அவன் ஒவ்வொரு பொருளின் படைப்பையும் அழகுபடுத்தினான். மனிதனின் படைப்பைக்368 களிமண்ணிலிருந்து503 துவக்கினான்.506

8. பிறகு அவனது சந்ததிகளை அற்பமான நீரின்506 சத்திலிருந்து உருவாக்கினான்.

9. பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.

10. "பூமிக்குள் மறைந்த பின் புதுப்படைப்பை நாங்கள் பெறுவோமா?'' என்று அவர்கள் கேட்கின்றனர். உண்மையில் அவர்கள் தமது இறைவனின் சந்திப்பை488 மறுக்கின்றனர்.

11. "உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார்.165 பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்'' என்று கூறுவீராக!

12. குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்து, "எங்கள் இறைவா! பார்த்து விட்டோம். கேட்டு விட்டோம். எனவே எங்களைத் திருப்பி அனுப்பு! நல்லறம் செய்கிறோம். நாங்கள் உறுதியாக நம்பிக்கை கொள்வோம்'' என்று கூறுவதை நீர் காண வேண்டுமே!

13. நாம் நினைத்திருந்தால் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான நேர்வழியைக் கொடுத்திருப்போம். மாறாக "அனைத்து (கெட்ட) மனிதர்களாலும், ஜின்களாலும் நரகத்தை நிரப்புவேன்'' என்று என்னிடமிருந்து சொல் முந்தி விட்டது.

14. "இந்த நாளின்1 சந்திப்பை நீங்கள் மறந்ததால் அனுபவியுங்கள்! நாமும் உங்களை மறந்து விட்டோம்.6 எனவே நீங்கள் தீமைகள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக நிரந்தரமான வேதனையைச் சுவையுங்கள்!'' (என்று கூறப்படும்.)

15. நமது வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்படும்போது ஸஜ்தாவில்396 விழுவோரும், தமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவோரும், பெருமையடிக்காமல் இருப்போருமே அவற்றை நம்புபவர்கள்.

16. அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.

17. அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக அவர்களுக்காக கண்குளிரும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்.

18. நம்பிக்கை கொண்டவர் குற்றம் செய்தவரைப் போல் ஆவாரா? அவர்கள் சமமாக மாட்டார்கள்.

19. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு அவர்கள் (நன்மைகள்) செய்து கொண்டிருந்ததன் காரணமாக தங்குமிடமாக சொர்க்கச் சோலைகள் பரிசாகவுள்ளன.

20. குற்றம் புரிந்தோரின் தங்குமிடம் நரகம். அங்கிருந்து அவர்கள் வெளியேற நினைக்கும் போதெல்லாம் மீண்டும் அதில் போடப்படுவார்கள். "நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறப்படும்.

21. அவர்கள் திருந்துவதற்காக இப்பெரிய வேதனைக்கு முன்னர் (இவ்வுலகில்) சிறிய வேதனையை அவர்களுக்குச் சுவைக்கச் செய்கிறோம்.

22. தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்பட்டு அதைப் புறக்கணித்தவனை விட அநீதி இழைத்தவன் யார்? நாம் குற்றவாளிகளைத் தண்டிப்போம்.

23. மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். (முஹம்மதே!) (நீர்) அவரைச் சந்தித்ததில்267 சந்தேகம் கொள்ளாதீர்.315 அவரை இஸ்ராயீலின் மக்களுக்கு வழிகாட்டியாக்கினோம்.

24. அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து நமது வசனங்களை உறுதியாக நம்பியபோது நமது கட்டளைப்படி வழிகாட்டும் தலைவர்களை அவர்களிலிருந்து ஏற்படுத்தினோம்.

25. அவர்கள் முரண்பட்ட விஷயத்தில் கியாமத் நாளில்1 உமது இறைவன் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான்.

26. இவர்களுக்கு முன் பல தலைமுறையினரை நாம் அழித்திருப்பது இவர்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? அவர்களின் குடியிருப்புக்களில் இவர்கள் நடந்து செல்கின்றனர். இதில் பல சான்றுகள் உள்ளன. அவர்கள் செவியுற மாட்டார்களா?

27. "வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்'' என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?

28. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்தத் தீர்ப்பு எப்போது?'' என்று அவர்கள் கேட்கின்றனர்.

29. "தீர்ப்பு நாளில்1 (ஏகஇறைவனை) மறுத்தோர் நம்பிக்கை கொள்வது அவர்களுக்குப் பயன் தராது. அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்'' என்று கூறுவீராக!

30. அவர்களைப் புறக்கணிப்பீராக! எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account