அத்தியாயம் : 85 அல்புரூஜ்
மொத்த வசனங்கள் : 22
அல்புரூஜ் - நட்சத்திரங்கள்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் புரூஜ் என்ற வார்த்தை இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. நட்சத்திரங்களுடைய வானத்தின்507 மீது சத்தியமாக!379
2. வாக்களிக்கப்பட்ட நாள்1 மீது சத்தியமாக!379
3. சாட்சி கூறுவோர் மீதும், சாட்சி கூறப்படுவோர் மீதும் சத்தியமாக!379
4, 5. எரிபொருள் நிரப்பிய நெருப்புக் குண்டத்தைத் தயாரித்தவர்கள்469 சபிக்கப்பட்டு விட்டனர்.26
6, 7. அவர்கள் அதனருகே அமர்ந்திருந்த போது நம்பிக்கை கொண்டோரை எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.26
8. "புகழுக்குரியவனும், மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பினார்கள்'' என்பதற்காகவே தவிர அவர்களை இவர்கள் பழி வாங்கவில்லை.
9. வானங்கள்507 மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்.
10. நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் துன்புறுத்தி விட்டு பின்னர் பாவமன்னிப்புக் கோராதவர்களுக்கு நரகத்தின் வேதனை இருக்கிறது. பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
11. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இதுவே பெரும் வெற்றி.
12. உமது இறைவனின் பிடி கடுமையானது.
13. அவன் முதலில் படைக்கிறான். மீண்டும் படைக்கிறான்.
14. அவன் மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.
15. அர்ஷுக்குரியவன்;488 மகத்துவ மிக்கவன்.
16. நினைத்ததைச் செய்து முடிப்பவன்.
17, 18. ஃபிர்அவ்ன் மற்றும் ஸமூது சமுதாயத்தினரின் அந்தப் படையினர் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா?
19. எனினும் (ஏகஇறைவனை) மறுப்போர் பொய்யெனக் கருதுவதில் தான் உள்ளனர்.
20. அல்லாஹ் அவர்களுக்குப் பின்புறமிருந்து முழுமையாக அறிகிறான்.
21. ஆம்! இது மகத்தான குர்ஆன்!
22. பாதுகாக்கப்பட்ட ஏட்டில்157 உள்ளது.
அத்தியாயம் 85 அல்புரூஜ்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode