Sidebar

27
Sat, Jul
5 New Articles

அத்தியாயம் 89

தமிழ் மொழிபெயர்ப்பு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அத்தியாயம் : 89 கிழக்கு வெளுக்கும் நேரம்

மொத்த வசனங்கள் : 30

அல்ஃபஜ்ரு - கிழக்கு வெளுக்கும் நேரம்

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபஜ்ரு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராகச் சூட்டப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. கிழக்கு வெளுக்கும் நேரத்தின் மீது மீது சத்தியமாக!379

2. பத்து இரவுகள்387 மீதும் சத்தியமாக!379

3. இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக!379

4. கடந்து செல்லும் இரவின் மீது சத்தியமாக!379

5. அறிவுடையோருக்கு (போதிய) சத்தியம் இதில் இருக்கிறதா?

6, 7. ஆது சமுதாயத்தையும், தூண்களையுடைய இரம் சமுதாயத்தையும் உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?26

8. உலகில் அவர்களைப் போல் (யாரும்) படைக்கப்படவில்லை.

9, 10. மலையடிவாரத்தில் பாறையைக் குடைந்(து வாழ்ந்)த ஸமூது சமுதாயத்தையும், படைகளுடைய ஃபிர்அவ்னையும் (எப்படி ஆக்கினான்?)26

11. அவர்கள் உலகில் வரம்பு மீறிக் கொண்டிருந்தனர்.

12. அதில் குழப்பத்தை அதிகமாக்கினார்கள்.

13. எனவே உமது இறைவன் அவர்களுக்கு எதிராக வேதனையின் சாட்டையைச் சுழற்றினான்.

14. உமது இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.

15. மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச்செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும்போது484 "என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்'' என்று கூறுகிறான்.

16. அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும்போது484 "என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்'' எனக் கூறுகிறான்.

17. அவ்வாறில்லை! நீங்கள் அனாதையை மதிப்பதில்லை.

18. ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதில்லை.

19. வாரிசுச் சொத்துக்களை நன்றாக உண்டு வருகிறீர்கள்.

20. செல்வத்தை அதிகம் விரும்புகிறீர்கள்.

21. அவ்வாறில்லை! பூமி தூள்தூளாக நொறுக்கப்படும் போது,

22. வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது488,

23. அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் (உண்மையை) உணர்வான். (அப்போது) இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்?

24. "எனது (மறுமை) வாழ்க்கைக்காக (நல்லறங்களை) நான் முற்படுத்தியிருக்கக் கூடாதா?'' என்று கூறுவான்.

25. அந்நாளில் அவன் தண்டிக்குமளவுக்கு யாரும் தண்டிக்க முடியாது.

26. அவன் கட்டுவது போல் யாரும் கட்ட முடியாது.

27, 28. அமைதியுற்ற உயிரே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உனது இறைவனிடம் செல்வாயாக!26

29. எனது அடியார்களில் சேர்ந்து கொள்வாயாக!

30. எனது சொர்க்கத்தில் நுழைவாயாக! (எனக் கூறப்படும்.)

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account