அத்தியாயம் : 90 அல்பலத்
மொத்த வசனங்கள் : 20
அல்பலது - அந்த நகரம்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அந்த நகரம் என்று இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1, 2. (முஹம்மதே!) இந்நகரில் (மக்காவில்) நீர் வசிக்கும் நிலையில் இந்த நகரத்தின் மீது சத்தியம்379 செய்கிறேன்.26
3. பெற்றவன் மீதும், அவன் பெற்றெடுத்ததன் மீதும் சத்தியமாக!379
4. மனிதனைக் கஷ்டப்படுபவனாகவே நாம் படைத்துள்ளோம்.368
5. தன் மீது யாரும் சக்தி பெற மாட்டார்கள் என்று அவன் எண்ணுகிறானா?
6. "ஏராளமான செல்வத்தை (கொடுத்து) அழித்து விட்டேன்'' எனக் கூறுகிறான்.
7. அவனை யாரும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா?
8, 9. அவனுக்கு இரண்டு கண்களையும், நாவையும், இரு உதடுகளையும் நாம் அமைக்கவில்லையா?26
10. (நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா?
11. அவன் கணவாயைக் கடக்கவில்லை.
12. கணவாய் என்பது என்னவென்பது உமக்கு எப்படித் தெரியும்?
13, 14, 15, 16, 17. அடிமையை விடுதலை செய்தல், அல்லது நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் (இவைகளே கணவாய்.26
18. அவர்களே வலப்புறத்தார்.
19. யார் நமது வசனங்களை மறுக்கிறார்களோ அவர்களே இடப்புறத்தார்.
20. அவர்கள் மீது மூட்டப்பட்ட நெருப்பு இருக்கும்.
அத்தியாயம் 90 அல்பலத்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode