அத்தியாயம் : 88 அல்காஷியா
மொத்த வசனங்கள் : 26
அல்காஷியா - சுற்றி வளைப்பது
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காஷியா என்று உள்ளதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. சுற்றி வளைக்கும் நிகழ்ச்சி பற்றி உமக்குச் செய்தி கிடைத்ததா?
2. அந்நாளில் சில முகங்கள் (அவமானத்தால்) பணிவுடன் இருக்கும்.
3. அவை (தீயவற்றில்) உறுதியாகச் செயல்பட்டன.
4. சுட்டெரிக்கும் நெருப்பில் அவை எரியும்.
5. கொதிக்கும் ஊற்றிலிருந்து புகட்டப்படும்.
6. முட்செடி தவிர அவர்களுக்கு எந்த உணவும் இல்லை.
7. அது கொழுக்க வைக்காது; பசியையும் நீக்காது.
8. அந்நாளில் சில முகங்கள் மலர்ச்சியுடையதாக இருக்கும்.
9. தமது உழைப்பிற்காகத் திருப்தி கொள்ளும்.
10. உயர்ந்த சொர்க்கத்தில் இருக்கும்.
11. அங்கே அவை வீணானதைச் செவியுறாது.
12. அங்கே ஓடும் ஊற்றுகள் உண்டு.
13. அங்கே உயர்ந்த கட்டில்கள் உள்ளன.
14. குவளைகள் வைக்கப்பட்டிருக்கும்.
15. வரிசைப்படுத்தப்பட்ட தலையணைகளும் உள்ளன.
16. விரிக்கப்பட்ட கம்பளங்களும் உண்டு.
17. ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?399
18. வானம்507 எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?
19. மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன?
20. பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? (என்பதையும் பார்க்க வேண்டாமா?)
21. எனவே அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே.81
22. அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்லர்.81
23, 24. எனினும், புறக்கணித்து (ஏகஇறைவனை) மறுப்பவனை மிகக் கடுமையாக அல்லாஹ் தண்டிப்பான்.26
25. அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது.
26. பின்னர் அவர்களை விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.
அத்தியாயம் 88 அல்காஷியா
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode